ஈழத் தாயவளேதான் எங்கள் தாயம்மா! – அம்பாளடியாள்
ஈழத் தாயவளேதான் எங்கள் தாயம்மா! ஆழ்கடல் தனிலே அந்தப் பேதையின் குரலைக் கேட்டேன்! ஊழ்வினைப் பயனாய் எண்ணி உலகமே வெறுக்கக் கண்டேன்! வாழ்வினை அளிக்க வல்ல வசந்தமும் விலகிச் செல்ல மூழ்கிடும் திருநா டெம்மின் முகவரி என்றார் அம்மா! பொன்னென விளைந்த தேசம் பொலிவினை இழக்க நாளும் இன்னலைத் தொடுத்தார் அங்கே இதயமும் மரித்துப் போக! அன்னவர் செயலைக் கண்டே அடிமைகள் விழித்த தாலே வன்முறை பொலிந்தே இன்றும் வாழ்வினைப் பொசுக்கு தம்மா! கற்றவர் நிறைந்த பாரில் காத்திட ஒருவர் இன்றி குற்றமே பொலிந்து…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙே] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙெ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙே] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி படிப்பு, பரப்புரை ஆகியவற்றுடன் படைப்புப் பணியிலும் பேராசிரியர் இலக்குவனார் ஈடுபட்டார். பண்டைநலம், புதுப்புலமை, பழம்பெருமை அனைத்தையும் நல்கிய படைப்புப் போராளியாகவும் பேராசிரியர் தம்மை வெளிப்படுத்தி உள்ளார். கல்விக்கூட அளவில் கவிதைகளும் இதழ்கள் வழிக் கட்டுரைகளும் படைத்த பேராசிரியர் வித்துவான் தொடக்கநிலை மாணவராக இருந்த பொழுதே சிறந்த நூலாசிரியராகவும் மொழிபெயர்ப்பு வல்லுநராகவும் திகழ்ந்துள்ளார்; ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும்…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 33(2.03) – உயிர்த்துணை கொள்ளல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 32 (2.02) – தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 33.உயிர்த்துணை கொள்ளல் உயிர்த்துணை தன்னுயிர்க் குதவெதிர் பாற்றுணை. உயிர்த்துணை என்பவர் நம் வாழ்க்கைக்கு ஆதரவான எதிபாலைச் சார்ந்த துணை ஆகும். அத்துணைக் கெங்கனு மொத்ததொன் றிலதே. வாழ்க்கைத் துணைக்கு ஈடு, இணை யாரும் இல்லை. ஆக்கமுங் கேடு மத்துணை யாலாம். ஒருவருடைய செல்வமும் அழிவும் அவருடைய உயிர்த் துணையால் அவருக்கு அமைகிறது. கொள்ளு மறிவெலாங் கொண்டுபின் றுணைகொளல். ஒருவன் தன் அறிவைக் கொண்டு நன்கு ஆராய்ந்து பின்னர் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தல்…
யானே பொய்! – தமிழ்க்காதலன்
யானே பொய் ! யானே பொய் ! என் பிறப்பும் பொய் ! என் மெய்யும் பொய் ! என் சிந்தையும் பொய் ! என் குடியும் பொய் ! என் இனமும் பொய் ! என் பெயரும் பொய் ! என் சூழும் பொய் ! என் சொந்தமும் பொய் ! என் நண்பரும் பொய் ! என் இளமையும் பொய் !என் நெஞ்சும் பொய் ! என் ஐய! என் சிந்தாமணி அன்பினால் நின் செந்தாமரைச் செல்வத் திருவடியையடைந்த என் செந்தமிழ்க்காதல்…
