இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 8 இலக்குவனார் திருவள்ளுவன்

(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 7 தொடர்ச்சி) 8 38-45.] எட்டுத்தொகை    நற்றிணை    குறுந்தொகை பிற நூல்களில் முகப்புப் பக்கம் அட்டவணைப் பகுதியில் தேடுதல் தலைப்பும் அதைச் சொடுக்கினால் தேடுதல் பகுதியும் வரும். மாறாக, இவற்றில் தலைப்பில் ‘சொல்’ தேடுதல் பகுதி உள்ளது(படவுருக்கள் 40 &41)    ஐங்குறுநூறு உரையில் மட்டும் தேடுதல் பகுதி (பக்கம் தேடல், சொல் தேடல்) உள்ளது(படவுருக்கள் 42 & 43). பதிற்றுப்பத்து: முகப்பு இடப்பக்க அட்டவணையிலும் தலைப்பிலும் தேடுதல் குறிக்கப் பெற்றுள்ளது. சொடுக்கினால் ‘பக்கம் தேடல்’,…

துலுக்கப்பயலே! 3 – வைகை அனிசு

(அகரமுதல 95, ஆவணி 20, 2046 / செப். 06, 2015 தொடர்ச்சி) 3 சோனகர்  சோனகர் என்பாரை ஆங்கிலத்தில் மூர்சு / moors என்று அழைக்கின்றனர். இசுபெயினைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவந்தது இசுலாமியம்(கி.பி.711-1492). இக்காலக் கட்டத்தில் ஐரோப்பா  முதலான மேற்கு நாடுகளில் இசுலாம் முதன்மை பெறுவதற்குக் காரணம் இசுலாமியர்களுடைய கல்வி தொடர்பான நாட்டமும் கலை ஈடுபாடுமே! அரேபியரும் வேறு சில இனத்தவரும் சோனகர்/ moors என அழைக்கப்பட்டுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்கர்கள், பேபர்சு இன மக்கள் ஆகியோரையும் இவ்வாறே அழைக்கிறார்கள்.   ‘இசுபெயினி்ல் சோனகர்’ (The…

சொல்லப்படாத வம்சக் கதைகளின் முன்னோடி- விசய் இராசுமோகன்

சொல்லப்படாத வம்சக் கதைகளின் முன்னோடி வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு   ஒரு வருடம் முன்பாக ஒரு நாள் திரு.இராசேந்திரன் அவர்களை அலுவலகத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது பக்கத்து மேசையில் இருந்த அவரது குடும்ப ஆவணங்களை எடுத்துக் காண்பித்து, அவரது குடும்ப வரலாற்றை எழுதிவருவதாகக் கூறினார். நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்ன வழக்கமாக எல்லாரும் சொல்லும், பெருமைப்பட்டுக் கொள்ளும் குடும்ப வரலாறாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.   ஆனால் நூலை எடுத்து இரு நாள் கீழே வைக்கமுடியவில்லை. சாமியாடி சொல்லவந்த குறியைச் சொல்லிவிட்டே…

கடலில் தீரம் புரிந்த கப்பல்களும் சந்தித்த சரிவுகளும் – வைகை அனிசு

100ஆவது ஆண்டை நிறைவு செய்த எம்டன் கப்பல்   உலகம் சுற்றிய முதல் கப்பல்   கடல் பயணங்களில் காலந்தோறும் பயன்படுத்தப்பட்ட கப்பல்களின் வரலாறு குறித்த அதிகமான ஆய்வுகள் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை. உலகத்தை முதன்முதலில் சுற்றிய கப்பல் மெகல்லன் தலைமையில் உள்ள குழுதான். வாசுகோடகாமா 1498 ஆம்ஆண்டு இந்தியாவுக்குள் கடல்வழி கண்டறிந்தவுடன் நறுமணப் பொருள்கள் விற்பனையைப் போர்த்துகீசியர்கள் கட்டுப்படுத்தத் தொடங்கினர். கொலம்பசைப்போலவே போர்த்துக்கீசிய சாகசப் பயணி பெர்டினாண்டு மெகல்லனும், கடலில் ஐரோப்பாவுக்கு மேற்கே பயணித்தால் நறுமணப்பொருட்கள் இருக்கும் தீவை அடையலாம் என நம்பினார்….

தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்

 (அகரமுதல 95, ஆவணி 20, 2046 /  செப்.06, 2015 தொடர்ச்சி) மீள்பார்வைக் குழு : த.இ.க.கழகத்தின் தளத்தில் நூற்பதிவு முடிந்த பின்னர் அல்லது இது போன்று ஏதும் பதிவாக்கம் முடிந்த பின்னர் அவை சரியான முறையில் உள்ளனவா எனப் பார்ப்பதில்லை. ஒருவரிடம் அல்லது அமைப்பிடம் பொறுப்பை ஒப்படைத்த பின்னர், அவர்கள் பணி முடிவிற்குப் பணம் கொடுத்ததும் அப்பணி நிறைவுற்றது என்ற போக்கே இக்கழகத்தில் உள்ளது. எனவே, தவறுகள் கண்டறியப்படாமல் உள்ளன. எனவே, மீள்பார்வைக் குழுவை அமைத்து, ஒவ்வொரு பணி முடிந்த பின்னர் உரிய…

தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 6 – இலக்குவனார் திருவள்ளுவன்

6 3.பணித்தரவுக் குழு:   த.இ.க.கழகத்தின் பணிகள் சரியான முறையில் மக்களுக்குத் தரப்படுவதில்லை. வெளிப்படுத்தும்பாங்கில் உள்ள தவறு சில இடங்களில் காரணமாக அமைகின்றது. தொடக்கப் பணிகளைத் தளத்தில் கொடுத்துவிட்டு அப்பணிகள் வளர்கையில் அல்லது பெருகுகையில் அவற்றைச் சேர்க்காமை பல இடங்களில் காரணமாக அமைகின்றது. சான்றாக இதன் தளத்தில் முனைவர்பட்ட ஆய்விற்குரிய தரவு நூல்கள் உள்ளன என்பதுபோல் குறிப்பும் தொடர்பில்லாமல் வழிகாட்டியும் தமிழ்ப்பல்கலைக்கழக முனைவர் பட்டமும் தரப்படும் என்பன போன்ற குறிப்புகளும்தான் உள்ளன. மாறாக முனைவர் பட்டம் ஆய்விற்குப் பதிவும் வழிகாட்டியும் தரவு நூல்களும் வழங்கப்பெற்று,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 050. இடன் அறிதல்

(அதிகாரம் 049. காலம் அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 050. இடன் அறிதல் வலிமையை, காலத்தை, ஆய்ந்தபின்,  உரிய இடத்தைத் தேர்ந்துஎடுத்தல்.   தொடங்கற்க எவ்வினையும், எள்ளற்க முற்றும்,       இடம்கண்ட பின்அல் லது.         எந்தச் செயலையும் இகழற்க;         இடத்தைக் கண்டபின், தொடங்குக.   முரண்சேர்ந்த மொய்ம்பின் அவர்க்கும், அரண்சேர்ந்(து)ஆம்       ஆக்கம், பலவும் தரும்.    வலியார்க்கும், கோட்டையின் பாதுகாப்பும்         நன்மையும் நல்இடம்தான் தரும்.   ஆற்றாரும், ஆற்றி அடுப; இடன்அறிந்து,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 049. காலம் அறிதல்

(அதிகாரம் 048. வலி அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 049. காலம் அறிதல்   செய்யத் துணிந்த செயலுக்குப் பொருந்தும் காலத்தை ஆராய்தல்   பகல்வெல்லும், கூகையைக் காக்கை; இகல்வெல்லும்      வேந்தர்க்கு, வேண்டும் பொழுது.     காக்கை, கோட்டானைப் பகல்வெல்லும்;        ஆட்சியார்க்கும் காலம் மிகத்தேவை.   பருவத்தோ(டு) ஒட்ட ஒழுகல், திருவினைத்,       தீராமை ஆர்க்கும் கயிறு.         காலத்தோடு பொருந்திய  செயற்பாடு,         செல்வத்தைப் கட்டிக்காக்கும் கயிறு..   அருவினை என்ப உளவோ….? கருவியான்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 048. வலி அறிதல்

