தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙி] – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙா) –தொடர்ச்சி)] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙி] 3. தமிழ்நலப் போராளி தொடர்ச்சி தமிழ்ப்பகைவர் என்போர் தமிழ்த்துறையுடன் தொடர்பற்றவர்கள் எனக் கருதினால் அதுவும் தவறாகும். எடுத்துக்காட்டிற்கு ஒன்று. திருநெல்வேலி ம.தி.தா.இந்துக் கல்லூரியில் பேராசிரியர் சேரும் முன்பு தமிழ் வகுப்பிலும் ஆங்கிலம்தான் தவழ்ந்தது. ஆங்கிலம் மூலம் தமிழை விளக்குவதில் பெருமை கண்டனர் தமிழ்த்துறையினர். ஆங்கிலத்தில் பேசுவதே தம் உயிர் மூச்சு எனக் கொண்டனர் அவர்கள். ஆனால் பேராசிரியர் அங்குத் தமிழ்த்துறைத் தலைவராகச் சென்ற பின்பு தமிழ்த்துறை மட்டுமல்ல கல்லூரியே தமிழ்மணத்தில் மணந்தது….
கொன்றவர் எவரும் வென்றதில்லை! – அம்பாளடியாள்
கொன்றவர் எவரும் வென்றதில்லை! மரண ஓலம் கேட்கிறதே! – எங்கள் மனத்தை அதுதான் தாக்கிறதே இரண்டுங் கெட்ட நிலையினிலே – எங்கள் இதயம் இங்கே துடிக்கிறதே! வெடி குண்டு வைத்துத் தாக்காதே விடியலை எங்கும் போக்காதே தீவிரவாதம் ஒழிக ஒழிகவென தீட்டிய பாக்களை வெறுக்காதே! குழந்தைகள் செல்லும் வண்டியில் கூடக் குண்டுகள் வைப்பதில் நியாயமென்ன? எதிரியைக் கொல்லும் கொலைவெறியதனால் எவரையும் அழிப்பதில் நீதி என்ன? மனித மனங்களில் வன்மங்கள்- இதை மாற்றிட வேண்டும் வாருங்கள்! உலகம் அழிவதைப் பாருங்கள்- இதை ஒவ்வொருவருமே உணருங்கள்! சங்கடம்…
கவிஞாயிறு தாராபாரதி 9 & 10 – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 7 & 8 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 9 & 10 பொய்யுரையை முதலீடாய்ப் போட்டு நாட்டின் பொதுசனத்தை விற்கின்ற புதிய சாதி! கையிரண்டு போதாது கயமைக் கென்றே கைந்நூறு வேண்டிவிழும் கடவுள் தாளில்! மெய்ந்நெறியை மறைத்துயர்தல் மேன்மை என்ற ‘மெய்ப்பொருளை’ அரசியலாய் விற்கும் கூட்டம்! செய்கையிலே தன்மானம் சிதைத்தோர் தம்மைச் சேர்த்தீன்ற கருப்பையும் சினந்து நாணும்! (9) வெறுங்கரங்கள் என்செய்யும்? வினவு வோர்க்கு, விரல்பத்தும் மூலதனம்! விளங்க வேண்டும்! நொறுங்கட்டும் மதிமயக்கும் நோயாம் சோம்பல்! நோகாமல் இலக்கடையும் நுட்பம்…
கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 7 & 8
(திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 5 & 6 தொடர்ச்சி) திருத்தமிழ்ப்பாவை 7 & 8 ஏழாம் பாசுரம் தமிழ் இலக்கிய வரலாறு பாட்டும், தொகையும், கணக்கும், நுதல்மீது தீட்டும் சமயமிரண் டூட்டும் இலக்கியமும், நாட்டும் பெருஞ்,சிறு நல்லணிஐங் காப்பியமும், வாட்டும்போர் பாடும் பரணியொடு, தூது,உலா கூட்டும் சுவைபிள்ளை, பள்ளு, கலம்பகமென் றேட்டில் புகழ்சிற் றிலக்கியமாய் ஏத்த,பிற நாட்டு மதநூல்கள், நல்லுரைகள், சொல்லெளிய பாட்டு, கவி, கூத்துதமிழ் போற்றடவா, எம்பாவாய்! எட்டாம் பாசுரம் தொல்காப்பியம் தமிழின் முதுகெலும்பு நூல் ! செந்தமிழின் தண்டெலும்பு தொல்காப்…
கற்பூரத் தட்டுக்குத் தமிழ் கற்றுத்தா! – தாராபாரதி
கற்பூரத் தட்டுக்குத் தமிழ் கற்றுத்தா! ‘வழிபாடு தமிழிலா? வரலாமா? – என்று மொழிபேதம் செய்து முட்டுக் கட்டை யிடுவார்! ஒதும்மந் திரத்தில் ஊனமா நம்மொழிக்கு? வேதம்என்ப தென்ன? வெளிச்ச மனம்தானே! திருக்கோயில் மணிஓங்கி தமிழ் பேசாதா? தேவாரத்தமிழ் இறைவன் செவி ஏறாதா? தாழ்திறவா மணிக்கதவும் தமிழ்கேட்டுத் திறந்ததே! வாய்திறவாத் தமிழனே வழியறியா மயக்கமென்ன? உண்மையில்நீ அஃறிணையா? ஒப்பனையால் உயர்திணையா? கண்ணிமைகடந்து கருமணி களவு போகிறதே! உள்ள எழுச்சியின்றி உறங்கும் தமிழனே பள்ளியறை பாசறையா? பாய்சுருட்டி வா!…
திருக்குறள் அறுசொல் உரை: 115. அலர் அறிவுறுத்தல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 114. நாணுத் துறவு உரைத்தல் : தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் 14. களவு இயல் அலர் அறிவுறுத்தல் தலைமக்களின் காதலை, ஊரார்அறிந்து பலவாறு பழிதூற்றல் (01-05 தலைவன் சொல்லியவை) அலர்எழ, ஆர்உயிர் நிற்கும், அதனைப் பலர்அறியார் பாக்கியத் தால். “பழிச்சொல்லால், உயிரும் நிற்கிறது; இதனை, ஊரார் அறியார்”. மலர்அன்ன கண்ணாள் அருமை அறியா(து), அலர்எமக்(கு) ஈந்த(து)இவ் ஊர். “குவளைமலர்க் கண்ணாள் அருமை அறியாது, பழிதூற்றுவார் ஊரார்”. உறாஅதோ ஊர்அறிந்த…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 45(2.15). மடி யொழித்தல்
[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 44(2.14) – தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 45. மடி யொழித்தல் மடிதஞ் செயல்களின் மந்த முறுதல். மடி என்பது செயல்களைச் செய்வதில் ஏற்படும் சோம்பல் ஆகும். மடிமெய்ம் முயற்சியின் மறுதலை ஆகும். மடி என்பது உடல் முயற்சியின் எதிர் நிலை ஆகும். அதாவது உடல் உழைப்பில் சுறுசுறுப்பற்ற தன்மை ஆகும். மடிதமை யொன்னார்க் கடிமைப் படுத்தும். மடி ஒருவனை அவனது பகைவர்களுக்கு அடிமையாக மற்றிவிடும் இயல்பு உடையது. மடியினை யுடையவர் குடியொடு கெடுவர். மடியுடையவன் தன் குடும்பத்தோடு அழியும் நிலை ஏற்படும்….
