பதிவர்களுக்குப் பத்துக்கட்டளைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
வலைத்தளப் பதிவர்களுக்கும் பகிர்வர்களுக்கும் வேண்டுகோள்! முகநூல்(Facebook), காணுரை(whats-app), சுட்டுரை(Twitter), வலைப்பூக்கள், கருத்தாடல் குழுக்கள் (மின்னஞ்சல்கள் வழியாகக் குழுக்களுடன் தொடர்பு கொள்ளல்) முதலியனவற்றில் பதிவு மேற்கொள்வோரும் பிறரது பதிவுகளைப் பகிர்வோரும் தமக்குத்தாமே கட்டுப்பாடு வகுத்துக்கொண்டு பதிவு அல்லது பகிர்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உண்மையைத் தன்மையை ஆய்ந்து பதிவிடுக! பொதுவாகச் செய்திகளை முந்தித் தரவேண்டும் என்ற ஆர்வத்தில், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் பதிந்து விடுகின்றோம். சான்றாக யாருக்காவது உடனடியாகக் குருதித் தேவை எனச் செய்தி வரும். உடனே நாம் உதவும் நோக்கில் பிறருக்குப்…
கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 2/2 – ஈழத்து நிலவன்
(கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 1/2 தொடர்ச்சி) கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 2/2 தனது நாட்டில் சிறுபான்மைத் தேசிய இனங்களை அடக்கி வரும் இந்திய அரசு, ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவும் எனச் சிலர் இன்னும் கூறி வருகிறார்கள். இந்தியாவில் தேசிய இனங்களின் உரிமைகளை மறுக்கும் இந்திய அரசு, இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தரும் என்று கூறுபவர்களை என்னவென்று அழைப்பது! மாயமானைக் காட்டி, ஈழத்தமிழர் நீதிக்கான போராட்டத்தைத் திசை திருப்புவோரிடம் எச்சரிக்கையாக இருங்கள்! உலக நாடுகளைச்…
பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 15 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 14 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 15 பெண்ணை உயர்த்து! தன்மதிப்பும், தெய்வ உணர்வும் ஆண்களுக்கு மட்டுமே எனச் சிலர் அறியாமையால் எண்ணலாம். ‘தையல் சொல் கேளேல்’ என ஔவை சொன்ன சூழலைப் புரிந்து கொள்ளாமல் பெண்களை இழிவு செய்யக்கூடாது என்பதே பாரதியாரின் எண்ணம். பெண்களை ஆணுக்கு இணையாய் நாடெங்கும் பரப்பியதே அவரது புரட்சிப் பாக்கள். “தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வ முண்டோ? தாய் பெண்ணே யல்லளோ? தமக்கை, தங்கை வாய்க்கும் பெண் மகவெல்லாம் பெண்ணேயன்றோ?” (பாரதியார் கவிதைகள்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 34: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 33 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 34 கையறு நிலைக் கவிதைகள் கையறு நிலை என்பது புறப்பொருள் பாடல்களில் அமைந்துள்ள ஒரு துறையாகும். அரசன் இறப்ப அவனைச் சார்ந்தோர் அவ்விறந்து பாட்டைச் சொல்லி ஒழுக்கம் தளர்தல் என்பது பொருளாம். ‘செய்கழல் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர் கையற வுரைத்துக் கைசேர்ந் தன்று’ 90 இறந்தனுடைய புகழை எடுத்துக்கூறி இரங்கினும் கையறுநிலை என்னு ம் துறையாம். ‘கழிந்தோன் தன்புகழ் காதலித் துரைப்பினும் மொழிந்தனர் புலவர் அத்துறை…
அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 1/3 – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு
ஆட்சியாளர்கள் – அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு, த.தா.கை.க.கா.ஆ.உ.தே.க.கு.ச (FFSHKFDR – Tamil Homeland) கூட்டாக வலியுறுத்தல்! இலங்கையில் மிகவும் கொடுமையான ‘ஆள் கடத்தல், கைது, தடுத்து வைத்தல்’ போன்றவை அரசியல் தலைமைகளாலும், படைத் தலைமைகளாலும், அரசுச் சார்புத் துணை ஆயுதக் குழுக்களாலும், மிகப் பொறுமையாக நன்கு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளன எனவும் ஆட்சியாளர்கள் – அரசு ஆகியவற்றின் நலன் சார்ந்த ‘அரசியல் நிகழ்ச்சி நிர’லின்படியே இவை நிகழ்த்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்திருக்கும் வவுனியா மாவட்டக்…
கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 1/2 – ஈழத்து நிலவன்
கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 1/2 எமது மக்களைப் பாதுகாப்பதற்காக வரலாற்றுத் தன்னியல்பில் எமது கைகளில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள்! – அடிமைத் தேசத்தில் கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவையானவர்கள்! – ஈழத்து நிலவன் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தி அவர்களை ஒடுக்கும் வழமையான இலங்கை ஆட்சியே இதுவும் எனத் தன்னை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது மைத்திரிபால சிறிசேன – இரணில் ஆட்சி. இன அழிப்பின் நுண்மையான பின்னணிகள் திடீர் இறப்புகள்,…
தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4 – சி.சேதுராமன்
தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4 பாரதி, பாரதிதாசன் ஆகிய இருவரின் சுவடுகளைப் பற்றிக் கொண்டு ‘பாரதி கவிதா மண்டலத்தின்’ மூன்றாவது தலைமுறையில் முத்திரைப் பதித்த கவிஞர்தான் தமிழொளி. பாரதியையும், பாரதிதாசனையும் பலரும் பின்பற்றி அவர்களது சுவடுகளில் கால்பதித்து நடந்தாலும் அவர்களின் வழிநின்று பொதுவுடைமைக்குக் குரல் கொடுத்து இறுதிவரை பொதுவுடைமைவாதியாகவே வாழ்ந்து மறைந்தவர் கவிஞர் தமிழொளி. தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடியை அடுத்த ‘ஆடூரில்’ சின்னையா – செங்கேணி அம்மாள் இவர்களின் தலைமகனாக 1924-ஆம் ஆண்டு செட்டம்பர் திங்கள் 21-ஆம்…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.17. : பொய்ம்மை விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.16. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 17. பொய்ம்மை விலக்கல் நிகழா ததனை நிகழ்த்துதல் பொய்ம்மை. நடக்காததைச் சொல்வது பொய் ஆகும். நிகழ்வதை யங்ஙன நிகழ்த்துதல் வாய்மை. நடந்ததை அவ்வாறே சொல்வது உண்மை ஆகும். தீமையைத் தருமெனின் வாய்மையும் பொய்ம்மையாம். தீய விளைவைத் தரும் எனில் உண்மை என்பது பொய்க்குச் சமம் ஆகும். புரைதீர் நலந்தரின் பொய்ம்மையும் வாய்மையாம். குற்றமில்லாத நன்மையைத் தரும் எனில் பொய்யும் உண்மைக்குச் சமம் ஆகும். வாய்மையைத் தருவதே வாயென வறிக. வாய்மை(உண்மை)யைப் பேசுவதால் மட்டுமே “வாய்”…
திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் -1/2 : மு. முத்துவேலு
திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 1/2 திருக்குறளை அறநூல், அன்புநூல், அருள்நூல், அறிவுநூல், அகநூல் என்று பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் பலரும் ஆய்ந்து வந்துள்ளனர். திருக்குறளைச் ‘சட்டநூல்’ என்ற நோக்கில் அணுகினாலும் அதில் தமிழரின் சட்டநெறிகள் புலப்படக் காணலாம். அவ்வகையில், 1860-ஆம் ஆண்டில் இயற்றப்பெற்று இன்றளவும் இந்திய நீதிமன்றங்களில் பயன்பட்டுவரும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின்(The Indian Penal Code) கூறுகள், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் தமிழர்களுக்குச் சட்ட நூலாக விளங்கிய திருக்குறளில் பொதிந்திருக்கின்றன என்பதைப் புலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். திருக்குறள்…
குற்றமற்றவர்களைக் கொல்லத் துடிக்கும் மனிதர்களை வரலாறு மன்னிக்கட்டும்! பேரறிவாளன் குறிப்பேடு! பாகம் – 04
(பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி: பாகம்-03 தொடர்ச்சி) குற்றமற்றவர்களைக் கொல்லத் துடிக்கும் மனிதர்களை வரலாறு மன்னிக்கட்டும்! பேரறிவாளன் குறிப்பேடு! பாகம் – 04 (வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!) உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இறுதியானது மட்டுமே, குறையற்றது எனக் கொள்ள முடியாது. இதை நான் சொல்லவில்லை. சொன்னால், இந்திய நீதி அமைப்பு முறையைக் குற்றவாளியெல்லாம் குறை சொல்லலாமா எனச் ‘சிலர்’ கூக்குரல் எழுப்பவர். இந்தக்…
தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2 – தி.வே. விசயலட்சுமி
தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2 பண்டைத் தமிழரின் விழுமிய வாழ்வு சிறந்த பண்பாட்டையும் செவ்வியல் இலக்கிய, இலக்கணங்களையும் தோற்றுவித்தது. அவற்றுள் காலத்தால் முற்பட்டதும். பெருமைக்குரியதுமாய் இருக்கும் நூல் தொல்காப்பியமாகும். தமிழுக்கும், தமிழினத்திற்கு முதனூல். இந்நூலுக்கு முன்னர்த் தோன்றியனவாகச் சில நூல்கள் இருப்பினும், அந்நூல்களைப்பற்றி நாம் ஒன்றும் அறியக் கூடவில்லை. இடைக் காலத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரம் மறைப்புண்டிருந்தது என்பது தெரிய வருகிறது. தொல்காப்பியனார் குறித்த வரலாறுபற்றிப் பலசெய்திகள் வழங்குகின்றன. அவற்றுள் தொல்காப்பியனாருடன் ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரனார் பாடிய தொல்காப்பியச்…
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு! – பழ. நெடுமாறன்
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு! மறைமலையடிகள் 1916-ஆம் ஆண்டில் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவர் 20-ஆம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அவர் பிறந்த நாளான சூலை 15-ஆம் நாளில் தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். வடமொழிக்கோ பிறமொழிகளுக்கோ அவர் எதிரானவர் அல்லர். தமிழ், சமற்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் புலமை மிக்கவர் அவர். ஒரு மொழியில் இயல்பாக உள்ள சொற்களைத் தவிர்த்துவிட்டு பிறமொழிச் சொற்களைக் கலந்து பயன்படுத்துவதன் மூலம், அம்மொழி அழியும்…
