தமிழ் வாழும்அன்றே! – பெருஞ்சித்திரனார்
‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது! ! தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டும் கொக்கரிப்புப் பேச்சாலும் தமிழ் வாழாது ! ஆர்த்தெழும் உள் உணர்வெலாம் குளி ருமாறே இமிழ் கடல்சூழ் உலகமெலாம் விழாக்கொண் டாடி ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ்வா ழாதே ! பட்டிமன்றம் வைப்பதினும் தமிழ்வா ழாது: பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது:” எட்டி நின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கி நாலும், தட்டி, சுவர் ,தொடர்வண்டி, உந்துவண்டி தம்மிலெல்லாம் “தமிழ் தமிழ்’…
காலம் அழைக்குதடா! -காசி ஆனந்தன்
காலம் அழைக்குதடா! மானம் எனுமொரு பானையில் வாழ்வெனும் தீனி சமைத்தவனே! – தமிழ் போனதடா சிறை போனதடா! அட பொங்கி எழுந்திடடா! காட்டு தமிழ்மறம்! ஓட்டு வரும்பகை! பூட்டு நொறுக்கிடுவாய்! – நிலை நாட்டு குலப்புகழ்! தீட்டு புதுக்கவி! ஏற்று தமிழ்க் கொடியே! முந்து தமிழ்மொழி நொந்து வதைபட இந்தி வலம் வரவோ? – இது நிந்தை! உடனுயிர் தந்து புகழ்பெறு! வந்து களம் புகுவாய்! நாறு பிணக்களம் நூறு படித்தநம் வீறு மிகுந்த குலம் – பெறும் ஊறு துடைத்திடு மாறு புறப்படு!…
இயற்கையான வளர்ச்சியை இடையிலே நிறுத்தாதே! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்
இயற்கையான வளர்ச்சியை இடையிலே நிறுத்தாதே! பேதைப் பருவத்தில் காதைத் திருகாதே! வாதைச் செய்தேயவர் வசந்தம் திருடாதே! பாதை பள்ளம் கல்லுமுள்ளு ஓடட்டும் ! மேதை மேன்மை இங்கே ஆரம்பிக்கப்படும்! மரம் ஏறியே மார்பு தேயட்டும்! கரம் சிறாய்ப்பு வலியும் அறியட்டும்! நீச்சல் அவசியம் கற்றுத் தேறட்டும்! காய்ச்சல் வந்தாலும் மழையில் நனையட்டும்! மேய்ச்சல் மாடுகளை ஓட்டி மகிழட்டும்! பாய்ச்சல் செய்தே ஆற்றில் நீந்தட்டும்! சாளரச் சிறை ஞாயிறாவது திறக்கட்டும்! காலற ஓடியாடி ஆனந்தமாய் ஆடட்டும்! பாலர் காலம் நினைவில் பதியட்டும்! கோளாறு செய்யாதே இயற்கையா…
மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 5/5 – கருமலைத்தமிழாழன்
(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 4/5 தொடர்ச்சி) மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 5/5 இந்தியாவில் மட்டுமன்றி பிரான்சு நாட்டில் இயங்குகின்ற பேரவைதான் அசாம் தன்னில் சந்தமிகு துவக்கவிழா காணு கின்றோம் சார்ந்திருக்கும் மேகாலய மாநி லத்தில் நந்தமுடன் நாளையங்கே துவக்கு கின்றோம் நன்றாகப் பேரவைதான் வளர்வ தாலே சிந்தனைகள் ஒன்றாகி உலக மெல்லாம் சிறப்பாக நட்புறவோ ஓங்கும் நன்றாய் ! வெற்றுரைகள் அமர்ந்துபேசி கலைவ தன்று வேதனைகள் தீர்க்கின்ற செயல்கள் செய்து நற்றொண்டாய் கல்விகற்க இயலா ஏழை…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ங] – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் – அறிவிப்பு தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ங] 1.முன்னுரை – முற்பகுதி நாட்டு விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் புரட்சி நடத்திய போராளிகளை உலகம் அன்று முதல் இன்று வரை கண்டு வருகிறது. ஆயுதம் ஏந்தாமல் மக்கள் உள்ளங்களில் தம் எண்ணங்களை விதைத்துப் புரட்சி ஏற்படுத்தும் போராளிகளையும் உலகம் சந்தித்து வருகிறது. ஏட்டில் எழுத்தாலும், நாட்டில் உரையாலும் செயலாலும் களத்தில் நின்றும், மக்கள் நலனுக்காகப் போராடிய சிந்தனையாளர்கள் சிலரே உள்ளனர். அத்தகையோருள் எண்ணத்தக்க ஒருவரே தமிழ்ப்போராளிப் பேராசிரியர் சி.இலக்குவனார்….
