உயிர்த்தமிழில் பாடி வைப்பேன்! – கவிஞர் கலைக்கூத்தன்
நினைக்கிறதை உயிர்த்தமிழில் பாடி வைப்பேன்! நீடுலகில் தான்வாழும் வரையென் அன்பு மனைக்கிழத்தி மேடைகளில் முழங்கி நிற்பாள்! மக்களெலாம் முத்தமிழ் பயின்று போற்றும் வினைக்கென்றே வளர்த்திடுவேன்! இம்மா ஞாலம் வெல்தமிழன் சிறப்புணரக் கேட்ட பின்பு எனைக்கொன்று விடுபடைப்பே! புலமை மூத்தோன் என்சிதைக்குத் தமிழ்ப்பாடித் தீமூட் டட்டும்! – கவிஞர் கலைக்கூத்தன் (மும்பையில் வாழ்ந்து மறைந்த கவிஞர்) http://www.tamillemuriya.com/LemArticleFull.php?as=534
பகுத்தறிவுக் களஞ்சியம் சிவகங்கை இராமச்சந்திரனார் – ப.சீவானந்தம்
காலத்தை வென்ற பகுத்தறிவுக் களஞ்சியமே! சிவகங்கை தந்த இராமச்சந்திரப் புதையலே உனக்கு இன்று காணுகின்ற நினைவுநாள் நான்கு! கேடுதரும் பழைமையை நீக்கி விட மேடுபள்ளம் பாராது சுற்றிய செம்மலே! சமூகநீதி நிலைத்திடவும் சமதருமம் தழைத்திடவும் பொதுவுடைமை வளர்ந்திடவும் மனிதநேயம் மலர்ந்திடவும் இன உணர்வு வளரவும் வாழ்ந்தவரே! நீ பம்பரமாய்ச் சுழன்று, உன் உடல் நலத்தையும் பாராமல் மருதுபாண்டியரைத் தூக்கிலிட்ட திருப்பத்தூரில் மிசன் மருத்துவமனை சிகிச்சைப் பெறும்போது ஈரக் கண்களோடு அமர்ந்திருந்தேன்! நீ சாகும் தறுவாயில் சிந்திய நெறிகள் உன் உள்ளத்தை ஆழமாகத் தொட்டன சுயமரியாதைச்…
எங்கள் தமிழ் மொழிக்கு ஈடேது மில்லை! – பிரகாசம்
எல்லை யென்பதில்லை எங்கள் தமிழ் மொழிக்கு ஈடேது மில்லை- எங்கள் தமிழ்மொழி போன்றொரு தாயு மில்லை தமிழ்மொழி போன்றொரு தந்தையு மமில்லை தமிழ்மொழி போன்றொரு அறிவொளியு மில்லை தமிழ்மொழி போன்றொரு இலக்கியமு மில்லை தமிழ்மொழி போன்றொரு வளமு மில்லை தமிழ்மொழி போன்றொரு முதுமை யில்லை தமிழ்மொழி போன்றொரு புதுமை யில்லை தமிழ்மொழி போன்றொரு வண்மை யில்லை தமிழ்மொழி யேநாளும் ஆளும் அச்சமில்லை தமிழ்மொழியை போற்றுவோம் தயக்கமு மில்லை. பிரகாசம் http://siragu.com/?p=19900
சீராட்டும் என் தமிழ் மொழி! – வேதா
அன்புப் பெற்றோர் ஆசையாய்க் குலவி என்பிலும் உறைய ஊற்றிய மொழி என் தமிழ் மொழி மனத்தில் தேன் பாய்ச்சும் தினம்தினமாய். திக்குத் தெரியாத காட்டிலும் மனம் பக்குப் பக்கென அடித்த போதும் பக்க பலமாய் மரக்கலமாய் நான் சிக்கெனப் பிடிக்கும் என் தமிழ் மொழி. பிற மொழிக் கடலில் நான் நிற பேதம், பல பேதத்தில் புரளும் திறனற்ற பொழுதிலும் என் தமிழ் பிறர் உதட்டில் தவழ்ந்தால் மனமுரமாகும். கைகாட்டி, நீர்த் தெப்பம், வாழ்வின் வழிகாட்டி என்று என்னை நிதம்; தாலாட்டி மகிழ்வில் நாளும்…
என் இனிய தமிழ்மொழி – சக்தி சக்திதாசன், இங்கிலாந்து
