நன்றி மறவேன் என்றும்! – இலக்குவனார் மறைமலை
சொந்தக் கதை 01 எண்ணிப் பார்த்தால் எனக்கே நகைப்பாம் அறுபது அகலுது வருவது எழுபது எண்களில் மட்டுமே இந்த மற்றம் எனக்குள் எந்த மாற்றமும் இலையே! பிறந்தேன் எனல்பிழை பெற்றனர் என்னை; இலக்குவர் மலர்க்கொடி இணையர் அன்பால் உலகினில் தோன்றினேன் என்செயல் என்ன? வந்தேன் வளர்ந்தேன் வண்டமிழ்ச் சூழலில்! கல்வியால் பதவியும் பதவியால் செல்வமும் மேலும் மேலும் மேன்மையும் தேடிய அறிஞர் நிறைந்த அருந்தமிழ் நாட்டில் கல்வியும் பதவியும் செல்வமும் கொண்டே தமிழின் உரிமை மீட்கும் பணியில் தளரா(து) உழைத்தவர் என்னருந் தந்தை…
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 12 – பேரா.சி.இலக்குவனார்
(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 11 தொடர்ச்சி) இருப்பின் துயரம்; இறந்தால் யாதோ?” என்றே யரற்றி ஏங்கிப் புலம்ப “பிறந்தோர் இறப்பது பெரிது மறிவாய் இறந்தோர் பொருட்டு ஏங்கிப் புலம்பி உடலும் உளமும் ஒருங்கே வாடி மாளும் வரையில் மகிழ்வு மற்று இறந்தோர் பலரும் எய்திய தென்னோ? இன்னும் சிலநாள் இருந்து மறைவோன் இன்னே மறைந்தனன் இதுவும் வியப்போ உலகிற் பிறந்த ஒவ்வொரு வருமே, ஒவ்வொரு தொண்டு செவ்விதி னாற்றக் கடப்பா டுடையர்; இடர்ப்பட நேரினும் அண்மையி லிறப்போர், அவர்க்குள தொண்டை *…
பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 02 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 1 – தொடர்ச்சி) 02 யார்க்கும் அஞ்சாதே! எதற்கும் அஞ்சாதே! இந்தியா அடிமைப்பட்டிருந்த காலத்தில் வாழ்ந்த பாரதியார், மக்களின் அடிமைத்தனத்திற்குக் காரணம் அச்சமே என்பதை உணர்ந்தார். எனவே, அச்சப்பேயை விரட்டுமாறு பல இடங்களில் வலியுறுத்துகிறார். அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம் கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம் யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம் (பாரதியார் கவிதைகள் பக்கம் 98/ விநாயகர் நான்மணிமாலை) என்கிறார். எதற்கும் அஞ்ச வேண்டா என்பதற்காக, உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதும்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 11: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 10: தொடர்ச்சி) 11 தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க கால வரலாறு சரியாக எழுதப் பெறவில்லை. புலவர்கள் பிறந்த இடம், பிறந்த நாள், வளர்ந்த சூழ்நிலை ஆகியவை முறையாக எழுதி வைக்கப் பெறவில்லை. சிறப்பான செய்யுட்கள் பலவற்றை எழுதிய புலவர்கள் தம்மைப் பற்றி எழுதுவதைத் தற்புகழ்ச்சி என எண்ணி விட்டார்கள் போலும். அதனால் சங்கச் செய்யுட்களைக் கால வரிசைப் படி தொகுக்க முடியவில்லை. பதிற்றுப் பத்து என்ற செய்யுள் தொகுப்பு மட்டும் இதற்கு சிறிது…
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 11 – பேரா.சி.இலக்குவனார்
(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 10 தொடர்ச்சி) புட்க ளிரண்டு பொருந்திப் பாடிக் களிப்பதைக் கண்டு கலந்துரை யாடத் தோழ னின்றிச் சோகமுற் றிடுவள் வானுற வோங்கி வளர்ந்து நெருங்கிய மரங்களின் மீது, மார்புறத் தழுவிய தலைவியைப் போலத் தாவிப் படர்ந்த கொடிகளைக் கண்டு வடித்தனள் கண்ணீர் இவ்வகை நிலையை யெய்திய அரசியும் குருதி தோய்ந்து கொடியிற் சிக்கிய * கைத்துணி யொன்றைக் கண்டன ரவர்கள் கரும்பொன் னிழுக்குங் காந்தம் போன்று அரசியை யீர்க்க அவளும் ஒடி எடுத்தனள்; தைத்து இவளே அன்பின் தோழனுக்…
தொழுமின்! செழுமின்! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்
