யாரைத் தேர்வு செய்வார்? – கெருசோம் செல்லையா
யாரைத் தேர்வு செய்வார்? நல்லார் கெட்டார் என்றிருவர் நடக்கும் தேர்தலில் போட்டியிட்டால், எல்லா வாக்கும் பெற்றவராய், ஏய்க்கும் கெட்டவர் வென்றிடுவார்! இல்லா நேர்மை இவ்வுலகில், இறைமகன் இயேசுவே நின்றாலும், பொல்லார் வாக்கு தரமாட்டார்; புனிதரைத்தான் கொன்றிடுவார்! – கெருசோம் செல்லையா
இத்தகையோர் இருப்பதைவிட இறப்பது நன்றே! – பாவேந்தர் பாரதிதாசன்
இத்தகையோர் இருப்பதைவிட இறப்பது நன்றே! வாணிகர்க்கும் தமிழென்றால் வெறுப்புண்டோ? அரசியல்சீர் வாய்க்கப் பெற்றோர் ஆணிகர்த்த பேடிகளோ? அரும்புலவர் ஊமைகளோ? இல்ல றத்தைப் பேணுமற்ற யாவருமே உணர்வற்றுப் போனாரோ? பெருவாழ் வுக்கோர் ஏணிபெற்றும் ஏறாத தமிழர்உயிர் வாழ்வதிலும் இறத்தல் நன்றே. 6 மிகுகோவில் அறத்தலைவர், அறநிலையக் காப்பாளர், விழாவெ டுப்போர், தகுமாறு மணம்புரிவோர், கல்விதரும் கணக்காயர், தம்மா ணாக்கர், நகுமாறு நந்தமிழை நலிவுசெய்யும் தீயர்களோ? நல்வாழ் வுக்கோர் புகும்ஆறு புறக்கணித்தும் தமிழர்உயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 7 மகிழ்ச்சிசெய வருங்கூத்தர், மாத்தமிழை…
சுடும்! சுடும்! சுடும்! – மு இராமச்சந்திரன்
சுடும்! சுடும்! சுடும்! சுடும் சுடும் நீரும் சுடும் நெருப்பும் சுடும் நேர் நேர் நின்றால் நட்பும் சுடும்! வாயும் சுடும் வரவும் சுடும் வரம்புகள் மீற நிழலும் சுடும் ! காற்றும் சுடும் கவிதைகள் சுடும் கசடரைப் பார்த்தால் நெஞ்சும் சுடும் ! பூவும் சுடும் பொழுதும் சுடும் பொதுவில் நில்லா மன தைச் சுடும் ! அன்பும் சுடும் ஆசையும் சுடும் அழகே இல்லா நடையும் சுடும் ! சுடும் . சுடும் . போரும் சுடும் பொழுது போக்காய் செய்வது…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙெ) – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙூ) தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙெ) சீராட்டப்பட வேண்டியவரைச் சிறைக்கு அனுப்பிப் பணிநீக்கமும் செய்தமை குறித்துப் பின்வருமாறு பேராசிரியர் இலக்குவனாரே குறிப்பிட்டுள்ளார்: “தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயில வாரீர்” என மாணவரை நோக்கி அன்போடு அழைக்கப் புறப்பட்டேன். தமிழ் வழியாகப் பயிலத் தம் மக்களை ஊக்குவிக்க வேண்டும் எனப் பெற்றோரை நோக்கி உற்ற வேண்டுகோள் விடுக்க ஊர்கள் தோறும் நடக்கப் புறப்பட்டேன். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவத் தெருக்கள் தோறும் செந்தமிழ் முழங்க வேண்டுமெனச்…
பாவேந்தரும் பொதுவுடைமையும் 3/4 – முனைவர் நா.இளங்கோ
(பாவேந்தரும் பொதுவுடைமையும் 2/4 தொடர்ச்சி) பாவேந்தரும் பொதுவுடைமையும் 3/4 1940 தொடங்கிப் பாவேந்தர் தம்மை முழுமையான திராவிட இயக்கக் கவிஞராக, தமிழ்த் தேசியம் நாடும் கவிஞராக, தனித் தமிழ்நாடு அல்லது தனித் திராவிடநாடு கோரும் கவிஞராகத் தம்மை அடையாளப் படுத்திக்கொண்டார். ஆனாலும் தாம் சார்ந்த தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்கம் காண விரும்பும் குமுகாயமாக அவர் சமத்துவக் குமுகாயத்தைக் காட்டத் தவறியதே இல்லை. பாவேந்தர் பாடல்கள் வழி ஊற்றம் பெற்ற திராவிட இயக்கத்தினர் அனைவரும் பொதுவுடைமைச் சமூகமே, திராவிட இயக்கத்தின் குறிக்கோள் என்பதாக உணர்ந்தார்கள். ஆனால்…
திருக்குறள் அறுசொல் உரை: 128. குறிப்பு அறிவுறுத்தல்: வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 127. அவர்வயின் விதும்பல் தொடர்ச்சி) 3. காமத்துப் பால் 15. கற்பு இயல் 128. குறிப்பு அறிதல் காதலர் தம்தம் உள்ளத்துள்ள் குறிப்புகளைக், குறிப்பாக உணர்த்தல் (01-05 தலைவன் சொல்லியவை) கரப்பினும், கைஇகந்(து) ஒல்லாநின் உண்கண், உரைக்கல் உறுவ(து)ஒன்(று) உண்டு. மறைத்தலையும் மீறி, உன்கண்கள் குறிப்பு ஒன்றைச் சொல்லுகின்றன. கண்நிறைந்த காரிகைக் காம்(பு)ஏர்தோள் பேதைக்குப், பெண்நிறைந்த நீர்மை பெரிது கண்கொள்ளா அழகுக் காதலிக்குப் பெண்மை நிறைபண்பே, பேர்அழகு….