சல்லிகட்டுக்குத் தடையா? – ப.கண்ணன்சேகர்
சல்லிகட்டுக்குத் தடையா? சூரப்புலி பாய்ந்திடத் துரத்தினாள் முறத்தாலே சுவைத்தமிழ் இலக்கியம் வீரத்தை ஊட்டுமே! போரிடும் களத்திலே புறமுதுகைக் காட்டாத பெற்றமகன் வீரத்தைப் பெருமையெனக் காட்டுமே! வீரத்தமிழ் இனத்தினை விளையாட்டு பொம்மையென வேடிக்கை பார்த்திடும் வீணர்களின் கூட்டமே! ஓரவஞ்சச் செயலாலே ஒடுங்காது தமிழினம் வாக்களிக்கும் மக்களால் ஒடுங்கிடும் ஆட்டமே! ஏறுதழுவு விளையாட்டால் எங்களது வீரத்தை இவ்வுலகம் கண்டிட இரக்கமற்ற தடையேனோ? பேருபெற்ற தமிழரின் பாரம்பரிய விழாவினைக் கூறும்போடும் குரங்கெனக் கொள்கையே முறைதானோ? வேருவிட்ட ஆர்ப்பாட்டம் வீழ்த்திட நினைப்பது வீட்டுக்குள் அணுகுண்டு வைப்பதும் சரிதானோ! ஊருக்கு ஊரெலாம்…
கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை:பாசுரங்கள் 5& 6
திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 5& 6 ஐந்தாம் பாசுரம் தமிழ்மொழி மூலமறியா இறைபோல ! தானுணரா, பேசும் தமிழ்க்கூட்டம் தானுணரா வானுணரா, வையம் உணரா, தமிழவளை ஈன்றவர்தாம் யாரென்றும், என்றுயிர்த்தாள் என்றும், ஊன்றியா ராய்ந்தும் உணர்ந்தறியாத் தன்மையளாய்த், தோன்றறியா ஞானியாய்த் தோன்றும் இறையொப்ப, ஆன்ற பெருங்குழாத்திற் கன்னையளாய்ப், பன்மொழிகள் ஈன்றவளாய், நேரிலளாய், இன்பம் தருவாளின் கோன்மை இசைத்திடவா கோதையே, எம்பாவாய் ! ஆறாம் பாசுரம் தமிழின் பெருஞ்சிறப்பு ‘ ழ ‘ ழகரத் திருவெழுத்து ஏழிசைக்கு நேராய் ; நிகராய்ப் பிறமொழியில் நின்றிழைதல் காணார் ;…
வாழ்ந்து காட்ட வேண்டும்! – அம்பாளடியாள்
வாழ்ந்து காட்ட வேண்டும்! வலிமையுள்ள மனிதனாக வாழ்ந்து காட்ட வேண்டும் ! எளிமையான வாழ்வுக்கே இடமளிக்க வேண்டும்! தனிமையிலும் இனிமை காண தன்னடக்கம் வேண்டும் ! தரணியெல்லாம் போற்றும் வகை தயவு நெஞ்சில் வேண்டும்! கலியுகத்தின் போக்கை மாற்ற கருணை தம்முள் வேண்டும் ! கடவுள் என்றும் கொண்டாட கடமை உணர்தல் வேண்டும் ! பழியுணர்வை போக்க வல்ல பாசம் இங்கே வேண்டும் ! பகைவரையும் மன்னிக்கும் பக்குவமும் வேண்டும் ! மனித குலம் உயிரினத்தை மதித்து வாழ வேண்டும்! மரணம் வரும் என்ற…
கவிஞாயிறு தாராபாரதி 7 & 8 – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 5 & 6 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 7 & 8 சாதியெனும் அமைப்புகளேன்? சங்கம் வைத்துச் சந்தையென மனிதரையேன் தரம் பிரித்தாய்? போதைநிலைப் பொய்க்கணக்கின் போக்கில் இன்று பொதுநிலையே மனக்கணக்காய் போன திங்கு! தீதெனினும் தொடர்கின்ற தீயாய்ச் சாதி! தேசத்தின் கறையிவைதான்! தெரிந்தி வற்றை வீதியிலே தூக்கியெறி! மெய்யாய் நல்ல வேள்விக்கோர் தேதிகுறி! விடியும் என்றார்! (7) மண்புழுவாய்ப் பிறந்திருந்தால் மண்ணைத் தின்னும் மந்திரம்தான் தெரிந்திருக்கும்; மனிதர்க் கெங்கே? எண்ணளவில் அதிகரிக்கும் ஏழை மக்கள்! இதைத்தானா சுதந்திரத்தின்…
தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்த தமிழே! – தேவநேயப் பாவாணர்
தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்த தமிழே! – தேவநேயப் பாவாணர் [‘மருவே செறித்த’ என்ற திருப்புகழ் மெட்டு தனனா தனந்த தனனா தனந்த தனனா தனந்த தனதான என்ற வண்ணம்] தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்து தரைமீது தனியே விரிந்து கவையே பிரிந்து கிளையே திரிந்து பலவாக முனிவோர் மொழிந்து முனமே திருந்தி முதனூ லெழுந்த மொழியாகி முருகால் நடந்த சவைமீ தமர்ந்து முகைவாய் மலர்ந்த தமிழாயே கனியா யருந்து முனையே மிகுந்து பயிலா மலுந்தன்…
