எழிலரசி அல்லது காதலின் வெற்றி 17 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16 தொடர்ச்சி)   துன்ப முற்றாய் இன்பம் பெற்றாய் மகிழ்ந்து என்னையும் மணப்பா யானால் இன்பத் திற்கோ ரெல்லையு முண்டோ” எனலும் அரசியும் இறும்பூ தெய்தி தமையர் மறைவால் தாங்காத் துயரமும் நீதி வேண்டி நெருங்கிய மன்றில் மணத்தைப் பற்றி மன்றாடும் வியப்பும் கொண்ட அரசி கூற்றெனச் சினந்து வலையிற் றப்பிய மானெனப் பாய்ந்து இருக்கைவிட் டெழுந்து இல்லிற் கேகினள். தமையரும் தமரும் அமைவுடை யாட்களும் யாருமின்றி யலங்கோ லமாக இருக்கக் கண்டு இரங்கின ளாயினும் தமையர் கொடுமையும்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 17: ம. இராமச்சந்திரன்

 (இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 16: தொடர்ச்சி)  17   மாணவர் ஆற்றுப்படை, புதுக்கோட்டையில் வாழும் வள்ளல் பு.அ. சுப்பிரமணியனார் மீது பாடப்பெற்ற கவிதையாகும். பு.அ. சுப்பிரமணியனார் மணிவிழா மலரில் இக்கவிதை இடம் பெற்றுள்ளது.29 இக்கவிதை எழுதப்பெற்ற காலம் சனவரித் திங்கள் 1959. நூற்றுத்தொண்ணூறு அடிகளை உடைய அகவல் கவிதை இது. ஆசிரியப்பா இனத்தில் நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சார்ந்து. ஈற்றியலடி நாற்சீர் பெற்றும், ஈற்றடியின் இறுதிச்சீர் ஏகார ஓசையுடனும் முடிந்துள்ளது. ஆற்றொழுக்குப் போல சீரான நடையைக் கொண்டு விளங்குகிறது இம்மாணவர் ஆற்றுப்படை….

ஆரியர் நெடும்படை வென்றதிந் நாடு! – வாணிதாசன்

என்னுயிர் நாடு என்தமிழ் நாடு என்றவு டன்தோள் உயர்ந்திடும் பாடு! அன்னையும் அன்னையும் அன்னையும் வாழ்ந்த அழகிய நாடு! அறத்தமிழ் நாடு! தன்னிக ரில்லாக் காவிரி நாடு! தமிழ்மறை கண்ட தனித்தமிழ் நாடு! முன்னவர் ஆய்ந்த கலைசெறி நாடு! மூத்து விளியா மறவரின் நாடு! ஆர்கடல் முத்தும் அகிலும் நெல்லும் அலைகடல் தாண்டி வழங்கிய நாடு! வார்குழல் மாதர் கற்பணி பூண்டு வாழைப் பழமொழி பயி்னறதிந் நாடு! ஓர்குழுவாக வேற்றுமை அற்றிங்(கு) ஒன்றிநம் மக்கள் வாழ்ந்ததிந் நாடு! கார்முகில் தவழும் கவின்மிகு நாடு! கடும்புலிப்…

ஊழித் தொடக்கத்தில் பிறந்தவன் யார்? – ப.மு.அன்வர்

ஊழித் தொடக்கத்தில் பிறந்தவன் யார்? ஓசைக் கிளர்ச்சியினால்             உருண்டுவரும் உலகத்தில் ஆசைக் கிளர்ச்சியினால்             அமைவதுதான் உயிர் வாழ்க்கை ஆசைக் கிளர்ச்சி             அடர்ந்தெரியும் நேரத்தும் ஓசையின்றி வாழ்ந்த             ஒருகாலம் குகைக்காலம் ஊழித்தொடக்கத்தில்             ஊமையரின் கூட்டத்தில் பாழைப் பதுக்கியவன்,             பயிலுமொழி பகர்ந்தவன்யார்? அவிழ்ந்தவாய் அசைவில்             அகரம் பிறந்துவர உவந்தொலிகள் ஒவ்வொன்றாய்             ஒலித்துவரக் கற்றவன்யார்? ஒலியலைகள் ஒவ்வொன்றாய்             எழும்பி ஒருங்கிணைந்து தெளிவான சொல்லமையக்             கண்டு தெளிந்தவன்யார்? குறில்நெடிலின் வேற்றுமையைக்             குறித்தறிந்து முதன்முதலில் அறிவறியும்…

