தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙூ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙு] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙூ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி மேனாடுகளில் படிக்கும் பொழுதே பணியாற்றிக் கல்விச்செலவைத் தம் உழைப்பால் ஈடுகட்டும் நிலையை இக்காலத்தில் பார்க்கின்றோம். ஆனால், அக்காலத்திலேயே அதுவும் பள்ளிமாணவ நிலையிலேயே பேராசிரியர் கல்வி மீதுள்ள ஆர்வத்தினாலும் உழைப்பின் மீதுள்ள மதிப்பாலும் இந்நிலையை மேற் கொண்டார். பிறருக்குக் கல்வி கற்பித்து அதனால் பெறும் வருவாயைக் கல்விச் செலவிற்குப் பயன்படுத்திக் கொண்டார். தம் தமிழாசிரியர் பெரியவர் பொன்னண்ணாக் களத்தில்…
இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 51-70 – இலக்குவனார் திருவள்ளுவன்
(இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50 தொடர்ச்சி) இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 51-70 51.காவிரி படப்பை பட்டினம்-தன்னுள் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் 5.151தோட்டச்சிறப்பு மிக்க காவிரி பாயும் பட்டினத்துள் 52.கங்கை பேர் யாற்றினும் காவிரி புனலினும் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 2.120கங்கைப் பேராற்றிலும் காவிரி நீரிலும் 53.முது நீர் காவிரி முன் துறை படுத்தல் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 25.123பழமைச்சிறப்பு மிக்க காவிரியின்துறைக்கண் நீர்ப்படுத்தல் 54.காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 31(2.01). இல்வாழ் வுயர்வு
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.30.தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 31. இல்வாழ் வுயர்வு இல்வாழ் வென்பதோ ரில்லினில் வாழ்தல். இல்வாழ்வு என்பது குடும்பத்துடன் வாழ்வது ஆகும். எதிபாற் றுணையுடன் வதிதன் மிகநலம். எதிர்பால் துணையுடன் வாழ்வது மிகச் சிறந்தது ஆகும். இல்வாழ் வார்கட னில்லற மியற்றல். இல்வாழ்க்கைக்கு உரிய விதிகளைப் பின்பற்றி நடத்தலே இல்வாழ்க்கை நடத்துபவரின் கடமை ஆகும். என்றும்வே ளாண்மை யியற்றலே யில்லறம். எப்பொழுதும் விவசாயத்தில் ஈடுபடுவதே இல்லறம் ஆகும். இல்வாழ் வில்லெனி லில்லையிவ் வுலகே. இல்வாழ்க்கை நடத்துபவர் இல்லை எனில் இவ்வுலகம் இல்லை(ஏனெனில்…
உணவளித்தால் உம்மை வாழ்த்துவரே! – கெருசோம் செல்லையா
உணவளித்தால் உம்மை வாழ்த்துவரே! பசியென்று வருபவரைப், பரிவுடன் பார்த்திடுவீர்! புசியென்று உணவளித்து, புன்னகையும் சேர்த்திடுவீர். கசியும் நீரூற்றாய்க் கண் கலங்கிக் கேட்பவர்கள், பொசியும் இறையன்பால், பொங்கியுமை வாழ்த்துவரே! – கெருசோம் செல்லையா
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙு] போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி : இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙு] போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி பெரும்புலவர் ந.மு.வேங்கடசாமி(நாட்டாரின்) இளவல் ந.மு.கோவிந்தராய(நாட்டா)ர் அவர்கள் அடுத்த தலைமையாசிரியராய் மாறுதலில் வந்தார். இவர் அனைவரையும் சிவநெறிக்கண் திருப்பி ஒழுங்கையும் பண்பாட்டையும் நிலைநாட்டினார். தமிழாசிரியர் நாராயணசாமி(பிள்ளை) ஓய்வு பெற்ற பின் மாறி வந்த தமிழாசிரியர் சாமி. சிதம்பரனார் பேராசிரியர் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அனைவரிடமும் தூய தமிழ்ப்பற்றை வளர்த்த தன்மதிப்புஇயக்கப் பற்றாளரான அறிஞர் சாமி சிதம்பரனார் பேராசிரியர்பால் பேரன்பு கொண்டவர்; …
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.30. முயற்சி யுடைமை
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.29. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 30. முயற்சி யுடைமை உயர்வுற வுழைக்கு முடற்றொழில் முயற்சி. உயர்ந்ததை அடைவதற்காக உழைக்கும் உடல் உழைப்பே முயற்சி ஆகும். முயற்சி பலவகை யுயற்சி நல்கும். முயற்சி பலவகைப் பெருமைகளைக் கொடுக்கும் இயல்பு உடையது. முயற்சி யூழையு முதுகிடச் செய்யும். முயற்சி, வெற்றிக்குத் தடையாக இருக்கும் விதியையும் தோல்வியடையச் செய்யும். முயற்சி யுடையார் மூவுல காள்வார். விடாமுயற்சி உடையவர்கள் மூவுலகத்தையும் வென்றுவிடுவார்கள். முயற்சி யிலாதா ரிகழ்ச்சி யடைவர். முயற்சியின்றி சோம்பலுடன் இருப்பவர்கள் பிறர்…
