தொழூஉப்புகுதல்(சல்லிகட்டு) இலக்கியத்தில் சான்று – சான்றோர் மெய்ம்மறை
முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி நறையோடு துகள் எழ நல்லவர் அணி நிற்பத் துறையும் ஆலமும் தொல்வலி மரா அமும் முறையுளிப் பரா அய்ப் பாய்ந்தனர் தொழூஉ (முல்லைக்கலி 101:10-14) இரும் புலித் தொகுதியும் பெருங் களிற்று இனமும் மாறு மாறு உழக்கியாங்கு உழக்கிப் பொதுவரும் ஏறு கொண்டு ஒருங்கு தொழூஉ விட்டனர்! விட்டாங்கே மயில் எருத்து உறழ் அணிமணி நிலத்துப் பிறழப் பயில் இதழ் மலர் உண்கண் மாதர் மகளிரும்…
அகரமுதல இதழின் பொங்கல் வாழ்த்தும் திருவள்ளுவர் ஆண்டு வாழ்த்தும்
அகரமுதல இதழின் பொங்கல் வாழ்த்தும் திருவள்ளுவர் ஆண்டு வாழ்த்தும்
பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 06 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 05 தொடர்ச்சி) 06 உடல்நலன் பேணுக! வீரத்துடனும் வலிமையுடனும் திகழ அடிப்படைத் தேவை உடல்நலம் அல்லவா? எனவே, அதனையும் பாரதியார் வலியுறுத்துகிறார். பொலிவிலா முகத்தினாய் போ போ போ பொறியிழந்த விழியினாய் போ போ போ ஒலியிழந்த குரலினாய் போ போ போ ஒளியிழந்த மேனியாய் போ போ போ கிலி பிடித்த நெஞ்சினாய் போ போ போ என நலமற்ற தன்மையை விரட்டியடித்து நோய்களற்ற உடலினாய் வா வா வா (பக்கங்கள் 38-39 / போகின்ற பாரதமும் வருகின்ற…
திருவள்ளுவர் நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் ?
உலகத் தமிழர்களுக்கு அடையாளமாக விளங்கும் திருவள்ளுவருக்கு ஆண்டுதோறும் ஒரு நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. தமிழக அரசு இந்நாளை திருவள்ளுவர் நாளாக அறிவித்த போதிலும் இந்த நாளை உலகத் தமிழர்கள் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்ற செய்தியைத் தமிழர்களிடைய அரசு கொண்டு செல்லவில்லை. தமிழ் அமைப்புகள் மட்டும் தங்களால் முடிந்தவரை சிறிய அளவில் இந்நாளில் நிகழ்சிகளை நடத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் இந்நாளில் அறியப்பட வேண்டிய திருவள்ளுவரின் புகழை இன்று தமிழர்களே அறியாத நிலை தான் இன்றுவரை நீடிக்கிறது. இந்த நிலையை நாம்தான் மாற்ற வேண்டும்….
