முனைவர் க.சிரீதரனுக்குத் தமிழ்ச்சான்றோர் விருது – வாழ்த்துப்பா

  தமிழகப்புலவர்குழு   கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர்  முனைவர் க.  சிரீதரனுக்குத் தமிழ்ச்சான்றோர் விருது வழங்கியது.     பங்குனி 07, 2047 / மார்ச்சு 20, 2016 அன்று  நடைபெற்ற தமிழகப் புலவர் குழுவின்  107ஆவது  கூட்டத்தை முன்னிட்டுப்பிற்பகல் கருத்தரங்கம் நடைபெற்றது.  சங்க இலக்கியங்களில் அறம், வீரம்,  காதல்,  நட்பு, போன்ற  பல்வேறு தலைப்புகளில்  தமிழ்ச்சான்றோர்கள் உரையாற்றினர்.   முனைவர் மறைமலை இலக்குவனார்,  கவிஞர்  பொன்னடியான் வாழ்த்துரையாற்றினர். கி. ஆ. பெ.வி. கதிரேசன்  நன்றி நவின்றார். இந்நிகழ்வின் பொழுது . கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் …

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! – பாரதிதாசன்

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே! வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே வீரனின் வீரமும், வெற்றியும் நீயே! தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ? தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ? சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய் தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ? செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே! நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே! முந்திய நாளினில் அறிவும் இலாது மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது செந்தாமரைக் காடு பூத்தது போலே செழித்தஎன்…

பெண்ணை மடல் மா – உருத்ரா இ.பரமசிவன்

பெண்ணை மடல் மா பெண்ணை மடல்மா கலித்தல் அன்ன‌ எருக்கம் சூடி உருக்கம் பயின்று ஆயிழைப் பொலங்கிளர் வாணுதல் எய்ய‌ இல் இல் அடுத்து ஊர்ந்தனை மன்னே! தகரக்கூந்தல் கனலன் குரலென‌ கூரிய வீசும் அவள் நிலை அறியா புல்லியக்கல்லா நெடுமகன் போல மடலேறு ஆண்தகை மடம் கொண்டன்ன‌ அவள் பயிர் மடமே உணரா நின்று உகுத்தனை என்னே விரிஉளை அலரி. தூற்றல் கொடுநோய் அவள் உற்றது அறிதி. குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர்முள் செத்தென போர்த்த நீள்வரிப்பெண்ணை நெடுமா தொலைச்சிய‌ செல்தி!…

நீண்ட வழிபோக வேண்டும்! – கவிமணி தேசிகவிநாயகம்

கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெருங் காடும் செடியும் கடந்துவந்தேன்; எல்லை விரிந்த சமவெளி – எங்கும்நான் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன். கட்டும் அணையேறிச் சாடி வந்தேன்;-அதன் கண்ணறை தோறும் நுழைந்துவந்தேன்; திட்டத் திடர்களும் சுற்றிவந்தேன்-மடைச் சீப்புகள் மோதித் திறந்துவந்தேன். காயும் நிலத்தழல் ஆற்றிவந்தேன்-அதில் கண்குளி ரப்பயிர் கண்டுவந்தேன்! ஆயும் மலர்ப்பொழில் செய்துவந்தேன்-அங்கென் ஆசை தீரவிளை யாடிவந்தேன். ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்; ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல் ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன். ஆயிரம் காலால் நடந்துவந்தேன்-நன்செய் அத்தனையும் சுற்றிப் பார்த்துவந்தேன்; நேயமுறுப்…

மாற்றம் – கவிக்கோ ஞானச்செல்வன்

மாற்றம் ஞாலம் தோன்றிய நாள்முதலாய் நடந்தன நடப்பன மாற்றங்கள் காலம் ஓடும் வேகத்தில் கழிந்தன புகுந்தன எத்தனையோ! மேலாம் வளர்ச்சி மாற்றமின்றி மேவுதல் என்பது முயற்கொம்பே! சாலவும் எல்லாம் மாறிடினும் சால்பும் அறமும் மாறாவே! அறிவியல் வளர்ந்த காரணத்தால் அடைந்தன பற்பல மாற்றங்கள் பொறிகள் தம்புலன் மாற்றியொரு புதுமை தன்னைச் செய்ததுண்டோ? நெறிகள் மாறா நீணிலத்தில் நிற்பன நடப்பன மாறுவதால்! வறியோர் செல்வர் மாற்றமெல்லாம் வாழ்வின் உண்மை உரைப்பனவே! ஆடைகள் அணிகள் மாறிடினும் அரசியல் கட்சிகள் மாறிடினும் ஓடைகள் யாறுகள் மாறிடினும் உயர்மலை மடுவாய்…

