வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 43(2.13) 43. நெடுநீ ரொழித்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 42(2.12) – தொடர்ச்சி)   மெய்யறம் இல்வாழ்வியல் 43. நெடுநீ ரொழித்தல்     421.நெடுநீர் கால நீள விடுதல்; நெடுநீர் என்பது ஒரு செயலைச் செய்வதைத் தாமதித்தல்; ஒருகணச் செயலைமற் றொன்றற் கீதல். மேலும் ஒரு செயலை செய்ய வேண்டிய காலத்துக்கும் அதிகமாகக் காலம் எடுத்துச் செய்தல் ஆகியவை ஆகும். நெடுநீர் குறைபல தருமியல் புடையது. கால தாமதம் நமது செயல்களில் பல குறைகளை ஏற்படுத்தும் இயல்பு உடையது. நெடுநீர் சிறிதுறி னடுமதூஉம் பெருகி. கால தாமதம் நாளடைவில் ஒரு…

திருக்குறள் அறுசொல் உரை: 113. காதல் சிறப்பு உரைத்தல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 112. நலம் புனைந்து உரைத்தல்  – தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் 113.  காதல் சிறப்பு உரைத்தல் தகுதலைவனும், தலைவியும், தம்தம் மிகுகாதல் சிறப்பை உரைத்தல்.       (01-05 தலைவன் சொல்லியவை) பாலொடு தேன்கலந்(து) அற்றே, பணிமொழி            வால்எயி(று)  ஊறிய நீர்.        “பணிவு மொழியாளின் வாய்ஊறல்,          பால்,தேன் கலவைபோல் இனிக்கும்.” உடம்பொ(டு) உயிர்இடை என்ன, மற்(று) அன்ன,       மடந்தையொ(டு) எம்இடை நட்பு.      “உடம்புக்கும்,…

பொங்கட்டும் பொங்கல்! – இலக்குவனார் திருவள்ளுவன்

பொங்கட்டும்  பொங்கல்!    உழவர்  திருநாள் உழைப்போர் திருநாள் உரிமைத் திருநாள் உவகைத் திருநாள்   வந்தது இன்று நொந்தது உள்ளம்   உழைப்பை மறந்தோம் உரிமை இழந்தோம் உவகை தொலைத்தோம் உண்மை உணர்ந்திலோம்!   மொழியைத் தொலைக்கிறோம் இனத்தை அழிக்கிறோம் துன்பத்தை மறைக்கிறோம் இன்பத்தில் உழல்கிறோம்!   தீரட்டும் துன்பம்! மலரட்டும் ஈழம்! பெருகட்டும் இன்பம்! வெல்லட்டும் தமிழியம்!   பொங்கட்டும்  பொங்கல்! தங்கட்டும் மகிழ்ச்சி!   அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்  

தை மகளே! தமிழியத்தால் தகர்ப்போம் பகையை! – எழில்.இளங்கோவன்

தை மகளே! தமிழியத்தால் தகர்ப்போம் பகையை!    கீழ்வானக் கடல்முதுகில் கிளம்பும் நெருப்புக் கோளத்தின் கதிர்விரியக் கிழக்கு திக்கும்! ஆழ்கடலின் முத்துகள் ஆடும் கொற்கை அரியணையில் தமிழ்வீற்று ஆளும் கூடல்! வாள்பறக்கும் படைகிளம்பும் வெண்ணி தொட்டு வான்முட்டும் இமயத்தை வாளால் தொட்டார்! தாள்தொட்டார் இல்லையெனத் தமிழர் கூட்டம் தோள்தொட்டார்; தைப்பாவாய் தோளே தொட்டார்!   ஆரியத்தால் வீழ்ந்தோம்நாம்! அன்று சொன்ன ஆதிவேதம் புராணக்கதை அங்கே வீழ்ந்தோம்! போரிட்டால் வென்றிருப்போம்; பூனூல் தொட்டுப் பேரமைச்சே! இராசகுரு! போற்றி என்று வேரற்ற மரம்போல வீழ்ந்தோம் அங்கும்! வகுத்துரைத்தான் நால்வருணம் வீழ்ந்தோம் அன்றும்! தாருற்ற தைப்பாவாய் தோல்வி யில்லை திராவிடத்தால் எழுகின்றோம் தோற்ப தில்லை!   திராவிடத்தால் எழுந்தோம்நாம் தேட்டை செய்யும் தறுக்கரைநாம் திராவிடத்தால் தள்ளி வைத்தோம்! “ஆரடாநீ சாதிசொல்ல? அற்ப மூடன் ஆரடாநீ பெண்ணினத்தை அடிமை யாக்க? ஆரடாநீ மனுவாதி? அவனின் நூலை அனலிட்டுக் கொளுத்துங்கள்; அறிவும் மானம் தேறப்பா” ஈரோட்டில் தெறித்தார் தந்தை தைமகளே தமிழியத்தால் தகர்ப்போம் பகையை!   தமிழியம்தான் ஆரியத்தைத் தோற்க டிக்கும் தமிழியமே ஆரியமாய்த் தோன்றா மட்டும்! தமிழகத்தில் மதவாதத் தலைமைக் காகத் தமிழரிடம் சாதிவெறி தலைவி ரிக்க இமைகொட்டா விதைக்கிறது இந்துக் கூட்டம்; எதிர்த்திடுவோம்! பெரியாரின் இடது சாரித் தமிழியம்தான் பெருநெருப்பு; தமிழர் மானம்! தைப்பெண்ணே! தமிழ்க்கண்ணே! தமிழால் வாழ்த்து!   வாமகளே தைப்பாவாய் வா!வா! உன்னை வாழ்த்துகின்ற தமிழரைநீ வந்து வாழ்த்து! மாமகளே! தமிழ்ப்பிறப்பே! மலர்கண் தேனே! மாவிலையும் செங்கரும்பும் மழலைக் கூத்தும் கோமகளின் வளையிசையில் குலுங்க; வாசல் கோலத்தில் புதுப்பானை; கொதிக்கும் பொங்கல்; வாமகளே தைப்பாவாய்! வந்து வாழ்த்து! வளம்பெருக நலம்சிறக்க வாழ்த்து பாவாய்!   எழில்.இளங்கோவன்

