சுந்தரச் சிலேடைகள் 12 வில்லம்பும் புருவக்கண்ணும்
சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 12 வில்லம்பும் புருவக்கண்ணும் வளைந்திருக்கும் ,கூர்முனியோ வஞ்சிக்கத் தாவும், களைப்புற்றோர் மீளவழி காட்டும் – திளைப்புதரும், விண்ணோரும், மண்ணோரும் வீதிதனில் சண்டையிடக் கண்புருவம் வில்லம்பாம் காண் . பொருள் வில்லம்பு 1 ) அம்பு பூட்டிய வில் வளைந்திருக்கும். 2) அம்பானது தன் கூர்மையால் பகைவரை வஞ்சிக்க எந்நேரமும் ஆயத்தமாக இருக்கும் . 3) போரில் களைப்புற்றோர் கூட வெற்றி பெற உதவிகரமாக இருக்கும். 4) கலைநயமிக்க வில்லம்பு பார்க்க இனிமை தரும். 5) உலகில் தேவர்களாக இருந்தாலும்…
பிணம் மிதக்கும் கங்கையிடம் இரக்கமா? – ஆரூர் தமிழ்நாடன்
பிணம் மிதக்கும் கங்கையிடம் இரக்கமா? உழவர்களின் கண்ணீரில் கரைந்துகொண்டிருக்கிறது தேசத்தின் மீதான நம்பிக்கை. இங்கே அதிகாரத்தில் பாலை. அதனிடம் நீதிகேட்டுப் போராடுகிறது எங்கள் வண்டல். கழனிகளுக்குப் பாலூட்டும் கருணைக் காவிரி பிணம் மிதக்கும் கங்கையிடம் இரக்கத்தை எதிர்பார்க்கலாமா? வடக்கத்தி கோதுமை தெற்கத்தி அரிசியை எள்ளி நகையாடுவது உயிரியல் அவமானம். வேளாண் தோழனே! பசிக்குச் சோறிடும் உன்னைப் பசியோடு அலையவைக்கிறது தேசம். கதிர் அறுக்கும் உன் அரிவாளைப் பிடுங்கி உன் கழுத்தை அறுக்கிறது தேசம் நாட்டின் மானம் காக்கப் பருத்தி கொடுக்கும் உன்னை அம்மணமாக்கி…
சிட்டுக்குருவி – சந்தர் சுப்பிரமணியன்
சிட்டுக்குருவி பட்டுச் சிறகைப் பலமாய் ஆட்டிப் பறந்து வருகின்ற சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு! குட்டி அலகும் குறுகுறு கண்ணும் கொண்டோர் கிளையமரும் சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு! கொட்டை பிரித்துக் குட்டிப் பழத்தைக் கொத்தித் தின்கின்ற சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு! நெட்டை மரத்தின் நிழலில் ஒருநாள் நின்றேன் இளைப்பாற! சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு! – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் பக்கம் 36
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙு) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙீ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙு) தமிழ்நாட்டில் தமிழே எல்லா நிலைகளிலும் நிலைத்து நிற்க வேண்டுமெனில் தமிழ்வழிக்கல்வியே தேவை; அதைப் பாமரர்களும் உணர்ந்து கொள்ளவும் அதன் மூலம் அரசு தமிழ் வழிக் கல்வியையே நடைமுறைப்படுத்தவும் தமிழ்உரிமைப் பெருநடைப் பயணம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டார். அதன் குறிக்கோள்களாகப் பின்வருவனவற்றை அறிவித்தார். தமிழ் உரிமைப்பெருநடை அணி குறிக்கோள்கள் கல்லூரிகளில் தமிழைப் பாடமொழியாக ஆக்குகின்ற அரசின் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று தமிழக அரசை வேண்டுதல். மாணவர்கட்கும் பெற்றோர்க்கும் தமிழ் வழியாகப்…
