இலக்குவனார் புகழ் என்றும் வாழ்க!

– கலைமாமணி கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் வாய்மேடு தந்த வண்டமிழ்ப் புலவர் தாய்த்தமிழ் மொழிக்கே தம்மை ஈந்தவர்! தந்தை பெரியார் தன்மானக் கொள்கையைச் சிந்தையில் கொண்ட செந்தமிழ்ச் செம்மல்! மான மறவர்! மாத்தமிழ் அறிஞர்!

எது சொந்தம்? இனஎழுச்சிக் கவிஞர் நெல்லை. இராமச்சந்திரன்

  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 6 காதலித்தாய் நீபெண்ணே அதனால் தானே கண்;விழித்தேன் உன்மனத்தில்  இன்றே! என்னைப் பேதலிக்க வைக்கின்றாய்! என்ஆ  சையில் பெருநெருப்பைக் கொட்டுகிறாய்!  என்உள் ளத்தில் ஆதவனாய் ஒளிவீசும் வெளிச்சக் காடே! அச்சடித்த மறுபதிப்பு அகநா னூறே! ஏதுமிலா ஈழத்தான் என்னை ஏற்றாய்! என்சொந்தம் நீஎன்றேன் தவறா? கேட்டான். 7 ஏதுமிலா ஈழத்தான் எனச்சொல் லாதீர்! இனஉணர்வுவின் பொங்கூற்று அவனின் உள்ளம்! ஏதுமிலா ஈழத்தான் எனச்சொல் லாதீர்! இதயமெலாம் தமிழ்ப்பண்பின் குடியி  ருப்பு ஏதுமிலா ஈழத்தான் எனச்சொல் லாதீர்! எழுச்சிதரும் புறப்பாடல்…

அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி

தலைப்பு : கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி?   1. கவிதை எந்தப் பா வகையிலேயும் (புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம்.  2. 24 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.  3.    அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை            மட்டுமே அனுப்புக!  4. கடைசி நாள் : 31.12.2013.  5. உங்களின் தெளிவான அஞ்சல் முகவரி,     மின்னஞ்சல் (e-mail),                  அலைபேசி விவரங்களைக் குறிப்பிடுக. பரிசுத் தொகை முதல் பரிசு உருவா 500 இரண்டாம் பரிசு உருவா 300 மூன்றாம் பரிசு உருவா…

தீக்குச்சி – கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

  கலைவளர் அறுபத்து நான்கு கயமையைப் பொசுக்க நாமும் தவத்தீக் குச்சிகள் கொண்டே தீய்த்திட்டே தமிழைக் காப்போம்   கவலைகள் சொன்ன ஆசான் கவனமாய்த் தீர்க்க நாமும் புவனத்துத் தமிழ்த்தாய் எண்ணி பூமியில் ஓங்கி வாழ்வோம்!   ஒளியினை வழங்கும் குச்சி ஒண்டமிழ் காக்கும் வேள்வி பழியினைப் போக்க என்றும் பாவத்தைப் பொசுக்கி வெல்வோம்!   விழிகளின் தோழன் ஒளியே விண்டிடும் தீக்குச்சி வழியே தளிர்விடும் அறத்தைக் காக்க தீக்குச்சியால் சமைத்தே ஈவோம்!   தீமைகள் கலையும் ஆசான் பாக்குச்சி சமைத்து நானும் பாதைவழி…

தேடுகிறேன் . . . !

ஓடோடி   உழைத்தமகன்  வாடி   மண்ணில் உட்கார்ந்தே   தேடுகிறேன்  உள்ளத்தால்  எண்ணி ஆடிப்   பெருங்காற்றில்  அடிமரமே   வீழ்ந்துவிட்டால் கூடி   நிழலிலமரக்   கூடுமோ ? வௌவால்  மாந்தர்கள்   வாழும்தமிழ்  மண்ணில் வாய்மை   மேட்டிலொரு   தூய்மையாளன்  தோன்றினான் ! காய்மை  மனமில்லாக்   காரணத்தால்  கரைசேரவில்லை தாய்மை  மனமிருந்ததாலே   தமிழ்க்கரைகண்டார் !

தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் !

– கவிஞர் இரா .இரவி எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! ‘கனியிருப்பக்  காய்கவர்ந் தற்று ‘  திருவள்ளுவர் கற்கண்டாய் வடித்த குறள் இதற்கும் பொருந்தும் ! கனியாக நல்ல தமிழ் எழுத்துககள் இருக்கையில் !

வாழ்க தமிழ் பேசுவோர்..

–    வித்யாசாகர் ‘வாட்ச் பக்கெட் தேங்க்சு சாரி’யிலிருந்து தொடங்குகிறது தமிழிற்கான நாள்கொலை.. அம்மா அப்பா மாறி ‘மம்மி டாடி’யானது மட்டுமல்ல ‘டிவி ரேடியோ’ கூட வெகுவாய் தமிழைத் தின்றுதான் பசியாறிக்கொண்டுள்ளது; சுடுகாட்டுப் பிணத்தைக் கூட ‘டெட்பாடி’ ஆக்கும் ஆசையை எந்தக் கொள்ளியிளிட்டுக் கொளுத்தினால் என் தமிழனுக்கு தனது தாய்மொழி முழுக்க தமிழாகித் தொலையுமோ… (?) எவனோ எடுத்தெமைப் புதைக்கும் குழிக்குள் தமிழ்தொலைத்து தொலைத்து விழும் மாந்தரை எந்த மொழி மனிதரெனயெண்ணி மீண்டும் மீண்டும் மன்னிக்குமோ? ‘பேன்ட் சூட்டும் ஃபாரின் காரும் பேஸ்புக் பிசாவும்’ கூட…

சருகாகிக் கருகும் அரும்புகள்

                                                                                    –   முனைவர். எழில்வேந்தன் உள்ளங்கைக்குள் ஒளிந்திருக்கும் எதிர்காலத்தை மறந்து, இன்றைய உலகம் இரைதேட வைத்ததால் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கின்றன பிஞ்சு விரல்கள்.   வயதுக்கு வந்தால் வாசலுக்குச் செல்லவும் தடைசொல்லி பருவம் வந்ததும் உருவம் மறைக்கவும் உடை சொல்லி பெண்ணின் பெருமை பேசிவந்த பெற்ற உறவுகளே வறுமை வந்தால் எசமானர் இல்லங்களுக்கு எடுபிடி வேலைக்கு அனுப்பும்.   வாழ்வாதாரங்களை எல்லாம் வறுமையின் கொடுங்கரங்கள் நொறுக்கிப் போட்டதால் வசதிகளின் தாழ்வாரங்களில் வதைபடும் தளிர்கள்.   நீதியின் குரல்வளை நெறிக்கப் பட்டதால் வீதியில்…

களம் வெல்வாய்!

அகர முதல இணைய இதழே! பிற மொழிக்கொலை தடுக்க அறிவு தா! ! கொப்பழிக்கும் எரிமலை தரும் வீரம் நீ! காற்று துப்பி விழுங்கும் சூறாவளியின் ஈரம் நீ !

காக்கும் எம்மொழி ஆள்வோர் அறிக

பூத்திடும் மழலையர் பள்ளிகள் எல்லாம் புதைத்திடும் ஆங்கில மொழியின் மோகம் புத்தன் நெறிசொல் இலங்கை மண்ணில் புதைகுழி வாழ்வாய் தமிழர் வாழ்க்கை நாத்திக ஆத்திகம் பேசும் நம்மோர் நயத்தகு மேடையில் நடன ஆட்டம் தீத்திறம் இல்லா நம்மோர் செயலால் திக்கற் றோராய் நம்தமிழ் மக்கள் தலைமை தலைமை என்றே நம்மோர் தலைவர் என்றே அனைவரும் உள்ளார் தலைமை காக்கும் தலைமை இல்லை தவநெறி போற்றும் தொண்டர் இல்லை அவனிவன் எனறே குறையாய் மொழிவான் அவனியே போற்றும் நிறையை எள்ளுவான் தவநிறை நம்மின் தடத்தை மறக்க…

1 125 126