தமிழர் அழிவது யாராலே? – இலக்குவனார் திருவள்ளுவன்

எவராலே? ஈழம் சிதைவது எவராலே?             தமிழர் அழிவது யாராலே? கொடுஞ்சிறை வதைமுகாம் பிறவற்றில்             தமிழர் மடிவது எவராலே? உணவும் நீரும் சிறிதுமின்றி             மருந்தும் உடையும் கிட்டாமல் நாளும் ஒழியும் சூழலுக்குத்             தள்ளப்பட்டது யாராலே? கற்பும் பொற்பும் சிதைப்பவரை             ஓட ஓட விரட்டாமல் அஞ்சி அஞ்சிச் சாகும்நிலை             வந்தது இன்று எவராலே? தமிழர் அழுவது யாராலே?             இந்தியம் சிரிப்பது எவராலே? – இலக்குவனார் திருவள்ளுவன்

கருகும் பிஞ்சுகள் – பாவலர் கருமலைத்தமிழாழன்

கருகும் பிஞ்சுகள்  பகர்கின்ற கட்டாயக் கல்விச் சட்டம் பறைசாற்றும் குழந்தைத்தொழி லாளர் சட்டம் முகம்காட்டும் கண்ணாடி போல யிங்கே முன்னிருந்தும் கண்மறைக்கும் வறுமை யாலே அகரத்தை எழுதுதற்கே கனவு கண்டு அன்புத்தாய் நீவிவிட்ட அரும்வி ரல்கள் தகதகக்கும் கந்தகத்து மருந்தில் தோய்ந்து தயாரித்துத் தருகிறது நெருப்புக் குச்சி ! சீருடையில் அழகொளிரச் சிரிப்பு திர்த்துச் சிற்றுந்தில் அமர்ந்தபடி கைய சைத்துப் பேருவகை தருமென்று கனவு கண்டு பெருமன்பில் நீவிவிட்ட பிஞ்சு விரல்கள் சீருடையில் தொழிற்சாலை பெயர்வி ளங்க சீறிவரும் வெடிமருந்து வாசம் வீசும் பேருந்தில்…

எமது படையணி விரைகிறது… எம் தேசத்தை மீட்க! – மேதகு வே.பிரபாகரன்

ஈழம் மீட்க அணிவகுத்துள்ளோம்! நாம் அணிவகுத்துள்ளோம்… நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! நாம் அணிவகுத்துள்ளோம் இழந்த எமது நாட்டை மீட்க எதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான்! அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை! புயலெனச் சீறி இழந்த நாட்டை மீட்க நாம் அணிவகுத்துள்ளோம் நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! எமது படையணி கடக்க வேண்டியது நெருப்பாறென்பது எமக்குத் தெரியும் ஆனால்… அதைத் தாங்கக் கூடிய மக்கள் ஆதரவென்னும் கவசம் எம்மிடம் உண்டு! எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது! எமதுஆத்ம பலமோ அதைவிட வலிமை வாய்ந்தது!…

வெல்வோம் நாமென உறுதியெடு! – இரவி இந்திரன்

வெற்றி நமக்கென முழக்கமிடு! வெல்வோம் நாமென உறுதியெடு! வல்லவனே வாழ்வான் வரலாறு சொல்கிறது. வெல்பவனே வாழ்வான் வெளிப்படை உண்மை. கொல்வோம் என்றொரு போர்க்குணம் கொண்டு எல்லையில் நிற்கிறது சிங்களம் இன்று வெல்வோம் நாமென வேங்கைகள் கூட்டம் பகை வென்றே காக்கிறார் எங்களின் தேசம் தருமம் என்றொரு அடிப்படை உண்டு தமிழனின் பக்கம் எப்போதும் உண்டு வெற்றி என்றொறு மந்திரம் உண்டு எங்கள் தலைவனுக்கது சொந்தம் என்றும் இரத்தம் சிந்தாத அரசியல் யுத்தம் செய்! இரத்தம் சிந்தும் யுத்த அரசியல் செய்! அப்போது தான் நீ…

அழிக்கின்றபகை வெல்வோம் – க. உலோகன்

களித்துண்டு வாழ்வமோ தமிழா! அங்கே கரித்துண்டாய்ப் போகிறான் தமிழன்! விழித்தின்று குரல்கொடுதமிழா! கொடும் விதிவெல்லப் புறப்படுதமிழா! பகிர்ந்துண்டு வாழ்ந்தவன் அன்று பதியின்றியலைகிறான் இன்று! துயில்கொள்ளத் தரைகூடஇன்றி-அவன் துடித்தங்கு மடிகிறான்இரைதண்ணியின்றி! அழிநச்சுவாயுவின் எரிபட்டுஉறவுகள் உருகெட்டுச் சாதல்கண்டும் பரிவற்றுவாய்மூடிப் பதுங்கிடும் உலகத்தின் சதிவெட்டக் குரல் கொடு தமிழா! வெளிக்குண்மை சொல்ல வா! தமிழா! – நாம் விழிமூடியுறங்கினால் யாருள்ளார் தமிழா! அழிக்கின்றபகை வெல்வோம் தமிழா!- உளம் அனல்பொங்க உலகிற்கு உண்மைசொல்தமிழா! – க. உலோகன்