உலக வாழ்த்து – நாமக்கல் கவிஞர்
உலக வாழ்த்து வாழ்க வாழ்க உலகம் எலாம் வாழ்க எங்கள் தேசமும் வாழ்க எங்கள் தமிழகம் வாழ்க எங்கள் மனை அறம் வாழ்க மேழிச் செல்வமே வளர்க நாட்டுக் கைத்தொழில் வாழ்க எங்கள் வாணிபம் வாழ்க நல்ல அரசியல் அன்பு கொண்டு அனைவரும் அச்சம் இன்றி வாழ்கவே துன்பம் ஏதும் இன்றியே துக்கம் யாவும் நீங்கியே இன்பமான யாவும் எய்தி இந்த நாட்டில் யாவரும் தெம்பினோடு தெளிவு பெற்றுத் தேவர் போற்ற வாழ்குவோம்! – நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙி] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள (இன்று ஒரத்தநாடு என்றும் சொல்லப்படுகின்ற) உரத்தநாட்டிலும் அரசர்மடம் (இராசாமடம்) என்னும் ஊரிலும் உண்டுறைப் பள்ளிகள் உள்ளன. அரசர் மடத்தில் பேராசிரியரின் மாமா வீரபத்திரர் அவர்களின் இரு மக்கள் பயின்று வந்தனர். அங்குச் சென்று கல்வி கற்கும் தணியா ஆர்வத்தில் பேராசிரியர் இருந்தார். பேராசிரியரின் தொடக்கப்பள்ளி ஆசிரியரான தமையன் முறையினரான சதாசிவம்(பிள்ளை) அவர்கள் விண்ணப்பம் அனுப்ப…
இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 11- 30 – இலக்குவனார் திருவள்ளுவன்
(இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 01- 10 தொடர்ச்சி) இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 11- 30 இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த: தாயங்கண்ணனார், அகநானூறு, 213.22 (சிறந்து விளங்கும் காவிரி நீர் வரிவரியாகச் செய்திட்ட(கருமணல்)) தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்: பரணர், அகநானூறு, 222.8 (தாழ்ந்த கூந்தலையுடைய காவிரிப்பெண் கவர்ந்துகொண்டதால்) விடியல் வந்த பெரு நீர் காவிரி: பரணர், அகநானூறு, 226.10 ( விடியற்காலையில் புதுவெள்ளம் பெருக வந்த காவிரி) கழை அளந்து அறியா காவிரி படப்பை:…
இனமானப் புலி எங்கே? – காசி ஆனந்தன்
இனமானப் புலி எங்கே? இன்றிருந்த பகல்தனிலே ஞாயிறில்லை! இரவினிலும் நிலவில்லை! விண்மீன் இல்லை! இன்றெரிந்த விளக்கினிலே வெளிச்சம் இல்லை! எண்டிசையும் செடிகொடியில் பூக்கள் இல்லை! இன்றிதழ்கள் ஒன்றிலுமே முறுவல் இல்லை! இன்றெமது நாட்டினிலே பெரியார் இல்லை! எவர்தருவார் ஆறுதல்? இங் கெவரும் இல்லை! கோல்தரித்து நேற்றுலகைத் தமிழன் ஆண்டான்! கொற்றவனை அவனை இழி வாக்கி மார்பில் நூல்தரித்து மேய்ப்போராய் நுழைந்த கூட்டம் நூறு கதை உருவாக்கி “பிரம்ம தேவன் கால்தரித்த கருவினிலே தமிழன் வந்தான் காணீர் என்றுரைத்தமொழி கேட்டுக் கண்ணீர் வேல்தரித்து நெஞ்சில்…
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாமே! – சி.பா.ஆதித்தனார்
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாமே! (பல்லவி) நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாமே நாமே தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாமே (சரணங்கள்) சேர சோழ பாண்டியரின் வழிவந்தோர் நாமே செந்தமிழைச் சங்கம்வைத்து வளர்த்தவர்கள் நாமே பாரெல்லாம் புகழ்மணக்க வாழ்ந்தவர்கள் நாமே பாங்குடனே திருக்குறளின் பாதை செல்வோர் நாமே (நாம் தமிழர்) கப்பல் மீது கொடியைப்போட்டு கடல்களை கடந்து கடாரத்தை சாவகத்தை வென்றவர்கள் நாமே எப்பொழுதும் எவ்விடத்தும் உழைப்பவர்கள் நாமே எல்லாரும் கூடிவாழ…
தமிழ் நிலத்தை நாமே ஆள்வோம்! – கோ. நடராசன்
தமிழ் நிலத்தை நாமே ஆள்வோம்! முந்து தமிழ் மொழி மறந்தான் முன்னோரின் வழி மறந்தான் மண்ணின் மரபிழந்தான் மான மென்றால் எதுவென்றான்-உயிராம் நீரின் உரிமை இழந்தான் மண்ணுரிமை பேணுதற்கு முன்னுரிமை தர மறந்தான் – வள்ளுவன் போதித்த பொன்னான கருத்திழந்தான் கடல் கடந்து வணிகம் செய்த கன்னல் நிகர் மொழி இனத்தான் – இன்று ஆதி புகழ் மறந்து அயலான் கால் நக்கி அடி பணிந்து அழிகின்றான் இந்து என்றும் இந்தியன் தானென்றும் திராவிடன் என்றும் தலித்திய னேயென்றும் தடம் மாறிப் போன…
