தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 1.

(தோழர் தியாகு எழுதுகிறார் : கல்வியுரிமைக் கோரிக்கை விளக்கம் – தொடர்ச்சி) திலீபன் நினைவுப் பேருரை: தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு கடல் கடந்து போனாலும் தமிழ் கடந்து போகாமல் தமிழ் மொழி, இன, தேச, உணர்வோடு வாழ்ந்து வரும் உலகத் தமிழர்களுக்கு நான் சார்ந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் முதலிலே வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். ஈகத்தின் இன்னொரு பெயர் திலீபன். என்றும் நினைவில் நிலைத்திருக்கும் திலீபனை நினைவுகூர்ந்து, தமிழீழ விடுதலைப் போரில் தம்மை ஆகுதி ஆக்கிக்கொண்ட பல்லாயிரம் மாவீரர்களையும்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 65 : நல்லுரை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 64 : யான் பெற்ற நல்லுரை – தொடர்ச்சி) நல்லுரை சில மாதங்களுக்கு முன்பு திருச்சிராப்பள்ளியிலிருந்து சதாசிவம் பிள்ளை வந்தான். இந்தத் துறைசையந்தாதியை அவன் எடுத்துவந்து பாடஞ் சொல்லும்படி தொந்தரவு செய்தான். நான் படித்துப் பார்த்தேன்; ஒன்றுமே விளங்கவில்லை. ‘ஐயா அவர்களிடத்திலேயே போய்க் கேட்டுக்கொள்’ என்று அனுப்பிவிட்டேன். அங்கே தங்களிடம் வந்திருப்பானே?” “வரவில்லை” “அவனைப்போல இன்னும் யாராவது வந்து அருத்தம் சொல்லவேண்டுமென்று உபத்திரவம்பண்ணினால் இவரிடம் தள்ளிவிடலாமே என்ற எண்ணத்தினாலேதான் இந்தக் கேள்வி கேட்டேன்.” ‘ஆற்றிலே போட்டுவிடுங்கள்’ அப்போது ஆறுமுகத்தா பிள்ளை…

தோழர் தியாகு எழுதுகிறார் : கல்வியுரிமைக் கோரிக்கை விளக்கம்

(தோழர் தியாகு பகிர்கிறார் : பொய் பேசும் கன்னட இனவெறியர்கள்!, நலங்கிள்ளி – தொடர்ச்சி) கல்வியுரிமைக் கோரிக்கை விளக்கம் 1) வேண்டாம் பொதுத்தேர்வு(நீட்டு)! அனிதா முதல் செகதீசன், அவருடைய தந்தை வரை தமிழ்நாட்டில் 2017 தொடக்கம் கடந்த ஆறு ஆண்டுகளில் 17 உயிர்கள் நீட்டு தற்கொலைக்குப் பலியாகியுள்ளன. பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் அனிதா எடுத்த மதிப்பெண் 1200க்கு 1176. அனிதாவின் மருத்துவக் கல்விக் கனவு மெய்ப்பட இந்த மதிப்பெண் போதும். ஆனால் நாடுதழுவிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு என்னும் நீட்டு அவரது…

ஊரும் பேரும் 59 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – சாத்தங்குடி

(ஊரும் பேரும் 58 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – கருந்திட்டைக்குடி – தொடர்ச்சி) ஊரும் பேரும் சாத்தங்குடி திருவாரூர்த் திருத்தாண்டகத்தில் சாத்தங்குடியிற் காட்சி தரும் ஈசன் பெருமை பேசப்படுகின்றது.“எல்லாரும் சாத்தங் குடியிற்காண இறைப்பொழுதில் திருவாரூர்ப் புக்கார் தாமே”என்பது திருநாவுக்கரசர் பாட்டு. இப் பாசுரத்திற் குறித்த சாத்தங்குடி, பாடல் பெற்ற திருப்புன்கூருக்கு ஒன்றரை கல் தூரத்தில் உள்ளது. தனிச் சாத்தங்குடி என்று திருநாவுக்கரசர் குறித்தவாறே இன்றும் அவ்வூர் முற்றும் கோயிலுக்கே உரியதாக உள்ளது.22 உருத்திரகோடிதிருக்கழுக் குன்றத்தின் அடிவாரத்திலுள்ள சங்கு தீர்த்தம் என்னும் திருக்குளத்திற்குத் தென் கிழக்கில் உருத்திர…

தோழர் தியாகு பகிர்கிறார் : பொய் பேசும் கன்னட இனவெறியர்கள்!, நலங்கிள்ளி

(தோழர் தியாகு எழுதுகிறார் : புதுவைக் குயில் தமிழ்ஒளி (2) – தொடர்ச்சி) பொய் பேசும் கன்னட இனவெறியர்கள்! தமிழ்நாட்டுக்கு உரிய காவிரியைத் திறந்து விட வேண்டுமெனக் காவேரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று வாரியம், உச்ச நீதிமன்றம் கூறுகின்றன. எந்த நீதிக்கும் சட்டத்துக்கும் அறத்துக்கும் கட்டுப்பட மறுக்கிறது கருனாடகம். கேட்டால், எங்களிடமே தண்ணீர் இல்லை என்கிறது.உண்மை நிலவரம் என்ன? கிருட்டிணராவ சாகர் அணைமுழுக் கொள்ளளவு 124.8 அடி உயரம்இன்றைய கொள்ளளவு 90 அடிகபினி அணைமுழுக் கொள்ளளவு 65 அடி உயரம்இன்றைய கொள்ளளவு 57…

