தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் – நூற்றொடர் அறிவிப்பு
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் – நூற்றொடர் அறிவிப்பு கோவை ஞானி அவர்களின் தமிழ்நேயம் 49 ஆவது வெளியீடாக மாசி, தி.பி. 2043/ பிப்.கி.பி. 2012 வெளியீடாக வந்த நூல் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார். அடுத்த வாரம் முதல் வெளிவரும் இவ்விதழின் முன்அட்டை, உள் குறிப்பு (திருமணப்பரிசு என்ற முறையில் நன்றி அறிவிப்பு), பின் அட்டை (நூலாசிரியர் இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய இந்நூல் பற்றிய கோவை ஞானி அவர்கள் குறிப்பு) ஆகியன விவரங்களுக்காகத் தரப்படுகின்றன. வருமிதழ் முதல் படைப்பு தொடரும்.
பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11 – 15: தி.வே.விசயலட்சுமி
(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6 -10 தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11 – 15 குன்றாப் புகழும், குறையா வளமும் என்றும் குறளால் வரும். இசைபட வாழ்ந்திட இன்குறள் ஆய்வோரைத் திசையெலாம் வாழ்த்தும் தெரிந்து. பொருள்நலம் பெற்றுப் பொலிந்திடும் இன்குறள் இருளற ஓதுவோம் இனிது. முக்கனிபோல் பாநயத்தை மகிழ்ந்து சுவைத்திடின் எக்காலும் வாழ்வோம் இனிது. முப்பாலே தித்திக்கும், முக்கனியாய்ச் சொல்லினிக்கும் எப்போதும் ஏத்துவம் ஏற்று. – புலவர் தி.வே.விசயலட்சுமி பேசி -98415 93517.
வள்ளுவனார் அறத்துப்பால் – கு. நா. கவின்முருகு
வள்ளுவனார் அறத்துப்பால் 1. கற்றாரோ வள்ளுவனார் அறத்துப் பாலை கற்றிலாரும் அறத்தாள்வார் பெயரும் பெற்று சுற்றிடுவார் நிலமதிலே ஈகை இல்லா துப்பில்லா மானிடரும் மாடே ஒப்பர் பெற்றிடுவோம் நற்பெயரும் அவனின் பாவால் பேறுலகைக் காத்திடுமாம் அறமே செய்து சொற்றெடராய் அணிசெய்யும் அழகாய் நன்று தொடர்வதுவும் குறளோதிப் பணிந்து செய்ய. 2. கொன்றார்கு உய்வில்லை செய்த நன்றி கோமகற்கும் அதுவேயாம் மாற்று இல்லை சென்றார்க்கும் சிறப்பேயாம் கற்ற கல்வி தீமையிலாச் சொல்பகரின் செவியில் இன்பம் வென்றாரும் பகைமையுமே வலிமை கண்டே மேன்மக்கட் பேறுபெரும் அறமே…
திருக்குறள் அறுசொல் உரை – 101. நன்றி இல் செல்வம் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 100. பண்பு உடைமை தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 2. பொருள் பால் 13.குடி இயல் அதிகாரம் 101. நன்றி இல் செல்வம் பெற்றவர்க்கும், மற்றவர்க்கும் நன்மையால் உற்றதுணை ஆகாத பெரும்செல்வம் வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள், அஃ(து)உண்ணான், செத்தான்; செயக்கிடந்த(து) இல். இடம்நிறைத்த பெரும்பொருளை உண்ணான், எப்பயன் இல்லான்; செத்தான்தான். “பொருளான்ஆம் எல்லாம்”என்(று), ஈயா(து), இவறும், மருளான்ஆம் மாணாப் பிறப்பு. “செல்வத்தால் எல்லாம் ஆகும்”என, மயங்கும் கருமி, சிறப்புறான். ஈட்டம் இவறி, இசைவேண்டா ஆடவர் தோற்றம், நிலக்குப் பொறை….
மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 3/5 : பாவலர் கருமலைத்தமிழாழன்
(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5 தொடர்ச்சி) மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 3/5 நேரினிலே நான்பார்க்கா நாட்டி லெல்லாம் நேரியநல் நண்பர்கள் இருப்ப தெல்லாம் பாரினையே பேனாக்குள் அடக்கி யெங்கும் பார்க்கவைக்கும் அஞ்சல்தம் அட்டை யாலே ஊரினையே கடக்காத பெண்கள் கூட உலகத்தின் மறுகோடி பெண்க ளோடே சீரியநல் நட்புதனை வளர்த்துக் கொண்டு சிறந்தறிவு பெறுகின்றார் பேனா வாலே ! சிங்கப்பூர் தனைநேரில் பார்க்கா முன்பு சிறப்பான மலேசியாவைப் பார்க்கா முன்பு சிங்களரால் தமிழுறவு சிதைந்து …
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.25. நடுவு நிலைமை