மே நாள் – கோவைக்கோதை
மே நாள் – கோவைக்கோதை உழைப்பின் ஊதியம் இளைத்தது. உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர். களைப்பில் மனிதர் வளைந்தனர். சளைக்கவில்லை பலர் விழித்தனர். நுழைந்தது கேள்விகள் – கொதித்தனர். விளைந்தது போராட்டம் – குதித்தனர். சிக்காகோ நியூயோர்க்கு பாசுடனீறாக அக்கிரமம் அழிக்கத் திரண்டனர். நோக்கம் நிறைவேறப் போராட்டம், சிறை. உக்கிரமானது பன்னாட்டுப் புரட்சி. உழைக்கும் நேரம் எட்டுமணியாக உரிமையைப் போராடி வென்றனர். தொகுதியாய்க் கூட்டங்கள் உரிமைபேச தொழிலாளர் நாளானது மே ஒன்று. எப்போதும் பணத்தில் குறியானவர்கள், தப்பாக மக்களை ஏமாற்றுபவர்கள், எப்போது தானாகத் திருந்துவார்கள், அப்போதன்றோ…
குடிப்பீரா உழவனின் கண்ணீர்? – ஆரூர் தமிழ்நாடன்
குடிப்பீரா உழவனின் கண்ணீர்? அதிகார மேடையில் சதிராடும் பேய்களே அநியாயம் செய்யலாமா? – உங்கள் அலட்சிய வேள்விக்கு வேளாண் தோழர்கள் விறகாக எரியலாமா? விதியற்றுக் கதியற்று உழவனும் துயரிலே வெந்துபோய்க் கதறலாமா? -எங்கள் வேளாண் தோழர்கள் படும்பாட்டை இன்னமும் வேடிக்கை பார்க்கலாமா? நதிநீரைக் கேட்பதும் கடன்நீக்கச் சொல்வதும் நாட்டோரின் உரிமைதானே! -தீய நரிகளே உழவனின் கண்ணீரைக் குடிக்கவா நாற்காலி ஏறினீர்கள்? சதிகாரக் கும்பலே கதியற்ற உங்களைச் சடுதியில் விரட்டுவோமே! -சற்றும் வெட்கமே இல்லாத வேதாந்தக் கூட்டமே விரட்டியே துரத்துவோமே!…
சுந்தரச் சிலேடைகள் 11 : கண்ணும் கத்தியும்
சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 11 கண்ணும் கத்தியும் ஒளிர்ந்திடும், காப்படையும் , நீர்காணும், ஒப்பில் பளிங்கொக்கும் ,போர்செய்யும் , பாயும்- தெளிந்தோரே நல்லுலகம் கண்ட நடைமாதர் கண்களுக்கு வல்லோரின் கூர்வாளே ஒப்பு . கண் பெண்களின் கண்கள் ஒளி வீசும் இமை என்னும் உறைக்குள் பாதுகாப்பாய் இருக்கும் . சோகத்திலோ , மகிழ்ச்சியான நேரத்திலோ கண்களிலிருந்து நீர் வரும் . பளிங்கை ஒத்து வெண்ணிறம் கொண்டிருக்கும் . கண்கள் காதலனுடன் அடிக்கடி போர் புரியும் . ஆடவர் ஆழ்மனம் வரை ஊடுருவிப் பாய்ந்து…
திருக்குறள் அறுசொல் உரை : 126. நிறை அழிதல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை; 125. நெஞ்சொடு கிளத்தல் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால் 15. கற்பு இயல் 126. நிறை அழிதல் மனத்துயரை அடக்க முடியாமல், தலைவி வாய்விட்டுப் புலம்புதல். (01-10 தலைவி சொல்லியவை) காமக் கணிச்சி உடைக்கும், நிறைஎன்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு. நாணத்தாழ்ப்பாள் கொண்ட