என்னைத் தாலாட்டிய மொழி எனதருமைத் தாய் மொழி என் இனிய தமிழ் மொழி எண்ணமெல்லாம் நிறைந்த மொழி என்னை நான் தொலைத்த போது என்னுள்ளே புதைந்த போது எண்ணெய் ஆக மிதந்து என் எண்ணங்களை ஒளிரச் செய்த மொழி இதயத்தின் நாளங்கள் முகாரி மீட்டினாலும் இனிமையான கல்யாணப் பண் பாடினாலும் இதயத்தின் வலி மறக்க உதவும் மருந்தாய் இனிய என் தாய் மொழி என்றும் என்னுடனே முகமிழந்து போனாலும் இக்கொடிய உலகில் முதுமையில் வீழ்ந்து அமிழ்ந்து போனாலும் முகவரி இழக்காது இலக்கிய உலகில் முத்தாக…
செம்மை வாய்ந்த செந்தமிழ் – கிரிசா மணாளன்
செம்மை வாய்ந்த செந்தமிழ் எனது! வடமொழி யடைத்த மாமறைக் கதவினைத் திடமுடன் திறந்த தேன்மொழி எனது! மும்மையை யுணர்த்தி முப்பொருள் காட்டும் செம்மை வாய்ந்த செந்தமிழ் எனது! பொல்லாப் பிள்ளையி னருளினால் நம்பிமுன் தில்லையிற் கண்ட திருமொழி எனது! ஆறுசேர் சடையா னவைமுனம் அணிபெற நீறுசேர் சேரர் நிகழ்த்திய தீந்தமிழ்! தத்துவம் யாவும் தமிழ்மொழி யுணர்த்தலால் சத்தியஞ் செய்வேன் என்தாய்மொழி அதுவே! கிரிசா மணாளன் திருச்சிராப்பள்ளி girijamanaalanhumour@gmail.com
தமிழ் மொழி – பண்பட்ட பழமை மொழி : பனிகோ
தமிழ் மொழி – பண்பட்ட பழமை மொழி இறைவனோடும் இவ்விகத்தோடும் இணைந்து தோன்றிட்டு காலங்களைக் கடந்து வாழ்ந்திடும் பண்பட்ட பழமை மொழி அடர்காடுகளில் கரடுமலைகளில் அலைந்து திரிந்திட்ட முதல் மனிதன் இயற்கையோடு இணைந்து உறவாடி வடித்திட்ட இயற்கை மொழி சொல்லொன்றை உயிர் ஓவியமாய் உகமதில் வாழும் காவியமாய் சிந்தனையைக் கடைந்து படைத்து தீட்டிட்ட தொன்மை மொழி தானே விதையுண்டு தாவரமாய் வேரோடி ஆலமரமாய்த் தழைத்திட்டு இலக்கண இலக்கியம் வளம் கொழுத்துச் செழுத்திட்ட செம்மொழி தெலுங்கு கன்னடம் துளு மலையாளம் என இருபத்தொன்பது புதுமொழி விழுதுகள்…
தாயகத் தாயே போற்றியம்மா! – பவித்ரா நந்தகுமார்
ஈழத்தாய்க்கு அகல் வணக்கம். பெண் எனும் பெருமை பெற்று மனைவி எனும் உரிமை கொண்டு பெற்றாயம்மா புலி எனும் வேங்கையை! இல்லறத்தில் இனியவளாக ஈழத்தின் தாயாக வாழ்ந்து விடைபெற்றீர்கள் இந்நாளில் தாய் கன்றோடு பசி மறக்க நீங்களோ சேயை சேவைக்காக அனுப்பினீர்கள் ஈழத்தின் விடிவு காண பெற்றவள் மனம் கல்லானதோ இல்லை பெரும் ஈக மனம் அம்மா உங்களுக்கு! பிரபாகரன் எனும் தலைவன் பெயர் உச்சரிக்க எமக்குத் தானமாகத் தந்தீர்கள் புலியாகச் சேயினை! கொடு நோய் உங்களை அழைக்க இந்தியக் கொடுங்கோல் உங்களை அவமதிக்க…
பார்வதித்தாயே! பார் வதியும் தாய் நீயே! -செந்தமிழினி பிரபாகரன்
