தீ மூட்டிய கவியரசே! புதுவை ஐயாவே! – ஈழம் இரஞ்சன்
தமிழீழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயாவிற்கு அறுபத்தேழாவது பிறந்தநாள் வாழ்த்துகள்! நள்ளிரவின் கீதத்தை நடுப்பகலின் கோபத்தை காட்டுக்குள் இருக்கும் வேங்கையை கவிதை எனச் சொல்லுக்குள் போட்டுத் தீ மூட்டிய கவியரசே! இன்று (திசம்பர் 3) உனக்குப் பிறந்த நாளாம்! தாயகப் புதல்லவர்களைச் சீராட்டி அவர்களின் வீரத்தை எடுத்துரைத்த ஆசானே! அறுபத்தேழை எட்டி விட்டாய் அகவைய ஒன்றால்… உன்னை அவ்வளவு எளிதாக எழுதி விட என்னால் முடியாது.. என் எழுதி(பேனா) முனையோ வன்னிப்பரப்பின் புழுதியில் மேடு பள்ளம் எல்லாம் சென்று நிதானம் இழந்து நடுக்கத்துடன்…
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 10 – பேரா.சி.இலக்குவனார்
(அகரமுதல 108 கார்த்திகை13, 2046 / நவ.29, 2015 தொடர்ச்சி) உணவு முதற்பல ஒன்றும் விரும்பாள் காதலன் பிரிவினும் சாதலே இனிதெனத் துயரம் பெருகத் தொல்நோய்ப் பட்டு இழந்தன ளெழிலை; இவள்சோ தரரை “வாடிய மலரென மங்கை தோன்றிடக் காரணம் யாதெனக்” கண்டோர் வினவ “நோயா லவளும் நோத லுற்றனள் தேர்ந்த மருத்துவர் ஓர்ந்து பற்பல மருந்துங் கொடுத்தனர்; மன்னிய நோயும் தீர்ந்திடக் காணேம்! செய்வதென் யாமும்” என்றேயியம்பிக் கன்றிய மனதுடன் உண்மை வெளிப்படின் உற்றிடுந் தீங்கென எழிலர சியுந்தன் *இகுளை யோடும்…
புறப்படு புறப்படு பேய்மழையே! – மு.பாலசுப்பிரமணியன்
புறப்படு புறப்படு பேய்மழையே! வா வா மழையே என்றழைத்தோம் வந்து கொட்டித் தீர்க்கின்றாய் சாவா வாழ்வா நிலை எமக்கு சற்றே பொறுக்க மாட்டாயா? போய்வா என்றே சொல்கின்றோம் புறப்படு புறப்படு பேய்மழையே! தாய்பிள்ளை முதியவர் தவிக்கின்றார் தாமதம் இனியும் ஏன் மழையே ஊடகம் முழுதும் உன்னாட்சி உயிருக்கு போராடும் நிலையாச்சு நாடகம் ஏனோ பேய்மழையே நலங்கெட பெய்தல் முறையாமோ? எங்கே பேரிடர் என்றாலும் எங்கள் மக்கள் உதவிடுவார் இங்கே வெள்ளம் சூழ்கையிலே எங்கே போவார் எம்மக்கள்? இயற்கையே சீற்றம் குறைத்துவிடு இனியும் வேண்டாம் விளையாட்டு…
நெடுந்துயர் அகன்றேயோடும் ! – எம்.செயராமன்
வான்முகில் வளாது பெய்கவென வாயார வாழ்த்துப் பாடி வையத்தில் விழாக்கள் தோறும் மனமாரப் பாடி நிற்போம் வாழ்த்தினைக் கேட்டு விட்டு வானுறை தேவர் எல்லாம் வையகம் வாழ்க எண்ணி மாமழை பொழியச் செய்வர் வறண்டு நிற்கும் பூமியெல்லாம் வான் மழையைக் கண்டுவிட்டால் மகிழ்வு கொண்டு வானோக்கி மனதார நன்றி சொல்லும் வயல்நிறையும் குளம் நிறையும் வயலுழுவார் மனம் மகிழும் தினமும் மழை பெய்கவென தீர்மானம் எடுத்தும் நிற்பார் அகமகிழ வைக்கும் மழை ஆபத்தைத் தந்த திப்போ அனைவருமே மழை பார்த்து அலமந்தே நின்று விட்டார்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 10: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 09: தொடர்ச்சி) இயல் – 4 இலக்குவனார் கவிதைகள் – பகுப்பாய்வு இலக்குவனார், ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களையும் பாடியுள்ளார். ‘ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே’ (தொல்-செய்) என்று பாவகை நான்கென்பர் தொல்காப்பியர். இவை தவிர விருத்தம், கண்ணி, கீர்த்தனை முதலிய பா இனங்களையும் இலக்குவனார் பாடியுள்ளார். கவிஞர் பாடியுள்ள கவிதைகளைக் கீழ்வருமாறு பகுக்கலாம். நெடுங் கவிதைகள் வாழ்த்துக் கவிதைகள் கையறுநிலைக் கவிதைகள் அங்கதக்…
சாதிகளும் மதவெறியும் நமக்கெதற்கு? – செந்தலை கவுதமன்