மேன்மையாய் வாழ்வோம்! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்
மேன்மையாய் வாழ்வோம்! செய்திகள் படிப்போம் சிந்தனை நிறைப்போம்! கைத்தொழில் கற்போம் கவலையை ஒழிப்போம் பொய்சூது விடுவோம் போதும்மனம் கொள்வோம் மெய்யைப் பேசுவோம் மேன்மையாய் வாழ்வோம்! வைகறை விழிப்போம் வாய்விட்டுச் சிரிப்போம்! பைகாசு வைப்போம்! பைய நடப்போம்! வாய்மை காப்போம் வாக்கு நிறைவேற்றுவோம்! தாய்மை போற்றுவோம்! தாரத்தை ஆராதிப்போம்! நாய்தனை வளர்ப்போம்! நன்றியை மறவோம்! வாய்ச்சவடால் செய்யோம்! வாலிபனாய் வாழ்வோம்! எய்அம்பாய் மெய்செய்வோம்! எங்கும்சென்றே நலமாக்குவோம் நய்நய்என நச்சரியோம்! நண்பர்களைச் சேர்த்திடுவோம்! பாய்விரித்தே படுத்திடுவோம் பஞ்சுமெத்தை தவிர்த்திடுவோம்! நோய்நொடி விரட்டிடுவோம் நூறைக்கடக்க வழிகண்டோம்! மாம்பலம் ஆ.சந்திரசேகர்…
நாடிவந்து நிற்குமன்றோ! – மெல்பேண் செயராமர்
நாடிவந்து நிற்குமன்றோ! நாநயம் இருந்துவிட்டால் நாணயம் நமக்குவரும் பேய்மனம் கொண்டுவிட்டால் பிணம்போல ஆகிடுவர் தூய்மையது மனமேறின் துட்டகுணம் மறைந்துவிடும் …
உயிரே உயிரின் உயிரே! – அம்பாளடியாள்
உயிரே உயிரின் உயிரே! ஈன்றவளுக் கொப்பான இன்றமிழை நான்மறவேன் தேன்சிந்தும் பாக்களைநீ தேடிவந்து! – வான்மழைபோல் இன்றென்றன் எண்ணத்தில் இட்டுச்செல் என்னுயிரே ! என்றுமிது போதும் எனக்கு! தூக்கத்தில் கூடத்தான் உன்றன் எண்ணம் தூண்டிவிட்டுச் செல்கிறாய் தாயே உன்னால் பூக்கின்ற புலமையும் பூலோ கத்தில் பூக்களின் நறுமணத்தை ஏந்திச் செல்லும்! தேக்கிவைத்த உணர்வெல்லாம் சிந்தும் போது தேன்துளியாய்த் தான்சிந்தும் இந்த மண்ணில்! ஏக்கத்தைத் தந்தென்னை இதுபோல் நாளும் எழுப்பிவிடு தீந்தமிழே அதுவே போதும்! உன்னோடு வாழ்கின்ற நொடிகள் எல்லாம் உலகத்தில்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் – [ஙெ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙூ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙெ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி கல்லூரியின் முதல்வராக இருந்த வேதாந்த(ம் ஐயங்கா)ர் ஓய்விற்குப் பின்பு பி.சா.சுப்பிரமணிய(சாசுதிரி) முதல்வராக வந்தார்; ஆராய்ச்சி ஆர்வம் மிக்கவராக இருந்தாலும் சமசுகிருதப் பற்றால் தவறான கருத்துகளையும் வெளிப்படுத்துவார். ‘இலக்குவன்’ என்னும் பேராசிரியரின் தமிழ்ப் பெயரையே விரும்பாத முதல்வர் இவரைச் சமசுகிருத வெறுப்பாளராக எண்ணினார். தமிழின் தொன்மை, தூய்மை முதலானபற்றிய தவறான கருத்துகளை அவர் தெரிவிக்கும் பொழுதெல்லாம் சான்றுகளுடன் பேராசிரியர் மறுக்கத்…