இன்பத் தமிழினிற் பாடு! – புலவர் பொதிகைச்செல்வன்

யாழெடு யாழெடு கண்ணே! – யாழில் இங்கே இசைத்திடோர் பண்ணே! ஊழிடு துன்பம் பறக்க – நெஞ்சில் ஓங்கியே இன்பம் சிறக்க –             (யாழெடு) வேயின் குழலிசை யோடு – இள வேனிற் குயிலெனப் பாடு! நோயின் துயரெலாம் ஓட – உயர் நோக்கமும் ஆக்கமும் கூட –           (யாழெடு) இன்பத் தமிழினிற் பாடு! – இனம் ஏற்ற முறத்தினம் நாடு! அன்னைத் தமிழ்த்திரு நாடு – நலம் ஆர்ந்திடவே வழி தேடு! –         (யாழெடு) நற்றமிழ் கற்றுநீ தேய்வாய்! – பாரில் நம்மினத்…

வித்தகர் விக்கிரமனை வணங்கிடுவோம்! – தமிழ்த்தேனீ

தமிழேஅடித்தளமாய் எழுத்தேவேள்வியாய், அமுதசுரபியாய், கலைமகளாய், தான் வணங்கத் தமிழ்த்தாயே மகிழும் வண்ணம் தன் எண்ணம் திண்ணமாய்க் கருத்தில் கொண்டே எண்பதிலும் எழுதுகிறார் இளமையாய்க் கலைகள் கொண்டு ஏணியாய்த் தானிருந்து எழுத்தாளர் பலர் தமையே ஏற்றிவிட்டார் எழுத்தால் வாழுகின்ற எண்ணற்ற நலிந்தோர்க்கு இப்போதும் உதவுகின்றார் எட்டாத புகழில்லை, விருதுமில்லை என்றாலும் அயராத ஆர்வமென்னும் நெய் ஊற்றி எழுத்தென்னும் விளக்கேற்றி மகிழ்கின்றார் எண்ணுகின்ற அற்புதங்கள் கைவசமாய்த் தான் கொண்டு கையெழுத்தாய் வடிக்கின்ற வித்தகராம் திருவிக்ரமன் இயலிசை நாடகமாம் முத்தமிழும் கலந்தே வாழும் வித்தகராம் திரிவிக்ரமன் வேம்பு என்னும்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16– பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 15 ) நிற்றலும் அவர்கள் நிலையை உணர்ந்து                 கெஞ்சினர் பின்னர் கிளந்தனர் பணிமொழி சேவகர் நிலையில் சிறிதும் மாறிலர் “பணமெனிற் பிணமும் பல்லைக் காட்டும்” என்பதை யுணர்ந்த இவ்வணி கருடன், ஒவ்வொரு வர்க்கும் ஒவ்வோ ராயிரம் பொற்கா சுகளைப் பொழிவதாய்க் கூறினர் பொற்கா சுகளோ போற்றப் படுவன ஆயிரம் என்றால் யார்மனந் திரியா? ஒன்றின் மேற் காசை என்றுங் காணாச் சேவகர் மயங்குதல் செப்பவும் வேண்டுமோ “நன்று நன்று நல்குவீர் ” என்றனர் வணிகரில் ஒருவனை வல்விலங்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 16: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 15: தொடர்ச்சி) 16 மாணவர் ஆற்றுப்படையும் மற்றைய ஆற்றுப்படைகளும்   பத்துப்பட்டுள் கூறப்பெற்ற ஆற்றுப்படை நூல்கள் ஐந்தனுள் திருமுருகாற்றுப்படை மட்டும் சிறிது வேறுபட்ட தன்மையுடையது எனலாம். இறையருள் பெற்ற புலவன் ஒருவன், இறையருள் பெறச் செல்லும் புலவன் ஒருவனுக்கு, இறைவன் உறையும் இடங்கள், இறைவனைக் காணச் செல்லும் வழிகள், அடியவனை நோக்கி இறைவனே நாடிவந்து, காட்சி தந்து இன்பம் நல்கி இன்னருள் வழங்குகின்ற செய்திகளைக் கூறும் ஒப்பற்ற நூலாகும். மாணவர் ஆற்றுப்படையோ, வறுமை காரணமாக இளமையிற் கல்விச்…

