கவிஞாயிறு தாராபாரதி 13 & 14 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 11 & 12 தொடர்ச்சி)   கவிஞாயிறு தாராபாரதி 13 & 14 அண்ணல்கை வில்லதுவே அன்னை சீதை அகமெரிக்கும் விறகெனவாய் ஆன தின்று! கண்ணீரில் சீதனங்கள் கடத்தி வந்து கல்யாணச் சிறைபுகுந்த கைதி பெண்டிர்! மண்ணெண்ணெய் விளக்கெரிக்கும் வழக்கம் எல்லாம் மாண்டுவிட்ட கதையாகி மறைந்த நாளில் பெண்ணெண்ணெய் எரிக்கின்ற பேய்கள் கூட்டம்! பெயருக்காய்த் திருமணங்கள்! பிணமாய்ப் பெண்மை! (13) தெருவளைவின் சந்தையதில் தேர்ந்து வாங்க தெருப்பொருளா கால்நடையா தையல் இன்னும்? பொருளளித்துப் பொருள்பெறுதல் பொதுவில் மெய்ம்மை! பொருள்கொடுத்துப் பெண்கொடுக்கும் பொய்ம்மை…

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 11 & 12

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 9 & 10  தொடர்ச்சி) திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 11&12 பதினொன்றாம் பாசுரம் களப்பிரரையும் வென்ற கன்னித்தமிழ்   அளப்பரிய ஒண்புகழால் ஆண்டவன்பொ றாமல் வளப்பமுறு தண்டமிழை வாடச் செய்தானோ? களப்பிரனின் காலத்துக் காரிருள் சூழ்ந்து களிப்பூறும் மாவாழ்வு காணா தொளியப், பளிக்கறைமேல் தூசி வளிவர நீங்கல்போல் ஒளிகுன்றாள் ஆகித், தனைச்செயவே செய்து வெளியார் சமணரையும், பௌத்தரையும் வென்றாள்; எளியாள் தமிழணங்கின் ஏற்றஞ்சொல், எம்பாவாய் !   பன்னிரண்டாம் பாசுரம் பெருமையில் தாழாத தமிழ்   ஒருவானங் கீழே…

திருக்குறள் அறுசொல் உரை : 117. படர் மெலிந்து இரங்கல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 116. பிரிவு ஆற்றாமை   தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் 15.கற்பு இயல்   படர் மெலிந்து இரங்கல் தலைவனது பிரிவுத் துயரால், தலைவி மெலிந்து வருந்துதல். (01-10 தலைவி சொல்லியவை) மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை, இறைப்பவர்க்(கு),       ஊற்றுநீர் போல மிகும். பிரிவுத் துயரத்தை மறைத்தாலும், இறைப்பார்க்கு ஊற்றுநீர்போல் மிகுமே! கரத்தலும் ஆற்றேன், இந் நோயை; நோய் செய்தார்க்(கு)       உரைத்தலும், நாணுத் தரும். மறைக்கவும், முடிய வில்லை; நோய்செய்தாரிடம் கூறவும், வெட்கம். காமமும், நாணும், உயிர்காவாத்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 47(2.17). செருக் கொழித்தல்

[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 46(2.16) – தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 47. செருக் கொழித்தல் செருக்கென் பதுதன் பெருக்கத் தகங்கொளல். செருக்கு என்பது தனது சிறப்புகளைத் தன் மனத்தில் பெருமையுடன் நினைப்பது ஆகும். அஃதறி யாமையி னங்குர மென்ப. அஃது அறியாமையின் அடிப்படை ஆகும். ஆன்ம வுயர்வினை யழிப்பதச் செருக்கு. ஆன்மா மேன்மை அடைந்து இறைநிலை அடைவதை செருக்கு தடுத்துவிடும். அடங்கா வுளத்தை யளிப்பதச் செருக்கு. செருக்கு எந்தக் கட்டுப்பாட்டையும் மீறச் செய்யும். அழியு முடம்பை யளிப்பது மஃதே. செருக்கினால் உடம்பின் அழிவும் ஏற்படும். செருக்கினர்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙீ] – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙி]  தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙீ] இதழாயுதம் ஏந்திய போராளி  போராளிப் பணி ஒரு துறையுடன் முடிவடைவதில்லை. போராளிக்கு ஓய்வேது? ஒழிவேது? பேராசிரியரும் கல்விநிலையம் சார்ந்த பணியுடன் நின்று விடவில்லை. இதழ்ப்பணி மூலமாகத் தம் தொண்டினைத் தமிழ் உலகம் முழுவதும் விரிவு படுத்தினார். தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக் கொண்டே தமிழைச் சிதைக்கும் பல அமைப்புகள்போன்ற ஒரு குழு (வட்டத்தொட்டி) நடத்திய கூட்டத்தில் ‘சங்க இலக்கியத்தைத் தூக்கி வங்கக் கடலில் எறிவோம்’என்று முழங்கினர். இதை அறிந்த பேராசிரியர் இலக்குவனார், தமிழ்…

