இனிதே இலக்கியம்! 4 – முத்தொழில் ஆற்றுநரே தலைவர் : – இலக்குவனார் திருவள்ளுவன்

  4   முத்தொழில் ஆற்றுநரே தலைவர் உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, அலகி லா விளை யாட்டுடை யார், அவர் தலைவர்! அன்னவர்க் கேசரண் நாங்களே!   கவிப்பேரரசர் கம்பர் தம்முடைய இராமகாவியத்தில் எழுதிய தற்சிறப்புப்பாயிரம்.   “உலகங்கள் யாவற்றையும் தாம் உள்ளவாறு படைத்தலும் அவ்வுலகங்களில் உள்ள அனைத்து வகை உயிர்களையும் நிலைபெறச்செய்து காத்தலும் அவற்றை நீக்க வேண்டிய நேரத்தில் நீக்கி அழித்தலும் ஆகிய மூன்று தொழில்களையும் இடைவிடாமல்(நீங்கலா) அளவற்ற(அலகுஇலா) திருவிளை யாடல்களாகப் புரிபவர் யாரோ, அவரே எங்கள்…

சண்டாளக் காடையர் குடி யழிப்போம்!

சாக்காடு நாள்வரை யாம் மறவோம் ! கூடி எம் நாட்டில் களித் திருந்தோம் குடும்பமாய் நன்றாய் மகிழ்ந் திருந்தோம் முற்றத்தில் ஆடிக் கதைத் திருந்தோம் முழுநிலவு கண்டே வாழ்ந் திருந்தோம் அக்கையும் அன்னையும் சார்ந்திருந்தோம் அழகுத் தமிழை யாம் கற்றிருந்தோம் அம்மம்மா சொல்லும் கதை கேட்டோம் அம்மப்பா ஊட்டும் நெறி கண்டோம் ஒற்றுமை யோடே வாழ்ந் திருந்தோம் ஓர்நிலம் ஈழம் நினைந் திருந்தோம் மாவீர ரீகம் வணங்கி நின்றோம் மாயீழ விடுதலை பெற்றி ருந்தோம் தேசியத்தலைவரை வாழ்த்தி வந்தோம் தேசமே உயிரென்றே களி கூர்ந்தோம்…

நான் – காரைக்குடி பாத்திமா அமீத்து

    நான் ஏதோசில கற்பனைகள் என்னுள்ளே எப்போதும்! மனிதவாழ்வே வேண்டா மரமாய்ப்பிறக்க வேண்டும்நான்! இளைப்பாறநிழல் கொடுத்து இனியகனிகள் அளித்து, பறவைகள் கூடமைத்துவாழ பாதுகாப்பளித்திட வேண்டும்நான்! நீராகநான்மாறி உயிர்களின் வேட்கைதீர்த்திட வேண்டும்நான்! காற்றாகமாறி அனைவரின் மூச்சாக வேண்டும்நான்! கல்லாகமாறி உளியால் சிலையாக வேண்டும்நான்! அலையாகமாறிப் பெருங்கடலில் சங்கமிக்க வேண்டும்நான்! மலராய்ப் பிறந்து மணம்தந்து உதிரவேண்டும்நான்! நிலவாய் உதித்து வளர்ந்து தேயவேண்டும்நான்! கடவுளோர்நாள் வந்தென்னிடம் கண்முன்னே தோன்றினால், ஈசலாகப் பிறந்து ஓர்நாளில் பிறந்துமடியும் வரமொன்று கேட்பேன் நான்…..நான்! நான், காரைக்குடி பாத்திமா அமீத்து, சார்சா தரவு…

இனிதே இலக்கியம் 3 விண்போல் பொதுவான கடவுள் – இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 96, ஆவணி 27, 2046 / செப். 13, 2015 தொடர்ச்சி) 3 முத்தே பவளமே மொய்த்த பசும் பொன் சுடரே சித்தே என் உள்ளத் தெளிவே பராபரமே. கண்ணே   கருத்தே   என்கற்பகமே கண்நிறைந்த விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே.    எக்கடவுளரை வணங்குவோரும் போற்றி வழிபட உதவும் தமிழ்ப்பாடல்களுள் தாயுமானவரின் இப்பாடலும் ஒன்று. தாயுமானவர் திருப்பாடலில் உள்ள ‘பராபரக்கண்ணி’ என்னும் தலைப்பில் இடம் பெற்ற பாடல் இது.   விலைமதிப்பற்ற முத்தாகவும் பவளமாகவும் பொன்னொளியாகவும் உள்ளத்தின் தெளிவாகவும் இருக்கின்ற எல்லாவற்றிலும் மேலான…

