மூவாப்புகழ் மூவர் சிறப்பிதழ்

    அகரமுதல 44 ஆம் இதழ் மூவாப்புகழுக்குரிய ஆன்றோர் மூவர் சிறப்பிதழாக வருகிறது. எனவே, வழக்கமான செய்திகளுடன் இம் மூவர் குறித்த படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.(இவ்விதழில் விடுபட்ட தொடர்கள் அடுத்த இதழில் வெளிவரும்.)   செட்டம்பர்த் திங்களின் இவ்வாரத்தில் இதனைக் குறிப்பதால் யார் அந்த மூவர் என்பது அனைவருக்குமே தெரியும். ஆம்! பாட்டுக்கொரு புலவனாய் நமக்கு எழுச்சி யூட்டும் மாக்கவி பாரதியார் (பிறப்பு: ஆவணி 28, 1913 / திசம்பர் 11, 1882 – மறைவு: கார்த்திகை 26,1954 / செட்டம்பர் 11,…

வ.உ.சிதம்பரனாரும் சி.இலக்குவனாரும்

  செப்தம்பர் 5 ஆம் நாளன்று இந்தியா முழுவதும் விழா கொண்டாடப்படுகிறது. ஆனால், அந்த விழா யாருக்காகக் கொண்டாடப்படவேண்டுமோ அவருக்காகக் கொண்டாடப்படவில்லை.   வள்ளியப்பன்உலகநாதன் – பரமாயி இணையரின் மூத்த மகனான அறிஞர் வ.உ.சிதம்பரம்(பிள்ளை) அவர்களின் பிறந்த நாள் ஆவணி 22, 1903 / 5.09.1872 ஆகும். இந்தியாவில் இருந்த குறிப்பிடத்தகுந்த வழக்குரைஞர்களில் இவரின் தந்தையும் ஒருவர். தந்தையின் வழியில் சட்டம் பயின்று சிறந்த வழக்குரைஞராகத் திகழ்ந்தார். வழக்குரைஞராகப் பணியாற்றிப் பெரும் பணம் சம்பாதித்திருக்க முடியும். குடும்பச் செல்வத்தையே நாட்டிற்காகத் தந்தவர் இதைப்பற்றியா கவலைப்பட்டிருப்பார்….

தமிழுக்காகக் குரல் கொடுக்கும் தருண் விசய்க்குப் பாராட்டுகள்!

  தமிழ் நாட்டிற்கு வெளியே உள்ள இந்தியத்துணைக்கண்டத்தினர் தமிழின் சிறப்பை அறிவதில்லை. அறிந்திருந்தாலும் தமிழைப் புறக்கணிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கு மாறாக மாநிலங்களவையில் தமிழுக்காகக் கொடி தூக்கினார் ஒருவர்.அவர், தமிழ் நாட்டவர் அல்லர். உத்தரகண்டு மாநிலத்தைச் சேர்ந்தவர். அதுவும் சமய(மத)வெறிபிடித்த ‘இராசுட்ரிய சுயம்சேவக்கு சங்கம்’ என்ற நாட்டுத்தற்தொண்டுக் கழகத்தின் பல பொறுப்புகளில் இருந்தவர். இவ்வமைப்பு நடத்தும் பாஞ்சசன்யா’ என்னும் இதழின் ஆசிரியராக 20 ஆண்டுகள் இருந்தவர்.ஊடகவியலாளராகவும் மக்கள் நலத் தொண்டராகவும் நன்கறியப்பெற்றவர். பழங்குடி மக்களின் நலனுக்காகப்பாடுபட்டு வருபவர்.படக்கலைஞர், கட்டுரையாளர், படைப்பாளர் எனப் பல வகைகளில்…

தமிழ்வளர்ச்சிக்கெனத் தனித்துறை அமைக்கப் புதுச்சேரி முதல்வருக்கு வேண்டுகோள்!

  புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு ந.அரங்கசாமி எளிமையானவர் என்ற பெயர் பெற்றுள்ளார். எனினும் தமிழ்நலப்பணிகளில் கருத்து செலுத்துவதில்லை என்றும் தமிழ்நலனுக்குக்கேடு தரும் வகையில் நடந்து கொள்கிறார் என்றும் தமிழன்பர்கள் கூறுகின்றனர். அவர், எக்கட்சியில் இருந்தால் என்ன தமிழ்ப்பகையான பேராயக்கட்சி(காங்.)-இல் ஊறியவர்தானே என்றும் விளக்குகின்றனர். தம்மீதுள்ள அவப்பெயரை நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஐப்பசி 11, 2032 (27 அக்டோபர் 2001) – வைகாசி 3, 2037(17 மே 2006) காலத்தில் முதல் முறையும், வைகாசி 4, 2037 (18 மே 2006)– ஆவணி 20…