தமிழண்ணலின் தமிழ் வாழ்வு – தமிழ்ச்சிவா
தமிழண்ணலின் தமிழ் வாழ்வு (ஆடி 28, 1956 – மார்கழி 13, 2046 / ஆக. 12, 1928 – திசம்பர் 29, 2015) எண்பத்தெட்டாம் அகவைவரை வாழ்ந்து தமிழ் மொழிக்குத் தன்னாலான பல ஆய்வு நூல்களை வழங்கித், தமிழர் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளார், அறிஞர் இராம.பெரியகருப்பன் என்கின்ற தமிழண்ணல். ஆய்வுலகில் ஓர் தமிழரிமாவாகத் திகழ்ந்தார். கவிஞர், புதின ஆசிரியர், திறனாய்வாளர், பதிப்பாசிரியர், சொற்பொழிவாளர் எனப் பல முகங்களைக் கொண்டிருந்தவர்; தம்முடைய திறமையால் பல படிநிலைகளைக் கடந்தவர்; மொழிப்போர் வீரர்;…
ஆங்கிலப் பணிப்பெண்ணிற்காகத் தலைவியாம் தமிழைப் புறக்கணிக்கக் கூடாது – பேரா.சி.இலக்குவனார்
ஆங்கிலப் பணிப்பெண்ணிற்காகத் தலைவியாம் தமிழைப் புறக்கணிக்கக் கூடாது ஆங்கிலத்தைப் போற்ற வேண்டியது தமது முன்னேற்றம் கருதியேதான் என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடம் இல்லை. ஆனால் அதற்காகத் தமிழை அறவே மறந்து விடுதல் கூடாது அன்றோ. நமக்கொரு பணிப்பெண் வேண்டிய நிலைமையை நினைத்து தமது வீட்டுத் தலைவியைப் புறக்கணித்து விடலாமா? தமிழர்களில் சிலர் அவ்வாறே செய்யும் நிலையில் இருக்கின்றனர். ஆங்கிலம் தமிழுக்கு அடுத்துக் கற்க வேண்டிய மொழியே அன்றித் தமிழை விடுத்துக் கற்பதற்குரியதன்று. ஒவ்வொரு தமிழரும் தமிழை முதன் மொழியாகவும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகவும்…
பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 05 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 04 தொடர்ச்சி) 05 நாடு காப்பாய்! வீரம், வலிமை, துணிவு எல்லாம் எவற்றுக்காக? உலக உயிர்களின் துயர்துடைக்கவும் புவியைக் காக்கவுமதானே! பாரதவீரர் மலிந்த நன்னாடு மாமுனிவர் பலர் வாழ்ந்த பொன்னாடு (பக்கம் 23 / எங்கள்நாடு) என்றும் உயர்வீரம் செறிந்த தமிழ்நாடு(பக்கம் 45 / செந்தமிழ்நாடு) என்றும் வீரம் நிறைந்த நாடு எனக் கூறுவதன் நோக்கம் என்ன? எங்கள் பொன்னுயர் நாட்டை ஒற்றுமையுடைத்தாய்ச் சுதந்தரம் பூண்டதுவாகி இன்னுமோர் நாட்டின் சார்விலதாக்கிக் கு டியரசு இயன்றதாய் இலக (பக்கம் 84…
கடின சந்திகளை எப்பொழுதும் பிரித்தெழுதுக! – பரிதிமாற்கலைஞர்
தமிழ்ப் புலவர்கள் தாம் எழுதும் நூல்களிற் சந்தி சேர்த்தே எழுதுகின்றனர். சந்திசேர்த்தெழுதலே தமிழிலக்கண மரபாயினும் வசன நடையிலும் அவ்வாறு எழுதுதல் வேண்டுமென்ற நியமமில்லை. முற்காலத்தே ஏற்பட்ட உரை நூல்களிலும், முற்றும் சந்திசேர்த்தெழுதியிருக்கக்காணோம். இக்காலத்திலும் பண்டிதர் பலர் சிலவிடங்களில் சந்திசேர்த்தும் சில விடங்களில் சந்தி சேராமலும் எழுதி வருகின்றனர். ஆதலின் கடின சந்திகளை எப்பொழுதும் பிரித்தெழுதுக. பொருள் மயக்கமாவது, பொருள் வேறு பாடாவது உண்டாக்க வல்ல சந்திகளைச் சேராமல் பிரித்தே எழுதுக. சந்தி சேராமையாற் பொருள் கெடுவதாயிருந்தால் அவ்விடத்திற் சந்திசேர்த் தெழுதுக. எளிய சந்திகளைச்…
