வளர்த்திடுவீர் செந்தமிழை! – இலக்கியன்

வருக இன்றே! எல்லாரும் எழுதுகின்றார் பேசு கின்றார் இதுவரைக்கும் நந்தமிழ்க்கோ ஆட்சி யில்லை வல்லவராம் வாய்ப்பேச்சில் எழுத்தில், ஆய்வில் வளர்ப்பதுவோ தம்பெருமை, வருவாய்க் காகச் செல்வரெங்கும் வண்டமிழைப் புகழ்வர் எங்கும்! செழித்ததுவோ செந்தமிழும்! முனைவ ரெல்லாம் பொல்லாரே! காசுக்கே வாழு கின்ற போலிகளே! இவராலே தமிழா வாழும்? முனைவரென்ற பேராலே பல்லோர் உண்டு முன்வந்து தமிழ் வளர்க்க யாரு மில்லை தினமணியில் கட்டுரைகள் எழுதிச் செல்வார் திணையளவும் தமிழ்த்தொண்டில் நாட்ட மில்லார் வினைத்தூய்மை வினைத்திட்பம் கற்றி ருந்தும் விளையாட்டாய் இருக்கின்றார் பயனே இல்லார்! பனைமட்டைச்…

பிழைப்பு மொழிக்காய் உயிர்ப்பு மொழி துறப்பாயோ? – செந்தமிழினி பிரபாகரன்

உருச் சிதைந்த சிந்தனையில் தாய் மொழி தகர்த்து பிற மொழியால் முலாமிடும் செருக்கெடுத்த தருக்கருக்கு ஏதடா முகம்? முகமிழந்த முண்டங்கள் முகவரியும் தொலைத்த பின்னால் எதற்கடா வாழ்வு? ஏதடா வனப்பு? பிறப்பதில் பெறுவதல்ல இன அடையாளம்! பேறாய் பெற்ற தாய் மொழியே எம் முக அடையாளம்! மூத்த மொழி சரிந்து போக சொத்தை தமிழனாய் பார்த்திருப்பாயோ? தமிழன்னைக்கோர் துயர் என்றால் உனக்கென்று நினையாயோ? நேற்று வந்த மொழியெல்லாம் சேற்று வெள்ளமாய் அள்ளி செல்ல காற்றடித்தால் தொலைந்து போகும் துரும்போடா தமிழா நீ? பண்டைத் தமிழர்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 18 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 17 தொடர்ச்சி) அன்றுதொட் டனைவரும் ஆங்கே குழுமிப் பொன்னுல கினராய் மன்னிவாழ் நாளில் இன்னிசை யூட்டும் யாழினைத் தாங்கி மங்கை யொருத்தி வாயிலில் நின்றாள் யாழிடைப் பிறவா இசையே என்று யாவரும் வியந்திட யாழ்த்திறன் உணர்ந்த அரசி அயர்ந்தனள் அனைவரும் வியந்தனர் காதல னுக்கவள் சாவில் கற்பித்த இன்னிசைத் திறனே அவளும் மிழற்ற அரசி அவளை அடைந்து நோக்கலும் கண்ணொடு கண்கள் நோக்கின காதலர் இருவரும் தம்மை எளிதிலு ணர்ந்து தழீஇக் கொண்டு கெழீஇய காதல் இன்பம் துய்த்தபின்…

பல்வரி நறைக்காய் – உருத்ரா இ.பரமசிவன்

பிணி நீக்க ஈண்டு வருதி மன்னே!   பல்வரி நறைக்காய் தின்றனை போன்ம் மிடற்றிய தீஞ்சொல் மூசும் பாயல் களித்து ஆர்த்த கழிநெடு கங்குல் மறந்தனை விடுத்தனை மாறு மாறு வருகை. என்னென் கழறும் என்னறியும் தடம் கொல். இடம் வீழ்ந்த நெடுமா மறுக்கும் வெம்புலியன்ன ஊண் மறுக்கும் கால்கொள் வாழ்வும் மறுத்துச்சாயும் எனவாங்கு தூம்புடை வல்லெயிற்று அரவு தீண்டிய‌ நோவு மிக்குற்று நோன்றனள் மாதோ. நன்மா தொன்மா நனிமா இலங்கை நல்லியக்கோடன் யாழிய இசையின் நலம் கெட செய்தனை எற்று எற்று இவள்…

