கலைச்சொல் தெளிவோம்! 78.வெருளி-phobia

78.வெருளி-phobia அச்ச நோய் வகைகள் எனப்படும் வெருளி வகைகள்  ஒன்றைப் பற்றிய அச்சத்தினால் ஏற்படும் அச்ச நோய் பல வகைப்படும். ஒன்றின் மீதான கடும் அச்சம், அல்லது விருப்பமின்மை, அல்லது வெறுப்பு, போபியா(phobia) எனப்படுகிறது. ஒருவர் மீது, அல்லது ஒரு சூழல் பற்றி, அல்லது ஓர் அமைப்பு மீது, அல்லது அமைப்பினர், நாட்டினர், அவர்கள் தொடர்பானவை என்பனவற்றின் மீது, அல்லது இவை போன்றவற்றின்மீது, எவ்வகைப் பேரிடருக்கும் வாய்ப்பு இல்லாத பொழுதும் விடாப்பிடியான அல்லது இயல்பிற்கு மீறிய அல்லது பகுத்தறிவிற்கு முரணான அச்சம் ஏற்படுவதையே இது…

கலைச்சொல் தெளிவோம்! 77. கொண்மூ-Cirrus

77. கொண்மூ-Cirrus  கொண்மூ ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ (புறநானூறு : 35.17) நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி, (குறிஞ்சிப்பாட்டு : 50) மா மலை அணைந்த கொண்மூப் போலவும், (பட்டினப்பாலை : 95) இமிழ் பெயல்தலைஇய இனப்பலக் கொண்மூ (அகநானூறு : 68.15) பெய்துவறி தாகிய பொங்குசெலற் கொண்மூ (அகநானூறு : 125.9) உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போல (கலித்தொகை : 104.16) முதலிய அடிகளில் வருவதுபோல் 17 இடங்களில் கொண்மூ குறிக்கப்படுகிறது. முதலில் இச்சொல் பொதுவான பெயராக…

கலைச்சொல் தெளிவோம்! 76. கணம்-Cirrostratus

 76. கணம்-Cirrostratus   கணம் அடுத்த அடுக்கில் 8000 பேரடி(மீட்டர்) உயரத்தில் கூட்டம் கூட்டமாக உள்ள குவியடுக்கு முகிலின் பெயர் கணம். மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன் (புறநானூறு : 131.1) அமிழ்துதிகழ் கருவிய கணமழை தலைஇக் (பதிற்றுப்பத்து : 17.11) இவ்வாறு இடி, மின்னல் இணைந்த மழை முகிலைக் கணம் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. இதனையே சிர்ரோசுதிரட்டசு/Cirrostratus எனக் குறிப்பிடுகின்றனர். கணம்-Cirrostratus – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 75. செல்-Cirrocumulus

 75. செல்-Cirrocumulus   செல்   செல்(117) என்பதற்கு உள்ள சில பொருள்களில் ஒன்று முகில் என்பதாகும். “வான்முழக்குச் செல்” (பரிபாடல் 13.44) என்னும் பொழுது இடி முழக்கத்துடன் இணைந்த மழைமுகிலைக் குறிப்பிடுகின்றது. இத்தகைய தன்மை உடைய 7000 பேரடி (மீட்டர்) உயரத்தில் உள்ள சுருள்குவிவு முகில் சிர்ரோகியூமுலசு/Cirrocumulus எனப்படுகின்றது. செல்-Cirrocumulus – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 74. மை-Altostratus

 74. மை-Altostratus  மை 6000 பேரடி(மீட்டர்) உயரத்தில் உள்ள இடைஅடுக்கு முகிலே மை என்பது. மை(110) எனில், கருநிறம், வண்டி மை, பசுமை, குற்றம் என்பன போன்று பல பொருள்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் முகில் என்பது. மைபடு சென்னி (கலித். 43), “மைபடு மால்வரை”(நற்றிணை : 373:3. ) “மைபடு சிலம்பின்” (குறுந். 371 & பரிபாடல் : 16:2) “மைபடு குடுமிய குலவரை” (பரிபாடல் : 15:9-10) என்னுமிடங்களில், ‘மை’ மலைகளில் தவழும் முகிலைக் குறிக்கின்றது. மழைக் கருக்கொண்டபின் கருமையாய் அமையும்…

கலைச்சொல் தெளிவோம்! 73. கார்-Altrocumulus

 73. கார்-Altrocumulus   கார் கடல் முகந்து வந்தன்று, கார்! (முல்லைப்பாட்டு : வெண்பா 2) காரும் ஆர்கலி தலையின்று. தேரும் (அகநானூறு : 54.3) கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப் (குறுந்தொகை : 162.1) தளி தரு தண் கார் தலைஇ (நற்றிணை : 316.9) கார்கலித்து அலைப்ப (ஐங்குறுநூறு : 496.2) என்பன போல் சங்க இலக்கியத்தில் 139 இடங்களில் வந்திருந்தாலும் கார் முகிலையும் கார் பருவத்தையும் இச் சொல் குறிக்கின்றது. 5000 பேரடி(மீட்டர்) உயரத்தில் மழை பெய்யும் நிலையில்…

