மொழிக்கல்வியும் மொழிக் கலப்பும் – ஏ.ஆதித்தன்
சிறந்த குடிமக்களை உருவாக்குவதே கல்வியின் அடிப்படை நோக்கம். தன்னம்பிக்கைக்கும், புத்துருவாக்கத்திற்கும் வழிவகை செய்யாத கல்வி, வெற்றிடக் கல்வியாகவே கருதப்படுகிறது. ஆனால், இக்காலத்தில் தனிமனிதப் பொருளாதார முன்னேற்றத்திற்குத் துணைபுரியும் கருவிதான் கல்வி என நம்பப்படுகிறது. மாணவர்களை, வேலைச்சந்தைக்கு பயிற்சி அளிப்பதே கல்வி பயிற்றுவித்தல் எனவும், இதற்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களே கல்வி நிறுவனங்கள் எனவும் நம்பப்படுகிறது. பல்கலைப் பட்டங்கள், அறிவின் தேடலைவிட, அகந்தையின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளன. பட்டங்களை பெருமையாகக் கொண்டாடும் நாட்டில், கல்வியின் தரம் கசப்பாகக் கருதப்படுகிறது. மொழிதான் மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திச், சமூக…
அயலவரின் முதல் தமிழ்க்கையேடு 7 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்
(சித்திரை 06, 2046 / ஏப்பிரல் 19, 2015 தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 7 (புத்தக வெளியீட்டு முயற்சி-2) சிக்கல் − 2 பதிப்பகத்தாரின் பக்க அளவுக்குள் நம் புத்தகக் கருத்தை அடக்குவது! ஒருவருடைய கையேட்டுப் படியை ஓர் அச்சகத்தின் பக்கங்களுக்குள் கொண்டுவருவது எளிதான செயல் இல்லை! இதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத சிலர் என்னைக் கிண்டல் செய்து குற்றம் சொன்னார்கள்! மக்களின் இந்த மாதிரிக் கிண்டலில் என்ன புதுமை? சில மக்கள் பிறரைக் குற்றம் சொல்லியும் கிண்டலடித்துமே பொழுதைப் போக்குகிறவர்கள் ஆச்சே! …
அயலவரின் முதல் தமிழ்க்கையேடு 6 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்
(பங்குனி 29, 2046 / ஏப்பிரல் 12, 2015 தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 6 (புத்தக வெளியீட்டு முயற்சி-1) 2009-இலிருந்து புத்தக வெளியீட்டிற்கான என் தனி முயற்சி மும்முரமாகத் தொடங்கியது. இயேன் அம்மையாருடன் தொடர்புகொள்ளவே முடியவில்லை. அவர் இருந்தும் இல்லாத நிலை. எனவே, பல இடங்களில் விளக்கம் தருவதற்காக அடிக்குறிப்புகளை நானே சேர்க்கவேண்டியிருந்தது. ஒரு வழியாகக் கருத்துக் கோவையை முடித்தேன். பிறகு புத்தக வடிவை உருவாக்கத் தொடங்கினேன். சிக்கல் − 1 பாதிரியாரின் 16-ஆம்…
சித்தூர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்!
ஆந்திரரின் அளப்பரிய கொடுமை! வெங்கையாவிற்குக் கடும் கண்டனம்! சித்தூர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்! கொடுங்கோல் கொலையாளி இராசபக்சேவை அழைத்து அழைத்து ஆந்திரர்களும் அவனின் மறு பதிப்பாக ஆகிவிட்டனர் போலும்! கூலி வேலைக்கு அழைத்து வந்த தமிழர்களைத் திட்டமிட்டுத் துன்புறுத்தி, உடலுறுப்புகளை வெட்டி, எரியூட்டி, குண்டுகளால் துளைத்துக் கொன்ற செய்தி ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும் வந்து கொண்டுள்ளன. ஆனால், அப்பாவி மக்களைக் கொன்றோமே என்ற உணர்வு கிஞ்சித்தும் இல்லை. எப்படி இரக்க உணர்வு வரும்? திட்டமிட்ட படுகொலை என்னும் பொழுது அதைத்தானே சரி என்பார்கள்….