(அதிகாரம் 047. தெரிந்து செயல் வகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 048. வலி அறிதல் செயற்படும் முன்னம், எல்லாவகை வலிமைகளின், திறன்களின் ஆய்வு.   வினைவலியும், தன்வலியும், மற்றான் வலியும்,       துணைவலியும், தூக்கிச் செயல்        செயல்வலி, தன்வலி, பகைவலி,         துணைவலி ஆராய்ந்து செய்க.   ஒல்வ(து), அறிவ(து), அறிந்(து),அதன் கண்,தங்கிச்       செல்வார்க்குச், செல்லாத(து) இல்.        முடிவதை, செயல்அறிவை ஆய்ந்து         செய்தால், முடியாததும் இல்லை.   உடைத்தம் வலிஅறியார், ஊக்கத்தின்…

இனிதே இலக்கியம் 2 போற்றி! போற்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்

பண்ணினை இயற்கை  வைத்த பண்பனே போற்றி போற்றி பெண்மையில் தாய்மை வைத்த பெரியனே போற்றி போற்றி வண்மையை உயிரில் வைத்த வள்ளலே போற்றி போற்றி உண்மையில் இருக்கை வைத்த உறவனே போற்றி போற்றி இறைவனைப் பொதுவான பண்புகள் அடிப்படையில் போற்றும் தமிழ்ப்பாடல்கள் எச்சமயத்தவரும் எக்கடவுளை வணங்குவோரும் ஏற்கும் சிறப்பினைப் பெற்றுள்ளன. அந்த வகையில் தமிழ்த்தென்றல் திரு.வி.க. எனப்படும் திரு.வி.கல்ணயாண சுந்தரனாரால்  எழுதப்பெற்ற ‘பொதுமை வேட்டல்’ என்னும் நூலில்  இருந்து எடுக்கப்பட்ட பாடல் இது.   இயற்கையோடு இயைந்ததாக இசையை அமைத்த பண்பாளரே போற்றி! பெண்மையின்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 047. தெரிந்து செயல் வகை

(அதிகாரம் 046. சிற்றினம் சேராமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 047. தெரிந்து செயல் வகை நன்மை, தீமை போன்றவற்றை நன்குஆய்ந்து செய்யும் செய்முறைகள்.   அழிவதூஉம், ஆவதூஉம் ஆகி, வழிபயக்கும்       ஊதியமும், சூழ்ந்து செயல்.          ஆவது, அழிவது, பின்விளைவது        போன்றவற்றை ஆய்ந்து செய்க.   தெரிந்த இனத்தோடு, தேர்ந்(து)எண்ணிச் செய்வார்க்(கு),      அரும்பொருள் யா(து)ஒன்றும், இல்.        செயல்முறைகளைத் தேர்ந்தாரோடு கலந்து      செய்வார்க்கு முடியாச்செயல் இல்லை.   ஆக்கம்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 046. சிற்றினம் சேராமை

(அதிகாரம் 045. பெரியாரைத் துணைக்கோடல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 046. சிற்றினம் சேராமை      இழிகுணங்கள் நிறைந்த கூட்டத்தாரது வழிகளில் சேராத விழிப்புணர்வு.   சிற்றினம் அஞ்சும், பெருமை; சிறுமைதான்,       சுற்றம்ஆச் சூழ்ந்து விடும்       பெரியார், சிறியார்க்கு அஞ்சுவார்;         சிறியார், சிறியார்க்கு உறவுஆவர்.   நிலத்(து)இயல்பால், நீர்திரிந்(து)அற்(று) ஆகும்; மாந்தர்க்(கு),      இனத்(து)இயல்(பு)அ(து) ஆகும் அறிவு.      நிலஇயல்பால், நீரும் திரியும்;        இனஇயல்பால், அறிவும் திரியும்.   மனத்தான்ஆம், மாந்தர்க்(கு)…