கற்புக்கதவைக், காதல்எனும் கோடரி உடைக்கும். காமம்என ஒன்றோ? கண்இன்(று),என் நெஞ்சத்தை, யாமத்தும் ஆளும் தொழில். இரக்கம்இலாக் காதல், என்நெஞ்சை, நள்ளிரவிலும் அடக்கி…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙீ) – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙி) தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙீ) சமய விடுமுறைகளும் பிராமணியச் செல்வாக்கின் அடையாளமே எனக்கூறி, ஒரே சமயம்,ஒரே மொழி, ஒரே இனம் முதலான ஒற்றை யாட்சிக்கு எதிர்ப்பை மக்களிடையே உருவாக்கினார். “பரதகண்ட முழுவதும் ஒரே ஆட்சி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் எனக் கொள்ளவைத்துப் பலமொழிகளையும், இனங்களையும், இந்து ஆட்சி எனப் பாகிசுதானுக்குப் போட்டியாக ஒன்றை உருவாக்க எண்ணுகின்றனரோ என ஐயுற வேண்டியுள்ளது. இந்து மதம் என்பது பிராமணீயம் என்பதும் அதனைக்…
கொடுமை செய்வோர் வாழ்கின்றார்! – கெருசோம் செல்லையா
கொடுமை செய்வோர் வாழ்கின்றார்! கொன்று, திருடி, ஏமாற்றி, கொடுமை செய்வோர் வாழ்கின்றார்!. இன்று இவரைப் பாராட்டி ஏற்போர் நாட்டில் ஆள்கின்றார். அன்று இறைவன் உரைத்திருந்தும், அவற்றை மறப்போர் வீழ்கின்றார். நன்று எதுவென உணர்பவர்தான், நன்மை வழியில் மீள்கின்றார்! – கெருசோம் செல்லையா
வண்ணத்துப்பூச்சி – சந்தர் சுப்பிரமணியன்
வண்ணத்துப்பூச்சி – சந்தர் சுப்பிரமணியன் மண்ணில் வீழ்ந்த மலரே மீண்டும் மரத்தை அடைகிறதோ! – அட! வண்ணப் பூச்சி வந்தென் முன்னர் வலம்தான் வருகிறதோ! விண்வில் ஒடிந்து விழுந்தொரு துண்டு விரைந்து வருகிறதோ! – அட வண்ணப் பூச்சி வனப்பின் நிறந்தான் வகையாய்த் தெரிகிறதோ! தண்ணீர்ப் பரப்பில் தகதக வென்றே தங்கம் சொலிக்கிறதோ! – அட வண்ணப் பூச்சி வான்மண் எங்கும் வரைந்து களிக்கிறதோ! – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் பக்கம் 34
சுந்தரச் சிலேடைகள் 10 : கறிவேப்பிலையும் சிப்பியும்
சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 10 கறிவேப்பிலையும் சிப்பியும் பயனது உள்வைத்துப், பக்குவம் சேர்த்து, வியக்கப் பயனளித்து, வீழ்ந்து.-துயரடைந்து நற்பயன் தந்தளித்து நாணிக் கிடப்பதிலே பொற்சிப்பி வேப்பிலைக் கீடு. பொருள்: 1) பயன்களாகக், கறிவேப்பிலை மருத்துவத்தையும், சிப்பி முத்தையும் தன்னுள்ளே வைத்திருக்கின்றன. 2)இவ்விரண்டும் அடைந்தவரைப் பக்குவமாய்ப் பாதுகாக்கின்றன. 3) பிறர் வியக்குமளவிற்கு இவ்விரண்டும் பயனளிக்கின்றன. 4) பாரோர் இவற்றின் பயன்பெற்ற பின்னர் கீழே தூக்கி எறிந்து விடுகின்றனர். 5) அதனால் போவோர் வருவோர் காலில் மிதிபட்டுத் துன்புறுகின்றன. 6) நற்பயன் தந்தாலும் பயனைமட்டுமே எடுத்துக்கொண்டு…