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (3.) – வல்லிக்கண்ணன்
[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (2.) தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (3.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) நமது மொழி உயர் வென்று சொல்லி, நாள் கழித் தோம்; குறை களைந்தோமில்லை என்று குறிப்பிட்டார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அதே குறையை பெருங்கவிக்கோவும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. தமிழ் தொன்மை மொழியென்றோம் தமிழர் முன் இனம் என்றோம் அமிழ்தம் எம்மொழி என்றோம் அழகாகப் பாட்டிசைத்தோம்! புவனமிதில் நம் தமிழ்தாய் பவனிவர என்செய்தோம்? என்று கேட்கிறார். மேலும் அவர் சுட்டுகிறார் :…
ஏழு வண்ணங்கள் – சந்தர் சுப்பிரமணியன்
ஏழு வண்ணங்கள் அத்தைநேற்று வீட்டில் ஆக்கிவைத்த சாம்பார்! கத்திரிக்காய்! ஊதா! கண்சிமிட்டு தாம்பார்! மொட்டைமாடி மேலே முட்டிநிற்கும் வானம்! கொட்டுதங்கே நீலம்! குளிக்கவேண்டும் நானும்! – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் : பக்கம் 37
சுந்தரச் சிலேடைகள் 13 – உழவனும் ஆசானும்
சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 13 உழவனும் ஆசானும் சீர்திருத்தித் தாள்வணங்குஞ் சிற்பியெனப் பாரதனிற் கார்போல் மகிழ்வுதருங் கன்னலவர் – பார்போற்றும் மெல்லியராய் மேலாகி மேதினியை மேம்படுத்தும் நல்லுழவர் ஆசானுக் கொப்பு . பொருள்: உழவன் 1) களைமண்டிய நிலத்தைச் சீர்படுத்துகிறான். 2) பின்னாளில் விளைந்த பயிரின் தாள் செழிப்புற்ற நிலையினைக் கண்டு ஒவ்வொரு நாளும் வணங்குவான். 3) ஒரு சிற்பிபோலப் பயிரைப் பல நிலைகளில் நின்று விளைவிக்கிறான். 4) வான் தருமழை போல் உலகிற்கு உணவு தருகிறான். 5) உலகிற்குச் சுவைதரு உணவுப்…
பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 1/8 – கருமலைத்தமிழாழன்
பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 1/8 தமிழ்த்தாய் வாழ்த்து கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும் களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில் இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும் இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம் கடலுக்குள் கல்கட்டிப் போட்ட போதும் காளவாய்க்குள் உடல்வேக நுழைத்த போதும் விடவாயால் கரையான்கள் அரித்த போதும் வீழாத தமிழன்னையை வணங்கு கின்றேன் ! அணியாகக் காப்பியங்கள் இருந்த போதும் அறநூல்கள் நுதல்பொட்டாய்த் திகழ்ந்த போதும் மணியாக இலக்கணங்கள் ஒளிர்ந்த போதும் மணிப்பிரவாள நடையினில் எழுதி யுள்ளே பிணியாக…
உன்னிதழில் என் சொற்கள்! – ஆரூர் தமிழ்நாடன்
உன்னிதழில் என் சொற்கள்! உன்காட்டு முட்களினால் பாதந் தோறும் உண்டாகும் பரவசத்தை என்ன வென்பேன்! உன்னம்பு துளைக்கின்ற இதயத் திற்குள் உயிர்க்கின்ற காதலினை என்ன வென்பேன்! உன்மூலம் வருகின்ற மரணம் என்றால் உயிர்கசிய வரவேற்றுப் பாட்டி சைப்பேன்! இன்னும்நீ வெறுமையினைக் கொடுப்பா யானால் என்னுலகை நலமாக முடித்துக் கொள்வேன்! வரையாத சித்திரமாய் வந்தாய்; எந்தன் வாழ்வினது சுவரெல்லாம் ஒளிரு கின்றாய்! கரையோரம் கதைபேசும் அலைகள் போலக் கச்சிதமாய் உயிர்ப்பாகப் பேசு கின்றாய்! அரைஉயிராய்க் கிடக்கின்ற போதும்; என்னை அரைநொடிநீ நினைத்தாலும் பிழைத்துக்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙு) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙூ) பேராசிரியரைக் கைது செய்யத்திட்டமிட்டுள்ளதை அறிந்த புலவர்மணி இரா.இளங்குமரன் அவர்கள், அதனைப் பேராசிரியரிடம் தெரிவித்தார். சிறைசெல்லும் புலவர்சிலர் வேண்டும் இன்று செந்தமிழின் உயர்வுதனை வேண்டி நின்று முறைசெய்யப் பதவிதனை இழப்ப தற்கும் முனைந்துவரும் புலவர்சிலர் வேண்டும் இன்று குறைசெய்யும் ஆள்வோரின் கொடுமைக் காளாய்க் குருதியுடன் உயிரீயப் புலவர் வேண்டும் நிறைசெய்ய உயிரீயும் புலவர் தம்முள் நிற்குமுதற் புலவன்நான் ஆகவேண்டும் (எழுத்தாளர் மன்றக் கவியரங்கில் முடியரசன் குறள்நெறி…
