வேதம் ஓதாதே! – அகப்பேய்ச் சித்தர்

தாந்தித்திமி தந்தக்கோனாரே தீந்திமித்திமி திந்தக்கோனாரே ஆனந்தக்கோனாரேஅருள் ஆனந்தக்கோனாரே ஆயிரத்தெட்டு அண்டமுங்கண்டேன் அந்தவட்டத்துள்ளே நின்றதுங்கண்டேன் மாயிருஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன் மந்தமனத்துறுஞ் சந்தேகந்தீர்த்தேன். (தாந்) பொய்யென்று சொல்லாதே அகப்பேய் போக்குவருத்துதானே மெய்யென்று சொன்னாக்கால் அகப்பேய் வீடுபெறலாமே. வேதமோதாதே அகப்பேய் மெய்கண்டோ மென்னாதே பாதநம்பாதே அகப்பேய் பாவித்துப் பாராதே.” – அகப்பேய்ச் சித்தர்

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 14 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 13 தொடர்ச்சி) அரசியும் சிறிதே ஆறுதல் கொண்டு,                 “இவ்விதக் கொடுஞ்செயல் இயற்றிய கொலைஞரை யாவரே யாயினும் ஒறுத்திட லறமால் , அறங்கூ றவையம் அடைந்து விரைவில் நிகழ்ந்தவை கூறல் நேர்வாய் தோழீ” எனலும் இருவரும் மின்னெனச் சென்று அவைய வாயிலை அடைய ஆங்குள காவலன் இவர்களைக் காணப் பெற்றதும் கையூட் டின்றி உள்விடா னாயினும் வழிவிட் டவரை விழைவுடன் பணிய துலைநா வன்ன சமனிலைக் குரிய இறைவனை யணுகலும், எழுந்து நின்று இருக்கை யளிக்க, இனிதா யமர்ந்தபின்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 14: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 13: தொடர்ச்சி) 14   நெல்லை நகரத்தில் சிறந்து விளங்கிய ம.தி.தா. இந்துக் கல்லூரியை விட்டு நீங்கி, விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரிக்கு வந்ததுதான் பெருங்குற்றம் என்று தன்னைத்தானே நொந்து கொள்கிறார் இலக்குவனார். ‘               நெல்லைக்குரிய நீள்கல் லூரியில்                 பணிவிட் டிங்குப்படர்ந்ததே குற்றம்’ 16   நெல்லைக் கல்லூரியில் தலைமைப் பேராசிரியராய்ப் பதவிபெற வாய்ப்பில்லை என்பதைத் தவிர, வேறுகுறை எதுவும் இல்லை. ஆயினும் உண்மைத் தொண்டு ஆற்றுவதற்கு உரிய இடம் நெல்லையே. தமிழ்ப் புலவர்க்குத் தனிப்…

அறமே தெய்வம்! – பாரதியார்

அறமொன் றேதரு மெய்யின்ப மென்றநல் லறிஞர் தம்மை யனுதினம் போற்றுவேன் . . . தேசத் துள்ள இளைஞ ரறிமினோ! அறமொன் றேதரு மெய்யின்பம்; ஆதலால் அறனை யேதுணை யென்றுகொண் டுய்திரால். – பாரதியார்  

நம் கடமை! – பாரதியார்

  கடமை யாவன தன்னைக் கட்டுதல் பிறர்துயர் தீர்த்தல் பிறர்நலம் வேண்டுதல் . . . .     . . .       . . .       . . . உலகெலாங் காக்கும் மொருவனைப் போற்றுதல் இந்நான் கே இப் பூமியி லெவர்க்கும் கடமை யெனப்படும் . . .   . . . நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல் இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் சிந்தையே இம்மூன்றும் செய்! – பாரதியார்

பாரதி கும்மி – கவிக்கோ ஞானச்செல்வன்

பாடுங்கள் மக்கள் பாடுங்கள்-நறும் பைந்தமிழ்ப் பாமாலை பாடுங்கள் (பாடு) நாடுங்கள் நற்கவி பாரதியை-நாளும் நாடி நறுந்தமிழ் பாடுங்கள்-புகழ் பாடி அவன்பதம் போற்றுங்கள். (பாடு) வீரம் செறிந்த கவிஞனவன்-தமிழ் வீரம் விளைத்திட்ட வேந்தனவன் ஈரம் படைத்திட்ட நெஞ்சனவன்-அருள் ஈகைக் குணம் சான்ற தூயனவன். (பாடு) சக்தி அருள் பெற்ற சித்தனவன்-கனிச் சாறு பிழிந்தூட்டும் பக்தனவன் தத்துவம் சொன்னநல் முக்தனவன்-துயர் தாங்கும் மனவலி உற்றவனே. (பாடு) விடுதலைப் போர்தனில் சிங்கமவன்-மக்கள் வீறு கொளக்கவி பாடியவன் கொடுமை யழிப்பதில் தீயனையான்-உயர் குன்றென வேபுகழ் கொண்டவனே. (பாடு) சாதி மதங்களைச்…

தமிழையே கருதி உறுதி கொண் டெழுவீர் ! – சுத்தானந்த பாரதியார்

எண்ணுறும் போது தமிழையே  யெண்ணீர் இசைத்துழி தமிழையே  யிசைப்பீர் பண்ணுறும் போது தமிழ்ப்பணி தனையே பழுதறப் பண்ணியின் புறுவீர் உண்ணிடும் போதும் உறங்கிடும் போதும் உயிருளந் துடித்திடும் போதும் பண்ணினு மரிய தமிழையே  கருதிக் காரிய வுறுதி கொண் டெழுவீர் ! கவியோகி சுத்தானந்த பாரதியார்

நடைமுறைப் புத்தாண்டில் உறுதி கொள்வீர்!