கவிஞாயிறு தாராபாரதி 11 & 12 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 9 & 10 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 11 & 12   மண்ணதற்குள் அழிந்தொழியும் மனிதம் என்னும் மறைகின்ற இலக்கணத்தை மாற்றிக் காட்டு! திண்மையினைக் கொண்டுயர்ந்த திறனால் என்றும் திரும்பாத சரித்திரத்தில் திளைத்து வாழ்நீ! உண்மையிதே! உன்னளவில் உயர்வு வேண்டி உடைமைதேடி உலகுழல்தல் உயர்வே அன்று! திண்ணைதனை இடித்தங்கோர் தெருவை ஆக்கு! தெருவாங்கே விரியுமதில் தேசம் காண்பாய்! (11) பள்ளத்து மண்புழுவைப் பாம்பாய் மாற்றிப் படமெடுக்க வைக்குமவர் பாக்கள்! பூக்கள் அள்ளித்தான் அவர்தெளித்தார்! அனைத்தும் தீமை அழிப்பதற்காய்த் தீயுமிழும் நாக்கள்!…

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 9 & 10

[திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 7 & 8 தொடர்ச்சி)  : வெ. அரங்கராசன்]  திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 9 & 10 ஒன்பதாம் பாசுரம் திருக்குறள்-தமிழ்மறைநூல் மாலளந்தான் மூவடியால் ; முப்பாலன் ஈரடியால் ; ஞாலத் தெளிவூட்டும் நல்லறப்பா சாற்றுமுயர் சீலம் உணர்மாந்தர் தேசம் பலவாழ்வார் ; காலம் கடந்துய்யும் கன்னித் தமிழ்மறைநூல் ; மூலப் பிறப்பொக்கும் மண்ணிலே எவ்வுயிர்க்கும் வேலியின்றி வாழ வகுத்தவரே வள்ளுவர்காண் ! சாலப் பயன்ஈனும் தீங்குறளைச் சென்றோதக் காலைப் புனலாடிக் கைமலர்கொள், எம்பாவாய் ! பத்தாம் பாசுரம் சிலப்பதிகாரம்-முதல் காவியம் ஆன்ற…

திருக்குறள் அறுசொல் உரை: 116. பிரிவு ஆற்றாமை : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 115. அலர் அறிவுறுத்தல் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால்  15.கற்பு இயல்   பிரிவு ஆற்றாமை                             தலைவனது பிரிவைத் தாங்காது. தலைவி வருத்ததை வெளியிடல்              (01-10 தலைவி சொல்லியவை) செல்லாமை உண்டேல், எனக்(கு)உரை; மற்றுநின்       வல்வரவு, வாழ்வார்க்(கு) உரை. பிரியாமை உண்டேல் சொல்லு; பிரிவதை வாழ்வாரிடம் சொல்லு,   இன்கண் உடைத்(து),அவர் பார்வல்; பிரி(வு)அஞ்சும்       புன்கண் உடைத்(து)ஆல், புணர்வு. அவர்பார்வை, இனிது; நீள்கூடலோ, பிரிவு அச்சம் தருகிறது.   அரி(து)அரோ…