கடவுளும் சங்கத் தமிழின்பம் நுகர்ந்தார் – சேக்கிழார் & பரஞ்சோதி முனிவர்

முழுமுதற் கடவுளும் சங்கத் தமிழின்பம் நுகர்ந்தார் மும்மைப் புலவர்களின் மிக்கதன்றே அம் மூதூர் மெய்மைப் பொருளாந் தமிழ்நூலின் விளங்குவாய்மைச் செம்மைப் பொருளுந் தருவார் திருவாலவாயில் எம்மைப் பவந்தீர்ப்பவர் சங்கம் இருந்ததென்றால் – சேக்கிழார்: பெரியபுராணம் கடவுளும் சங்கத்தமிழ் ஆய்ந்தார் கண்ணுதற் பெருதற்கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத தெரித்தாய்ந்த இப்பசுந்தமிழ் – பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடல் புராணம்

பாடு சிட்டே பாடு ! பண் பாடு ! : காட்சி 30 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

காட்சி – 30 அங்கம்    :    அருண் மொழி, பூங்குயில் இடம்        :    பள்ளியறை நிலைமை    :    (பள்ளிகொள்ள வருகின்ற பூங்குயிலை துள்ளி மெல்ல அணைக்கின்றான்) பூங்    :    என்ன நீர் இன்று பொழுதுக்குள்ளே களைப்பாய் உள்ளீர் உழைத்ததனாலா? அரு    :    என்னடி! உண்ணல் உறக்கம் தவிர்த்தோர் தவிர வேறென்ன வேண்டும்? உழைப்பு நமக்கு! பூங்    :    வெல்வெட்டு மெத்தை பிரித்தே வைத்த மேல் விரிப்பட்டும் தொங்கவே செய்த நல்லதோர் தேக்கங்கட்டிலும் உண்டு! நல்மணம் பரப்பும் பொருள்களும் உண்டு பாலாடையாகப் படி நிறை…

அப்பாவைப் போல் யார் இருக்க முடியும்..? – நவீன் பிரகாசு

அப்பாவைப் போல் யார் இருக்க முடியும்..? எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா… முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை… அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என……

யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்

யானோர் காலக் கணிதம் கவிஞன் யானோர் காலக் கணிதம் கருப்படு பொருளை உருப்பட வைப்போன்! புவியில் நானோர் புகழுடைத் தெய்வம் பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்! இவைசரியென்றால் இயம்புவதென் தொழில் இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை! ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும் அவனும் யானுமே அறிந்தவை; அறிக! செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்; பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்! பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்; ஆசைதருவன அனைத்தும் பற்றுவேன்! உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்; இல்லா யின்எம ரில்லந் தட்டுவேன்! வண்டா யெழுந்து மலர்களில்…

பாடு சிட்டே பாடு ! பண் பாடு ! : காட்சி 29 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

காட்சி – 29 அங்கம்    :     ஆண்சிட்டு, பெண்சிட்டு இடம்      :     மரக்கிளை நிலைமை  :     (ஊடல் கூடல்) (சிட்டுகள் சின்ன சிரிப்பாலே சிறகால் அடித்து முகம் மலர்ந்து மெட்டுகள் போட்டு கீச் சீச் பண்பாடி ஆட்டம் போட்டுவிட) (கவிஞரும் அன்பும் கண்டதனைக் கண்களால் சிமிட்டிப் பேசியபின் புவியைப் பார்த்து மேல் நோக்கி புன்னகை வீசிய பொழுதினிலே)   (காட்சி முடிவு)  –  தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்

சங்க இலக்கியங்கள் மங்கா இனிமை பயப்பன – புலியூர்க் கேசிகன்

அகத்தெழும் உணர்வுகள் அனைத்தும் உலகிடை முகிழ்த்திடும் காதலில் முதிர்ந்தே தோன்றிடும்; பருவத்து மலர்ச்சியும் பாவையின் வனப்பும் செறிவுற்று இலங்கும் சேயிழை நல்லாள் மறத்தின் மாண்பும் மலர்தமிழ்ப் பண்பும் திறத்தில் உருவாய்த் திகழுமோர் காளையைக் கண்டதும் அவனிற் கலந்திடத் துடிப்பாள்; நாணும் மடமும் நற்குலப் பண்பும் தாமே அகன்றிடத் தளர்வாள் காதலால்; ஆண்மையும் சிறப்பும் அந்நிலை அகன்றிடப் பெண்மையை நாடிப் பித்தெனும் நிலையில் அவனும் தளர்வான் அங்கவர் கலப்பார்; இங்கிவர் தம்முட் களவிற் கண்டிடும் இன்பமே குறிஞ்சியாம்; இருந்தவள் இரங்கிடல் முல்லையாம்; முதல்வன் ஒழுக்கம் இழுக்கிட…

நான் தமிழன் எனவேதான்…. …. – இலக்குவனார் திருவள்ளுவன்

நான் தமிழன் எனவேதான் தமிழில் பேசுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் படிப்பதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழைப் படிப்தில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழ்ப்பண்பாட்டைப் போற்றுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழ்நாகரிகத்தைப் பின்பற்றுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழர்க்கு உதவுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழினத்தைப் பே1ணுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் ஒப்பமிடுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் வணங்குவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் வாழ்த்துவதில்லை!  …