‘ திருத்தமிழ்ப்பாவை’ – பாசுரங்கள் 1 & 2 : வேணு குணசேகரன்
(திருத்தமிழ்ப்பாவை : இறைவணக்கமும் தமிழ் வணக்கமும் தொடர்ச்சி) ‘ திருத்தமிழ்ப்பாவை’ – பாசுரங்கள் 1 & 2 : முதல் பாசுரம் அச்செல்வி பற்றி அணிந்துரையான் செய்வேன் காண்! உச்சித் தலைமுதலாய் உள்ளங்கால் மட்டுமெழில் மெச்சி வியக்குமொரு மாண்புடைய மூதாட்டி; இச்சையுற வைக்கும் இளங்கன்னி; விண்ணுலகத் தச்சன்மயன் செய்த சிலையாள்; விழிமயங்கும் பச்சைவயல்; செங்கரும்புப் பால்சுவையாள்; சொல்லினியாள்! நச்சினார் ஏத்தும் ‘திருத்தமிழ்ப் பாவை’யினை மெச்சிப் புகழ்பாடக் கண்திறவாய், எம்பாவாய்! இரண்டாம் பாசுரம் அண்டம்சூழ் அன்னைத்தமிழ் உலகுவப்ப, ஓர்நிரைச்சொல் ஒண்டமிழ்ப்பேர் பூண்டு, நிலவுவெளி அண்டம் நிரப்ப,ஊற்…
திருத்தமிழ்ப்பாவை : இறைவணக்கமும் தமிழ் வணக்கமும் – வேணு குணசேகரன்
திருத்தமிழ்ப்பாவை தமிழ்த்தாயின் கட்டளை ஏற்றுத் ‘ திருத்தமிழ்ப்பாவை’ பாடினேன் கவிஞர் வேணு குணசேகரன் தமிழ்த்தாய் தைத்திங்கள் பிறக்குமுன் எமக்கொரு கட்டளை இட்டாள். அந்தக் கட்டளையை எம்மால் முதலில் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு எமது சிற்றறிவே காரணம். மார்கழியில் வைணவர்கள் திருப்பாவையையும், சைவர்கள் திருவெம்பாவையையும் ஓதி மகிழ்வதுபோலத் தமிழ்த்தாயும் தமக்கென ஒன்றைச் செய்யுமாறு பணித்திருக்கும் அந்த நுண்ணிய கட்டளையை அவளருளாலே பின்னர்ப் புரிந்து கொண்டேன். ஆயின் அது எம்மால் இயலுமா என்று கொஞ்சம்கூடச் சிந்திக்கவில்லை. மாறாகத், திருப்பாவை, திருவெம்பாவைப் பாசுரங்களைப்போல, அவள்…
மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 6/6
(மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 5/6 தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 6/6 உண்மை கூறா உலகில் வாழ்வது அம்ம கொடிது; அன்றியும் மாணவ! சொல்வ தொன்று; செய்வ தொன்று வீட்டில் ஒன்று; வெளியில் ஒன்று; 165 கண்டால் ஒன்று; சென்றால் ஒன்று; நேர்மையும் இன்று; நிலையும் இன்று; அழுக்கா றென்ற ஆழ்கடல் உண்டே; அவாவெனும் கொடிய அராவும் உண்டே; வெகுளி யென்ற வெந்தீ உண்டே 170 இன்னாச் சொல்எனும் ஈட்டியும் உண்டே தன்னலம் என்ற தாக்கணங்…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 41(2.11) பேதைமை யொழித்தல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 40(2.10) தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 41(2.11) பேதைமை யொழித்தல் 401.பேதைமை யேதங்கொண் டூதியம் விடுதல்; பேதைமை என்பது ஒருவன் தனக்குக் கேடு தரும் பண்புகளைப் பின்பற்றி நன்மை தரும் பண்புகளை விட்டுவிடுதல்; கடிந்தவை தம்பால் காதன்மை செய்தல்; மேலும் பெரியோரால் விலக்கப்பட்ட செயல்களை விரும்பி செய்தல்; நாணன் பருள்புகழ் பேணுத லின்மை; மேலும் பழிச் சொல்லுக்கு வெட்கப்படாமை, அன்பு இல்லாமை, அருள் இல்லாமை, புகழ் தரக்கூடிய நல்ல செயல்களைச் செய்யாமை; அறிந்துணர்ந் துரைத்து மடங்கா தொழுகல்; அரிய நூல்களைக் கற்று உணர்ந்து…
