தமிழையே கருதி உறுதி கொண் டெழுவீர் ! – சுத்தானந்த பாரதியார்
எண்ணுறும் போது தமிழையே யெண்ணீர் இசைத்துழி தமிழையே யிசைப்பீர் பண்ணுறும் போது தமிழ்ப்பணி தனையே பழுதறப் பண்ணியின் புறுவீர் உண்ணிடும் போதும் உறங்கிடும் போதும் உயிருளந் துடித்திடும் போதும் பண்ணினு மரிய தமிழையே கருதிக் காரிய வுறுதி கொண் டெழுவீர் ! கவியோகி சுத்தானந்த பாரதியார்
நடைமுறைப் புத்தாண்டில் உறுதி கொள்வீர்!
உறுதி கொள்வீர்! – கவிஞர் முடியரசன் முதலோடு முடிவில்லாப் பெருமை, நான்கு மொழிபெற்றும் மூப்பில்லா இளமைத் தன்மை, அதனோடு மிகுமினிமை, காலஞ் சொல்ல அமையாத பழந்தொன்மை, தனித்தி யங்கி உதவுநிலை, வளர்பண்பும், எளிமை, யாவும் உயர்தனிச்செந் தமிழுக்கே உண்டாம்; மேலும் புதுமைபெற முடிசூடி அரசு தாங்கப் புலவரெலாம் இளைஞரெலாம் உறுதி கொள்வீர்! தெலுங்குமொழி பிறமொழிகள் உயர்தல் காண்பார் தேன்மொழியாம் தமிழ்மொழியை வாழ்க என்றால் கலங்குகின்றார் ஒருசிலர்தாம்; உயிரா போகும்? கலங்கற்க! தமிழ்வாழ்ந்தால் யாரும் வாழ்வர்; புலங்கெட்டுப் போகாதீர்! ஆட்சி செய்யப் புன்மொழிகள் வேண்டாதீர்! தமிழின்…
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 13 – பேரா.சி.இலக்குவனார்
(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 12) “இன்பம் விளைப்பதும் இனியமெய்க் காதல் இயலா தெனினும் இனியது மதுவே பாற்சுவை யறியார் பாலுக் காக வருந்துவ தின்று; பொருந்திய அன்பனின் காதலை யறியாய்! காதற் பொருட்டு நோதலு மின்று; ஓதிய காதற் சுவையைத் துய்த்தேன்; துய்த்தபின் அதனை இழந்து வருந்துதல் இயலுமோ கூறாய்?” எனலும் தோழியும் வினவும் தலைவிக்கு “காதல்” என்பதும் கற்பனைச் சொல்லே நோதல் செய்தலும் நொய்யோர் மாட்டே மக்கள் குழுவும் வளர்ந்து பெருகிட மன்னாக் காதல் மன்னிய கருவியாம் மக்களை யழித்திட வலிபெற்…
செந்தோழர் நல்லகண்ணு வாழ்க! – புதுவைத் தமிழ்நெஞ்சன்
தோழர் நல்லகண்ணு(மார்கழி 12, 1956 / திசம்பர் 26, 1925) செந்தோழர் நல்லகண்ணு நீடுவாழ்க! செங்கொடித் தோழர் நல்ல கண்ணு சிந்தனை ஆற்றல் உள்ளவராம் – அவர் செங்களம் ஆடிடச் சிறிதும் தயங்கார் செழுமை நெஞ்ச நல்லவராம். உழைக்கும் மக்கள் உள்ளம் எல்லாம் உணர்வில் கலந்த உழைப்பாளி – அவர் அழைத்தால் எதற்கும் அணிய மாவார் அவரே ஏழைப் பங்காளி. அரசியல் என்பதை ஆக்க முள்ள அறிவு வழிக்குச் சென்றவராம் – போர் முரசம் போல மூச்சும் பேச்சும் முயன்றே இங்கே அடிப்பவராம். நெடிய…
கடவுளாய் நின்ற மழை! – தமிழ்சிவா
மழை உச்சந்தலையில் உட்கார்ந்து கிச்சுகிச்சு மூட்டும் ஒரு குழந்தை மழை! காலை நேரத்தில் ‘கோல’ப்பெண்களுடன் கொஞ்சி விளையாடும் ஒரு குறும்பு மழை! காயசண்டிகைக் கடலை நேயமுடன் நெருங்கி முத்தமிடும் ஒரு முத்து மழை! அரசியல் பிழைத்தோர்க்கு வாரக்கணக்கில் வகுப்பெடுக்கும் ஒரு புரட்சி மழை! ஆறுகளைக் கூறுபோட்ட அறிவிலார் மூளைக் கழிவுகளை அகற்றும் ஒரு துப்புரவு மழை! செம்புலப் பெயல்நீராய்த் தோன்றிச் சங்கப்புலவர்க்குக் காதல்சொன்னது ஓர் அந்தி மழை! முத்தொழில் செய்து கடவுளாய் நின்ற மழை! களவாடப்பட்ட எல்லாவற்றையும் மீட்டெடுக்க மீண்டும் மீண்டும் பெய்யெனப்பெய்து வென்ற…
பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 03 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 2 – தொடர்ச்சி) 03 ஆண்மை கைக் கொள்! உலகில் இன்பம் பெற வழி அச்சத்தை விரட்டுவதுதான். அச்சத்தை விரட்ட ஆண்மையைக் கைக் கொள்ள வேண்டும். அச்சத்தை விட்டிடடா – நல் ஆண்மையைக் கைக் கொள்ளடா இச்சகத்தினிமேலே நீ – என்றும் இன்பமே பெறுவையடா என்கிறார் பாரதியார். அச்சம் நீங்கினாயோ – அடிமை ஆண்மைத் தாங்கினாயோ (பக்கம் 63 / தொண்டு செய்யும் அடிமை) என்று அச்சம் நீங்க ஆண்மையைத் தாங்க வலியுறுத்துகிறார்….