வேண்டவே வேண்டா சமற்கிருதமும் இந்தியும்

  சமற்கிருதத்திணிப்பிற்கும் இந்தித்திணிப்பிற்கும் எதிராகக் கூறுபவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? இவ்விரு மொழிகளையும் எதிர்க்கவில்லை; இவ்விருமொழிகளின் திணிப்புகளைத்தான் எதிர்க்கின்றோம் என்கின்றனர். ஆனால், நாம் அவ்வாறு கூறப்போவது இல்லை. விருப்பம் என்ற போர்வையில் இவை திணிக்கப்படுகின்றன; தமிழ் நாட்டில் தமிழ் மக்களிடம் இருந்து அவர்களின் தாய்மொழியாம் தமிழை அப்புறப்படுத்துகின்றன; பெரும்பான்மை என்ற தவறான புள்ளிவிவர அடிப்படையிலும், பொய்யான சிறப்புகள் அடிப்படையிலும் உலக மொழிகளின் தாய் மொழியான தமிழை அதன் தோற்றுவாயான தமிழகத்திலிருந்து ஒவ்வொரு துறையிலும் அழித்து வருகின்றன. எனவே, விருப்ப மொழி என்ற போர்வையிலும் இவை தமிழ்நாட்டில்…

சீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக!

 மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தகுந்தவரான சீர்மிகு புலவர் செ. சீனி நைனா முகம்மது, கரும்பன், அபூபரீதா, இபுனுசைய்யிது, இல்லார்க்கினியன், நல்லார்க்கினியன் ஆகிய புனை பெயர்களிலும் படைப்புகளை வழங்கிய அறிஞர்.  தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் கீழாயூர் என்னும் ஊரில் ஆவணி 26, 1978 – செப்டம்பர் 11 1947வியாழக்கிழமையன்றுபிறந்தவர்; தம் பன்னிரண்டாம் அகவையில் மலேசியா சென்ற தந்தையுடன் உடன் சென்றார். அங்கேயே கல்வி கற்றார். பள்ளி சார்ந்த கல்வியில் பயிலாமல் தனிப்பட்ட முறையில் பயின்று அறிஞராகத் திகழ்பவர்களைப் ‘படிக்காத மேதைகள்’ என்பர். அத்தகைய…

தமிழக உணர்விற்கு எதிரான ‘மெட்ராசு’ திரைப்படத்தைப் புறக்கணிப்போம்!

    தமிழ் மக்களுக்காக உருவாக்கப்படும் தமிழ்த்திரைப்படங்களின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும் என்பது முறையான வேண்டுகோளே! ஆனால், திரைத்துரையினர் பலரும் இதற்கு மாறாகப் பிற மொழிகளில் தமிழ்ப்படங்களுக்குப் பெயர் சூட்டி வருகின்றனர்.   அடித்தளம், அரண்மனை, உ, உயிருக்கு உயிராக, எதிர்நீச்சல், களவாடிய பொழுதுகள், கோச்சடையான், கோவலனின் காதலி, சித்திரை திங்கள், சுற்றுலா, திருப்புகழ், நினைவில் நின்றவள், நெடுஞ்சாலை, நேர் எதிர், புலிவால், மாதவனும் மலர்விழியும், மாலை நேரப் பூக்கள், முறியடி, முன் அந்திச் சாரல், விடியல், விரட்டு, வெற்றி கொண்டான் எனத்…

அறவாணர் அருவினை விருதாளர் அருந்தமிழ்ப்பாவலர் தமிழமல்லன் வாழ்கவே!

    அறிஞர் முனைவர் க.ப.அறவாணன் தலைமையில்   இயங்கும் அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை இவ்வாண்டு ‘அறவாணர் சாதனை விருதினை’, அருந்தமிழ்ப்பாவலர் தமிழமல்லனுக்கு வழங்குகிறது. புதுவைக்குயில் வழியிலான தனித்தமிழ்ப்பாவலர் தமிழமல்லனுக்கு இவ்விருது வழங்குவது பெரிதும் பொருத்தமுடைத்து. ஆடி 24, 2045/9.8.2014 காலையில் சென்னைத் தமிழ்க் கோட்டத்தில் நடைபெறும் விழாவில் அனைத்திந்திய இவ் விருது வழங்கப்படுகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னைத்துணைவேந்தர் முனைவர் மு.தங்கராசு முனைவர் க.தமிழமல்லன் அவர்களுக்கு விருது வழங்கி வாழ்த்துகிறார். பிறப்பு   புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திரு.பொ.கண்ணையன், திருவாட்டி க.தனலட்சுமி ஆகியோரின் அருந்தவப்புதல்வராக ஆனி…