தமிழ்வாணி உதவுவாயே! – புதுமைக் கவிஞர் பாரதியார்

   தமிழ்வாணி உதவுவாயே!  தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்; கண்ணீர்த் துளிவரஉள் ளுருக்குதல்இங் கிவைஎல்லாம் நீஅருளும் தொழில்கள் அன்றோ ? ஒளிவளரும் தமிழ்வாணீ! அடியேற்கு இவையனைத்தும் உதவு வாயே!   -சுப்பிரமணிய பாரதியார் தமிழ்வாணி படம் : நன்றி : தமிழ்வாணி பிரான்சு இதழ் +

சாதி ஒன்றில்லை சமயம் ஒன்றில்லை – குதம்பைச் சித்தர்

சாதி ஒன்றில்லை சமயம் ஒன்றில்லை – குதம்பைச் சித்தர் ஆண்சாதி பெண்சாதி யாகும் இருசாதி      வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய்      வீண்சாதி மற்றவெல்லாம். பார்ப்பார்கள் மேலென்றும் பறையர்கள் கீழென்றும்      தீர்ப்பாகச் சொல்வதென்ன? குதம்பாய்      தீர்ப்பாகச் சொல்வதென்ன? பார்ப்பாரைக் கர்த்தர் பறையரைப் போலவே      தீர்ப்பாய்ப் படைத்தாரடி குதம்பாய்      தீர்ப்பாய்ப் படைத்தாரடி. பற்பல சாதியாய்ப் பாரிற் பகுத்தது      கற்பனை ஆகுமடி குதம்பாய்      கற்பனை ஆகுமடி. சுட்டிடுஞ் சாதிப்பேர் கட்டுச்சொல் லல்லாமல்      தொட்டிடும் வத்தல்லவே குதம்பாய்     …

சின்னஞ் சிறிய குருவி பார்! – தழல் தேன்மொழி

சின்னஞ் சிறிய குருவி பார்! சிலிர்த்துப் பறக்கும் அழகைப் பார்! கன்னங் கரிய குஞ்சுடன் களித்து மகிழும் அன்பைப் பார்! தென்னங் கீற்று ஊஞ்சலைத் தேடி யமரும் அறிவைப்பார்! புன்னை மரத்தில் கூட்டினைப் பொருந்தக் கட்டும் திறனைப்பார்! முன்றிலில் காய் நெல்லினை முனைந்து கொறிக்கும் முயற்சிபார்! சின்ன சின்ன கால்களால் சிலிர்க்க நடக்கும் விரைவைப் பார்! தன்னைத் தானே இயக்கியே தன்னின் குடும்பம் பேணுமே! உன்னை வளர்த்துக் கொள்ளவே உயர்ந்த கல்வி அளிக்குமே! விடுதலை யாய் வாழுமே, வீண் செயல்கள் இல்லையே! அடிமை வாழ்வில்…

