தமிழனாக இருப்பதனால் நல்லவன் ஆனேன் – பூதத்தாழ்வார்
தமிழைப் பல அடைமொழிகள் இட்டு அழைக்கிறோம். செந்தமிழ்; பைந்தமிழ்,வண்தமிழ்,ஒண்தமிழ், கன்னித்தமிழ் என்று சிறப்புச்சொற்களைச் சேர்த்துச்சொல்கிறோம். தமிழ் மூன்றாகப்பிரிந்து இயல்,இசை,நாடகம் என்ற முத்தமிழாயிற்று. முதலாழ்வர்களில் ஒருவராகிய பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் தமிழுக்கு மேலும் சிறப்பான ஒரு அடைமொழியிட்டு அழைக்கிறார். ஆழ்வார் தந்த நன்முத்து “ஞானத் தமிழ்” என்ற அடைமொழி. தமிழை ‘ஞானத்தமிழ்’ என்று சொல்லுவதோடு அவர் நின்றுவிடவில்லை. தமிழை ‘இருந்தமிழ்’ என்றும் தன்னைப் ‘பெருந்தமிழன்’ என்றும் சொல்லிக்கொண்டும் பெருமையடைகிறார். தமிழ் அறிவூட்டும் ஆற்றல் உள்ளது. தமிழால் தான் கடைத்தேற முடியும். உய்தியளிக்கவல்லது….
ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து திருக்குறள்தான்! – தந்தை பெரியார்
திருக்குறள் குறளை மெச்சுகிறார்களே ஓழிய காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர்மாறாக விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள். அறிவால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துகளையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள். ஆரியக்கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவை யாவும் பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவற்றிற்குத் தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாகக் குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் எனது உறுதியான கருத்தாகும். நீங்கள் என்ன சமயத்தார்…
தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் – 1
(தொடர் கட்டுரை) தகவல் அறியும் உரிமைச்சட்டம் குடிமக்களுக்குச் செலவில்லாத எளிய வழியில் அரசிடமிருந்து வேண்டிய செய்திகளை/ புள்ளிவிவரங்களை, அவரவர் தேவைக்கேற்ப அறிய உரிமை அளிக்கிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு உரிய துறையில் தகவல் அளிக்காவிட்டால் குறிப்பிட்ட அதிகாரி தண்டத்தொகை கட்டவேண்டும். அண்மையில் நடந்த ஆய்வின்படி 2014 ஆம் ஆண்டு மத்திய செய்தி அளிக்கும் ஆணையாளர் மாதபூசி சிரீதர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அச் செய்தியின்படி. “எனது அலுவலகத்தில் பல்வேறு பணிகளை எனது உதவியாளர் ஒருவரே செய்கிறார். இதனால் பல மாதங்கள், ஏன், ஆண்டுகள் தாமதம்…
நா தமிழே பேசுக! இறகு தமிழே எழுதுக! – சுப்பிரமணிய சிவா
தமிழ்ப் பண்டிதர்களே! தமிழ்சனங்களே சாக்கிரதை! சாக்கிரதை! உங்களுடைய மொழியைக் காப்பாற்றுங்கள். ஒரு சன சமூகத்திற்கு உயிர் அதன் மொழிதாள். தமிழ் மொழி அழிந்துவிட்டால் தமிழர்களின் சிறப்பும், சீரும் அழிந்துவிடும். தமிழ் மொழியில் தேவையான பதங்கள் இல்லையென்று வாய் கூசாமல் கூறுகின்ற பாரத புத்திரர்களுக்கு அப்பதங்களை ஆராய்ந்து கண்டுபிடித்துக் கொடுங்கள். சரியான பதங்கள் இல்லையேல் தமிழ் வாணியின் கிருபை கொண்டு இன்னும் அநேக காரணப் பெயர்களையாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் நா தமிழே பேசுக! நீங்கள் கையிலேந்தும் இறகு தமிழே எழுதுக! உங்களுடைய இருதயம்…
