செயலலிதாவைவிடத் திறனாளரான எடப்பாடியார் ! – இலக்குவனார் திருவள்ளுவன்

செயலலிதாவைவிடத் திறனாளரான எடப்பாடியார் !    சட்டப்பேரவை விதி எண்110இன் கீழ் அறிவிப்புகள் வெளியிடல், தான் செல்லும் இடங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள். கட்சிப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள்  அணிவகுத்துச் சிறப்பிக்கச் செய்தல், சென்னையிலிருந்தபடியே காணொளிக் காட்சிகள் மூலம் பல திறப்பு விழாக்களை நடத்துதல்  போன்றவற்றின் மூலம் தன்னைச் செயலலிதாவிற்கு இணையாகவும் சில  நேர்வுகளில் அவரை விட உயர்வாகவும் தன்னைக் காட்டிக் கொள்கிறார் இன்றைய முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி. உண்மையில் இவையெல்லாம் அவருக்குத் தேவையே இல்லை. செயலலிதாவைவிடத் திறம்படவே அவர் செயல்படுகிறார்….

ஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல!   மத்தியில் ஆளும் பாசக, பாசக ஆளாத மாநிலங்களை ஆளுநர்கள் மூலம் ஆட்டிப்படைத்து வருகிறது. மக்களாட்சிக்கு எதிரான இப்போக்கால் மாநில நன்மைகள் பாதிப்படைகின்றன.  தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் காலடியில் வீழ்ந்து கிடப்பதைப் பெருமையாகக் கருதுவதால் இரு தரப்பிலும் சிக்கல் இல்லை. ஆனால் மாநில உரிமைகள் பறிக்கப்படும் தவறான  நடைமுறைகள் அரங்கேற்றப்படுவதால் எதிர்க்கட்சிகளும் மக்களாட்சி ஆர்வலர்களும் எதிர்த்துக் கொண்டு வருகின்றனர்.  தில்லி  ஒன்றியப் பகுதியில் முதல்வர் அரவிந்து கெசுரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் கடும் போராட்டங்களுக்குப் பின்னர் உச்ச நீதி…

மொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே! – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்

மொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே!   மொழிப்பாடங்கள் சுமையாக இருப்பதாகக் கூறி அரசு, தாள் 1, தாள் 2 என இருந்த முறையை மாற்றியுள்ளது. இனி  மொழிப்பாடங்களில் ஒரு தேர்வுத்தாள் மட்டுமே இருக்கும்.  மேம்போக்காகப் பார்க்க இது சிறப்பானதாகத் தோன்றலாம். ஆனால்,  மொழி அறிவு என்பது அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை. அறிவியல் முதலான பிற மொழிப்பாடங்களைப் படிப்பதற்கும் மொழி அறிவு துணை நிற்கின்றது. அறிவில் சிறக்கத் துணையாய் இருக்கும் தாய்மொழி அறிவு குறைக்கப்படுவது மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்….

ஆங்கிலத்திற்கு வரவேற்புப் பா பாடும் திமுக, அதிமுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

சிறப்புக் கட்டுரை: ஆங்கிலத்திற்கு வரவேற்புப் பா பாடும் திமுக, அதிமுக! இலக்குவனார் திருவள்ளுவன் முன்பெல்லாம் திமுகவும் அதிமுகவும் ஆட்சிக்கு வரும் வரை “தமிழ்! தமிழ்!” என முழங்குவார்கள். வந்த பின் தமிழை மறந்துவிடுவார்கள். இப்பொழுதோ ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உதட்டளவில் தமிழைத் தாய் என்கிறார்கள். ஆனால், ஆங்கிலத்தின் அருந்தவப்பிள்ளைகளாகச் செயல்படுகிறார்கள். இந்தியை எதிர்ப்பதுபோல் நாடகமாவது ஆடுகிறார்கள். ஆனால், ஆங்கிலத்திற்குக் காவடி தூக்குகிறார்கள். திமுகவிற்கும் அதிமுகவிற்கும் உள்ள ஒற்றுமை இதுதான். முதிய தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை தருதல், தமிழறிஞர்கள் பெயர்களில் விருதுகள் வழங்கல் போன்று தமிழ் வளர்ச்சிக்கெனச்…