தாயே, தமிழே! – தாராபாரதி

தாயே, தமிழே!   நினைவாலும் கனவாலும் எனையாளும் தமிழ் மகளே! திணைமாவைவிட இனிக்கும் தேமாவும் புளிமாவும் பனையோலை யில்கண்டு பதநீர் குடித்தவளே! உயிரே! மெய்யே! உயிர்மெய்யாய் இருப்பவளே! தமிழே, உனக்கு உயிர் – மெய்யாய் இருக்கிறதா? குற்றுயிராய்க் கிடப்பவளே ஊசலாடும் குறையுயிரில் வாழ்பவளே சிற்றுயிரைத் தந்துன்னை எழுப்புதற்கு சிலிர்த்திருக்கும் உன் மக்கள் சிறுத்தைக் கூட்டம்! – கவிஞர் தாராபாரதி

திருக்குறள் அறுசொல் உரை: 112. நலம் புனைந்து உரைத்தல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 111. புணர்ச்சி மகிழ்தல்: வெ. அரங்கராசன் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் 112.நலம் புனைந்து உரைத்தல்   தலைவியின் நலம்மிகு அழகைத்,  தலைவன்  மகிழ்ந்து பாராட்டியது.         (01-10 தலைவன் சொல்லியவை) “நல்நீரை வாழி, அனிச்சமே! நின்னினும்,       மெல்நீரள் யாம்வீழ் பவள்”.   “மெல்லிய அனிச்சப்பூவே! என்னவள்          மெல்லியவள், உன்னைக் காட்டிலும்”. மலர்காணின் மையாத்தி நெஞ்சே! இவள்கண்,       பலர்காணும் பூஒக்கும் என்று.       “மனமே! இவள்கண், பலர்காணும்…

கவிஞாயிறு தாராபாரதி 3 & 4 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 1 & 2 –  தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 3 & 4  பாடுகின்ற பழக்கமுண்டு; பாட்டில் கீழோர்ப் பாடுகளைப் பகர்வதுண்டு; பழமை எண்ணம் சாடுகின்ற வழக்கமுண்டு; சாதிப் பூசல் தனையெதிர்க்கும் நெஞ்சமுண்டு; சமத்து வத்தைத் தேடுகின்ற தாகமுண்டு; சிறப்பாய்ப் பெண்டிர் சேமமுறச் சிந்தையுண்டு; செயலில் தூய்மை நாடுகின்ற நேர்மையுண்டு; நலிந்தோர் வாழ்வில் நலம்சேர விழைவதுண்டு; நியாயம் உண்டு! (3) துண்டமிலாச் சமுதாயம் தொடங்க வேண்டி, செந்தமிழா! ஒருவார்த்தை செப்பிச் சென்றார்! கண்டதெலாம் அறிவியலால் கணக்கால் ஆயக் கைப்பிடிக்குள் அடங்குமவை காண்போம்;…

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 6/7: இலக்குவனார் திருவள்ளுவன்