மண்ணினையும் மாண்பினையும் காக்க வேண்டும்! – தாமோதரன் கபாலி
மண்ணினையும் மாண்பினையும் காக்க வேண்டும்! உண்பதுவும் உறங்குவதும் வாழ்க்கை யல்ல! உடமைகளும் உரிமைகளும் இழக்க வல்ல! உண்மைகளும் உணர்வுகளும் சாக வல்ல! உள்ளொளியும் உயிரினையும் போக்க வல்ல! பண்ணிசையும் பாத்தமிழாய் வாழ வேண்டும்! பரிவோடும் பண்போடும் நோக்க வேண்டும்! மண்ணினையும் மாண்பினையும் காக்க வேண்டும்! மாசற்ற வாழ்வினையே போற்ற வேண்டும்! – தாமோதரன் கபாலி
கவிஞாயிறு தாராபாரதி 1 & 2 – சந்தர் சுப்பிரமணியன்
கவிஞாயிறு தாராபாரதி 1 & 2 அவருக்குள் தமிழ்மணக்கும், அறிந்தே முன்னர் அன்னைபெயர் புட்பமென அமைந்த தாமோ? குவளைக்குள் பூகம்பம்! கொடையாய்ச் செந்தீ! கொடுங்காலூர் வரையெழுந்து கொதித்த செந்நா! திவலை க்குள் பொறியேற்றுத் தீயைச் சேர்த்துத் திரையாக்கிச் செந்தமிழாய்த் தெறிக்கும் தாரா! இவருக்கோர் கவிமலரை இயற்றி வந்தேன்! இவரெழுத்தை என்குரலில் இயம்பு கின்றேன்! (1) காவியங்கள் பாடவில்லை; காதல் என்னும் கற்பனைக்குள் கரையவில்லை; கானல் நீரைத் தூவிநஞ்சை வளர்க்கவில்லை; சொல்லால் பொய்யைத் தொடுத்தளிக்கும் கவிதையில்லை; சொகுசு வாழ்க்கை மேவுதற்காய் மாறவில்லை; மேன்மை கொன்று மேனிலையை…
தாயினுஞ் சிறந்தது தமிழே! – ஞா.தேவநேயப் பாவாணர்
தாயினுஞ் சிறந்தது தமிழே! எமுனாகல்யாணி – ஆதி தாயினுஞ் சிறந்தது தமிழே தரணியி லுயர்ந்தது தமிழே வாயுடன் பிறந்தது தமிழே வாழ்வெல்லாந் தொடர்வது தமிழே. பாலூட்டி வளர்த்ததும் தமிழே தாலாட்டி வளர்த்ததும் தமிழே பாராட்டி வளர்த்ததும் தமிழே சீராட்டி வளர்த்ததும் தமிழே தேம்படு மழலையுந் தமிழே திருந்திய வுரைகளும் தமிழே தேம்பி யழுததுந் தமிழே தேவையைக் கேட்டதும் தமிழே முந்தி நினைந்தலும் தமிழே முந்தி மொழிந்ததும் தமிழே குந்தி யெழுந்ததும் தமிழே குலவி மகிழ்ந்ததுந் தமிழே பயன்படு கல்வியும் தமிழே பணிபெறப் படுவதும் தமிழே…
தமிழே வாழ்க! – தாராபாரதி
தமிழே வாழ்க! – தாராபாரதி தமிழே வாழ்க! தாய்மொழி தமிழே! எந்தன் தனிமொழி முதலே, வாழ்க! வாய்மொழி பலவென் றாலும் வழிமொழி நீயே ஆனாய்! காய்மொழி சிலவற் றுள்ளும் கனிமொழி நீதான் என்பேன்! தாய்மொழி தமிழே, எந்தன் தனிமொழி முதலே வாழ்க! கவிஞர் தாராபாரதி
தேறாத மனத்துக்கு ஆறுதலேது! – தமிழ்சிவா
