பாய்புலியே! எங்கே உன் சீற்றம்? – பெருஞ்சித்திரனார்
பாய்புலியே! எங்கே உன் சீற்றம்? இன்னமும் எத்தனை யாண்டுகள் தமிழா இங்ஙனே உணர்வற்றிருப்பாய்? – நீ இங்ஙனே உணர்வற்றிறிருப்பாய்? தின்னும் இனப்பகை உன்றனை மாய்த்தது, தீராத மடமைநின் இனத்தையே சாய்த்தது, மன்னும் அடிமையா வாழ்வென வாய்த்தது? மாளாத துயரையா உன்மரம் காய்த்தது? எந்தமிழ் மொழிபேணி வருகநீ யாண்டும், இழந்தநின் பேராற்றல் எழ, அது தூண்டும்! வெந்திறல் ஆண்மையொடு நீஎழல் வேண்டும்! வீழ்கின்ற பகையோடு அடிமையுனைத் தாண்டும்! வடவர்க்குத் தமிழ்நாடு வாழும்பட் டயமா? s வல்லதோ ரடிமைக்கு வேண்டும் நயமா? மடமைக்குத் தமிழ்நாடு மீன்மேயும் கயமா?…
எதிர்காலத்தை மகிழ்விப்பாய்! – நீரை. அத்திப்பூ
எதிர்காலத்தை மகிழ்விப்பாய்! வங்கியில் கணக்கு வை தம்பீ வாழ்க்கையில் உனக்குப் பலம் தம்பீ எங்கிருந்தாலும் சேமிப்பாய் எதிர்காலத்தை மகிழ்விப்பாய்! வீணாய்ச் செலவுகள் செய்யாதே வெற்றாய்ப் பொழுதைக் கழிக்காதே தானாய் வருமென நினைக்காதே தகுதி உயர்த்திட மறக்காதே! சிறுசிறு துளியே பெருவெள்ளம் சேர்த்துப் பார்த்தால் அது சொல்லும் வருமானத்தைப் பெருக்கிடுவாய் வாழ்வில் இமயப் புகழடைவாய்! இன்றே தொடங்கிடு சேமிப்பு இனிமை வாழ்வுடன் பூரிப்பு நன்றே நினைத்திடு வென்றிடுவாய் நாளைய தலைமை கொண்டிடுவாய்! – நீரை. அத்திப்பூ ஆசிரியர்: தகவல் முத்துகள் நீர்முளை அஞ்சல 614711 நாகை…
கூப்பிடு கூப்பிடு வீரர்களை! – காசி ஆனந்தன்
கூப்பிடு கூப்பிடு வீரர்களை! பாண்டிய மன்னவன் சோழன் பனிவரை பாய்ந்து கலக்கிய சேர மகன் ஈண்டு முளைத்த குலத்தில் எழுந்தனை! ஏடா தமிழா! எடடா படை! கூண்டுக் கிளிநிலை எத்தனை நாள்வரை? கூப்பிடு கூப்பிடு வீரர்களை! ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை? கோட்டுப் புலிக்குலம் வாழக் குகையுண்டு! குருவிக்குக் கூடு மரத்திலுண்டு! காட்டு வயற்புற நண்டுக்குப் பொந்துண்டு! கஞ்சல் எலிக்கோர் குழியுமுண்டு! கோட்டை அமைத்துக் கொடியொடு வாழ்ந்தவர் குலத்துக்கொரு புகல் இங்கிலையோ? நாட்டை அமைப்பாய் தமிழ்மகனே! புவி…
முருங்கை மரத்து வேதாளம் ! – உருத்திரா இ பரமசிவன்
முருங்கை மரத்து வேதாளம் ! வாழ்க்கை வாழ்வதற்கே ! வாழ்க்கை என்பது முருங்கை மரத்து வேதாளம் என்று வெட்டி வெட்டி எறிந்தாலும் நம் தோள்மீது அது ஏறிக்கொண்டே தான் இருக்கும். வாழ்க்கையை வெறுப்பது என்பது தான் அந்த வேதாளம். வாழ்க்கையை நோக்கி வரவேற்பு புன்னகை ஒன்றை வீசு எல்லா வேதாளங்களும் அணுக முடியாமல் ஓடியே போய்விடும். இப்போது எல்லா வேதாளங்களும் உன் காலடியில். உருத்திரா இ பரமசிவன்