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.27. ஒழுக்க முடைமை
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.26.தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 27. ஒழுக்க முடைமை ஒழுக்க மென்ப துயர்ந்தோர் நடையே. ஒழுக்கம் என்பது உயர்ந்த மனிதர்களின் குணநலன் ஆகும். அருளறி வமைந்தவை யாள்பவ ருயர்ந்தோர். அன்பும் அறிவும் அமைந்து அவற்றைச் செயலிலும் காட்டுபவர்கள் உயர்ந்த மனிதர்கள் ஆவர். அவர்நடை பெரியோர்க் கடங்கி யொழுகல். பெரியவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவர்களது நல்லியல்பு ஆகும். இருக்கை யெழுத லெதிர்பின் செல்லல். பெரியவர்களைக் கண்டதும் இருக்கை விட்டெழுதலும் அவர்கள்பின் சென்று வழியனுப்புதலும் நல்லொழுக்கம் ஆகும். நினைவுஞ் சொல்லும் வினையுமொன் றாக்கல்….
உழப்பின் வாரா உறுதிகள் உளவோ? – பட்டினத்தடிகள்
உழப்பின் வாரா உறுதிகள் உளவோ? உழப்பின் வாரா உறுதிகள் உளவோ கழப்பின் வாராக் கையற வுளவோ அதனால் நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை வேரற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து அன்பென் பாத்தி கோலி முன்புற ……(5) மெய்யெனும் எருவை விரித்தாங் கையமில் பத்தித் தனிவித் திட்டு நித்தலும் ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி நேர்நின்று தடுக்குநர்க் கடங்கா திடுக்கண் செய்யும் பட்டி அஞ்சினுக் கஞ்சியுட் சென்று …..(10) சாந்த வேலி கோலி வாய்ந்தபின் ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக் கருணை இளந்தளிர் காட்ட அருகாக் காமக்…
பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 16-20 : தி.வே.விசயலட்சுமி
(பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 11 – 15 தொடர்ச்சி) பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 16-20 16.பெருவாழ்வு வேண்டின் குறள்நயம் பேணித் திருவுடன் வாழ்தல் திறம். 17.வாழ்வாகி மெய்யாய் வளரொளியாய் நெஞ்சினில் வாழும் குறளை வழுத்து. 18. தேடுகின்ற மெய்ப்பொருள் யாவும் குறள்நூலில் ஓடிவந்து நிற்கும் உணர். 19. வள்ளுவன்சொல் ஓவியம் வண்ணமாய்த் தீட்டுவார் தெள்ளிய நெஞ்சுடை யார். 20. எப்பாலும் ஏற்கும் எழிலான இன்குறளைத் தப்பாமல் கற்போம் தெளிந்து. – புலவர் தி.வே.விசயலட்சுமி பேசி…
மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 4/5 – கருமலைத்தமிழாழன்
(மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 3/5 : தொடர்ச்சி) மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 4/5 அமைச்சரினை வரவழைத்து இதயா ரிசுவி அரும்விருதை ஒட்டமா வடியில் தந்தே எமையெல்லாம் பெருமைசெய்த சிறப்பெல் லாமே எமையிணைத்த பேனாவின் நட்பா லன்றோ அமைதியான கொட்டகலா மலையின் ஊரில் அமைந்திருக்கும் கல்லூரி தனில மர்த்தி எமையெல்லாம் சிறப்பித்த சுமதி என்னும் எழிற்கவிஞர் நட்பெல்லாம் பேனா வாலே !! நல்லமுத பேனாநண்பர் பேரவை யாலே நல்லவர்கள் பன்னூறு நட்பாய் ஆனார் சொல்லமுத உரைகளாலே நெஞ்சை …
சிறகுகள் தேவையில்லை – மரு.பாலசுப்பிரமணியன்
பறக்கத் துணிந்தவர்க்கு இறகுகள் பாரமில்லை சிறக்கத் துணிந்தவர்க்கு சிறகுகள் தேவையில்லை இறக்கத் துணிந்தவர்க்கு மரணமொரு அச்சமில்லை துறக்கத் துணிந்தவர்க்குத் துணியுமொரு மானமில்லை மறக்கத் துணிந்தவருக்குப் தோல்வியொரு துக்கமில்லை நடக்கத் துணிந்தவர்க்குப் பாதையொரு தூரமில்லை அடக்கத் துணிந்தவர்க்குக் காமமொரு கடினமில்லை மடக்கத் துணிந்தவர்க்கு நாவுமொரு நீளமில்லை படிக்கத் துணிந்தவர்க்கு வறுமையொரு விலக்கில்லை முடிக்கத் துணிந்தவர்க்கு யுத்தமொரு சத்தமில்லை அகழத் துணிந்தவனுக்கு அடர்பாறையொரு தடையில்லை பழகத் துணிந்தவனுக்கு மொழியுமொரு தடங்கலில்லை கொடுக்கத் துணிந்தவனுக்கு பொருளொரு குறையில்லை தடுக்கத் துணிந்தவனுக்குப் புனலுமொரு பொருட்டில்லை வாழ்த்தத் துணிந்தவனுக்கு வார்த்தையொரு பஞ்சமில்லை…
கேளேன்! – கெர்சோம் செல்லையா
நீர் காண்பதுபோல் நான் காண …. ஊர் முழுதும் சொத்தும் கேளேன்; உணவு, உடை, வீடும் கேளேன்; பார் புகழும் பேரும் கேளேன்; பரிசு, பொருள் என்றும் கேளேன். நீர் காணும் காட்சியைத்தான், நான் காண விரும்புகின்றேன். நேர்மையாய் பார்க்கும் இறையே, நெஞ்சில் உம் ஆவி கேட்டேன். -கெர்சோம் செல்லையா.
இந்தியா ஒரே நாடென்றால் ஏன் வரவில்லை காவிரி? – தமிழ்நெஞ்சன்
இந்தியா ஒரே நாடென்றால் ஏன் வரவில்லை காவிரி? காலில் முள் குத்தினால் கைபோகும் எடுக்க கண்களில் கண்ணீர் வரும் வலி உணர்த்தும் மூளை இது உடலியக்கம் உயிரியக்கம் ஆனால் இந்தியா ஒரே நாடு என்றே கூப்பாடு இருந்தும் ஏன்வரவில்லை காவிரி? பாலாறு? முல்லை பெரியாறு? இந்தியா நாடல்ல துணைக்கண்டம் தமிழகம் மாநிலமல்ல தனிநாடு ஒரேநாடென்றால் கருநாடகாவில் இருந்து தமிழன் ஏதிலியாய் தமிழ்நாட்டிற்கு வருவதேன்? ஆங்கிலேயன் வருவதற்கு முன் இந்தியா இல்லை 56 தேசமாக இருந்தது இந்து ×தமிழன் இந்தி ×தமிழ்மொழி இந்தியா × தமிழ்நாடு…