திருக்குறள்போல் ஒருநூல் வேறு எந்த மொழியிலும் இல்லை – நாமக்கல் கவிஞர்
உலகத்திற்கு தலைசிறந்த இலக்கியங்களுள் ஒன்று நம்முடைய திருக்குறள். காலம் இடம் நிறம் மதம் என்று வேறுபாடுகளைக் கடந்து எங்கெங்கும் உள்ள எல்லா மனிதருக்கும் எக்காலத்திலும் பயன்தரக்கூடிய அறிவுரை நிரம்பிய அறநூல் திருக்குறள். மனித வருக்கத்தின் இயற்கையமைப்பில் எந்தக் காலத்திலும் மாறுதல் இல்லாதனவாகிய தத்துவங்களையே அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால், திருக்குறள் என்றென்றும் அழிவில்லா திருக்கும். அதுமட்டுமன்றி எப்போதும் இளமையும் புதுமையும் உள்ளதாகவே இருக்கும். மனித சமூகத்துக்கு இன்றியமையாத எல்லா நல்லறிவையும் இப்படித் தொகுத்து வகுத்துத் தந்துள்ள ஒருநூல் வேறு எந்த மொழியிலும் இல்லையென்று உலகத்தின்…
தாழ்ந்த தமிழனே! – அறிஞர் அண்ணா
தமிழர், தனி இனத்தவர், பன்னெடுங்காலம் பண்புடன் வாழ்ந்து, பாரோர் புகழ வாழ்ந்து, கலைச் செல்வங்களைக் கண்டவர். இந்தியா எனும் உப கண்டத்திலே பல இனங்கள், தத்தம் கலைகளுடன் உள்ளன. தமிழ் இனத்துக்குத் தனிக்கலை ஒன்று உண்டு. வெவ்வேறாகவும், தனித்தனியாகவும் தனிப்பண்புகளுடன் விளங்கி வந்த ஆரிய திராவிடக் கலைகள் கலக்க நேரிட்டது ஒரு பெரும் கேடாக முடிந்தது. அத்தகைய கலப்பு நூற்களே கம்ப இராமாயணமும் பெரிய புராணமும். தமிழனுக்குத் தனிக்கலை உண்டென்றேன். சங்க நூல்கள் அக்கலைச் செல்வத்தைக் காட்டுகின்றன. தனியான கலையுடன் தனியான வாழ்வும்…
“அந்தணர் என்போர்….” – புலவர்மணி இரா. இளங்குமரன்
தொல்காப்பியர் காலத்தில், ‘சாதி’ என்னும் சொல், விலங்கின் சாதி, பறவைச் சாதி, நீர்வாழ் சாதி, முதலைச் சாதி என்பனவற்றையே குறித்தது; மனிதரைப் பிரிப்பதாய் இல்லை. திருவள்ளுவர் குடி, குடிமை என்பனவற்றைக் குறித்தார். பிறப்பினைப் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனப் பெருநெறி காட்டினார். அரசர் ஒரு சாதி அன்று; வணிகர் ஒரு சாதி அன்று; வேளாளர் ஒரு சாதி அன்று; எவரும் அரசராகவோ, வணிகராகவோ வேளாளராகவோ ஆகலாம். அவ்வாறே, எவரும் அந்தணர் ஆகலாம். அது சாதிப் பெயர் அன்று என்பதன் சான்று இது. அந்தணர்…
இறைவனும் இயவுளும் – பரிதிமாற்கலைஞர்
உலகப் பொருள்கள் எல்லாவற்றிலும் நீக்கமறத் தங்கியிருத்தலால் ‘இறைவன்’ எனவும் உள்ளும் புறமுமாகி எல்லாப் பொருளையும் இயக்குவதனால் ‘இயவுள்’ எனவும் பண்டை அறிஞர் எல்லா வல்ல முழுமுதற் பொருளின் இயல்பினை வலியுறுத்தினர். இன்னஉரு, இன்ன நிறம் என்று அறிதற்கரிதாகிய அம்முழுமுதற்பொருளின் இயல்பினை உள்ளவாறு உய்த்து உணர்ந்து வழிபடுதல் வேண்டி வேண்டுதல் வேண்டாமையின்றி நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற அச்செல்வம் பொருளைக் குறித்து வழிபடுதற்குரிய அடையாளமாக ஊர்மன்றத்திலே தறியினை நிறுத்தி வழிபட்டார்கள். இதனைக் கந்து என வழங்குவர். (கந்துதறி) மரத்தால் அமைந்த இத்தூண், நாகரிகம் பெற்று…