அடையா ளத்தை இழப்பதற்கா பாடுபட்டோம்! – கவிஞர் அம்பாளடியாள்
அடையா ளத்தை இழப்பதற்கா பாடுபட்டோம்! என்னுயிரே! பொன்மொழியே! உப்பில்லாப் பண்டமென ஒதுக்கி வைக்கும் ஊராரின் கண்களுக்கு விருந்து வைக்க இக்கணமே நீவருவாய் என்றன் நாவில் இன்றமிழின் ஆட்சியோங்கத் தடைகள் நீங்கும்! எப்பொழும் உன்னையன்றி என்றன் கண்கள் ஏறெடுத்துப் பார்த்ததில்லை எதையும் இங்கே! தப்பான பாடலுக்கோர் பரிசு தந்தால் தமிழ்மீதே ஆணையதை வாங்க மாட்டேன்! நக்கீரன் பரம்பரையில் உதித்த என்றன் நரம்பறுந்து போனாலும் உறங்க மாட்டேன்! திக்குமுக்காய் ஆடவைக்கும் கேள்விக் கெல்லாம் திமிராகப் பதிலளிக்கும் திறனைத் தந்து பக்கத்தில் நீயிருந்து காக்கும் போது பைந்தமிழே…
பெண்ணடிமை உணர்வினர் பேதையர் என்றிடுவோம்! – தி. வே. விசயலட்சுமி
பெண்ணடிமை உணர்வினர் பேதையர் என்றிடுவோம்! கண்ணின் மணியொக்கும் காரிகையர் தம்முரிமை திண்ணமுறக் காப்போம் தெளிந்து. மங்கையர் மாண்பை மதித்துணராப் பேதையர் மங்கி யழிவரே தாழ்ந்து. பெண்ணின் பெருமையைப் பேணாதார் புல்லர்கள் கண்ணிருந்தும் கண்ணற் றவர். இருவர் மனம்இணைந்தால் பெண்ணடிமை எண்ணம் வருமா? ஆய்ந்துநீ பார் பெண்ணை மதியாத பேதையைப் பாவியாய் மண்ணாய் மரமாய் மதி. ஆடாக அஞ்சியஞ்சி வாழ்தலினும் சிங்கமெனப் போராடி வாழ்பவளே பெண். மகளிரைத் தாயுருவில் வைக்காத பேதையை மக்களாய் எண்ணோம் மதித்து. நெருப்பும் பொறுப்புமே பெண்ணாம்; வெறுப்பால் செருப்பாக்கின் சேரும் இழிவு….
பார்வை இல்லார் வாழப் பாடுவோமா? – கெருசோம் செல்லையா
பார்வை இல்லார் வாழப் பாடுவோமா? உருவில் அழகு குறையுமானால், ஒப்பனை செய்ய ஓடுகிறோம்! தெருவில் அழுக்கு நிறையுமானால், தென்படுவோரைச் சாடுகிறோம்! எருவில்லாத பயிரைப் பார்த்து, ஏங்கலும் கொண்டு வாடுகிறோம். கருவிலிருந்தே பார்வை இல்லார், களிப்புடன் வாழப் பாடுவோமா? கெருசோம் செல்லையா
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 1.32 – இல்லமைத்தல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.31. தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 32. இல்லமைத்தல் அகல நீள மரைக்கான் மைல்கொளல். வீடு கட்டுவதற்கான மனை 20 புதுக்கோல்(மீட்டர்) நீளமும் 20 புதுக்கோல்(மீட்டர்) அகலமும் உடையதாக இருக்க வேண்டும். ஈரிரு புறமதி லெதிரெதிர் வழிசெயல். வீட்டின் நான்கு புறமும் மதில் சுவர்கள் கட்டப்பட வேண்டும். எதிரெதிராக வாசல்கள் (முன் வாசல், பின்வாசல்) இருக்கவேண்டும். மத்தியிற் புறமதின் மட்டமே லிற்செயல். மனையின் நடுவில் வீடு மதில் சுவர்களைவிட உயரமாகக் கட்டப்பட வேண்டும். இல்லிற் கீரா யிரமடி சதுரமாம். வீடு…