கம்பன் புகழைப் பாடு மனமே ! – அம்பாளடியாள்

கம்பன் புகழைப் பாடு மனமே !   கம்பன் வடித்தநற் காவியம் கேட்டாலே வம்பன் எனினும் வசப்படுவர் ! -செம்பொன் நிகர்த்த கவிதைகள் நெஞ்சுள்  இனிக்க விகர்ப்பம் தணியும் விரைந்து! விஞ்சும் தமிழால் வியந்திடச் செய்தவர் ! நெஞ்சும் உரைக்கும் நினைவாளர்!- அஞ்சாதே கம்பன் இருக்கக் கவலைகள் தாம்எதற்கு?! செம்பட்டுப் போன்றே செழிப்பு! அஞ்சும் மனத்தின் அவலம் குறைக்கவே கொஞ்சும் தமிழைக் குவித்தவர்! -நெஞ்சும் சுவைக்கும்  பொருளைச்  சுரந்தவர் கம்பர் ! அவைக்கும் அவரே அழகு ! பாட்டால்  உயிர்கொடுத்த பாவலர் !கம்பரே வாட்டம் தணிக்கவல்ல வாழ்வுமாவார்!- கேட்டாலே…

தமிழெனப் பொங்கிடு! – ப.கண்ணன்சேகர்

தமிழெனப் பொங்கிடு!   உழைத்திடப் பொங்கிடு!  உரிமைக்குப் பொங்கிடு உதவிடப் பொங்கிடு  ஊருக்குப் பொங்கிடு தழைத்திடப் பொங்கிடு  தமிழெனப் பொங்கிடு தருமத்தைப் பொங்கிடு  தளராது பொங்கிடு பிழையறப் பொங்கிடு  பெருமையாய்ப் பொங்கிடு பிணக்கிலாப் பொங்கிடு  பார்போற்றப் பொங்கிடு மழையெனப் பொங்கிடு  மலரெனப் பொங்கிடு மதமிலாப் பொங்கிடு  மனிதனாய்ப் பொங்கிடு இயற்கையோடு பொங்கிடு இரக்கதோடு பொங்கிடு இணக்கமெனப் பொங்கிடு  எழிலாகப் பொங்கிடு தயங்காமல் பொங்கிடு  தவறாது பொங்கிடு தடுக்காமல் பொங்கிடு  தணிந்திடப் பொங்கிடு வியந்திடப் பொங்கிடு  விடுதலைக்குப் பொங்கிடு வேளாண்மை பொங்கிடு  வெற்றியால் பொங்கிடு சுயமாகப்…

தகரக்குப்பிகளைக் கொண்டாடுவோர் சங்கம் – தமிழ்சிவா

தகரக்குப்பிகளைக் கொண்டாடுவோர் சங்கம்   பெரியாரே!  பெரியாரே! நீங்களோ ஓயாமல் படித்தீர்கள் ஆளும் உங்கள் சீட சிகாமணிகளோ ஓயாமல் நடிக்கிறார்கள். இது எந்தச் சித்தாந்தில் வரும்? முன்னணி  என்று பெயர் வைத்தவனெல்லாம் மானுட  இனத்தையே பின்னணிக்கு இழுக்கின்றான் இங்கே நந்தினிகள் மீண்டும் மீண்டும் கூட்டு வல்லுறவில் கொல்லப்படுகிறார்கள் ஏலம் விடப்பட்ட நீதிதேவதை பணக்காரர்கள் வீட்டில் பற்றுப் பாத்திரம் தேய்த்து ஈட்டிய வருமானத்தில் வாழ்க்கைப்படி(சீவனாம்சம்) கேட்டு வழக்குத் தொடுத்தாள்bgupah தள்ளித் தள்ளி வைக்கப்பட்டதில் வயதாகிப்போனதால் முதியோர் உதவித்தொகை கேட்டும் கையூட்டில்லாமல் கிடைக்காத நிலையில் சிலபல  ஆண்டுக்கு…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 46(2.16). துயி லொழித்தல்

[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 45(2.15) – தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 46. துயி லொழித்தல் உடம்புள வயர்வினை யொழிப்ப துறக்கம். உடலில் உள்ள களைப்பை நீக்குவது உறக்கம் ஆகும். அவ்வயர் வளவிற் கதிகமா வதுதுயில். அளவிற்கு அதிகமான உறக்கம் களைப்பை ஏற்படுத்தும். சுழுத்தியா முறக்கஞ் சுகத்தை வளர்க்கும். கனவுகள் அற்ற உறக்கம் ஆரோக்கியமான வாழ்வைத் தரும். கனவுக ளாந்துயில் கவலையை வளர்க்கும். கனவுகள் உடைய உறக்கம் நோயை ஏற்படுத்தும் 455.துயில்கொள வழிவாந் துயில்விட வாக்கமாம். அதிகமான உறக்கம் அழிவை ஏற்படுத்தும். அளவான உறக்கம் செல்வத்தைத் தரும்….