படைப்பாளர்களுக்குப் பாடமாகும் செயகாந்தனின் மறைவும் பிரிவும் – இலக்குவனார் திருவள்ளுவன்
படைப்பாளர்களுக்குப் பாடமாகும் செயகாந்தனின் மறைவும் பிரிவும் – இலக்குவனார் திருவள்ளுவன் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள். தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சப்பானிய நண்பர் இரோசி யமசித்தா தமிழ்ச்சிறுகதை, புதின ஆசிரியர்கள் குறித்துக் கேட்டார். மு.வ., மணிவண்ணன்(தீபம் நா.பார்த்தசாரதி) முதலானவர்பற்றிக் கூறினேன். கல்லூரி மாணவனாக இருந்தபொழுது நூலகத்தில் இருந்த அனைத்து மு.வ. நூல்களையும் தமிழ்வாணன் நூல்களையும் படித்ததையும் அறிஞர் அண்ணா முதலான திராவிடப் படைப்பாளர்கள் இளந்தலைமுறையினரின் வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதையும் குறிப்பிட்டேன். இக்கால எழுத்தாளர்கள் பற்றிக் கேட்டார். முதுகலையில் செயகாந்தன் படைப்புகள் சிலவற்றையும் கி.இராசநாராயணன்…
திட்டச்சேரியில் தில்லு முல்லு தேர்தல் – கமுக்க முறையில் தலைவர்கள் தேர்ந்தெடுப்பு
பள்ளிவாசல் தோறும் தேர்தல் முறைகேடுகள்! பொதுச்சொத்து கொள்ளை! நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரியில் கி.பி.1862 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளிவாசல் 1923 வக்பு நிருவாகச் சபையாக மாற்றப்பட்டது. அதன்பின்னர் அப்பள்ளிவாசலில் உள்ள சொத்துக்களைப் பேணவும் பள்ளிவாசலில் உள்ள ஊழியர்களுக்குச் சம்பளம், பிற செலவிற்காக வக்பு சொத்துக்களில் இருந்து பணம் எடுப்பதற்காகவும் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவ்வாறு தொடங்கப்பட்ட குழுவிற்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தலில் இரண்டு பிரிவினர்களாகச் செயல்பட்டுத்…
அயலவரின் முதல் தமிழ்க்கையேடு 5 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்
(பங்குனி 22, 2046 ஏப்பிரல் 05, 2015 தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 5 (புத்தக முயற்சிச் சிக்கல்) 1982-இலிருந்து புத்தக வேலையைப் பற்றிய பேச்சை எடுத்தாலே இயேன் அம்மையாருக்கு வெறுப்பாக இருந்தது. எல்லாக் குறிப்பேடுகளையும் கட்டித் தூக்கிவைத்துவிட்டார். என் குறிப்புகள் மட்டும் என்னிடம் இருந்தன. அவ்வப்போதைய தொலைபேசித் தொடர்பும் கிறித்துமசு வாழ்த்துகளும் மட்டுமே எங்கள் தொடர்பை வளர்த்தன. 2001-இல் என் அம்மா இறந்தபோது இயேன் அம்மையாரின் சொற்களே எனக்கு ஆதரவு. 1978-1988 ஆண்டுகளில் என் மகனைப் பிரிந்திருந்த…
தூத்துக்குடி உலகிற்குத் தந்த தமிழ்முத்து வைதேகி
தூத்துக்குடி உலகிற்குத் தந்த தமிழ்முத்து வைதேகி – இலக்குவனார் திருவள்ளுவன் படைப்புப் பணிகளில் கருத்து செலுத்துவோர் பரப்புரைப் பணிகளில் கருத்து செலுத்துவதில்லை. அல்லது பரப்புரைகளில் ஈடுபடுவோர் படைப்புப்பக்கம் பார்வையைச் செலுத்துவதில்லை. மிகச் சிலரே இரண்டிலும் கருத்து செலுத்துவோராக உள்ளனர். அதுபோல் இலக்கியப் பணிகளில் கருத்து செலுத்துவோர் மக்கள் நலப்பணிகளில் நாட்டம் கொள்வதில்லை. அல்லது மக்கள் நலப்பணிகளில் நாட்டம் கொள்வோர் இலக்கியத்தில் ஈடுபாடு காட்ட நேரம் ஒதுக்குவதில்லை. இரண்டிலும் கருத்து செலுத்துவோர் மிகக் குறைவே! இன்றைய இலக்கியங்களில் மேலோட்டமாக எழுதிவிட்டுப் பெயர் பெறுவோர் உள்ளனர்….
சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : முகவுரை
[இன்றைக்கு நாடகங்கள் அருகிவிட்டன. மேடை நாடகங்களும் சூழலுக்கேற்ற புரிதலைஉடைய பேச்சு வழக்காக உள்ளனவே தவிர, எப்பொழுதும் புரியும் தன்மையில் இருப்பதில்லை. நகைச்சுவை என்ற பெயரில் துணுக்குத் தோரணங்களாகப் பெரும்பாலான நாடகங்கள் உள்ளன. ஆனால்,நல்ல நாடகங்களைப் படைத்துத் தருவோர் நம்மில் இல்லாமல் இல்லை. அவர்களில் ஒருவராகக் கனடா அறிவியலர் சி.செயபாரதன் விளங்குகிறார். சீதையின் பிற்கால வாழ்வை அடிப்படையாகக் கொண்டு சீதாயணம் என்னும் பெயரில் அருமையான நாடகத்தை உருவாக்கியுள்ளார். இராமனின் மறுபக்கத்தைப் பெரும்பாலோர் மறைத்திருக்க, அதனை வெளிக்கொணருவோர் வேறு கருத்துலகில் உழலுவதால் ஏற்கப்படாச் சூழலே உள்ளது. இந்நிலையில்…
தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 7 : இலக்குவனார் திருவள்ளுவன்
(பங்குனி 15, 2045 / மார்ச்சு 29, 2015 தொடர்ச்சி) [புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.] வாழும் மூத்த மொழித் தகுதி வாழ்விழந்த மொழிக்குத்தான் செம்மொழித் தகுதி தருவோம் எனக்கூறி உயர்தனிச் செம்மொழியான தமிழுக்கு அத்தகுதி மறுக்கப்படுவதால், ‘வாழும் மூத்தமொழி’ என்ற தகுதியைத் தமிழுக்குத் தந்து தமிழ்க்கண்டத்திலும் ஐ.நா. போன்ற உலக அமைப்புகளிலும்…
வடக்கு-கிழக்கில் வாழும் தமிழனின் திறந்த மடல்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு தொடர்பில் இரா.சம்பந்தன் அவர்கள் திருகோணமலையில் தெரிவித்துள்ள கருத்து விவாதத்திற்கு உரியதாகியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், தமிரசுக் கட்சி தொடர்பிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தொடர்பிலும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பச் செய்திருக்கின்றது. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தால் மட்டுமே பதிவு சாத்தியம் என்றும், தான் ஒருபோதும் பதிவு செய்ய மாட்டேன் என்று சொல்லவில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார். இதனை அவர் தனது அரசியல்தந்திரமாக நினைத்திருக்கலாம். ஆனால் அவரது இக்கருத்தை மக்கள் எந்தளவிற்கு ஏற்பார்கள் என்பதும்…
வரன்கொடை கொடுமைக்கு முடிவே இல்லையா?
திருமணங்கள் நரகத்தில் முடிவாகின்றன! மகளிர் நாளில் திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை திருமணங்கள் உம்பர் உலகில்(சொர்க்கத்தில்) உறுதிசெய்யப்படுகின்றன என்பது மக்கள் நம்பிக்கை. சில பெண்கள் திருமணத்தால் நரகவேதனைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பது இன்றைய வழக்கம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இளம்பெண்களைத் திருமணம் முடிப்பதும் அதன் பின்னர் அப்பெண்ணிற்கு எந்தவித முகாந்திரமும் இல்லாமல் மணவிலக்கு அளிப்பதும் வாழையடி வாழையாக இருந்துவருகிறது. வரன்கொடை(வரதட்சணை) கொடுமை, மாமியார் கொடுமை, கணவன் கொடுமை ஆகியவற்றைப் பொறுத்துக்கொண்டாலும் ஏன் என்று கேள்விகேட்டால் திருமண விலக்கு அதாவது விவாகரத்து உடனடியாக வழங்கி…
