வெருளி நோய்கள் 206 -210 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 201 -205 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 206 -210 அல்பேனியா(Albanai) மாநிலம் தொடர்பான காரணமற்ற அளவற்ற பேரச்சம் அல்பேனிய வெருளி..அல்பேனியக் குடியரசு (Republic of Albania) ஐரோப்பாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள நாடாகும். இதன் தலைநகரம் திரானா(Tirana).அல்பேனிய (Albania)நாடு, நாட்டிலுள்ள மலைகள், மக்கள், கொடி, நாகரிகம், பண்பாடு, வணிகம் முதலானவை மீது தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.அல்பேனியர்கள், அல்பேனியாவில் மட்டுமல்லாமல் கொசாவா(Kosovo[a]), மாசிடோனியா(Macedonia), மாண்டெனெகிரோ (Montenegro), செர்பியா(Serbia), குரோட்டியா(Croatia), கிரீசு(Greece), இத்தாலி(Italy) நாடுகளிலும் வசிக்கின்றனர். இங்குள்ளோர்களில் பலருக்கு அல்பேனிய வெருளி உள்ளது….

குறள் கடலில் சில துளிகள் 31 – அறிஞர்களே கண்கள்; அவர்களைத் துணையாகக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 30 – பெரியாரைத் துணையாகக் கொள்க! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 31 அறிஞர்களே கண்கள்; அவர்களைத் துணையாகக் கொள்க! சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.   (திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல், எண் ௪௱௪௰௫ – 445) பதவுரை: சூழ்வார்-சூழ்ந்து இருப்பவர்; கண்-விழி; ஆக-ஆகும்படி; ஒழுகலான்-நடந்து கொள்ளுதலால்; மன்னவன்-வேந்தன்; ஆட்சியாளர்; சூழ்வாரை-பெரியாரை; சூழ்ந்து-ஆராய்ந்து; கொளல்-கொள்க. அறிஞரகளே உலகின் கண்கள். எனவே, ஆட்சியாளர்கள் அவர்களைத் தம் சுற்றமாகக் கொண்டு இயங்க வேண்டும். சூழ்…

வெருளி நோய்கள் 201 -205 : இலக்குவனார் திருவள்ளுவன் 

(வெருளி நோய்கள் 196 -200 தொடர்ச்சி) (வெருளி நோய்கள் 196-200 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 201 -205 201. அலை பேசி வெருளி-Nomophobia (no-mobile-phone phobia) அலைபேசியைப் பயன்படுத்த முடியாத சூழலில் ஏற்படும் தேவையற்ற பேரச்சமே அலைபேசி வெருளி. அலை இணைப்பு கிடைக்காமல் அல்லது மின்னேற்றம் இன்மையால் அல்லது வேறு சூழலில் அலைபேசியைப் பயன்படுத்த முடியாமல் போனால் இதனைப் பயன்படுத்துவோர் அடையும் கிலி, மனத் தடுமாற்றம், காரணமில்லாப் பேரச்சம் முதலானவை அலைபேசி வெருளியாக மாறுகிறது. அலைபேசி இயங்கா வெருளி என்பது சுருக்கமாக அலைபேசி வெருளி…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! –6, இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! –5 தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்!  – 6 இதில் 8 நாள் முதல் 10 நாள் முடிய விழா நடைபெறும்’ என உள்ளது.  எட்டு நாள் எட்டாத நாள், பத்து நாள், பத்தாத நாள் என்றெல்லாம் இங்கு வேண்டா.  ‘ஆவது’ என எழுத வேண்டியதுபோல் ‘ஆம்’ என்றே எழுத வேண்டும்.  8-ஆம் நாள்  10-ஆம் நாள் என்றாவது  எட்டாவது நாள்  பத்தாவது நாள்  என முழு எழுத்து வடிவிலாவது இருக்க வேண்டும். ‘பயனாளிகளுக்கு தவறாமல் கொடுக்க வேண்டும்’ என இக்கோப்பில் உள்ளது. ‘பயனாளிளுக்குத் தவறாமல் கொடுக்க வேண்டும்‘ என வர வேண்டும். நான்காம் வேற்றுமை உருபான ‘கு’வின் பின்னும்…

நாலடி நல்கும் நன்னெறி 13:  நிலைபுகழ் பெற நல்வினைகள் புரிவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 12: நன்றியில் செல்வத்தை விரும்பாதீர்! –  தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 13:  நிலைபுகழ் பெற நல்வினைகள் புரிவோம்! நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென் பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டக் கால்.             (நாலடியார், அறத்துப்பால், 3. யாக்கை நிலையாமை, பாடல் எண் 26) பாடலின் பிரித்து எழுதிய வடிவம் : நார்த் தொடுத்து ஈர்க்கில் என்? நன்று ஆய்ந்து அடக்கில் என்? பார்த்துழிப் பெய்யில் என்? பல்லோர் பழிக்கில் என்?…

வெருளி நோய்கள் 196 -200 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 191 -195 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 196 -200 196. அயலிந்தியர் வெருளி-Mikatikoindicaphobia அயல்நாட்டில் வாழும் இந்தியர்கள் (NRI) தொடர்பில் ஏற்படும் தேவையற்ற அச்சம் அயலுறை இந்தியர்கள் வெருளி. சுருக்கமாக அயலிந்தியர் வெருளி எனலாம்.வெளிநாட்டிலிருந்து செல்வம் திரட்டி வந்து, இங்கே நம் தொழிலைச் சிதைப்பார்கள், செல்வத்தைத் தேய்ப்பார்கள், செல்வாக்கை ஒடுக்குவார்கள், வளர்ச்சியை அழிப்பார்கள் என்றெல்லாம் தேவையற்ற கவலையும் அளவு கடந்த வெறுப்பும் கொள்வர்.வெளி நாடுகளில் அங்குள்ள தாய்நாட்டாருக்கு அயலிந்தியர் தங்கள் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு முதலானவற்றைப் பறிக்கின்றனர் என்ற வெருளியும்…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 19 : மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே!-இலக்குவனார் திருவள்ளுவன்