பெரியார் – ஆரியத்தின் அடிப்பீடமாட்டும் சூறாவளி – கலைஞர்
பெரியார் – ஆரியத்தின் அடிப்பீடமாட்டும் சூறாவளி “இனத்தினிலே கோளாறு புகுத்தி வைத்தோர் இடிமுழக்கம் கேட்பதுபோல் – திணறிப் போனார் பின்னி வைத்த மதங்கடவுள், மடத்தன்மை யெல்லாம் மின்னலது வேகத்தில் ஓடியதுகாண்! பாராட்டிப் போற்றி வந்த பழமைலோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார். ஈவெரா என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின் அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம்! அவர் வெண்தாடி அசைந்தால் போதும் கண் சாடை தெரிந்தால் போதும்; கறுப்புடை தரித்தோர் உண்டு நறுக்கியே திரும்பும் வாள்கள் !!” -கலைஞர் மு.கருணாநிதி (1945)
புரட்சி நடிகர் இருபதாம் நூற்றாண்டின் இனிய பாரி – சி.இலக்குவனார்
இருபதாம் நூற்றாண்டின் இனிய பாரி “கலைஞருள் வள்ளல், காசினி போற்றும் வள்ளலுள் கலைஞர்; வருந்தும் எவர்க்கும் ஒல்லும் வகையில் உடனே உதவும் புரட்சி நடிகர், பொல்லாங்கெதனையும் நடிப்பினுங்கொள்ளா நடிகவேள், நானிலம் இனிதே வாழ என்றும் எண்ணி அன்பும் அருளும் அணியாய்ப் பெற்றவர் இவரால் உயர்ந்தார் எண்ணிலர் என்றும் அண்ணா வழியில் அணியுறச் செல்லல் முந்துறும் தளபதி, மூவா இளைஞர் இராமச்சந்திரன் எனும் பெயரால் எனக்கும் அண்ணன் எவர்க்கும் தோழன் ஒப்பிலாப் பண்பினர், உலகம் போற்ற நடிக்கும் வித்தகர், நடிப்போர் சூழமும் ஐம்பெருங் குற்றமும் அணுகா…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 12: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 11: தொடர்ச்சி) 12 1952 இல் இந்தியப் பாராளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் நடை பெற்றது. புதியன செய்யும் பொறியில் வல்லுநர் கோ.து.நாயுடு திராவிடர் கழகச் சார்பில் திருவில்லிப்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியில் நின்றார். கோ.து.நாயுடு உழைப்பால் உயர்ந்த அறிஞர்; உலகம் சுற்றியவர்; பலகலைகள் கற்றவர்; பேருந்து வண்டிகள் நடத்தும் பெருஞ் செல்வர்; கோவை நகரைச் சார்ந்தவர். இவரை எதிர்த்து கருமவீரர் காமராசர் போட்டியிட்டார். காமராசர் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராய் விளங்கியவர். தமிழ்நாட்டு அமைச்சரவையை ஆக்கவும் நீக்கவும் ஆற்றல்…
எங்கள் பெரியார் – கவிமதி
எங்கள் பெரியார் – மனு வேதம் கொளுத்திய திரியார் மூடிமறைத்துப் பேச அறியார் மூடப் பழக்கம் எதுவும் தெரியார் நூலார் திமிர் அறுத்த வாளார் நூற்றாண்டு கடந்து வாழும் வரலாறார் நரியார் தோலுரித்த புலியார் நால்வகை வருணம் கலைத்த கரியார் எளிதாய்க் கடந்து செல்லும் வழியார் ஏதிலியார்க்கு வெளிச்சம் தந்த விழியார் தெளியார் அறிவு நெய்த தறியார் தெளிந்தோருக்குத் தெளிவான குறியார் உலகத் தமிழருக்கு உரியார் உணர்ந்தால் விளங்கும் மொழியார் மனு வேதம் கொளுத்திய திரியார் மாதருக்குத் தெளிவான ஒலியார் தேடிப் படிக்க சிறந்த…
ஏணிப் படியாய் உயர்த்திய சான்றோர்! – மறைமலை இலக்குவனார்
இழுக்கு நிறைந்த போலிச் சடங்கும் அழுக்குப் படிந்த மூடத் தனங்களும் அழுத்தி வைத்த அடிமை வாழ்வே ஆண்டவன் கொடையென மயங்கிய நாளில் ஆதவன் உதயமாய் விடியல் அளித்தார்; நாணத் தக்க சாதிப் பீடையால் கூனிக் குறுகிக் கிடந்த தமிழரை ஏணிப் படியாய் உயர்த்திய சான்றோர்; பெரியார் பெருமை உரைக்கவும் இயலுமோ? -மறைமலை இலக்குவனார்
சொல் காக்க! – மதன். சு, சேலம்
கூரிய வாளைவிட கூரிய சொல் வலிமை! கூடுமட்டும் சொல் காக்க கூடுமுந்தன் வாழ்வில் நலம் ! வாளினாலிவ் உடலில் துன்பம் சொல்லினாலிவ் வாழ்வே துன்பம் ! வரம்புடைய சொல்லால் வாழ்வினிலே சேரும் இன்பம் ! ஒரு சொல் உரைத்திடினும் உயர்வு எனின் உலகை ஆளும் ! தவறான சொல் லெனின் தரமிழந்து தரணி மாளும் ! ஆதலினால் சொல்லினை அளந்து நீங்கள் பேசிடுவீர் ! காதலினால் பேசுதற்போல் கண்ட சொல் விட்டிடாதீர் ! மதன். சு சேலம் ecemadhan94@gmail.com