நான்கு காசு சேர்ப்பதற்காம்! – கெர்சோம் செல்லையா
நான்கு காசு சேர்ப்பதற்காம்! ஆட்டிப் படைப்பதை ஆட்சி என்றார்; அதைத்தான் விரும்பும் காட்சி என்றார். காட்டிக் கொடுப்பதைத் திறமை என்றார்; கயமை கொள்வதும் உரிமை என்றார். நாட்டில் நன்மை செய்வதெல்லாம், நான்கு காசு சேர்ப்பதற்காம்; ஊட்டிக் கொடுக்கும் இந்நஞ்சை, ஒழிக்கும் வழிதான் இறையரசாம்! – கெர்சோம் செல்லையா
இதழ்களின் மேல் கருவண்டு – அபிநயா, துபாய்
இதழ்களின் மேல் கருவண்டு வீட்டினுள் விழுந்தன வளர்பிறை வெண்மதிகள் வெட்டிய நகங்கள்’. பூச்சிக்கொல்லி மருந்தையும் குடிப்போம் அயல்நாட்டுப்பானம்! கோயிலுக்குக் குந்தகமென்றால் கருவறையும் அகற்றலாம் கருப்பை! இறைவனும் இறைவியும் இணக்கத்துடன் இணைந்தார்கள் அரவாணிகள்! நாத்திகனுக்குக் கோவிலிலென்ன வேலை? அன்னதானம்! இதழ்களின் மேல் கருவண்டு மச்சம்! அறைந்தாள் முத்தம் கொடுத்தான் அப்பா! இயற்கையும் உறைகூழ் கொடுத்தது நுங்கு! கூட்டமாய் வந்து உள்ளாடை திருடினார்கள் மணல் கொள்ளை! – அபிநயா, துபாய். தரவு : முதுவை இதயத்து
மனிதம் – கமலா சரசுவதி
மனிதம் தலை சுமந்து உயிர்காக்கும், தன்மையது நல் மனிதம் ! உயிர் கொடுத்து உயிர்காக்கும், உணர்வே நல் மனிதம் ! செருக் கொழிக்கும் சிந்தையது, சிகரம் கொள்ளும் மனிதம் ! முருகவிழும் மொட்டுப் போலே முகிழும் மனங்கொள் மனிதம் ! துயரம் நிறைந்தோர் துயரேதீர்க்க, துடிக்கும் மனமே மனிதம் ! தோல்வியுற்றோர் துவளா நிலையைத் தோற்றுவித்தல் நல் மனிதம் ! வீட்டுப்பெண்கள் கொண்ட கருத்தை விரும்பிக் கேட்டல் மனிதம்! கொல்லும் பகையே என்றபோதும், கொஞ்சம் மன்னித்தல் அதுமனிதம் ! – கமலா சரசுவதி…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ங] 1.முன்னுரை – முற்பகுதி தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] 1.முன்னுரை – பிற்பகுதி தேவை உறுநருக்கு உதவுவதும் கடமை தவறுநர்க்கு இடித்துரைப்பதும் போராளியின் கடமைதானே. மாணாக்கர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் அவர் பரப்பிய தமிழுணர்வு தமிழ் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. பரப்புரைகளில் இலக்கியச் சிறப்புகளுடன் தமிழுக்கு ஏற்பட்டுள்ள தீங்கையும் காக்கும் கடப்பாடு ஒவ்வொருவருக்கும் உள்ளதையும் விளக்கினார் பேராசிரியர். “தமிழ், தமிழினம், தமிழிலக்கியம் இவற்றில் ஒன்றுபோம் எனில் மற்றவும் ஒழியும்.” (பாவேந்தர் பாரதிதாசன்) என்பதையே எல்லா இடங்களிலும் தொடக்கம் முதலே வலியுறுத்தினார்…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.28.அறிவுடைமை