நீதிமன்ற அணுகுமுறை அநீதிக்குத் துணை நிற்கிறது! – இலக்குவனார் திருவள்ளுவன்

நீதிமன்ற அணுகுமுறை அநீதிக்குத் துணை நிற்கிறது!   தமிழ்நாடு சட்டமன்றத்தில் தகுதிநீக்கம் செய்யப்பெற்ற 18 ச.ம.உ.  முறையிட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வந்துள்ளது. ஆளுங்கட்சிக்குத் சாதகமாக அதே நேரம் நடுவுநிலைமையுடன் உள்ளதுபோல் இரு தீர்ப்புகள் வந்துள்ளன. தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்று வந்த தீர்ப்பு போல் பல வழக்குகளில் ஆளுங்கட்சிக்குச் சார்பாகவே தீர்ப்புகள் வந்துள்ளன. தகுதிநீக்கம் செல்லாது என்றால்  அரசிற்குக் கண்டம்தான். இப்பொழுது ஒரு நீதிபதி (மாண்பமை சுந்தர்) செல்லாது என்றாலும் மற்றோருவரான தலைமை நீதிபதி மாண்பமை இந்திரா (பானர்சி) செல்லும் என அறிவித்து…

வீழும் பாசகவிற்கு வால் பிடிக்கும் ஊடகங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

வீழும் பாசகவிற்கு வால் பிடிக்கும் ஊடகங்கள் அண்மையில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கும் 11 சட்டமன்ற்த தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றன. இவற்றுள் மகாராட்டிர மாநிலம் பாலுசு கடேகான் தொகுதியில் பேராயக்கட்சியின்(காங்.) வேட்பாளர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கே போட்டியிடுவதற்குக் கூடத் துணிவற்ற நிலையில்தான்  தன்னை வலிமைவாய்ந்த கட்சியாகக் கதையளக்கும் பாசக உள்ளது. இதுவே பாசகவின் வீழ்ச்சியைத்தான் காட்டுகின்றது. உத்தரபிரதேச மாநிலம், கைரானா தொகுதியில்  பாசக  நாடாளுமன்ற உறுப்பினர்  உக்கும் (சிங்கு)  காலமானதால் இடைத்தேர்தல் நடை பெற்றது. அந்தத் தொகுதியில் உக்கும்(சிங்கின்) மகள் மிரிகங்கா(சிங்கு) பாசக சார்பில் போட்டியிட்டு…

ச.வே.சேகரைத் தீண்டாமைத் தடுப்புச்சட்டத்தில்  கைது செய்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

ச.வே.சேகரைத் தீண்டாமைத் தடுப்புச்சட்டத்தில்  கைது செய்க!   மதுரையில் நிருமலா தேவி என்னும் கல்லூரி ஆசிரியை, மாணாக்கியரை ஒழுக்கக் கேடான பாதைக்கு அழைத்துச் செல்வதாகக் கைது செய்யப்பட்டுச் சிறைக்காவலில் உள்ளார்.  இது  தொடர்பில் உயர் அலுவலர்களுக்கும் பங்கு உண்டு என்று அவர் மூலம் தெரிய வந்த பொழுது தமிழ்நாட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்து மீதும்  குற்றச் சாட்டு புகைந்தது. தனக்கும் இதற்கும் தொடர்பில்லை என விளக்க ஆளுநர் செய்தியாளர் கூட்டம் நடத்தினார். தன் மீது களங்கம் இல்லை எனக் கூற வந்தவர்  கூட்டத்தில் பெண்களிடமிருந்து…

பட்டியல் சாதியர் நலன்காக்கக் கைக்கட்டுடன் மடல் எழுதிய முதல்வர் பழனிச்சாமி

பட்டியல் சாதியர் நலன்காக்கக் கைக்கட்டுடன் மடல் எழுதிய முதல்வர் பழனிச்சாமி   மததிய பாசக அரசு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பட்டியல் சாதியர், பட்டியல் இனத்தவர், பிற்பட்டோர், சிறுபான்மையர் நலனுக்கு எதிராகவே நடந்து கொள்கிறது.  அவற்றில் ஒன்றுதான் கடந்த ஆண்டு தனியார் நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் பட்டியல் சாதியர், பட்டியல் இனத்தவர், பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கல்வி  உதவித் தொகையை நிறுத்துவது. அவர்கள் செலுத்திய கல்விக்கட்டணத்தைத் திரும்பப்பெறும் வகையில் தரப்பட்ட இவ்வுதவித்தொகையை நரேந்திர(மோடி) அரசு  கடந்த ஆண்டு நிறுத்தி விட்டது.  எனினும் தமிழ்நாடுஅரசு நிறுத்தவில்லை….