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 5/7 : தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 6/7     “பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ்ப்பணி” குறித்து முனைவர் சி.சுந்தரேசன் போற்றியுள்ளார்; பேராசிரியராக, நூலாசிரியராக, இதழாசிரியராக, மரபுக்கவிஞராக, களப்போராளியாக எனப் பலவகையிலும் செம்மாந்து வாழ்ந்து தொண்டாற்றியமையைச் சான்றுகளுடன் விரிவாக விளக்கியுள்ளார்; கவிதைகளில் சமூக அங்கதம் காணப்படுவது, மணமானவர்தான் குடும்ப விளக்கு பாடம் நடத்த வேண்டும் என்ற பாவேந்தர் பாரதிதாசனை உடன் மறுத்த…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 42(2.12).வெண்மை யொழித்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 41(2.11) – தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 42(2.12).வெண்மை யொழித்தல்   வெண்மை யறிவினை விடுத்த தன்மை; வெண்மை என்பது அறிவினை விடுத்த தன்மை; ஒண்மை யுடையமென் றுளத்தொடு செருக்கல்; மேலும் ஒருவன் தான் அறிவுடையவன் என்று கர்வத்தோடு எண்ணுதல்; ஈயவேண் டியவிடத் தீயா திவறல்; மேலும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய சமயத்தில் கொடுக்காமல் கருமியாக இருத்தல்; குற்றம் பலவுஞ் சுற்றமாக் கொள்ளல்; மேலும் தவறு செய்பவர்களை நெருங்கிய உறவினராகக் கொள்ளுதல்; கற்றில கற்றவாக் காட்டி நடித்தல்; மேலும் தாம் படிக்காத நூல்களைப்…

திருத்தமிழ்ப்பாவை – மின்னூர் சீனிவாசன் அணிந்துரை

கவிஞர் வேணு. குணசேகரன் இயற்றிய திருத்தமிழ்ப்பாவை  பாசுரப் பாவலரின் வெற்றிப் படைப்பு     தமிழ்த்தாய் விழைந்த வண்ணமும் கட்டளைப் படியும் ‘திருத் தமிழ்ப்பாவை’ உருவாக்கப் பட்டதாய் நூலாசிரியர் கவிஞர் வேணு. குணசேகரன் உரைத்து, நேயர் கரங்களில் அதனைத் தவழவிடுகிறார்.   நாம் பனுவலைப் பயின்றோம், பாசுரங்கள் பொற்புச் சரங்கள், பொற்பூச் சரங்கள் என அமைந்து வியப்பு நல்குகின்றன.   சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் முக்கால நோக்குடன் – பண்பாட்டு நிலை, இலக்கியச் சால்பு, வருங்காலக் கனவும் திட்டமும் ஆகிய திறம் அமையப்…

‘ திருத்தமிழ்ப்பாவை’ – பாசுரங்கள் 1 & 2 : வேணு குணசேகரன்

(திருத்தமிழ்ப்பாவை : இறைவணக்கமும் தமிழ் வணக்கமும் தொடர்ச்சி) ‘ திருத்தமிழ்ப்பாவை’ – பாசுரங்கள் 1 & 2 : முதல் பாசுரம் அச்செல்வி பற்றி அணிந்துரையான் செய்வேன் காண்! உச்சித் தலைமுதலாய் உள்ளங்கால் மட்டுமெழில் மெச்சி வியக்குமொரு மாண்புடைய மூதாட்டி; இச்சையுற வைக்கும் இளங்கன்னி; விண்ணுலகத் தச்சன்மயன் செய்த சிலையாள்; விழிமயங்கும் பச்சைவயல்; செங்கரும்புப் பால்சுவையாள்; சொல்லினியாள்! நச்சினார் ஏத்தும் ‘திருத்தமிழ்ப் பாவை’யினை மெச்சிப் புகழ்பாடக் கண்திறவாய், எம்பாவாய்! இரண்டாம் பாசுரம் அண்டம்சூழ் அன்னைத்தமிழ் உலகுவப்ப, ஓர்நிரைச்சொல் ஒண்டமிழ்ப்பேர் பூண்டு, நிலவுவெளி அண்டம் நிரப்ப,ஊற்…

திருத்தமிழ்ப்பாவை : இறைவணக்கமும் தமிழ் வணக்கமும் – வேணு குணசேகரன்

திருத்தமிழ்ப்பாவை தமிழ்த்தாயின் கட்டளை ஏற்றுத் ‘ திருத்தமிழ்ப்பாவை’ பாடினேன் கவிஞர் வேணு குணசேகரன் தமிழ்த்தாய் தைத்திங்கள் பிறக்குமுன் எமக்கொரு கட்டளை இட்டாள். அந்தக் கட்டளையை எம்மால் முதலில் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு எமது சிற்றறிவே காரணம்.  மார்கழியில் வைணவர்கள் திருப்பாவையையும், சைவர்கள் திருவெம்பாவையையும் ஓதி மகிழ்வதுபோலத் தமிழ்த்தாயும் தமக்கென ஒன்றைச் செய்யுமாறு பணித்திருக்கும் அந்த நுண்ணிய கட்டளையை அவளருளாலே பின்னர்ப் புரிந்து கொண்டேன். ஆயின் அது எம்மால் இயலுமா என்று கொஞ்சம்கூடச் சிந்திக்கவில்லை.   மாறாகத், திருப்பாவை, திருவெம்பாவைப் பாசுரங்களைப்போல, அவள்…