தமிழ்வெற்றி முரசெங்கும் ஆர்க்கும்! – வாணிதாசன்

செய்யும் விளைந்தது; தையும் பிறந்தது; செங்கதிர் கீழ்த்திசை கண்டோம்! – புதுச் செங்கதிர் கீழ்த்திசை கண்டோம்! பொய்கை புதர்ச்செடி பூக்கள் நிறைந்தன; பொன்னொளி எங்கணுங் கண்டோம்! – புதுப் பொன்னொளி எங்கணுங் கண்டோம்! மாவும் சுளைப்பலா வாழையும்   செந்நெலும் வந்து குவிந்தன வீட்டில்! – தை வந்தது வந்தது நாட்டில்! கூவும் குயிலினம் கூவாக் குயிலினம் தாவிப் பறந்தது மேல்வான்! – ஒளி தாவிப் பறந்தது கீழ்வான்! சிட்டுச் சிறுவரின் செங்கைக் கரும்புகள் தொட்டுப் பிசைந்தன பொங்கல்! – அதை இட்டு மகிழ்ந்தனர் பெண்கள்!…

செந்நெற்பொங்கல் எங்கும் நிறைகவே! – நாக.இளங்கோவன்

      போற்றிவளர்த்த பெருமரங்களின் கிளைகளிலே தேனடையால் வீடுகட்டிக் கூடிவாழுந் தேனீக்கள் குடைக்கூலியென சிந்திவிடுந் தேனொழுக, ஒழுகுகின்ற தேனோடு போட்டியிட்டு, பழமரமும் தன்கனியை தான்பிழிய, தேனோடு தீங்கனிச்சாறும் ஒட்டி வெட்டி சொட்டி  அங்கே கட்டி தரும் கரும்பு வயலுக்கு வாய்க்காலாய் ஓடிவிழ, கருப்ப வயலின் அண்டையிலே, தடஞ்சாலி நெல்லெங்கும் தளதளவென வளர்ந்திருக்க, அதைத்தடுக்கும் களையதனைக் களைந்தெடுக்கும் நீலவிழி நங்கையரின் கைச்சினத்தை கண்டஞ்சி, சாலிநெல்லுக்குக் களையாக வளர்ந்திருந்த குவளை மலர்களெல்லாம் ஓடி, அண்டைக்குளத்திற்குள் ஒளிந்திருந்தாலும், புணர்ச்சியின் உச்சத்தில் சிவந்திருக்கும் கண்கள்போலச் சிவந்திருந்த அந்த மலர்களின் அழகில்…

வான் புகழ் தமிழ் நாட்டின் புத்தாண்டு வாழ்த்துகள்! – உருத்திரா

  உழவன் என்றொரு உயர்ந்ததோர் தமிழன் கிழக்கில் உதித்த கதிரையும் ஒளி பாய்ச்சி நாற்று நட்டு வழி காட்டி நன்று வைத்தான். விசும்பின் துளி கண்டு பசும்பயிர் வளங்கள் கண்டான். இஞ்சியும் மஞ்சளும் கரும்பும் சங்கத்தமிழ்ச் சுவைகள் ஆகி தமிழ்ப் புத்தாண்டு  மலரும் இன்று. பொங்கல் பொலிக! பொங்கலோ பொங்கல்! வள்ளுவனை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாட்டின் இனிய தமிழ் புத்தாண்டு இன்று. எல்லோருக்கும் என் இதயம் கனிந்த‌ இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்! உருத்திரா

நற்றமிழ்ப் பற்றோடு பொங்கலிட்டு வாழியவே! – மு.பொன்னவைக்கோ.

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள்! பூத்தது புத்தாண்டு பொங்கல் திருநாளில் போயிற்று ஓராண்டு பொன்னான வாழ்நாளில் சென்ற ஓராண்டில் செய்தோமா நற்பணிகள் என்றே சிந்திப்போம் ஏற்போம் தவறுகளை இன்றிந்த புத்தாண்டில் ஏற்றமுடன் நற்பணிகள் சாதிக்கச் சிந்திப்போம் சாதனைகள் செய்திடுவோம் பொங்கல் திருநாளில் அகமெனும் பானையில் அன்பெனும் நீரூற்றி அறிவெனும் அரிசியிட்டு பாசமெனும் பாலூற்றி நேசக் கரங்களினால் நேர்மை நெருப்பேற்றி தீந்தமிழ்த் தேனூற்றி தித்திக்கும் பொங்கலிட்டு ஒற்றுமை உணர்வுபொங்க உற்ற உறவினராய் நற்றமிழ்ப் பற்றோடு பொங்கலோ பொங்கலென பொங்கலிட்டு வாழியவே!  முனைவர் மு.பொன்னவைக்கோ