கலைச்சொல் தெளிவோம்! 72. விண்டு-Stratocumulus

72. விண்டு-Stratocumulus விண்டு   விண்டு சங்க இலக்கியத்தில் 8 இடங்களில் பயன்படுத்தப் பெற்றுள்ளது. எனினும் மலையைத்தான் குறிக்கிறது. ஆனால், விண்டுச் சேர்ந்த வெண்மழை போல (பதிற்றுப்பத்து 55.15) விண்டு முன்னிய புயல்(பதிற்றுப்பத்து (84.22) என்பன போல், பெரும்பாலும் மழை முகிலோடு தொடர்பு படுத்தியே விண்டு குறிக்கப்பெறுகின்றது. பிங்கல நிகண்டு விண்டு என்பதன் ஒரு பொருளாக முகிலையும் குறிக்கின்றது.   விண்டு ஆகிய மலையில் குவியும் முகில் பின்னர் விண்டு என்றே அழைக்கப் பெற்றிருக்க வேண்டும். எனவே, சங்க இலக்கியங்களில் பயன்பெற்ற சொல் என்ற…

கலைச்சொல் தெளிவோம்! 71. முதிரம்-Cumulonimbus

 71. முதிரம்-Cumulonimbus முதிரம்   புறநானூற்றில் வரும் இரு பாடல்களிலுமே உயர்கொடை வள்ளல் குமண மன்னன் ஆட்சிப்பரப்பிற்குட்பட்ட முதிரமலையையே முதிரம் என்பது குறிக்கின்றது. பின்னரே இச்சொல் முகிலைக் குறிப்பதாய் அமைந்துள்ளது.   மூவாயிரம் பேரடி(மீட்டர்) உயரத்தில் உள்ள அடுத்த முகில்கூட்டத்தின் பெயர் கியூமுலோநிம்பசு-Cumulonimbus என்பதாகும். இதனையே முதிரம் எனக் குறிக்கலாம். முதிரம்-Cumulonimbus – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 70. மஞ்சு-cumulus

70. மஞ்சு-cumulus  மஞ்சு (11) விசும்பிற்கு மேற்பட்ட நிலையில் ஈராயிரம் பேரடி(மீட்டர்) தொலைவில் உள்ள முகிலை அடுத்துப் பார்ப்போம். பின்வரும் பாடல் அடிகள் மழையைச் சுற்றி மஞ்சு எனப்படும் முகில் கூட்டம் அமைந்துள்ளதை விளக்குகின்றன. மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த (நற்றிணை: 154:1-4) மணம் கமழ் மார்பினை, மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து (கலித்தொகை: 49.16) அகல்இரு வானம் அம்மஞ்சு ஈன(ப்), (அகநானூறு: 71.8) முனைசுட வெழுந்த மங்குல் மாப்புகை மலைசூழ் மஞ்சின், மழ களிறு அணியும் (புறநானூறு:103: 6.7) மஞ்சு…

கலைச்சொல் தெளிவோம்! 69. விசும்பு-stratus

69. விசும்பு-stratus  எழிலிக்கு அடுத்த அடுக்கில் 1000 பேரடி(மீட்டர்) தொலைவில் உள்ள பாவடி முகில் குறித்து அடுத்துப் பார்ப்போம்.  விசும்பு என்னும் சொல்லைச் சங்கப் புலவர்கள் 164 இடங்களில் கையாண்டுள்ளனர்; விசும்பு வானத்தையும் குறிக்கின்றது, வானத்தில் உள்ள முகில்கூட்டத்தையும் குறிக்கின்றது. முகில் என்னும் பொருளில் ‘விசும்பு’ வரும் சில இடங்கள் வருமாறு : ஒருகை நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒருகைவான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட (திருமுருகு ஆற்றுப்படை : 115-116) நீல் நிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும் (பெரும்பாணாற்றுப்படை :…

கலைச்சொல் தெளிவோம்! 68. எழிலி-nimbostratus

 68. எழிலி-nimbostratus   முகிலியல் (science of clouds)   முகில் கூட்டங்களை முகில் (அல்லது மேகம்) என்றே நாம் வேறுபாடு அறியாமல் கூறுகிறோம். கிளெடு (cloud) எனில் முகில் என மனையறிவியலிலும், முகில், மேகம் எனப் பொறிநுட்பவியல் புவியறிவியல் ஆகிய துறைகளிலும் கொண்டல், மேகம் என வேளாணியலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. வான் மழை பெய்யும் முகில் கூட்டம் பல வகையாய் உள்ளது என 19ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். ஆவர்டு (Luke Howard 1772-1864) என்னும் பிரித்தானிய அறிஞர் வெவ்வேறு வகை முகில் கூட்டம்…

கலைச்சொல் தெளிவோம்! 67. மேலிழை/மெல்லிழை-lamination : இலக்குவனார் திருவள்ளுவன்

  67. மேலிழை/மெல்லிழை-lamination   அட்டை அல்லது ஒரு பரப்பின் மேல்மேற்பரப்பு தெரியும்படியும் காப்பாகவும் இடப்படும் இழையை (இ)லேமினசேன் lamination என்று குறிப்பிடுகின்றனர். இதனை மென்படல உறை(ஆட்.), அடுக்காக்கம்(பொறி.), மெல்லடுக்கு(பொறி.,புவி.) மென்தகடு, அடுக்கு அமைப்பு (மனை.) என வெவ்வேறு வகையாகக் குறிக்கின்றனர். மேல்(89)+இழை(256)>மேலிழை எனலாம். மென்(232), மென்பால்(2), மென்புல(7), மென்புலம்(1), மென்மெல(15), மென்மை(5), மென்மொழி(1) என மென்மை பற்றிய சங்கச் சொற்கள் உள்ளன. மென்மையான இழை என்பதால் மெல்லிழை என்றும் சொல்லலாம்.   மேலிழை/மெல்லிழை-lamination – இலக்குவனார் திருவள்ளுவன்