தமிழன்னை கண்ணீரை வடிக்கின்றாள்! – குருநாதன்
அன்னைமொழி மறந்தார்! அன்னைமொழி அமுதமென அற்றைநாள் சொன்னார்கள் இற்றை நாளில் முன்னைமொழி மூத்தமொழி முடங்கியதை மறந்துவிட்டு மூங்கை யானார்; பின்னைவந்த மொழிகளிலே பேசுகின்றார்; எழுதுகின்றார் பேதை யாகித் தன்மொழியைத் தாம்மறந்து தருக்குகிறார் தமிழ்நாட்டில் வெட்கக் கேடே! இருந்தமிழே உன்னால்தான் நானிருந்தேன்; அன்று சொன்னார்; இற்றை நாளில் இருந்தமிழே உனக்காய்நான் இருப்பதாகச் சொல்வதற்கே இதயம் இல்லை! அரியணையில் ஏற்றிவைத்த அருந்தமிழைப் போற்றுவதற்கு மறந்து போனோம் திருத்தமுற எடுத்துரைக்கத் திசையெங்கும் தமிழ்வளர்க்கும் கொள்கை ஏற்போம். புலம்பெயர்ந்து போனவர்கள் புதுமைகளைக் கண்டங்கே மொழிவ ளர்த்து நலமுடனே வாழ்கின்றார்; நாமோ…
தமிழ்மொழிக்கு வஞ்சகம் செய்யாத வரையில் தன்னிலையில் உயர்வர் ! – கருவூறார்
தமிழ்மொழிக்கு வஞ்சகம் செய்யாத வரையில் தன்னிலையில் உயர்வர் ! எவனொருவன் தமிழ் மொழியைத் திருத்தமாகவும், அழகாகவும், இனிமையாகவும் பேசுகிறானோ, அவனே உன்மையான இறைமைப் பணி புரிபவனாவான். எவனொருவன், பிறரைத் திருத்தமாகவும், அழகாகவும், இனிமையாகவும் பேசுவதில் ஆர்வமும் ஆற்றலும் பெற்றிடுமாறு செய்கின்றானோ, அவனே, சிறந்த பூசைகளைச் செய்கிறவனாவான். எவனொருவன் நற்றமிழ் இலக்கியங்களைப் பிறர் நனி விரும்பிக் கேட்குமளவு எடுத்துச் சொல்லுகின்றானோ, அவனே நல்ல தவத்தைச் செய்கிறவனாவான். எவனொருவன் நற்றமிழால் நாடியனைத்தையும் பெறலாம்; தேடுவதனைத்தையும் பெறலாம்….. என்பதைச் செயலால் மெய்ப்படுத்திக் காட்டி வாழுகின்றானோ, அவனே பிறர் தொழத்தகும்…
வகுப்புரிமை நாள் (14.8.1950) சிந்தனை…. இழிவுக்குரியதல்ல இட ஒதுக்கீடு!
அகில இந்திய பா.ச.க. தலைவர் திரு.அமித்சா கலந்துகொண்ட மதுரை மாநாடு முதன்மை வாய்ந்தது என்ற பீடிகையோடு ‘தி இந்து’ (தமிழ்) ஏட்டில் வெளி வந்துள்ள கட்டுரை (12.8.2015) நயன்மைக்கும்(நியாயத்துக்கும்), சமூகநீதிக்கும் எதிரான வித்துகளை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. எந்த இட ஒதுக்கீட்டின் பெயரால் சமூகநீதியை நிலைநாட்ட முயல்கிறோமோ அதே இட ஒதுக்கீடு அவர்களைக் காயப்படுத்தவும் செய்கிறது. “சாதி ஒழிப்பைப்பற்றி வாய் கிழியப் பேசும் நம்முடைய அரசமைப்புதான் மறுபுறம் தொடக்கப் பள்ளிகளிலேயே உன் சாதி என்ன? என்று பகிரங்கமாகக் கேட்டு வடுவை மேலும் கிளறிக்…
என்று கொண்டாடுவோம் விடுதலை நாளை? – இலக்குவனார் திருவள்ளுவன்
என்று கொண்டாடுவோம் விடுதலை நாளை? இலக்குவனார் திருவள்ளுவன் வியாழன், 14 ஆக. 2014 , வெப்துனியா (தமிழ்க் காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன், உரிமையற்ற நாட்டிலே விடுதலைக் கொண்டாட்டமா? என வினவுகிறார். ஆயினும் இவற்றைப் பேசும் உரிமை இன்னும் இருக்கிறது என்பதை நினைவூட்டி, இதனை வெளியிடுகிறோம். – ஆசிரியர்) “என்று தணியும் இந்தச் சுதந்திரத் தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் … … … என்றெமதன்னை கை விலங்குகள் போகும் என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்” என்று மாக்கவி பாரதியார் அடிமை…