செம்மொழி படித்துச் செல்வத்தில் செழுமின்! விழுமின், உன்னை ஈன்றவர் அடி விழுமின்! தொழுமின், உன்னை மீண்டவர் அடி தொழுமின்! அழுமின், உனக்காக மாண்டவர் நினைந்து அழுமின்! விழுமின், விழாமல் பதவிவர மக்கள் அடி விழுமின! செழுமின், செம்மொழி படித்துச் செல்வத்தில் செழுமின்! குழுமின், கூசாமல் பிறமொழி தவிர்த்துக் குழுமின்! இழுமின், இனிக்கும் தமிழ்மொழி உனக்கே என இழுமின்! உழுமின், கழனியில் பணியில் நீர் உழைத்துச் செழுமின்! -சந்திரசேகரன் சுப்பிரமணியம்
வணங்கிப் போற்றுகிறேன் வாழிய நீவிர்! – மறைமலை இலக்குவனார்
வணங்கிப் போற்றுகிறேன் வாழிய நீவிர்! திட நெஞ்சுடனே களத்திலிறங்கிப் பிடுங்கிப் பாம்புகள் கண்(டு)அஞ்சாமல் மழைவெள்ளத்தில் உள்ளம் சுருங்கி ஒடுங்கித் துன்புறும் மக்களை அணுகி உணவும் உடையும் உறுபொருள் பலவும் வழங்கும் பணியில் முனைந்து செயற்படும் ஆற்றல்சார் இளைஞர் கூட்டத்தினரே! வணங்கிப் போற்றுகிறேன் வாழிய நீவிர்! முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் சொல்லாமல் கொடுத்த வள்ளல்கள் போலவே அழியாப் புகழை அடைந்தீர்!வாழிய! முனைவர் மறைமலை இலக்குவனார்
விழுந்தது மழை! எழுந்தது மனிதம்! – இராசி. அழகப்பன்
நான் கடலுக்கே போகிறேன்! – மாவீரன் மணிகண்டன்
அழைத்ததால் வந்தேன்! வழியடைத்துத் துரத்துகிறாயே! நெஞ்சுருகிக் குமுறியதால்தானே வந்தேன்! பஞ்சம் என்று கதறியதால்தானே வந்தேன்! கெஞ்சி வேண்டியதாலே இரங்கினேன், உனக்காகக் கீழ் இறங்கினேன்! கொஞ்சமும் நினைவு இல்லையா? வஞ்சனை செய்கிறாயே… என்னை அழைத்து விட்டு…! வறண்ட என் நிலக் காதலி நான் முத்தமிட ஈர்த்திருப்பாள்…. சுரண்டி அவள் மேனியெல்லாம் பைஞ்சுதையாலே(சிமெண்டாலே) போர்த்தி வைத்தாய்! நனைத்து அணைப்பதாலே உடல் குளிர நலம் கொள்வாள்! அனைத்தும் மறுதலித்து, கடல் சேரவே வழி செய்தாய்! குளம் குட்டை ஏரியென அங்கங்கே தங்கியிருந்தேன்! வளம் கொழித்த அத்தனைக்கும் பங்கம்…
செந்நெருப்புக்காரியே! – தமிழினி தமிழினி
செந்நெருப்புக்காரியே! பெருமை கொள்கிறேன்! முகத்தில் மஞ்சள் எங்கே? காலில் கொலுசெங்கே? காதில் தோடு எங்கே? நெற்றியில் பொட்டெங்கே? அழகிய புன்னகை எங்கே? கோதி முடித்த கூந்தல் எங்கே? கண்ட கனவெங்கே? பஞ்சணையில் உருண்டு படுத்த தூக்கம் எங்கே? பூப்பொன்ற கை, மரம் போன்று காய்த்ததேன்? பூக்கொய்த கையில் ஆயுதம் தரித்ததேன்? ஊரில் உன்னை அழகி என்பர் உன் வயிறும் ஒட்டிப்போனதேன்? பருவத்தில் உன் பின் ஒரு கூட்டம் உன் பருவம் சொன்னது என்ன? எனக்கென ஓர் உலகம் என்றோ! நீண்ட குதி செருப்பணிந்து பஞ்சாபிச்…
மழையே ! – க.தமிழமல்லன்
ஓலமிட் டழுதிடும் உன்மகற் குதவுநீ! மண்மேல் மட்டும் மழைநீ பெய்தால் மக்களுக் கெதுவும் சிக்கல் இல்லை! மனைக்குள் புகுந்தாய், மாடியில் ஏறினாய், மயக்கிடும் திருடன் புகுவது போலே! மகிழுந் தெல்லாம் மறைந்து மூழ்கிட, மழையே பொழிந்தாய்! மடைகளை உடைத்தாய், ஏரியைத் திறந்தாய், ஏழையர் வாட, மாரியே வெளுத்தாய்! மாந்தர் வாழ்க்கை, குலையச் செய்தாய்! தலைமேல் ஏறினாய்! நிலைமையோ மோசம்! தலைநகர் எங்கே? மின்விசை உணவு,வெண்பால்,குடிநீர் என்னும் தேவைகள் எங்கே தொலைத்தாய்? பேருந் தில்லை, சிற்றுந் தில்லை! யாரும் பணத்தை எடுத்திட வழியிலை ! கன்னெய்…
உரிய தமிழ் கற்பிப்போம் ! – பாவலர் கருமலைத்தமிழாழன்
தமிழ்படித்தால் பூரித்தே வாழ்ந்திடுவேன்! ஆங்கிலந்தான் அறிவுமொழி ஆங்கி லத்தில் அருங்கல்வி கற்றால்தான் ஏற்றம் என்றே தீங்கான எண்ணத்தில் தமிழர் நாமோ திசைமாறிச் செல்கின்றோம் வழியை விட்டே மாங்குயிலைத் தன்குஞ்சாய் வளர்க்கும் காக்கை மடத்தனம்போல் குழந்தைகளைப் பயிற்று கின்றோம் தாங்குகின்ற வேர்தன்னை மறந்து மேலே தரைதெரியும் மரந்தன்னை புகழு கின்றோம் ! ஆங்கிலத்தைப் படித்தால்நீ பெருமை யோடே அரும்வாழ்வு வாழ்ந்திடலாம் பூலோ கத்தில் பாங்கான சமற்கிருதம் படித்தால் நீயும் பான்மையுடன் வாழ்ந்திடலாம் மேலோ கத்தில் ஏங்குகின்ற படியிந்த இரண்டு மின்றி ஏலாத தமிழ்படிக்கப் போவ தாக…
