தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாஙா] – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாங] – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாஙா] – 3. தமிழ்நலப் போராளி – தொடர்ச்சி பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் பேராசிரியர் இலக்குவனாரும் தமிழ் காக்கும் எண்ணங்களில் ஒன்றுபட்டவர்கள். பாவேந்தரின் தமிழியக்க எண்ணங்களுக்கு வடிவம் தந்தவர் பேராசிரியர்; பாவேந்தர் வகுத்த தமிழ்ப்போராளி இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் எனத் தமிழ் உணர்வாளர்கள் உரைப்பர். அதே நேரம் மூத்த தலைமுறையினர் பேராசிரியரின் வாழ்வுப்பாதையைக் குறியீடாகக் கொண்டு தமிழ்உணர்வுப் பாடல்களைப் படைத்தவர் பாவேந்தர் என்பர். இரண்டிலும் உண்மைகள் உள எனவும் ஆன்றோர் எண்ணத்தால்…
வேதம் தமிழிலுண்டு! – கவிஞாயிறு தாராபாரதி
வேதம் தமிழிலுண்டு! – கவிஞாயிறு தாராபாரதி தாயின் கருவறையில் தான்படித்த செந்தமிழைக் கோயில் கருவறைக்குள் கொண்டுசெல்ல முடியாதா? பொன்னியில் குளித்த புனிதத் திருமொழியைச் சன்னதியில் பாடினால் சாமிக்கா தீட்டுவரும்? தேவாரம் பிரபந்தம் திருவாசகம் அருட்பா நாவாரப் பாடினால் நாதன் செவி கேளாதா? தமிழறியும் பெருமாளும் தமிழ்க் கடவுள் முருகனும் அமுதத் தமிழ்கேட்டால் ஆசிதர மறுப்பாரா? சொற்றமிழால் பாடென்று சுந்தரனை வேண்டிநின்ற நெற்றிக்கண் ஈசனது நேயர் விருப்பம் எது? ஒதும் மந்திரங்கள் உண்டெந்தன் தாய்மொழியில்; வேதம் தமிழிலுண்டு!…
கவிஞர் வேணு.குணசேகரன் மங்காத மாக்கவிதை நூல் செய்தார்! – சிவ.சூரிய நாராயணன்
கவிஞர் வேணு.குணசேகரன் மங்காத மாக்கவிதை நூல் செய்தார்! கூடல் திருநகரில் கூடிக் களித்திருந்த பாடல் தொழில்செய்யும் பைந்தமிழ்ச் சங்கத்தார் ஏடுதனில் உள்ளம்மை ஈதென்ன விந்தையென்றே ஈடில் மொழியம்மை இன்னமுத ஊற்றம்மை கேடில் விழுச்செல்வம் கேளாது தந்தம்மை வாடும் களித்தே குணசே கரன்தன்னைப் கூடிக் களித்தே குணசே கரன்தன்னைப் பாடிடச் சொன்னாயே பாட்டேலோர் எம்பாவாய் ! அன்னை இடம்வைத்த ஆலங் குடியானை மின்னும் பிறையானை விண்ணின் நதியானை முன்னைப் பழம்பொருளை முத்துக் கவித்தமிழில் கன்னற் கிணையாக்க் கள்ளின் சுவையாகத் தன்னிகர் இல்லாத தன்மைத்தாய்த் தந்தாரே மன்னும்…
திருக்குறள் அறுசொல் உரை: 114. நாணுத் துறவு உரைத்தல்: வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 113. காதல் சிறப்பு உரைத்தல் : தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் நாணுத் துறவு உரைத்தல் காதலர் தம்தம் காதல் மிகுதியை வெட்கம்விட்டு மொழிதல் (01-07 தலைவன் சொல்லியவை) 1131 காமம் உழந்து வருந்தினார்(கு), ஏமம், மடல்அல்ல(து) இல்லை வலி. “காதல் வெல்ல, மடல்குதிரை ஏறுதல்தான் மிகநல்ல வழி”. நோனா உடம்பும், உயிரும் மடல்ஏறும், நாணினை நீக்கி நிறுத்து. “காதல்துயர் பொறாத…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 