நெகிழ வைத்த அயல்நாட்டார் பண்புகள் – பொறி. இலக்குவனார் திருவேலன்
நான் அயல்நாடுகளில் தரக்கட்டுப்பாட்டுப் பொறியாளராகப் பணியாற்றும்போது சுவையான நிகழ்ச்சிகள் பல நடந்ததுண்டு. அவற்றில் இரண்டை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். முதல் நிகழ்வு ஒரு கிழக்குஆசிய நாட்டில். நான் ஒரு பெரிய நிறுவனத்தில் எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்திருக்கிறேன். அந்த நிறுவனம் எமது வாடிக்கையாளருக்கு ஒரு மிகப் பெரிய, தொடர்-வார்ப்பு உருக்கு ஆலையை (Continuous Casting Plant) உற்பத்தி செய்து அளிக்கும் பணியைச் செய்து முடிக்கும் தருவாயில் உள்ளது. அன்றைய மதிப்பில் சில நூறுகோடி உரூபாய். தொடர்புடைய எந்திரப் பொருட்கள் அனைத்தும் கப்பலில்…
இறையாண்மை என்றால் இதுதான் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆடி 17, 2046 / ஆக 02, 2015 தொடர்ச்சி) “தேசிய ஒருமைப்பாடு எனும் காரணம் காட்டித் தமிழக உண்மை வரலாற்றைத் தமிழர்களே அறியாதவாறு செய்ய முற்படுகின்றனர் சிலர் . . . இந்திய கூட்டரசின் உறுப்பு நாடான தமிழகத்தைப் பற்றி உலகுக்கு அறிவிப்பதற்கு இந்தியக் கூட்டரசு எள்ளத்தனையும் செய்திலது. வெளிநாடுகளில் இந்தியா, இந்தி என்றுதான் விளம்பரப்படுகின்றது என்றும்இந்திய அரசினர்க்குத் தமிழகம் என ஒன்றுகூடாது; தமிழ் இனம் எனக் கூறல் சாலாது. தமிழர் பண்டைய வரலாற்றை, மறக்கச் செய்து மறைக்கத்தான் வழிகோலுவார்கள் போல உள்ளது….
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் 4 – மறைமலை இலக்குவனார்
(ஆடி 17, 2046 / ஆக 02, 2015 தொடர்ச்சி) எனினும் இத்தகைய உண்மைகளை உணரப்பெறா வையாபுரியார் தொல்காப்பியரை மேலும் கடன்பட்டவராகவே காட்ட விழைகிறார். தொல்காப்பியத்தில் ‘மொழிமரபு’ இயலில் அமைந்துள்ள இரண்டு நூற்பாக்கள் வரருசி இயற்றிய ‘பிராகிருதப் பிரகாசா’ எனும் இலக்கணநூலில் காணப்படும் இரு நூற்பாக்களின் மொழியாக்கமே என வாதிடுகிறார், வையாபுரியார். ‘அகர இகரம் ஐகாரமாகும்’, ‘அகர உகரம் ஔகாரமாகும்’ என்பவை அவ்விரு நூற்பாக்களுமாகும். ‘இவற்றுள் காணப்படும் புதுமை என்ன? பிராகிருத நூல்களிலிருந்து கடன்பெற்றுச் சொல்லவேண்டிய இன்றியமையாமை யாது உளது?…
மதுவைத் தொடாதே ! – கவிஞர் முத்துச்சாமி
மதுவைத் தொடாதே !- மனிதா! மதுவைத் தொடாதே !- மனிதா மதுவைத் தொடாதே ! மனதும்கெடும் உடலும்கெடும் மறந்து விடாதே ! போதைதரும் மதுவினையே குடிக்கத் தொடங்கினால் -உந்தன் பாதைமாறிப் போய்விடுமே பயணம் தடுமாறிடுமே ! மட்டையாக்கும் மதுவை – நீயும் சட்டைசெய்யாதே ! கட்டையாகிப் போகுமுடல் பட்டை யடிப்பதாலே ! (மதுவைத் தொடாதே) பாடுபட்ட உழைப்பை -நீயும் பார்க்கத் தவறினால் கேடுகெட்ட மதுவுமுன்னைக் கைதி ஆக்குமே ! குடும்பம் தெருவில் நிற்பதற்குக் குடியும் காரணம் – உன்னை மடியேந்த வைத்திடுமே !…
தமிழ்ப்பெயர் சூட்டாஅமைச்சர் கோகுல இநதிராவிற்குத் தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம்