வானளந்த புகழ் உடையாய் ! – ஐ.உலகநாதன்

வானளந்த புகழ் உடையாய்! வசையுரைத்த பழிவடக்கர்             வாயடக்கி நெரித்தவள் நீ திசைவென்ற மன்னவர்தம்             செங்கோலில் சிரித்தவள்நீ இசைநின்ற கல்லிலெல்லாம்             இன்பவலை விரித்தவள்நீ விசும்பிடையே நீலஉடை             விரும்பித் தரித்தவள் நீ பாரதத்தாய் மார்பகத்தில்             பாலாகாச் சுரப்பவள்நீ பணிந்தாரைப் பரிந்தணைக்கும்             பண்பாட்டில் இருப்பவள்நீ சீரறிந்த திருக்குறளில்             வேரறிந்து நிற்பவள் நீ தித்திக்கும் புத்தமுதாய்             எத்திக்கும் சிறப்பவள் நீ நீரறிந்த மிச்சத்தை             நெருப்பறிந்த எச்சத்தை நானறியத் தந்தவள்நீ             நாடறிய வந்தவள்நீ தேனளந்த கருப்பொருளே            …

எல்லாம் தமிழிலே! – செ.சீனிநைனா முகமது

எல்லாம் தமிழிலே! அன்னை என்னைக் கொஞ்சிக் கொஞ்சி அன்பு பொழிந்தது தமிழிலே என் சின்னச் சின்ன இதழ்கள் அன்று சிந்திய மழலை தமிழிலே. நிலவு காட்டி அமுதம் ஊட்டிக் கதைகள் சொன்னது தமிழிலே அவள் புலமை காட்டி என்னைத் தாலாட்டி உறங்க வைத்தது தமிழிலே பிள்ளை என்று தந்தை சொல்லிப் பெருமை கொண்டது தமிழிலே நான் பள்ளிசென்றே அகரம் எழுதப் பழகிக் கொண்டது தமிழிலே. பருவம் வந்து காதல் வந்து பாட்டு வந்தது தமிழிலே அவள் உருவம் பார்த்தே உருகும் போதில் உவமை வந்தது…

என்று தமிழ்..? – புதுவைத் தமிழ்நெஞ்சன்

இந்தியினை எதிர்க்கின்றோம் அறுபதாண்டாய் என்கின்றீர் ஏற்றமென்ன தமிழுக்குச் செய்துவிட்டீர்? வந்த இந்தி ஆங்கிலத்தால் சொந்தத் தமிழ் தானழியும் வடுநீக்க வழியென்ன கண்டு விட்டீர்? எந்த மொழி வளமளிக்கும் என்றெண்ணிப் படிக்கின்றீர் எம்தமிழை அதனாலே அழித்து விட்டீர் செந்தமிழைக் காப்பதற்குப் பிறமொழிகள் பிணிநீக்கிச் செந்தமிழில் கல்வியினைக் கற்கவேண்டும் எதிர்க்கின்றோம் இந்தியினை என்றுசொன்னால் இந்நாள்மட்டும் எம்தமிழை மீட்பதற்கு என்ன செய்தீர்? எதிர்ப்பதொன்றே கொள்கையாக எண்ணாமல் இன்பத் தமிழ் எம்நாட்டில் விளைவதற்கு வழியும் செய்வீர்! கதிரொளியால் மறைந்தோடும் காலைப்பனி போலயிங்குக் கனித்தமிழில் கற்றாலே கசப்பு மாறும் கதிர்மணியை நிலமேற்கும்…

மூச்சே நம் மொழி! – மின்னூர் சீனிவாசன்

குழல்து ளைகளில் மேவும் செம்மொழிகுயில் குரலின் நெடிலிசை கூவும் செம்மொழி! மழலை மொழிக்கிளி பேசும் செம்மொழிமுடி மன்னர் மக்களோ டுயர்ந்த நம்மொழி! தாயாம் இயற்கையே தந்த செம்மொழிஇது தன்னோர் யானைவெண் தந்தச் செம்மொழி! ஓயாக் கடலொலி இழிழாம் எண்ணுவீர்நாம் உணர்ந்து வளர்த்தது தமிழாம் எண்ணுவீர்! முத்தமிழ்க்கலை யறிந்த செம்மொழிசுடர் முத்து அமிழ்கடல் செறிந்த நம்மொழி! வித்தாம் அறிவியல் போற்றும் செம்மொழிபுகழ் விரியும் விசும்புடைக் காற்றும் செம்மொழி! கண்ணோர் திருக்குறள் யாத்த செம்மொழி – சிலம்புக் கலையின் களஞ்சியம் படைத்த செம்மொழி! நண்ணும் மானுட வெற்றிச்செம்மொழி…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 18: ம. இராமச்சந்திரன்