44(2.14). மறவி யொழித்தல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 43(2.13) – தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 44. மறவி யொழித்தல் மறவிதன் கடமையை மனத்திலுன் னாமை. மறவி என்பது தன் கடமையைப் பற்றி மனத்தினில் எண்ணாது இருத்தல் ஆகும். மறவியூக் கத்தின் மறுதலை யாகும். மறவி ஊக்கத்தின் எதிர் நிலை ஆகும். அதாவது உயர்வு பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமை ஆகும். மறவி பலவகை யிறவையு நல்கும். மறவி பல குற்றங்களை தரும் இயல்பு உடையது ஆகும். மறவியை யடுத்தவர் மாண்பெலா மிழப்பர். மறவி என்ற குறையை உடையவர்கள் அவர்களது…
கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை:பாசுரங்கள் 3 & 4
(திருத்தமிழ்ப்பாவை – பாசுரங்கள் 1 & 2 :தொடர்ச்சி) திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 3&4 மூன்றாம் பாசுரம் தமிழின் உடலும் உயிரும் ஓங்கு பெருஞ்சக்தி உள்ளுறை அங்கமெனத் தாங்கும் இருநூற்று நான்பத்தின் ஏழெழுத்து; தூங்காப் புலன்மிக்கார் சூத்திரமாய்ச் செய்தவுயிர்; மூங்கில் குழலோசை மேவுகிற செம்மொழியாள்! நீங்கா இயற்கைபோல் நீணிலத்தில் வாழும்தாய்! ஈங்கவள் நல்லருளை ஏற்பதற்கு வான்மீது வீங்கொளியன் ஏகுமுன், நாம்விரைவோம்; ஆங்காலம் தூங்காது வம்மின் தொடியணிந்தே, எம்பாவாய்! நான்காம் பாசுரம் சங்கம் வளர்த்த மொழி வில்லார், புலியார், கயலார் முடிவேந்தர் வெல்வார் செருக்களத்து…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாங] – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙௌ] – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாங] 3. தமிழ்நலப் போராளி (தொடர்ச்சி) “போக்குவரத்து வசதி குறைந்திருந்த அந்நாட்களில் படிப்பறிவுற்றோர் குறைந்திருந்த மன்பதைச் சூழலில் கல்லூரிப் பணியாற்றியதே போதும் என நிறைவடைந்துவிடாமல் ஊர் ஊராகச் சென்று சங்க இலக்கியச் சொற்பொழிவு ஆற்றிய இலக்குவனாரின் தமிழ்த்தொண்டு தன்னிகரற்றது. சொற்பொழிவாற்றினார் எனக் கூறுவதைக் காட்டிலும் தமிழ்மொழி, தமிழின மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார் என்றே கூறவேண்டும்.” (பேராசிரியர் டாக்டர் சி.இலக்குவனார் மொழிப்போர் தந்தை – ஓர் ஆய்வு : பக்கம்23-24) …
கவிஞாயிறு தாராபாரதி 5 & 6 – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 3 & 4 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 5 & 6 அல்லுலகை ஆள்கின்ற அந்தப் போதில் ஆதவன்காண் கிழக்கிந்த அன்னை பூமி! புல்வெளியைப் பூக்காடாய்ப் புதுக்கி எங்கும் புன்னகையைப் புழங்கவிட்ட புதுமை தேசம்! சொல்லுலவுங் கவிபடைத்துச் சொந்த நாட்டின் தூய்நெறியைத் தீந்தமிழால் சொல்லிச் செல்வோர் நல்லுலகில் அன்றமைந்த நாற்றங் காலாய் நடைபயின்ற பாரதத்தை நயந்து நின்றார்! (5) சேய்மையதும் அண்மையதும் தொலைந்தே ஒன்று செய்வினையைச் செயப்பாட்டு வினையைச் செய்தார்! தாய்மையெனத் தமிழ்மொழியின் தன்மை தன்னைத் தமதாக்கி முன்னிலையில்…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 7/7: இலக்குவனார் திருவள்ளுவன்