பண்டிதர் தமிழும் பாமரர் தமிழும் வேறுபட்டால் தமிழ் வழக்கற்றுப் போகும்! – பரிதிமாற்கலைஞர்
தமிழ்மொழியிலோ யார் என்ன செய்தபோதிலும் கேள்விமுறை யில்லை. அவரவர் தத்தமக்குத் தோன்றியவாறும் வாய்க்குவந்தன வந்தவாறும் எழுதுகின்றனர். இவ்வாறு செல்லவிடுதலுங் கேடே. தமிழிலக்கணமுடையார் முற்புகுந்து இதனைச் சிறிது அடக்கியாளலும் வேண்டும். இக்காலத்திற் பண்டிதர் தமிழும் பாமரர் தமிழும் மிகவும் வேறுபடுகின்றன; இருவேறு பாஷைகளெனத் தோன்றுகின்றன. இவ்விரண்டிற்கும் வேறுபாடு மிகுந்துகொண்டேபோமாயின், பண்டிதர் தமிழ் வடமொழியைப் போலப் பேச்சு வழக்கற்று ஏட்டுவழக்காய் மட்டில் நின்றுவிடும்; மற்றுப் பாமரர் தமிழோ தெலுங்குமலையாளங்கள் போல ஒரு வழிமொழியாய் அமைந்துவிடும். – பரிதிமாற்கலைஞர்
தமிழ்நாடு ஒருமையுடன் உழைத்தால் பெருமையடையும்! – இரா.பி.சேதுப்பிள்ளை
விழுமிய வீரம் “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்றார் திருவள்ளுவர். அவ்வுரையின் வழிநின்று வீரப்புகழ் பெற்றது பழந் தமிழ்நாடு. பாரில் உயர்ந்த பனிவரை மேல் நின்றது பழந்தமிழர் வீரம். கங்கை நாட்டில் கதித்தெழுந்த பகைவரை அறுத்தது தமிழர் வீரம். கடல் கடந்து மாற்றாரைக் கலக்கியது தமிழர் வீரம். இது சென்ற காலத்தின் சிறப்பு. மறவர் நிலை அன்று நாற்றிசையும் போற்ற ஏற்றமுற்று வாழ்ந்த தமிழ்நாடு இன்று ஊக்கம் இழந்து உறங்குகின்றது. மன்னரும் மதிக்க வாழ்ந்த மறக்குலம் இடைக்காலத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டது. அக்குல வீரரது முறுக்கு மீசை…
தமிழுக்குப் பெயர் வைத்தவர் தமிழரே! – கி.வா.சகந்நாதன்
“தமிழின் பெயரை அப்படியே சொல்லாமல் ஏன் மற்றவர்கள் மாற்றிச் சொன்னார்கள்?” என்று கேட்கலாம். மாற்றவேண்டிய அவசியம் வந்துவிட்டது. தமிழிலன்றி மற்ற மொழிகளில் ழகரம் இல்லை. அதனால் மாற்றிக்கொண்டார்கள். பழங்காலத்தில் தமிழுக்குத் திராவிடமென்ற பெயர் இயற்கையாக வழங்கியிருந்தால், அந்தச் சொல்லைப் பழைய தமிழர்கள் எங்கேனும் சொல்லியிருக்கவேண்டும். தொல்காப்பியத்திலோ அதன்பின் வந்த சங்க நூல்களிலோ திராவிடம் என்ற சொல் இல்லை. தமிழ் என்ற சொல்லே வழங்குகிறது. தமிழ் நாட்டார் தாங்கள் வழங்கும் மொழிக்குரிய பெயரைப் பிறரிடமிருந்து கடன்வாங்கினார் என்பது கேலிக் கூத்து. தமிழ் என்ற பெயர் முதல்…
நம் தமிழ்மொழிக்குப் பெயர் வைத்தவர் யார்? – கி.வா.சகந்நாதன்
ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது. அதைப் பாராட்டிப் போற்றி வளர்க்கும் உரிமையும் ஆவலும் உடைய தாய்தகப்பன்மார் குழந்தைக்குப் பெயர் வைக்கிறார்கள். அந்தப் பெயர் சம்பிரதாயத்துக்காக வைத்த நீண்ட பெயராக இருந்தால், குறுகலான பெயர் ஒன்றை வைத்துத் தாயோ, பாட்டியோ அழைக்கிறாள். அந்தப் பெயரே ஊரெல்லாம் பரவிப் போகிறது. சுப்பிரமணியன் என்று பெயர் வைத்தாலும், வழக்கத்தில் மணி யென்றும் சுப்பு என்றும் அது குறுகிப் போவதைப் பார்க்கிறோம். எனவே, குழந்தைக்கு வீட்டில் என்ன பெயர் வழங்குகிறதோ அதுவே நாட்டிலும் வழங்கும். இது தான் இயற்கை….