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 19 மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே! மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்பொன்னும் கொள்ளார் புலவர் கணி புன்குன்றனார், நற்றிணை 226.1-3 சிலர் புலவர் பெயரை “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடிய கணியன் பூங்குன்றனார் எனக் குறிப்பிடுகின்றனர். சொற்பொருள்: மரம் சா – மரம் சாகும்படி; உரம் சா – வலிமை குன்றும்படி: பொன்னுங் கொள்ளார் மன்னர் – ஆள்வோர் இறைப்பொருள் வாங்க மாட்டார். இலை, பூ, காய்,…

வெருளி நோய்கள் 191 -195 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 186 -190 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 191 -195 191. அம்மம்மா வெருளி – Waizuphobia தாய்வழி பாட்டி/அம்மம்மா தொடர்பான அளவு கடந்த பேரச்சம் அம்மம்மா வெருளி00 192. அம்மைத்தடுப்பூசி வெருளி- Vaccinophobia அம்மைத் தடுப்பூசி தொடர்பான பேரச்சம் அம்மைத்தடுப்பூசி வெருளிதடுப்பூசி போடல், அம்மை குத்தல், அம்மை குத்துதல், அம்மைத்தடுப்பூசி குத்துதல், அம்மைப்பால் குத்துதல் எனப் பலவகையிலும் அம்மைநோய்த் தடுப்பிற்கான ஊசி குத்துதல் குறிக்கப் பெறுகிறது. ஊசி குத்தினால் வலிக்கும் என அஞ்சுவோர் உள்ளனர். இதுபோல் தடுப்பூசி போட்டுக் கொண்டால்…

சட்டச் சொற்கள் விளக்கம் 991-995 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 986-990 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 991-995  991. Authenticate        உறுதி யளி மெய்யெனக் காட்டு   போலியல்ல என ஆதாரம் காட்டு அதிகார அளிப்பு உறுதியொப்பமிடு; உறுதி யொப்பமிடுதல்     சட்டச் சூழலில், உறுதி அளிப்பு என்பது நீதிமன்றத்தில் அதன் ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மையை நிறுவ, ஒரு செய்தியின், குறிப்பாக ஆதாரத்தின் உண்மையான தன்மையை மெய்ப்பிப்பதை அல்லது சரிபார்ப்பதைக் குறிக்கிறது. இச் செயல்முறை, வழங்கப்பட்ட சான்றுகள் போலியானவை அல்லது புனையப்பட்டவை அல்ல, மாறாக அவை கூறப்பட்டவை என்பதை…

வெருளி நோய்கள் 186 -190 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 181 -185 : தொடர்ச்சி). வெருளி நோய்கள் 186 -190 186. அமில வெருளி – Acidophobia அமிலத் தன்மை மீதான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் அமில வெருளி.பயிரியலில் அமிலமண்ணில் வளரும் சில பயிர்களின் பொறுக்காத் தன்மையைக் குறிப்பது. இதைப்போன்ற மக்களின் பேரச்சத்தைக் குறிப்பது அமில வெருளி.காதல் தோல்வி, ஒருதலைக்காதல், பழிக்குப் பழி போன்றவற்றால் அமிலத்தை முகத்தில் வீசும் கொடும் பழக்கம் பரவி வருகிறது. இதனாலும் அமிலம் என்றாலே தேவையின்றி அஞ்சுவோர் உள்ளனர். 00 187. அமெரிக்க வெருளி – Americanophobia…

வெருளி நோய்கள் 181 -185 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 176 -180 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 181 -185 181. அந்துப்பூச்சி வெருளி – Mottephobia அந்துப்பூச்சி மீதான அளவுகடந்த பேரச்சம் அந்துப்பூச்சி வெருளி.அந்துப்பூச்சி/விட்டில் பூச்சி(Moth) என்பது பட்டாம்பூச்சி வகையை ஒத்தது. முதலில் இதனைப் பட்டாம்பூச்சி வெருளியில் சேர்த்திருந்தேன். அதைவிடத் தனியாகச் சேர்ப்பது நன்று என்பதால் இப்பொழுது தனியாகக் குறிப்பிட்டுள்ளேன்.motte என்னும் செருமானியச் சொல்லின் பொருள் அந்துப்பூச்சி.00 182. அப்பப்பா வெருளி – Zufuphobia தந்தைவழி தாத்தா / அப்பப்பா தொடர்பான அளவு கடந்த பேரச்சம் அப்பப்பா வெருளி.தந்தையின் தந்தையை…

வெருளி நோய்கள் 176 -180 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 171 -175 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 176 -180 176. அதிர்ச்சி வெருளி-Hormephobia துயரச் செய்தி அல்லது கெட்ட செய்தி வரும் என்றோ வந்தபின்போ தேவையற்ற பேரச்சம் கொள்வது அதிர்ச்சி வெருளி.காரணமின்றியே மின் அதிர்ச்சி ஏற்படும் என்று தேவையற்று அச்சம் கொள்வதையும் அதிர்ச்சி வெருளியில் சேர்க்கின்றனர். அதனை மின்வெருளி(Electrophobia)யில் சேர்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.தேர்வில் அல்லது தேர்தலில் தோல்வி அல்லது தொழில் முயற்சியில் தோல்வி என்னும் அதிர்ச்சி செய்தி கேட்பதாலோ இதனால் வாழ்வே இருண்டுபோவதாக அஞ்சுவதாலோ எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மை ஏற்பட்டு…