திலீபனைப் படம் பிடித்த கவி கத்தூரி

நிறுத்திப் படித்த நிகரில்லாக் கவிதை ! அழகென்றால் என்ன ?  உடல் அழகு, கல்வியழகு, கவிதையழகு என்று எத்தனையோ விதமாக அழகுகள் பேசப்படுகின்றன. எல்லா அழகுகளுக்கும் மனிதன் தன் வசதிக்கேற்ப வரைவிலக்கணம் வகுத்திருக்கிறான். அழியும் அழகை நம்பி ஆகா இதுவல்லவோ அழகென்று ஓடி ஏமாறுவோர் உலகில் பலர் உண்டு.   ஆனால் அழியா அழகென்று ஒன்றிருக்கிறது. அதுதான் மனிதனை என்றும் உற்சாகமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த அழகை அடையாளம் காணும் உணர்வை இறைவன் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளித்து வைத்திருக்கிறான். மற்றவரின் கருத்துப் பாதிப்பிற்கு…

களம்நின்று போராடும் காலம்வரை கண்ணுறங்கு ! – பாவலர் வையவன்

  தகப்பன் தாலாட்டு கண்ணுறங்கு கண்ணுறங்கு காவியமே கண்ணுறங்கு! களம்நின்று போராடும் காலம்வரை கண்ணுறங்கு ! முன்னிருந்த தமிழர்நலம் மூத்தகுடி மொழியின்வளம் மண்ணுரிமை யாகஇங்கு மாறும்வரை கண்ணுறங்கு ! (கண்ணுறங்கு) முப்பாட்டன் கடல்தாண்டி ஒர்குடையில் உலகாண்டான் இப்போது நமக்கென்று ஒர்நாடு இல்லையடி திக்கெட்டும் ஆண்டமொழி திக்கற்றுப் போனதடி இக்கட்டைப் போக்கணும்நீ இப்போது கண்ணுறங்கு ! (கண்ணுறங்கு) தன்னலத்தில் தனையிழந்து தாய்மொழியின் புகழ்மறந்து பொன்னான தாய்நாட்டைப் போற்றிடவும் மறந்துவிட்டு இங்கிருக்கும் தமிழரெல்லாம் மையிருட்டில் வாழுகின்றார் ஈழமண்ணின் புதுவெளிச்சம் இங்குவரும் கண்ணுறங்கு ! (கண்ணுறங்கு) ஆண்பிள்ளை வேண்டுமென்று…

பார்த்திபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்! – ஒருவன்

( ஆவணி 30, 2046 / 15-09-1987 தொடக்கம் புரட்டாசி 10 / 26-09-1987 வரை பன்னிரு நாட்கள் யாழ்ப்பாணம் நல்லூர் முன்றலில் இந்திய அரசை நோக்கி ஐந்து வேண்டுகோள்களுடன் நீர், ஆகாரம் எதுவுமின்றி உண்ணா நோன்பிருந்து மடிந்த ஈகச் செம்மல் திலீபன் (பார்த்திபன்) நினைவாக வடிக்கப்பட்ட கவிதை வரிகள்.) நல்லூர் முன்றலில் எழுந்ததோர் வேள்வித் தீ கருகிப்போனதோர் உன்னத ஈகம்! பசியை வென்ற எங்கள் பாலகனுக்கு… அன்று, பாரதம் செய்ததோர்   மகா பாதகம்! ஆறுநாள் நோன்பிற்கே வரமருளும் வேலவன் கூட அவன் கண்மூடும்வரை   கண்திறக்கவில்லை…

அண்ணா ஒரு வரலாற்று அற்புதம் – பேராசிரியர் வெ. அரங்கராசன்

அண்ணா–ஓர் வரலாற்று அற்புதம்   “உருவுகண்[டு] எள்ளாமை வேண்டும் உருள்பெரும்தேர்க்[கு] அச்[சு]ஆணி அன்னார் உடைத்து”என்னும் பெரும்பொருள் மருவுதிருக் குறள்இது -அண்ணா ஒருவருக்கே பொருந்துகின்ற பெரும்குறள்   காஞ்சி போன தமிழ்நாட்டில் கழனி போல வளம்கொழிக்கக் காஞ்சி தந்தசீர் கார்முகில் கூரறிஞர்; பேரறிஞர் அண்ணா   தேஞ்சி போன தமிழ்நாட்டைச் சீரமைத்துச் சிறப்பேற்றக் காஞ்சி தந்தசீர் திருத்தவாதி களம்கண்ட அரசியல்வாதி   பொடியினைப் போடும் மூக்கு பொடிவைத்துப் பேசும்அவர் நாக்கு – அதில் இழையோடும் நகைச்சுவைப் போக்கு அதிலும் அவர்க்கே அதிக வாக்கு அவரிடம் எவ்வளவு…