பள்ளிகளைக் காப்பாற்ற தாய்த்தமிழ்ப்பள்ளி வாரியம் –  நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்

பள்ளிகளைக் காப்பாற்ற தாய்த்தமிழ்ப்பள்ளி வாரியம் தமிழ்நாட்டில் 1951  இல் 20.80 % மக்கள்  படிப்பறிவோராக இருந்தனர். ஆண்களில்  31.70 % மக்களும்  பெண்களில் 10.10 % மக்களும்தான்  படிப்பறிவு பெற்றவர்கள். இத்தொகை 1961 இல்  ஆண்களில் 51.59% ,  பெண்களில் 21.06%  ஆகவும் மொத்தத்தில்  36.39% ஆகவும் உயர்ந்தது. 1971 இல் படிப்பறிவு உடையோர் மேலும் உயரந்தனர். ஆண்கள் 59.54%    பெண்கள் 30.92%     மொத்தம் 45.40% என இருந்தது. 2011 இல் தமிழ்நாட்டில் படிப்பறிவோர் விகிதம்  ஆண்கள் 86.81%  பெண்கள் 73.86% ஆகும். எல்லாக்…

செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம் மூடலுக்குப் பாராட்டு! உறுதியாய் நிற்க வேண்டுகோள்!

செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம் மூடலுக்குப் பாராட்டு! உறுதியாய் நிற்க வேண்டுகோள்!  பதின்மூவருக்குக் குறையாத உயிர்ப்பலிக்கும் நூற்றுக்கணக்கானவர்களின் படுகாயங்களுக்கும் பிறகு தமிழ்நாடு முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகத்தை மூட ஆணை பிறப்பித்துள்ளார்.  சுற்றுச்சூழல் வனத்துறை அரசாணை (பல்வகை) எண் 72 நாள் வைகாசி 14, 2049 /  மே 28, 2048 இனபடி அரசு இதனை நிலையாக மூட ஆணை பிறப்பித்துள்ளது.  துணை முதல்வர்  பன்னீர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் செயக்குமார், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் இராசு, ஆதி திராவிடர்…

மக்கள் நாயகம் கொல்லப்பட்டது!  மக்களும் கொல்லப்பட்டனர்! –  இலக்குவனார் திருவள்ளுவன்

மக்கள் நாயகம் கொல்லப்பட்டது!  மக்களும் கொல்லப்பட்டனர்! தொடங்கியது நரேந்திர(மோடி) அரசு! முடித்தது எடப்பாடி பழனிச்சாமி அரசு!     வேதாந்த வள வரையறு நிறுவனம் (Vedanta Resources plc,)என்பது உலக அளவில் சுரங்கத் தொழிலிலும் மாழை (உலோக)வணிகத்திலும் ஈடுபட்டு வரும் நிறுவனமாகும்.   இதன் சார்பு அமைப்பாகத் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் ஊரில் சுடெருலைட்டு தொழிலகம் (Sterlite Industries)  என்னும் செம்பு உருட்டாலை அமைக்கப்பட்டது. இந்தியத் தேசியப்பேராயத்தின் நரசிம்ம(ராவு) ஆட்சியில் ஒப்புதல் பெறப்பட்ட இத்தொழிலகத்திற்கு 1993 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கே செம்புக்கம்பி,…

கருதியது நடந்தது:  எடியூரப்பா விலகல்! – இலக்குவனார் திருவள்ளுவன்

கருநாடகாவில் கருதியது நடந்தது:  எடியூரப்பா விலகல்!    15 நாள் கால வாய்ப்பில் ச.ம.உ.களை வாங்கி ஆட்சியைச் சிக்கலின்றி அமைக்கலாம் எனப் பாசக திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் 24 மணி நேர வாய்ப்பே அளித்தமையால் பேர வணிகத்திற்கு வாய்ப்பில்லாமல் போனது. இச்சூழலை எதிர்பார்த்தே எடியூரப்பா விலக  வேண்டும் என நேற்று குறிப்பிட்டிருந்தோம்,( எடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும். )   மோசமான தோல்வியை வெளிப்படுத்துவதை விட விலகுவதே மேல் எனக் குறுக்கு வழியில் கருநாடகாவின் முதல்வராகப் பொறுப்பேற்ற…