தாய் என்ற சொல்லுக்கே தாயே நீ தானே? தாளாமல் அழுகின்றோம் தாயே வருவாயே! வீரத்தின் இலக்கணத்தைப் பெற்றெடுத்த பெரும் பேறே பார் போற்றும் பார்வதியே! பார் வதியும் தாய் நீயே! பேரெடுத்த பிள்ளை தனை மடி ஏந்திய தமிழ்த் தாயே.. இன வலி சுமந்து நீ பட்ட பாடு… வரலாறு பாடும்.. விழி நீர் சுமந்து என்றும்! உற்ற துயர் புற்றெடுக்க வெற்றுடலாய் உணர்விழந்து உலகெல்லாம் உறவாட உறவிழந்து உயிர் வாடினாய் பட்ட பாடு போதுமம்மா போய் வாடி தாயே! கொடியோர் முன் உயிர்…
இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி! –இரா. இரவி
இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி இனிய உச்சரிப்பின் இனிமை தமிழ்மொழி உலகப் பொதுமறையை உலகிற்குத் தந்திட்ட தமிழ்மொழி உலகமொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி காவியங்களும் காப்பியங்களும் நிறைந்த தமிழ்மொழி கனிச்சாறையும் கற்கண்டையும் மிஞ்சிய தமிழ்மொழி எண்ணிலடங்காச் சொற்கள் கொண்ட தமிழ்மொழி எண்ணத்தை உயர்வாக்கும் உயர்ந்த தமிழ்மொழி பழமைக்குப் பழமையான தொன்மைமிகு தமிழ்மொழி புதுமைக்குப் புதுமையான புத்துணர்வுமிகு தமிழ்மொழி இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்மொழி இணையில்லாப் புகழ்மிக்க உயர்தனித் தமிழ்மொழி முதல் மனிதன் பேசிய முதல்மொழி தமிழ்மொழி மூத்தோரை மதிக்கும் மரியாதை மிக்க தமிழ்மொழி உலகிற்குப்…
உயிர் நாவில் உருவான உலகமொழி – ஃகிசாலி
உயிர் நாவில் உருவான உலகமொழி நம் செம்மொழியான தமிழ் மொழியே மென்மையும் தொன்மையும் கலந்த தாய் மொழியே நீ தானே தனித்துத் தவழும் தூய மழலை தேன் மொழியே இலக்கணச் செம்மையில் வரம்பே இல்லா வாய் மொழியே மும்மைச் சங்கத்தில் முறை சாற்றும் இயற்கை மொழியே இலக்கணப் பொருளின் அணிச்சிறப்பாய் அளவெடுத்த செய்யுள் மொழியே நம் தாய் மொழியாம்! – ஃகிசாலி http://www.eegarai.net/t74296-topic
செம்மொழிச் செந்தமிழே! நீ வாழி!
செம்மொழிச் செந்தமிழே! உலக மொழிகள் மூவாயிரம் அதனில் முதற்மொழியாகிய தமிழ்மொழியே! குமரிக்கண்டத்தில் பிறந்த செம்மொழிச் செந்தமிழே! தமிழர்கள்தாம் உலகிற் தோன்றிய மாந்தர்கள் என்பதினை உலகினிற்கறிய வைத்த செம்மொழியே! உலகமொழிகளில் இயன்மொழிக்கென்று பதினாறு பண்புகளைக் கொண்டிருக்கும் செம்மொழிச் செந்தமிழே! திராவிட மொழிகட்கெல்லாம் தாய்மொழியாம் தமிழ்மொழியே! இயல், இசை, நாடகத் தமிழெனும் இலக்கிய முத்தமிழே! ஆரிய மொழிகளின் ஆதிக்கத்திலிருந்து சீரழியாது வந்த பைந்தமிழே! உனக்குப்பின் தோன்றிய மொழிகளெல்லாம் அழிந்துவரும் நிலையில் நீ மட்டும் உலகளவில் வளர்ந்துவரும் செந்தமிழே! முச்சங்கங்கள் வைத்து வளர்க்கப்பட்ட தாய் மொழியாம் தமிழ் மொழியே!…