தமிழ் வளர்த்த நகரங்கள் 18 – அ. க. நவநீத கிருட்டிணன்: புராணம் போற்றும் தில்லை

(தமிழ் வளர்த்த நகரங்கள் 17 – அ. க. நவநீத கிருட்டிணன்: தில்லையின் சிறப்பு-தொடர்ச்சி) புராணம் பாடிய புனிதர் உமாபதிசிவனர் சைவ சமய சந்தான குரவர் நால்வருள் ஒருவர். அவர் தில்லைவாழ் அந்தணருள்ளும் ஒருவர் ; சைவ சமய சாத்திரங்கள் பதினான்கனுள் எட்டு நூல்களைத் தந்தருளிய செந்தமிழ்ச் சிவஞானச் செல்வர் ; மற்றாெரு சந்தான குரவராகிய மறைஞான சம்பந்தரின் மாணாக்கர். தில்லைக் கூத்தன் அருளைப் பெற்றுப் பெத்தான் சாம்பான் என்னும் புலைக்குலத் தொண்டர்க்கு முத்திப்பேறு கிடைக்கச்செய்த சித்தர். முள்ளிச்செடிக்கும் முன்னவன் இன்னருள் வாய்க்கு மாறு…

தோழர் தியாகு எழுதுகிறார் : புதுவைக் குயில் தமிழ்ஒளி (2)

(தோழர் தியாகு எழுதுகிறார் : புதுவைக் குயில் தமிழ்ஒளி (1) – தொடர்ச்சி) புதுவைக் குயில் தமிழ்ஒளி (2) பன்னாட்டியத்தில் (சருவதேசியம்) ஊன்றிப் பாடும் போது தமிழ்ஒளியிடம் மற்றொரு பாவேந்தர் பாரதிதாசனைப் பார்க்கிறோம்: . “இமை திறந்து பார்! விழியை அகலமாக்கு!என் கவிதைப் பிரகடனம் உலகமெங்கும்திமுதிமென எழுகின்ற புரட்சி காட்டும்!சிந்தனைக்கு விருந்தாகும் உண்ண வா நீ!” 1948 இறுதியில் ‘பொதுவுடைமைக் கட்சி’ இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட போது, கட்சியின் பரப்புரைப் பொறிகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அந்தச் சூழலில் ‘முன்னணி’ ஏடு மலர்ந்தது; கவிஞர்…

சட்டச்சொற்கள் விளக்கம் 31-40 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 26 -30 : இலக்குவனார் திருவள்ளுவன் -தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 31-40 31. A while சிறிது நேரம்   while-குறிப்பிட்ட ஒரு செயல் நிகழ்வின்போது; அச்சமயத்தில்; அப்பொழுது; உடன் நிகழ்வாக; அதே வேளையிலேயே. காலம்; நேரம்; எனப் பொருள்கள். ஆனால், A while என்னும் பொழுது சிறிது நேரம் அல்லது கொஞ்ச நேரம் என்றே குறிக்கிறது. 32. A, An ஒரு, ஓர்   ஒற்றை எண்ணிக்கையைக் குறிக்கும் ஒரு என்னும் சொல் உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்னர் ஓர்…

தோழர் தியாகு எழுதுகிறார் : புதுவைக் குயில் தமிழ்ஒளி (1)

(தோழர் தியாகு எழுதுகிறார் : கலியுகமும் கிருதயுகமும்-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! இவர்களை நீங்கள் அறியாதிருக்க முடியாது. ஆனால் இந்த வரிசையில் வைத்து எண்ணத்தக்க கவிஞர் தமிழ்ஒளியை உங்களில் பலரும் அறிந்திருக்க மாட்டீர்களோ? செ.து. சஞ்சீவி அவர்கள் அந்தப் பாவலரையும் அவர்தம் படைப்புகளையும் எனக்கு அறிமுகம் செய்வதற்கு முன் நானும் தமிழ்ஒளி குறித்து இருளில்தான் இருந்தேன். அவரைப் பற்றிப் புதுமலரில் எழுதும் படி அன்பர் குறிஞ்சி அழைத்த போது மீண்டும் ஒரு முறை தமிழ்ஒளியில் நனையும் வாய்ப்புப் பெற்றேன். இதோ…

தோழர் தியாகு எழுதுகிறார் : கலியுகமும் கிருதயுகமும்

(தோழர் தியாகு பகிர்கிறார் : சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்க. – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! கலியுகமும் கிருதயுகமும்… கலி முத்திப் போச்சு! இது கலி காலம்! இப்படியெல்லாம் மக்கள் பேசக் கேட்டிருப்பீர்கள். இந்துத் தொன்மவியலின் பார்வையில் உலகக் குமுகாயம் நான்கு வளர்ச்சிக் காலங்களின் வழிச் செல்கிறது. இவை நான்கு உகங்களாகக் குறிக்கப்படுகின்றன: கிருத யுகம் (சத்திய யுகம்), திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம்! இந்த நான்கு உகங்களின் கால அளவைப் பார்த்தாலே இது புராணிகக் கதை என்பது விளங்கும்.1)…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 969-978

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 949-968-தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 969-978 (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்

தோழர் தியாகு எழுதுகிறார் : சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்க….

 (தோழர் தியாகு பகிர்கிறார் : ஐயா வைகுண்டர் வழியில் சனாதன எதிர்ப்பு-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்க… “வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!வாழிய வாழியவே!வான மளந்தது அனைத்தும் அளந்திடுவண்மொழி வாழியவே!ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசிஇசைகொண்டு வாழியவே!எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!என்றென்றும் வாழியவே!சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்துலங்குக வையகமே!தொல்லை வினைதரு தொல்லை அகன்றுசுடர்க தமிழ்நாடே!வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழிவாழ்க தமிழ்மொழியே!வானம் அறிந்த தனைத்தும் அறிந்துவளர்மொழி வாழியவே! இது பாரதியார் எழுதிய தமிழ்மொழி வாழ்த்து என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதன் ஆழமான உட்பொருளை…