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.24. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 25. நடுவு நிலைமை நடுவு நிலைமைதன் னடுவு ணிற்றல். நடுவு நிலைமை என்பது பாரபட்சம் பார்க்காத தன்மை ஆகும். பிறவுயிர் நடுவள விறனடு வின்மை. பிற உயிர்கள் நடுங்குமாறு செய்வது நடுவின்மை ஆகும். நடுவறப் பொருளி னடுனிற் கும்பொருள். அறமாகிய பொருளின் மையமாக விளங்குவது நடுவு நிலைமை ஆகும். அறனெலா நிற்பதற் கஃதா தாரம். எல்லா அறங்களுக்கும் அடிப்படை நடுவு நிலைமையி நிற்றலே ஆகும். அதுசிறி தசையி னறனெலா மழியும். நடுவு நிலைமையில் இருந்து…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.24. நன்றி யறிதல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.23. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 24. நன்றி யறிதல் நன்றியென் பதுபிறர் நல்கிடு முதவி. மற்றவர்கள் நமக்குச் செய்தவையை நினைவு கூர்தலே நன்றி ஆகும். உறவினர் முதலியோ ருதவுதல் கடனே. உறவினர் முதலியவர்களுக்கு உதவுதல் நம் கடமை ஆகும். பிறர்செயு முதவியிற் பெரிதொன் றின்றே. பிறர் நமக்குச் செய்யும் உதவியைவிட பெரியது ஒன்றுமில்லை. உதவியிற் சிறந்த துற்றுழி யுதவல். துன்பம் ஏற்பட்ட சமயத்தில் செய்யப்படும் உதவியே சிறந்த உதவி ஆகும். உயர்ந்தது கைம்மா றுகருதா துதவல். உதவியில் உயர்ந்தது பதிலுக்கு…
பேரா.சி.இலக்குவனார் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! : 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
பேரா.சி.இலக்குவனார் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! – 2 / 2 தமிழியக்கப்பணிகளாலும் திராவிட இயக்கப்பணிகளாலும் தமிழ் மறுமலர்ச்சி ஏற்பட்டது குறித்து மகிழ்ந்தவர் பேராசிரியர் சி.இலக்குவனார். அவர், ‘இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று புதுமைப் பாவலர்கள் முழக்கம் செய்தனர். எங்கு நோக்கினும் இன்பத்தமிழ்; செந்தமிழ்; இதழ்களில் செந்தமிழ்; மேடைப்பேச்சுகளில் நற்றமிழ்; மாநாடுகளில்வண்டமிழ்; நற்றமிழில் பேசுதலே நற்புலமைக்கு அடையாளம் என்ற எண்ணம் உருப்பெற்று விட்டது. நமஃச்காரம் போய் வணக்கம் வந்தது. சந்தோசம் மறைந்து மகிழ்ச்சி தோன்றியது. விவாகம் விலகித் திருமணம் இடம் பெற்றது….
மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5 : பாவலர் கருமலைத்தமிழாழன்
(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று 1/5 தொடர்ச்சி) மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 2/5 கற்பனைக்கும் எட்டாத அற்பு தங்கள் கரத்திருக்கும் பேசியிலே செய்யும் நாமோ நற்காலம் காட்டுகின்ற கடிகா ரத்தை நாள்காட்டி கணக்கியினை துறந்து விட்டோம் பற்றியெங்கும் எடுத்துசென்று செய்தி யோடு பாடல்கேட்ட வானொலியைத் தொலைத்து விட்டோம் நற்றமிழில் நலம்கேட்டு எழுதி வந்த நற்கடிதப் பழக்கத்தை விட்டு விட்டோம் ! பக்கத்தில் பெற்றோர்கள் அமர்ந்தி ருக்கப் பக்கத்தில் உடன்பிறந்தோர் அமர்ந்தி ருக்கப் பக்கத்தில் சுற்றத்தார் அமர்ந்தி ருக்கப் பக்கத்தில் …
திருக்குறள் அறுசொல் உரை – 100. பண்பு உடைமை : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 99. சான்றாண்மை தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 2. பொருள் பால் 13.குடி இயல் அதிகாரம் 100. பண்பு உடைமை உலகத்தார் இயல்புகளை நன்குஅறிந்து நலஉணர்வுடன் பழகுதலைப் பெறுதல் எண்பதத்தால் எய்தல், எளி(து)என்ப, யார்மாட்டும், பண்(பு)உடைமை என்னும் வழக்கு. பண்புஉடைமை என்னும் வழக்கம், எளிமையாய்ப் பழகுவதால் வரும். அன்(பு)உடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், இவ்இரண்டும், பண்(பு)உடைமை என்னும் வழக்கு. பண்பாளரின் இரண்டு சிறப்புகள்: அன்பும்,…
இனிய தமிழ்மொழி – அழ.வள்ளியப்பா
இனிய தமிழ்மொழி தாய்சொல்லித் தந்த மொழி தாலாட்டில் கேட்ட மொழி சந்திரனை அழைத்த மொழி சாய்ந்தாடிக் கற்ற மொழி பாட்டிகதை சொன்ன மொழி பாடிஇன்பம் பெற்ற மொழி கூடிஆட உதவும் மொழி கூட்டுறவை வளர்க்கும் மொழி மனந்திறந்து பேசும் மொழி வாழ்க்கையிலே உதவும் மொழி எங்கள் தாய்மொழி-மிக இனிய தமிழ்மொழி. இனிய தமிழ்மொழி-அது எங்கள் தாய்மொழி. குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா : சிரிக்கும் பூக்கள்
பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6 -10 : தி.வே.விசயலட்சுமி
(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 1 – 5 தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6-10 நயங்கண்ட வள்ளுவர் நன்மணிபோல் நாமும் வயங்கண்டு கற்போம் விழைந்து. குறளே கொடுமை களைந்திடும் கூர்வாள், திறனை அறிவோம் தெளிந்து. போரற்று வையம் புதுவையம் ஆவதற்கே சீர்பெற்ற தீங்குறளே சிறப்பு. குறள்நெறி பேணின் குறையா வளங்கள் திறம்படப் பெறுவோம் தேர்ந்து. ஒன்றேமுக் காலடிநூல் காட்டும் அறநெறியால் வெல்வோம் விதிப்பயனை நாம். -புலவர் தி.வே.விசயலட்சுமி (பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11…
