தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர் முறை தேவை – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர் முறை தேவை! தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே. எனவே, இது முழுமையான மக்கள் மன்றமாக உள்ளது. தற்போது, இந்திய மக்களவையில் (Lok Sabha) நியமன உறுப்பினர்கள் யாரும் இல்லை. 104-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2019-இன் மூலம், ஆங்கிலோ-இந்தியன் சமூகத்தினரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கும் முறை 2020 சனவரி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மக்களவையில் நியமன உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும், மாநிலங்களவையில் (Rajya Sabha) கலை, இலக்கியம், அறிவியல், குமுகத் தொண்டு போன்ற துறைகளில் சிறந்த…
வெருளி நோய்கள் 1411 -1415: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1406 -1410: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1411 -1415 நடுகல் குறித்து அறிவுக்குப் பொருந்தாத மிகையான பேரச்சம் கொள்வது நடுகல் வெருளி.நடுகல் குறித்துச் சங்க இலக்கியங்கள் 18 இடங்களில் குறித்துள்ளன. நடுகல் வணக்கம் தொன்றுதொட்டே உள்ளது. நாட்டிற்குக் காவலாக விளங்கிப் போரில் வீர மரணம் அடைந்தவர்க்குத்தான் நடுகல்கள் அமைக்கப்பட்டன.கல்லறைவெருளி-Coimetrophobia / Koimetrophobia), அழி பொருள் வெருளி(Necrophobia), புதைவுவெருளி-(Taphephobia/ Taphiphobia/ Taphophobia/Taphosphobia) ஆகியவற்றுடன் தொடர்புடையது நடுகல் வெருளி.coimetro என்னும் கிரேக்கச் சொல்லுக்குப் புதைவிடம் எனப் பொருள்.00 நடுக்கம் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நடுக்க…
மலர்ந்துள்ளது திராவிட ஆட்சியின் தொடர்ச்சியே! – இலக்குவனார் திருவள்ளுவன்
மலர்ந்துள்ளது திராவிட ஆட்சியின் தொடர்ச்சியே! தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டின் அரசிருக்கையில் அமர்ந்துள்ளது. வாழ்த்தி வரவேற்க வேண்டிய மாற்றம் இது. ஆனால், திராவிட மெய்யியத்தை(தத்துவத்தை) விரும்பாதவர்களும் ஆரியப் பித்தர்களும் திராவிடம் வீழ்ந்து விட்டது; 60 ஆண்டுகளாக ஆண்ட திராவிடம் ஒழிந்து விட்டது; 67இற்குப் பிறகு மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் விரட்டப்பட்டன; என்று கூக்குரலிடுகின்றனர்; ஆர்ப்பரிக்கின்றனர்; இனி நம் ஆரிய ஆட்சிதான் என்று கொக்கரிக்கின்றனர். ஆனால், உண்மையில் மலர்ந்துள்ளது திராவிட ஆட்சிகளின் நீட்சியே. திராவிடம், திராவிடம் என்று உணர்வுடன் வாழ்பவர்கள் யாவரும் …
வெருளி நோய்கள் 1406 -1410: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1401 -1405: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1406 -1410 நகம் வெட்டல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நகவெட்டல் வெருளி.நகத்தைச் சரியாக வெட்ட முடியாமல் போய்விடுமோ இதனால் ஏதும் கேடுவிளையுமோ என்று பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00 நகை குறித்த வரம்பற்ற பேரச்சம் நகை வெருளி.கழுத்தணி, ஆரம், காதணி என்பன போன்று குறிப்பிட்ட வகை நகைமீது சிலருக்கு வெறுப்பு இருக்கும். சிலருக்குப்பொதுவாகவே நகைகள் மீது இருக்கம். சிலருக்கு ஒரு முறை நகையால் அரிப்பு ஏற்பட்டு, நகை ஒவ்வாமை உள்ளதாக எண்ணி வெறுப்பர். சிலர் பிறரின்…
வெருளி நோய்கள் 1401 -1405: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1396 -1400: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1401 -1405 தோறணையரைக் கண்டு ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் தோறணை வெருளி.Euax என்பது இலத்தீன் வியப்பிடைச்சொல். அதிலிருந்துதான் Euaxo உருவானது. தோற்றச்சிறப்பு கண்டு வியப்பதைக் குறிக்கிறது.தோரணம் > தோரணை என்பதுபோல் தோற்றம் > தோறணை(Posh) எனக் குறிக்கலாம். தோறணையுடன் திகழும் மக்களைத் தோறணையர் (Posh People) எனலாம்.00 நகம் குறித்த வரம்பற்ற பேரச்சம் நக வெருளி.ஒருவரின் நகத்தைக் கொண்டே அவருக்குள்ள நோய்பற்றிக் கூறலாம் என்பர். எனவே, நகத்திற்குப் பாதிப்பு என்றால் உடலுக்குப் பெருங்கேடு என…
முதல்வர் பொறுப்பேற்ற பொழுதே நடந்த முதல் பாராட்டுக் கூட்டம்!