உறுதி கொள்வீர்! – கவிஞர் முடியரசன் முதலோடு முடிவில்லாப் பெருமை, நான்கு மொழிபெற்றும் மூப்பில்லா இளமைத் தன்மை, அதனோடு மிகுமினிமை, காலஞ் சொல்ல அமையாத பழந்தொன்மை, தனித்தி யங்கி உதவுநிலை, வளர்பண்பும், எளிமை, யாவும் உயர்தனிச்செந் தமிழுக்கே உண்டாம்; மேலும் புதுமைபெற முடிசூடி அரசு தாங்கப் புலவரெலாம் இளைஞரெலாம் உறுதி கொள்வீர்! தெலுங்குமொழி பிறமொழிகள் உயர்தல் காண்பார் தேன்மொழியாம் தமிழ்மொழியை வாழ்க என்றால் கலங்குகின்றார் ஒருசிலர்தாம்; உயிரா போகும்? கலங்கற்க! தமிழ்வாழ்ந்தால் யாரும் வாழ்வர்; புலங்கெட்டுப் போகாதீர்! ஆட்சி செய்யப் புன்மொழிகள் வேண்டாதீர்! தமிழின்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 13 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 12) “இன்பம் விளைப்பதும் இனியமெய்க் காதல் இயலா தெனினும் இனியது மதுவே பாற்சுவை யறியார் பாலுக் காக வருந்துவ தின்று; பொருந்திய அன்பனின் காதலை யறியாய்! காதற் பொருட்டு நோதலு மின்று; ஓதிய காதற் சுவையைத் துய்த்தேன்; துய்த்தபின் அதனை இழந்து வருந்துதல் இயலுமோ கூறாய்?” எனலும் தோழியும் வினவும் தலைவிக்கு “காதல்” என்பதும் கற்பனைச் சொல்லே நோதல் செய்தலும் நொய்யோர் மாட்டே மக்கள் குழுவும் வளர்ந்து பெருகிட மன்னாக் காதல் மன்னிய கருவியாம் மக்களை யழித்திட வலிபெற்…

செந்தோழர் நல்லகண்ணு வாழ்க! – புதுவைத் தமிழ்நெஞ்சன்

தோழர் நல்லகண்ணு(மார்கழி 12, 1956 / திசம்பர் 26, 1925) செந்தோழர் நல்லகண்ணு நீடுவாழ்க! செங்கொடித் தோழர் நல்ல கண்ணு சிந்தனை ஆற்றல் உள்ளவராம் – அவர் செங்களம் ஆடிடச் சிறிதும் தயங்கார் செழுமை நெஞ்ச நல்லவராம். உழைக்கும் மக்கள் உள்ளம் எல்லாம் உணர்வில் கலந்த உழைப்பாளி – அவர் அழைத்தால் எதற்கும் அணிய மாவார் அவரே ஏழைப் பங்காளி. அரசியல் என்பதை ஆக்க முள்ள அறிவு வழிக்குச் சென்றவராம் – போர் முரசம் போல மூச்சும் பேச்சும் முயன்றே இங்கே அடிப்பவராம். நெடிய…

கடவுளாய் நின்ற மழை! – தமிழ்சிவா

மழை உச்சந்தலையில் உட்கார்ந்து கிச்சுகிச்சு மூட்டும் ஒரு குழந்தை மழை! காலை நேரத்தில் ‘கோல’ப்பெண்களுடன் கொஞ்சி விளையாடும் ஒரு குறும்பு மழை! காயசண்டிகைக் கடலை நேயமுடன் நெருங்கி முத்தமிடும் ஒரு முத்து மழை! அரசியல் பிழைத்தோர்க்கு வாரக்கணக்கில் வகுப்பெடுக்கும் ஒரு புரட்சி மழை! ஆறுகளைக் கூறுபோட்ட அறிவிலார் மூளைக் கழிவுகளை அகற்றும் ஒரு துப்புரவு மழை! செம்புலப் பெயல்நீராய்த் தோன்றிச் சங்கப்புலவர்க்குக் காதல்சொன்னது ஓர் அந்தி மழை! முத்தொழில் செய்து கடவுளாய் நின்ற மழை! களவாடப்பட்ட எல்லாவற்றையும் மீட்டெடுக்க மீண்டும் மீண்டும் பெய்யெனப்பெய்து வென்ற…