தமிழ்ப்பெயர் சூட்டாஅமைச்சர் கோகுல இநதிராவிற்குத் தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம். கைத்தறி – துணிநூல் துறை அமைச்சர் மாண்புமிகு கோகுல இந்திரா நேற்று மூவண்ணப் புதிய சேலை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். அப்பொழுது அந்தச் சேலைக்கு ‘செய த்ரியம்பிகா’ எனப் பெயர் சூட்டியுள்ளார். இதன் மூலம் தமிழக அரசிற்குக் களங்கம் ஏற்படுத்தி உள்ளார். தமிழ் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே துணி நெசவில் சிறப்புற்று இருந்தனர். பாலாடை போன்ற மெல்லிய ஆடை நெய்வதிலும் பூ வேலைப்பாடு மிக்க ஆடை நெய்வதிலும் வல்லமை பெற்றிருந்தனர். உரோம் முதலான வெளிநாடுகளில் இதற்கு…
இறையாண்மை என்றால் இதுதான் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆடி 10, 2046, சூலை 26, 2015 தொடர்ச்சி) நிலப்புற அரசுகளும் (States on exile) இறையாண்மை உள்ளனவாகக் கருதப்படுகின்றன. சான்றாக இரண்டாம் உலகப்போரின் பொழுது நார்வே, நெதர்லாந்து, செக்கோசுலோவேகியா முதலான நாடுகள் அயலவர் ஆளுகைக்கு உட்பட்டிருப்பினும் இறையாண்மை மிக்கப் புற அரசுகளாக அல்லது புவிசாரா அரசுகளாகக் கருதப்பட்டன. அயலாட்சி நீங்கியதும் புவிசார்இறையாண்மை மிக்க அரசுகளாகக் கருதப்பட்டன. 1990-91 இல் ஈராக் போரின்பொழுது குவைத்து அரசிற்குப் புவிசாரா இறையாண்மை உள்ளதாகக் கருதப்பட்டது. இவற்றின் அடிப்படையிலும் தமிழ் ஈழம் இறையாண்மை மிக்க அரசாகத் திகழ்ந்தது….
கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி: இரா.மோகன்
கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி: இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை உலகில் தடம் பதித்த கவிஞர்கள் நால்வர். இவர்கள் ஒவ்வொருவாருக்கும் தனிச்சிறப்பு உண்டு. நால்வருள் மோனையைப் போல் முன்னிற்பவர் பாரதியார். இவர் 39 ஆண்டுகளே வாழ்ந்து கவிதை உலகில் சாதனை படைத்தவர். பாரதியாருக்கு அடுத்த நிலையில் புகழ் பெற்று விளங்கியவர் பாரதிதாசன்; பாரதியாருக்கு ஒன்பது ஆண்டுகள் இளையவரான இவர் 73 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர். கவிமணி சி.தேசிக விநாயகம் (பிள்ளை) (1876–1954) பாரதியாரை விட ஆறு ஆண்டு மூத்தவர்….
இறையாண்மை என்றால் இதுதான் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
2 இந்தியா என்பது பல தேசிய அரசுகளின் இணைப்பு. இதன் நிலப்பரப்பும் நிலையாக இல்லாமல், உருவான காலத்திலிருந்து மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. 19 ஆம் நூற்றாண்டில்தான் இந்தியா என்னும் செயற்கை அமைப்பே உருவானது. 1858 ஆம் ஆண்டில் இன்றைய இந்தியப் பரப்புடன் இலங்கை, ஆப்கானிசுதானம், பருமா, கிழக்கு வங்காளம், சிந்து, வடமேற்கு எல்லை மாநிலம் எனப்படும் பாக்கிசுத்தான் முதலியவை சேர்ந்த பரப்பே இந்தியா எனப்பட்டது. இப்பரப்பு எல்லைக்குள்ளேயே தனியரசுகள் சிலவும் ஆங்கிலேயர் அல்லாத பிறர் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளும் இன்றைக்கு இணைக்கப்பட்டவாறு இல்லாமல்…