 (இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 17: தொடர்ச்சி)  18   தேர்தல் என்றால் தேடி ஓடுவர். அனைவரும் மயங்கும்படி வாக்குறுதிகளை அள்ளி வீசுவர். இடிந்த கோயிலை எழுப்புவேன் என்று சொல்வர். காலில் விழுந்து வணங்குவர். இரவு பகல் பாராது ஓயாமல் உழைப்பர். உள்ள பொருளை எல்லாம் இழப்பர். உழைப்போர் மகிழ ஒன்றும் ஈயார். தம்முடைய பெயர் விளம்பரம் ஆக வேண்டும் என்பதற்காக வேண்டுவன எல்லாம் செய்வர். வசதியற்றுத் துன்புறும் ஏழை மாணவர்க்கு வேண்டும் உதவியைச் செய்ய விழையார். இதனை, ‘           தேர்தல் என்றால்…

அண்ணா! – இனியொரு நாள் நீ வந்தால் ….: சரசுவதி பாசுகரன்

அண்ணா! – இனியொரு நாள் நீ வந்தால் …..…..   இனியொருநாள் நீ வந்தால் இதயநிறை பக்தி யினால் மனித குலம் முழுவதுமே மண்டியிடும் உன் முன்னால் தனி மனித மானத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு முனிவன் என நீநின்று முடிபான வழி சொன்னாய் ! மீண்டும் இங்கு நீ வந்தால் மீண்டு வரும் நல்வாழ்வு ; வேண்டுகின்ற நல மனைத்தும் வேகமுறப் பல்கி விடும் ; மூண்டு பெருகி நிற்கும் மூடப் பழக்க மெலாம் பூண்டோடு அழிந்து பின்னர் பூத்து வரும் நல்லுலகு…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 17 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16 தொடர்ச்சி)   துன்ப முற்றாய் இன்பம் பெற்றாய் மகிழ்ந்து என்னையும் மணப்பா யானால் இன்பத் திற்கோ ரெல்லையு முண்டோ” எனலும் அரசியும் இறும்பூ தெய்தி தமையர் மறைவால் தாங்காத் துயரமும் நீதி வேண்டி நெருங்கிய மன்றில் மணத்தைப் பற்றி மன்றாடும் வியப்பும் கொண்ட அரசி கூற்றெனச் சினந்து வலையிற் றப்பிய மானெனப் பாய்ந்து இருக்கைவிட் டெழுந்து இல்லிற் கேகினள். தமையரும் தமரும் அமைவுடை யாட்களும் யாருமின்றி யலங்கோ லமாக இருக்கக் கண்டு இரங்கின ளாயினும் தமையர் கொடுமையும்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 17: ம. இராமச்சந்திரன்

 (இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 16: தொடர்ச்சி)  17   மாணவர் ஆற்றுப்படை, புதுக்கோட்டையில் வாழும் வள்ளல் பு.அ. சுப்பிரமணியனார் மீது பாடப்பெற்ற கவிதையாகும். பு.அ. சுப்பிரமணியனார் மணிவிழா மலரில் இக்கவிதை இடம் பெற்றுள்ளது.29 இக்கவிதை எழுதப்பெற்ற காலம் சனவரித் திங்கள் 1959. நூற்றுத்தொண்ணூறு அடிகளை உடைய அகவல் கவிதை இது. ஆசிரியப்பா இனத்தில் நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சார்ந்து. ஈற்றியலடி நாற்சீர் பெற்றும், ஈற்றடியின் இறுதிச்சீர் ஏகார ஓசையுடனும் முடிந்துள்ளது. ஆற்றொழுக்குப் போல சீரான நடையைக் கொண்டு விளங்குகிறது இம்மாணவர் ஆற்றுப்படை….