சங்ககாலத் தமிழ் மக்கள் – க. வெள்ளைவாரணர்
ஊர்களில் நிகழும் குற்றங்களை அறிந்த இவ்வவையினர் குற்றமுடையாரை வினவித் தண்டிப்பர். ‘கள்ளூர்’ என்ற ஊரில் அறனில்லாதவன் ஒருவன் செய்த தவற்றினை அறிந்த ஊர் மன்றத்தார், அக்கொடியவனை மரத்திற்பிணைத்து அவன் தலையிற் சாம்பலைக் கொட்டி அவமானப்படுத்திக் தண்டித்தனர் என்ற செய்தியினைக் கடுவன் மள்ளனர் என்னும் புலவர் அகநானூற்றுச் செய்யுளொன்றில் (அக.256) குறிப்பிடுகின்றார். இருநிகழ்ச்சியால் ஊர்ச்சபையர்க்குத் தம்மீது நிகழும் குற்றங்களை விசாரித்துத் தண்டிக்கும் உரிமை தமிழ்வேந்தரால் வழங்கப்பட்டிருந்தமை புலனாகும். ஊர்க்கு நடுவேயுள்ள ஆல் அரசு முதலிய மரத்தடியிலேயே ஊர்மன்றத்தார் கூடியிருந்து செயலாற்றுவர். – க. வெள்ளைவாரணர்…
சங்க இலக்கியத்தில சமுதாயக் காட்சிகள் – ப. சீவானந்தம்
சங்காலப் பாடல்கள் கற்பனை ஆதிக்கம் கொண்டவை அல்ல. எதார்த்ததில் ஊறி நிற்பவை. அந்நாள் வாழ்க்கையும் இன்று போல் சிக்கலான வாழ்க்கை அல்ல . இயற்கையோடு இயைந்த எளிய சிக்கல் குறைந்த வாழ்க்கை. “வள்ளுவனின் கருத்துப் புரட்சியை இன்றைய உலகத்தில் தலைசிறந்த தத்துவஞானிகளுள் பெருமதிப்புப் பெற்றுள்ள ஆல்பர்ட்டு என்ற சிந்தனையாளர் தமது “இந்தியச் சிந்தனையும், அதன் வளர்ச்சியும்” ((Indian thought and its development) என்ற ஆராய்ச்சி வல்லநூலில் பிரமாதமாகப் பாராட்டுகின்றார். வேத கால இரிசிகளோடும், உபநிடத முனிவர்களோடும், கீதை ஆசிரியன் கண்ணனோடும் வள்ளுவனை ஒப்புநோக்கி…
இசைச்சொற்கள் அன்றும் இன்றும்
இன்று ‘உச்சஃச்தாயி’, ‘மந்திரஃச்தாயி’, மத்திமஃச்தாயி’ எனப்படுவன அன்று வலிவு மண்டிலம், மெலிவு மண்டிலம், சம மண்டிலம் என்ற பெயரில் இருந்தன என்றும், இன்று, ‘கோமள தீவிர சுரங்கள்’ எனப்படுவன அன்று குறை நரம்பு, நிறை நரம்புகளாகப் பெயர் பெற்றிருந்தன என்றும், இன்று சம்பூர்ணம், சாடவம், ஓளடவம், சதுர்த்தம் என்று சொல்லப்படும் இராக வகைகள் அன்று முறையே பண், பண்ணியல், திறம், திறத்திறம் என்ற பெயர் பெற்றிருந்தன என்றும், கிரக பேதம் என்று இன்று சொல்லப்படுவது அன்று பண்ணுப் பெயர்த்தல் என்றும், பாலைத் திரிபு…
12,000 பண்களுக்கு உரிமையான தமிழிசைச் செல்வம்
ஆடல் பாடல் இசையே தமிழ் (3,45) என்ற அடியில் வரும் இசை என்பதை விளக்கும் அரும்பதவுரையாசிரியர் “இசையாவது நரப்படைவால் உரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற் றொன்றாகிய ஆதியிசைகளும்’ என்று கூறுகிறார். இன்றைய கருநாடக இசையுலகில் கூறப்படும் இராகங்களின் எண்ணிக்கை 1230க்கு மேல் இல்லை. அன்ற இருந்தனவாக அரும்பதவுரைகாரர் கூறும் 11991 என்ற பண்களின் எண்ணிக்கை நம்மை மலைக்க வைக்கிறது. இந்த எண்ணிக்கை ஏதோ குத்துமதிப்பாகச் சொன்னதாக இருக்காது என்பது உறுதி. அப்படிச் சொல்லியிருந்தால் ‘பன்னீராயிரம் ஆதியிசைகள்’ என்று சொல்லியிருக்கலாம். ஏதோ…