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.27. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 28.அறிவுடைமை 271. அறிவு மறமொரீஇ யறத்தின்பா லுய்ப்பது. அறிவுடைமை தீயொழுக்கத்தை விலக்கி நல்லொழுக்கத்தை நோக்கி நம்மைச் செலுத்தும் இயல்பு உடையது. அறிவெஞ் ஞான்று மற்றங் காப்பது. அறிவுடைமை எப்பொழுதும் அழிவில் இருந்து பாதுகாக்கும் இயல்பு உடையது. அறிவு பகைவரா லழிக்கப் படாதது. அறிவு பகைவர்களால் அழிக்க முடியாதது. அறிவினை யுடையா ரனைத்து முடையர். அறிவினை உடையவர்கள் அனைத்தையும் உடையவர்கள் ஆவர். அறிவில் லாதார் யாதுமில் லாதார். அறிவில்லாதவர்கள் எதுவுமே இல்லாதவர்கள் ஆவர். அறிவிற்…
பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 21-25 : தி.வே.விசயலட்சுமி
(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 16.20 தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 21-25 நல்லோர் நவிலும் நலம் பயக்கும் இன்குறளைக் கல்லார் அடையார் களிப்பு. அன்பும் அறிவும் ஆக்கமும் ஊக்கமும் பண்பும் குறளால் பெறு. 23. வள்ளுவனார் வாய்ச்சொல் வகையுறக் கற்பவர். உள்ளுவர் நல்வினை ஓர்ந்து. 24. இன்பக் கடல்காண்பர் என்றும் குறள் கற்பவர். துன்பம் தவிர்த்துவாழ் வார். 25. வையத்து வாழ்வாங்கு வாழ்ந்திடக் கற்றிடுவோம் தெய்வத் திருக்குறளைத் தேர்ந்து. தி.வே.விசயலட்சுமி பேசி –…
காவேரியா…? அது பழைய நடிகையாச்சே! – த.இரெ.தமிழ் மணி
காவேரியா…? அது பழைய நடிகையாச்சே! இந்தி அரசே! கன்னட வெறியாட்டம் மறைக்க வேண்டுமா? பேரறிவாளனைத் தாக்கு! விக்னேசு எழுச்சி மறக்க வேண்டுமா? இராம்குமாரை முடி! வாக்காளர்களே! என விளி! புலால் உணவுப் பொட்டலத்தையும் சாராயத்தையும் கண்ணில்காட்டு! பிறகு சொல்லுவான்- “காவேரியா…? அது பழைய நடிகையாச்சே?” த.இரெ.தமிழ் மணி
சிற்றருவி! பேரருவி! – சி.செயபாரதன், கனடா
; சிற்றருவி! பேரருவி! [குற்றால அருவி எப்படி உள்ளது என்றொரு பெருங் கவிதை புனைவதை விட, அது எப்படி இருக்க வில்லை என்றும் நான் சொல்ல விழைகிறேன். அப்போதுதான் அதன் முழுத் தோற்றத்தை நாம் விழுமையுடன் காண முடிகிறது.] இறை வணக்கம் அண்டத் தலைவனை, ஆதி முதல்வனைத் தொண்டன் வணங்கித் துணிகின்றேன் ! – பண்டைமுதல் குற்றாலத் தேனருவி கொட்டுவதை நானெழுத வற்றாத் தமிழூட்ட வா ! கற்றேன் கடுகளவு ! கற்க உலகளவு ! ஒற்றைப் பிறப்பெனக்கு ஒவ்வாது…