ஓடிவந்த கொலைமழையில் ஓடியதோ சாதிமதம் தேடிவந்த உதவிகளில் தெரிந்ததெலாம் மனிதமனம் திறந்துவைத்த கோவில்களில் தெய்வமெலாம் மனிதர்களே மறந்துவிட்ட சாதிகளும் மதவெறியும் நமக்கெதற்கு? செந்தலை கவுதமன்
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 9 – பேரா.சி.இலக்குவனார்
(அகரமுதல 106 கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி) 9 ஆயினும் அவளும் அடிக்கடி வைகலும் வினவத் தொடங்கினள் வீணே வருந்திக் காரணம் பலசொலிக் கழித்தன ராயினும் மூத்தோ னொருவன் முனிந்தன னோக்கி 8 “ஆடலனென்ற ஆடவனைத் தினமும் வந்து வினவக் காரணம் யாதோ? என்ன முறையினன்; என்றும் வினவுவாய் வினவின் இனிநீ விரும்பா ஒர்விடை விரும்பி யளிப்போ மென்ற விடைத்தனன்” அன்பனைக் காணா அவ்வெழி லரசி அடுத்துச் சொல்லின் கெடுக்கவுந் துணிவரென் றஞ்சிக் கூறினள் மிஞ்சிய வார்த்தை உள்ளில்…
சிற்பியின் கல்லும் கடவுளும்! – காளி தாசு
சிந்தி! காளி தாசு
வீரமும் ஈரமும் செறிந்தவனே! பிரபாகரனே! – அரங்க கனகராசன்
ஈழம் எமக்கு நிழலாகும்! இனியவனே ! இன்னுயிரை துச்சமெனக் கொண்டு மண்ணுயிரை – தமிழ் மண்ணுயிரை இனம் காட்டியவனே! தமிழர் என்றோர் இனம் தரணிதனில் அழிந்திடவில்லை என்றே பறை செய்தவனே! வீரத்தின் வேரை பாரின் விளிம்புக்கும் பாய்ச்சியவனே – தமிழர் மாண்பினை போர்முனையிலும் அழகு செய்தவனே! நீ வாழி! நின் எண்ணம் திண்ணமாகும்! ஈழம் எமக்கு நிழலாகும்! அரங்க கனகராசன்
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 09: ம. இராமச்சந்திரன்
(அகரமுதல 106 கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி) இலக்குவனார் ஆசிரியராகப் பணியாற்றிய தொடக்கக் காலத்தில் குறுங்காவியம் ஒன்று பாடியுள்ளார். (குறிப்பு : ஆய்வாளர் கவனக்குறைவால் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் குறிப்பிடும் குறுங்காவியம் இலக்குவனார் புலவர் மாணாக்கராக இருந்த பொழுது எழுதப்பெற்றது.) இக்கதைப் பாடல் முழுவதும் அகவற் பாவால் எழுதப் பெற்று பதிப்பும் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆயின் அக்கவிதை ஆய்வாளர் கைக்குக் கிட்டவில்லை. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள ‘தமிழ் நூல் விவர அட்டவணையில் மேற்படி…
செத்து மடிந்தது போதுமடா – உலோக நாதன்
செந்தமிழா சேர்ந்தெழடா ! உலகத் தமிழினம் உறைந்தது ஒருகணம் ஊமை விழிகளும் உற்றங்கு பார்த்தது புலரும் பொழுதினில் புத்தனின் தத்துவம் போட்டது குண்டினை, புறா அங்கு வீழ்ந்தது நித்திய புன்னகை நீள்துயில் கொண்டதுசத்திய சோதனையா? செத்து மடிந்தது போதுமடா செந்தமிழா சேர்ந்தெழடா ! கத்திக்கத்தி பேசி, காலம் கடத்தியேகல் நட்டது போதுமடா! சொல் வட்டத்துக்குள் நின்று குட்டக்குட்ட குனிந்தது போதுமடா! கொத்தும் கழுகோடு குள்ளநரிகளும்ஒத்திங்கு ஊதுதடா! வாய் பொத்திக்கிடந்தது போதுமடா வாள் கத்தி கொண்டு நீ எழடா புலரும் பொழுதினில் புத்தனின் தத்துவம் போட்டது…
நிலையாய் வாழ்பவர்க்கு ஏதடா அழிவு? – செந்தமிழினி பிரபாகரன்
புதைக்கப் புதைக்கவே எழுகின்றோம்! கல்லறைகளைத் தகர்த்து எறிந்தால்.. மண்ணுக்குள் உயிரோடு புதைத்து மண்ணோடு மண்ணாக உக்கி உருக்குலைத்தால்.. மனங்களை விட்டு மறைந்து போகுமா மாவீரம்???? மூடரே! பொறிக்கப்பட்ட உணர்வுகளைப் பொறி கக்கும் தீத் துளிகளாய் நெஞ்சுக்குள் சூல் கொண்டு நிலையாய் வாழ்பவர்க்கு ஏதடா அழிவு? நெஞ்சுக்குள் எரியும் தீயாக, தமிழர் உள்ளத்தில் கனன்றெழும் வேட்கையாக , கந்தக மேனியர் உயிர் கொண்டு வாழ்வதை காடையர் நீர் அறிய மாட்டீர்! புதைக்கப் புதைக்கவே நாம் விதையாய் எழுகின்றோம்!. அழிக்க அழிக்கவே நாம் செழித்தோங்கி வளர்கின்றோம்! தடைகளே தகர்க்கத்…