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 6/7: தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 7/7 “தொல்காப்பிய ஆராய்ச்சியில் இலக்குவனாரின் உட்பொருள் விளக்கம்” குறித்து, முனைவர் உ.அலிபாவா உவகையுடன் உரைக்கிறார்; தமிழின்மீது, தமிழ்மக்கள்மீது, தமிழ் நாகரிகத்தின்மீது உயரிய மதிப்பினை ஏற்படுத்தும் வண்ணம் இலக்குவனாரின் ஆய்வுரைகள் அமைந்துள்ளன என்கிறார்; தொல்காப்பியத்தைத் தமிழ்மரபு நெறியில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்; தொல்காப்பியம் மூலம் அறியலாகும் பல்துறை அறிவைப் புலப்படுத்தியவர்;…
உள்ளமெல்லாம் தமிழுணர்வு பொங்கச் செய்யும் உயரியநூல் திருத்தமிழ்ப்பாவை – மறைமலை இலக்குவனார் அணிந்துரை
உள்ளமெல்லாம் தமிழுணர்வு பொங்கச் செய்யும் உயரியநூல் திருத்தமிழ்ப்பாவை – அணிந்துரை வெல்க தமிழ்! பாவலர் வேணு.குணசேகரன் அவர்கள் இயற்றிய ‘திருத்தமிழ்ப்பாவை’ உங்கள் கைகளில் தவழ்கிறது. திருமாலைத் தொழுது ஏத்தும் இறைபடியார்க்குத் ‘திருப்பாவை’ எத்துணைச் சிறப்பு வாய்ந்ததோ, சிவபெருமானை வழுத்தும் இறையன்பர்க்குத் ‘திருவெம்பாவை’ எவ்வளவு சிறப்பு மிக்கதோ, அவ்வளவு சிறப்பும் சீர்மையும் கொண்டதாகத் தமிழன்பர் அனைவரும் கொண்டாட வேண்டிய நூல் இந்தத் ’திருத்தமிழ்ப்பாவை’ என்பதனை இந்நூல் கற்று முடிந்தவுடன் நீங்கள் உணர்வீர்கள். இன்றைய காலச்சூழல் ஒரு விந்தையான சூழல் என்பதனைத்…
உழவனைக் கொன்றுவிட்டு உழவர் திருநாள்! – தஞ்சாவூரான்
உழவனைக் கொன்றுவிட்டு உழவர் திருநாள்! உழவனைக் கொன்றுவிட்டு உழவர் திருநாள்! எழவு வீட்டில் எதற்கு விழா? நிலம் வெடிக்கும் போதெல்லாம் நெஞ்சு வெடிக்கும் உழவனை உங்களுக்குத் தெரியுமா? மண்ணை நேசித்தவனை மரணத்தை யாசிக்க வைத்துவிட்டோம் விடிய, விடிய அவன் உழுதது உங்களுக்காகத்தான் இன்று விடமருந்தி நிலம் விழுந்ததும் உங்களுக்காகத்தான் இதுநாள் வரை உழவின் சிறப்பைக் கொண்டாடிய நாம் இன்று உழவனின் இறப்பைக் கொண்டாடத் தயாராகிவிட்டோம் நீங்கள் பொங்கும் பொங்கலில் தளும்புவது அரிசியல்ல… ஒரு ஏழை விவசாயியின்…
தலைவன் தேரின் ஒலி வருகையே புத்தாண்டு வருகை – உருத்திரா இ பரமசிவன்
தலைவன் தேரின் ஒலி வருகையே புத்தாண்டு வருகை கல் பொருதிறங்கும் மல்லல் யாறு புல் தடவி பூக்கள் வருடி நறவம் தூஉய் பல்லிணர்ப் பரவி வள்ளி படர்ந்த வளமண் பொள்ளி புடை யுடுத்த மன்றுகள் ஆக்கி வேங்கை படுத்த வேங்கை வெரூஉய் பெயரும் காட்சியும் மலியும். அற்றை வானின் அகல்வாய் திங்கள் ஒளியுமிழ் காலை வருவாய் என்ன விழிஅவிழ் குவளை விரியாநின்று நோதல் யான் உற்றது அறிவையோ வாடிய காந்தள் அன்ன ஊழியும் கொடுவிரல் நுடங்கி வீழ்ந்ததும் அறிவையோ. வளி அவி அடவி…