தேறாத மனத்துக்கு ஆறுதலேது! நிலத் தட்டுகள் இடம்பெயர்ந்து நிலை தடுமாறியது பெயராநிலம் ! எல்லைகள் கடந்து பிள்ளைகளுக்குப் பிணமென்று பேர்வைக்க பீறிட்டுக் கிளம்பியது கடல்! பெருகிய ஓலங்கள் பேரலைகளின் பேய்த்தனமான பேச்சொலியில் நீரணைந்த நெருப்பாயின ! தணியாத தாகத்தில் நீர் குடித்த உடலங்கள் சடலங்கள் என்னும் சட்டை போட்டுக்கொண்டன! கண்ணீர்ச் சுவையில் உவர்ப்பு ஒழிந்து கைப்பு கூடியது.. தொலைந்த இறகுகள்தேடி அலைந்துகொண்டே இருக்கிறது கலுழ்ந்து கலுழ்ந்து கண்கள் பூத்த காலம்! நச்சு மரங்களை வீழ்த்தியிருக்க வேண்டிய நான் பிள்ளை வரங்களைப் பெயர்த்தேனே என வயிறளைக்கும்…
திருக்குறள் அறுசொல் உரை: 110. குறிப்பு அறிதல்: வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 109. தகை அணங்கு உறுத்தல் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் அதிகாரம் 110. குறிப்பு அறிதல் பார்வை, செயல்களால், காதலியின் ஆழ்மனக் குறிப்பினை அறிதல் (01-10 தலைவன் சொல்லியவை) இருநோக்(கு), இவள்உண்கண் உள்ள(து); ஒருநோக்கு நோய்நோக்(கு),ஒன்(று) அந்நோய் மருந்து. இவளிடம் இருபார்வைகள்; ஒன்று, நோய்தரும்; மற்றுஒன்று, மருந்து. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம், காமத்தில் செம்பாகம் அன்று: பெரிது. காதலியின் கள்ளப் பார்வை, காதலில் பாதியைவிடப்…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 40(2.10) பெரியாரைத் துணைக்கொளல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 39(2.09). தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் பெரியாரைத் துணைக்கொளல் பெரியா ரரியன பெரியன செய்பவர்; பெரியவர் என்பவர் செய்வதற்கு அரிய, மிக உயர்ந்த செயல்களைச் செய்பவர்; பொறியா ளுளத்தை யறிவா லாள்பவர்; மேலும் ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில் உள்ள மனத்தைத் தமது அறிவின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்; இகபர வியலெலா மெண்ணிநன் கறிந்தவர்; மேலும் இவ்வுலகத்தின் இயல்பினைப் பற்றியும் இறைவனைப்பற்றியும் நன்கு அறிந்து இருப்பவர்; 394.நல்லின வியலெலா நண்ணி நிற்பவர்; மேலும் நல்லினப் பண்புகளை எல்லாம் பெற்றிருப்பவர்; பின்னுறுந் தீங்கெலா முன்னறிந்…
மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 5/6
(மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6 தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 5/6 ‘குறள்நெறி பரவின் குடியெலாம் சிறக்கும் 140 அமைதி நிலவும் அன்பு தவழும் போர்முறை ஒழியும்; பொய்மை மறையும் செம்மை ஆட்சி சீர்பெற் றோங்கும்’ என்றே கூறி இன்குறள் பாக்களை தெருவெலாம் பரப்பச் செய்யும் தொண்டில் 145 உளம்உரை உடல்பொருள் ஒல்லுவ வெல்லாம் அளித்திடக் காண்பாய் அகம்மிக மகிழத் திங்கள் தோறும் திருக்குறள் கழகக் கூட்டம் நடாத்தி நாட்டின் உயர்வைப் பெருக்கிடும்…