சுந்தரராமசுவாமி தமிழ்க் கணிமை விருதாளர் மணி மு. மணிவண்ணன்

   கனடாவில் உள்ள தமிழ் இலக்கியத் தோட்டம் என்ற அமைப்பு 2013ஆம் ஆண்டிற்கான சுந்தரராமசுவாமி தமிழ்க் கணிமை விருது மணி மு. மணிவண்ணனனுக்கு வழங்கியுள்ளது. இதற்கான விழா கனடாவில் அன்று நடைபெற்றது.   முத்து நெடுமாறன், கல்யாணசுந்தரம், முகுந்து சுப்பிரமணியன், வாசுஅரங்கநாதன் ஆகியோர் வரிசையில் கடந்த ஆண்டிற்கான விருதினை மணி மு. மணிவண்ணன் பெற்றுள்ளார்.    புழைக்கடைப் பக்கம்    சொல்வளம் – உங்கள் தமிழ்ச் சொல் திறனறிதல்    தமிழ் எழுத்துச் சீர்மை முதலான இவரின் வலைத்தளங்களும் இவரின் முகநூல் பக்கங்களும் இவரது…

அறிஞர் ஆனந்தகிருட்டிணன் ஆண்டுநூறு கடந்து வாழிய வாழியவே!

முனைவர் மு.ஆனந்தகிருட்டிணன், பொறியாளர்கள், கணித்தமிழாளர்கள், கல்வியாளர்கள் எனப் பல்வகையினராலும் உலக அளவில் நன்கு அறியப்பெற்ற ஆன்றோர் ஆவார். கட்டடப் பொறியியல், சுற்றுச்சூழல் பொறியியல், தொலை உணரியல், தகவல் தொழில் நுட்பம், அறிவியல் தொழில்நுட்பக் கொள்கை பகுப்பாய்வு, மேம்பாட்டு குறிகாட்டிகள், தொழில்நுட்பப் பன்னாட்டு மாற்றங்கள், சிறு, குறு தொழிலகங்கள், கல்வியகங்களின் மேலாண்மை, சிறார் அறிவியல் கல்வி எனப் பல்வேறு துறைகளில் விரிந்து பரந்த அறிவு கொண்ட அறிஞர் முனைவர் மு. ஆனந்தகிருட்டிணன் 1952 ஆம் ஆண்டு, கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் (அப்போதைய சென்னைப் பல்கலைக்கழகம்)…

சங்கர மடம் வழியில் தமிழக அரசா?

   தமிழக முதல்வரின் நலத்திட்டங்களில் பாராட்டக்கூடிய ஒன்றாக அண்மையில் (ஆனி 16, 2045 / சூன் 30, 2014) திருவரங்கத்தில் திறந்த இறையன்பர்களுக்கான தங்கும் விடுதியைக் குறிப்பிடலாம். பயணச் செலவைவிடத் தங்குமிடச் செலவு மிகுதியாவதால் ஏற்படும் இடர்ப்பபாடுகளிலிலிருந்து மீள நல் வாய்ப்பாக இவ் வுறைவகம் அமைகின்றது.   இத்திட்டம் தொடங்கப்பட்டபொழுதே ஒரு சாராரிடமிருந்து எதிர்ப்பு வந்தது. இப்பொழுது அனைத்துச் சாராரின் கசப்பை இத் திட்டம் கொண்டுள்ளது.   கட்டடம் கட்டும் பொழுது, 140ஆண்டுகால வரலாறு உடைய மதுரகவி நந்தவனத்திற்குரிய நிலத்தில் கட்டப்படுவதால் அவ் வறக்கட்டளையினர்…

ஊடகர் மீது கை வைக்காதீர்! ஊடகங்கள் மீது கண் வையுங்கள்!

  தினமலர் நாளிதழ்ச் செய்தியாளர் அருள்செல்வனைத் தாக்கியது அருளற்ற செயல்!   கிளர்ச்சிகள் என்பன மக்கள் குறைகளைத் தெரிவிக்கும் வாயில்கள் எனவும் அரசு அவற்றை அடக்கித் துன்புறுத்தாமல் மென்மையாகக் கையாண்டு குறைகளைப் போக்க வேண்டும் என்றும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் குறிப்பிடுவார். ஆனால், கிளர்ச்சிகள் என்றாலே அரசை அழிக்கும் ஆயுதமாகவும் கிளர்ச்சியாளர்கள் என்றாலே நாட்டின் பகைவர்கள் என்றும் கருதும் போக்கு எல்லா நாட்டிலும் உள்ளது வருந்தத்தக்கதே! இதனால், மக்களின் உற்ற தோழனாக இருக்க வேண்டிய காவல்துறை ஆளும்கட்சியின் அடிவருடிபோல் நடந்துகொண்டு மக்களுக்குத் தீங்கிழைத்து, அரசிற்கும்…