முதல்வர் பொறுப்பேற்ற பொழுதே நடந்த முதல் பாராட்டுக் கூட்டம்! நேற்று ஞாயிறு 10.05.2026 காலை 10.00 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு ச.சோ.விசய் முதல்வராகப் பொறுப்பேற்ற நிகழ்வு நடந்ததை அனைவரும் அறிவோம். நேற்று அதே நேரம் அவருக்குத் தமிழ்காப்புக் கழகம் சார்பில் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதுவே முதல் பாராட்டுக் கூட்டம். அதுவும் தமிழ் அமைப்பு நடத்திய பாராட்டுக் கூட்டம். தமிழ்க் காப்புக் கழகத் தலைவர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையில் இக்கூட்டம் நிகழ்ந்தது. தேர்தல் கணிப்புகளையும் திணிப்புகளையும் பொய்யாக்கித் தன்னம்பிக்கையால்…
வெருளி நோய்கள் 1396 -1400: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1391 -1395: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1396 -1400 தோல்வி குறித்து ஏற்படும் அல்லது எதிர்பார்க்கும் சூழல் குறித்த அளவுகடந்த பேரச்சமே தோல்வி வெருளி.தோல்வி வெருளி (cadophobia), தோற்கடிப்பு வெருளி (kakorraphiaphobia, kakorraphiophobia, kakorrhaphiophobia), ஆகூழின்மை வெருளி(Atychiphobia) யாவுமே தோல்வி தொடர்பானவைதானே. எனவே, பொதுவாகத் தோல்வி வெருளி என்று சொன்னால் போதும்.தோல்வி குறித்த அச்சமே முயற்சிக்கு முட்டுக்கட்டையாய் அமைந்து வெற்றி வழிக்குச் செல்வதைத் தடுக்கிறது.தேர்வு, தேர்தல், தொழில், காதல், வாழ்க்கை, விளையாட்டு, போட்டி என எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பது…
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – 3. குமுகாய அமைப்பு, 4.பொருளியல் நிலை, 5.மக்கள் வாழ்க்கை நிலை
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – 1.தமிழ்நாடு. 2. மொழி- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை 3.குமுகாய அமைப்பு ஐந்தாயிரம் ஆண்டுகட்குமுன், அஃதாவது முக்கழகக் காலங்களில் இன்றுபோல குலப்பிரிவுகள் (சாதி) இல்லை. ஆரியர் இந்நாட்டில் குடியேறிய பின்னரே பிர்ம, சத்திரிய, வைசிய, சூத்திரப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. இந்துமதத்தில் சேர விரும்பாத மக்கள் ஐந்தாம் குலம் (சாதி), “பஞ்சமர்”, “தீண்டப்படாதவர்” என அழைக்கபப்ட்டனர். இவர்களுக்கு முன்கூறிய நான்கு பிரிவினர்களுடன் எவ்வகைத் தொடர்பும் இல்லை….
வெருளி நோய்கள் 1391 -1395: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1386 -1390: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1391 -1395 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 3/5
கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு: 1. இலக்குவனார் திருவள்ளுவன்
சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 1. இன்றைய ஆய்விற்குரிய நூல், ‘சிவகங்கை இராமச்சந்திரனார்‘ என்பதாகும். கொடைக்கானல் காந்தியால் எழுதப் பெற்றது இந்நூல். இந்நூல் வரலாற்றின் வாயில், அரசியல் வரலாறு, தலைவர்களின் தலைவர், கொள்கை குணம் கோட்பாடு என்னும் 4 பிரிவுகளில் மொத்தம் 43 தலைப்புகளில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் எழுவரின் அணிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் கட்டுரையான சூரியவனத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிவகங்கைஇராமச்சந்திரனார் பற்றிய கருத்தினக் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது கட்டுரை தலைமுறை வரலாறு; மூன்றாவது கட்டுரை வரலாற்றின் வரலாறு; நான்காம் கட்டுரை வணக்கத்திற்குரிய வாயில் காப்போன்; ஐந்தாவது…
வெருளி நோய்கள் 1386 -1390: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1381 -1385: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1386 -1390 தொலை நோக்குப் பார்வை குறித்த வரம்பற்ற பேரச்சம் தொலை நோக்கு வெருளி.பிறரது தொலைநோக்குப் பார்வை குறித்துக் கவலையும் வெறுப்பும் அச்சமும் கொள்வோர் பெருகி வருகின்றனர்.00 தொழில் குறித்து ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் தொழில் வெருளிபணி என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 9 இடங்களில் இடம் பெற்றிருந்தாலும், பணிவு அல்லது தாழ்தல் என்னும் பொருள்களிலேயே வந்துள்ளன. தொழில் என்னும் சொல்தான் 84 இடங்களில் பல்வகை வேலைகளையும் குறிக்கும் வகையில் இடம் பெற்றுள்ளது.ergon…
கொல்லும் சொல் : ‘மாடல்’ – எண்ணுவோம் தமிழில் : இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! 24 இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -1 தொடர்ச்சி) கொல்லும் சொல் : ‘மாடல்’ தி.மு.க.தலைவருக்கு ஆங்கில மோகம் உள்ளது அனைவரும் அறிந்ததே! “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” எனப் பேசி வந்தாலும் ஆங்கிலச்சொல் அறிமுகமானால் அதைத்தான் பயன்படுத்துபவர். விளம்பரங்களிலும் புதிய திட்ட முழக்கங்களிலும் ஆங்கில மோகம் தலைவிரித்தாடுவதும் அறிந்ததே. நாம் இதனைப் பன்முறை சுட்டிக்காட்டியுள்ளோம். சிலவற்றைக் கேட்டுக் கொண்டாலும் திராவிட மாடல் பெயர்ப் பற்று அவரை விட்டுப் போகவில்லை. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. …