நியாயத்திற்கு நிழலாய் இருப்பதே நட்பு! – ஏ.எச்.யாசிர் அசனி

நியாயத்திற்கு நிழலாய் இருப்பதே நட்பு! உதிர்க்கப்பட்ட சொற்களில், உதவி நீட்டுவதல்ல நட்பு, சொற்கள் உதிருமுன், உதவிகரம் நீட்டுவதே நட்பு. தீமைகளுக்குத் தீனியாய் இருப்பதல்ல நட்பு, தீமைகளைத் தீயிட்டு அழிப்பதே நட்பு. பொருள்தரா, இணைந்திருக்கும் இரட்டைக் கிளவியாய், இருப்பதல்ல நட்பு, இணைந்தாலும், பிரிந்தாலும் பொருள்தரும், அடுக்குத்தொடராய் இருப்பது நட்பு. கலவரங்களுக்குக், கருவாய் இருப்பதல்ல நட்பு, அதனைக், கருவிலேயே கருக்கலைப்பு செய்வதே நட்பு. அநீதிக்கு அடிக்கோடாய் இருப்பதல்ல நட்பு, நியாயத்திற்கு நிழலாய் இருப்பதே நட்பு . ஏ.எச்.யாசிர் அசனி, இலால்பேட்டை அபுதாபி. தொடர்புக்கு : 0556258851

மாசிலாக்கருவூலம் – காவிரிமைந்தன்

மானுடம் முழுமைக்கான மாசிலாக்கருவூலம் இட்டது ஈரடிகூட இல்லை! இருப்பினும் தொட்டது வான்புகழ் என்றார்! சொற்களில் சுருக்கம் வைத்து பொருள்தனின் பரப்பை நீட்டும் வையத்தின் பொதுமறை தந்த – திரு வள்ளுவன் புகழ்தான் என்ன? பாலென மூன்றைப் பிரித்து – அதி காரங்கள் நூற்று முப்பத்து மூன்றெனக்கண்டு உலகம் வழக்கத்தில் கொண்டு உள்ள தலைப்புகள்தனிலே குறள்கள் பத்து வாழைதான் குலைதான் தள்ளி வைத்ததைப் போல அழகு வழிவழி வந்தவரெல்லாம் வாசித்து மகிழமட்டுமின்றி.. வழியாய் பூசித்து ஏற்கவைத்தார் வாசுகி கணவர் அன்றோ? ஆக்கமும் ஊக்கமும் அங்கே பாக்களாய்…

உயிர்த்தமிழில் பாடி வைப்பேன்! – கவிஞர் கலைக்கூத்தன்

நினைக்கிறதை உயிர்த்தமிழில் பாடி வைப்பேன்!                 நீடுலகில் தான்வாழும் வரையென் அன்பு மனைக்கிழத்தி மேடைகளில் முழங்கி நிற்பாள்!                 மக்களெலாம் முத்தமிழ் பயின்று போற்றும் வினைக்கென்றே வளர்த்திடுவேன்! இம்மா ஞாலம்                 வெல்தமிழன் சிறப்புணரக் கேட்ட பின்பு எனைக்கொன்று விடுபடைப்பே! புலமை மூத்தோன்                 என்சிதைக்குத் தமிழ்ப்பாடித் தீமூட் டட்டும்!                                                                                                                                 – கவிஞர் கலைக்கூத்தன்     (மும்பையில் வாழ்ந்து மறைந்த கவிஞர்)   http://www.tamillemuriya.com/LemArticleFull.php?as=534

பகுத்தறிவுக் களஞ்சியம் சிவகங்கை இராமச்சந்திரனார் – ப.சீவானந்தம்

காலத்தை வென்ற பகுத்தறிவுக் களஞ்சியமே! சிவகங்கை தந்த இராமச்சந்திரப் புதையலே உனக்கு இன்று காணுகின்ற நினைவுநாள் நான்கு! கேடுதரும் பழைமையை நீக்கி விட மேடுபள்ளம் பாராது சுற்றிய செம்மலே! சமூகநீதி நிலைத்திடவும் சமதருமம் தழைத்திடவும் பொதுவுடைமை வளர்ந்திடவும் மனிதநேயம் மலர்ந்திடவும் இன உணர்வு வளரவும் வாழ்ந்தவரே! நீ பம்பரமாய்ச் சுழன்று, உன் உடல் நலத்தையும் பாராமல் மருதுபாண்டியரைத் தூக்கிலிட்ட திருப்பத்தூரில் மிசன் மருத்துவமனை சிகிச்சைப் பெறும்போது ஈரக் கண்களோடு அமர்ந்திருந்தேன்! நீ சாகும் தறுவாயில் சிந்திய  நெறிகள் உன் உள்ளத்தை ஆழமாகத் தொட்டன சுயமரியாதைச்…