எழிலரசி அல்லது காதலின் வெற்றி 2 – பேரா.சி.இலக்குவனார்

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 2   தோள்களும் கொங்கையும் நாள்தொறும் வளர்ந்தன வளர்மதி யன்ன வாண்முகம் பொலிந்தன கொடியிடை துவள அடிபெயர்த் திட்டாள் மணத்தின் சுவையை மனத்துட் கொண்டாள். வெள்ளப் பெருக்கை மெல்லிய நாணற்   புதர்கள் தடுக்கப் பொருந்திய வாறு காதல் மடைக்கிடு கற்களாய் நின்றனர் மெல்லக் கசிந்து மேவிய கற்களைத் தள்ளிடும் நீரின் தன்மை போன்ற காதலின் தன்மை கண்டவ ரல்லரே;   “உருவுங் குணனும் ஒத்த பான்மையிற் காத லிருவர் கருத்தொரு மித்தபின் குலனு மோரார் குடியு மோரார்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 02 : ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 99, புரட்டாசி 17, 2046 / அக்.04, 2015 தொடர்ச்சி) 2  இலக்குவனார் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர். தொல்காப்பியத்தை மட்டுமினறி வேறுசில இலக்கண நூல்களையும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். Tamil language Semanteme and Morpheme in Tamil language A Brief study of Tamil words. ஆகிய நூல்களை எழுதி தமிழ் இலக்கணத்தின் சிறப்பை விளக்கியுள்ளார். இவை தவிர Dravidian Federation என்னும் ஆங்கிலம் இதழும் KuralNeri என்னும் ஆங்கில இதழும் நடத்தியுள்ளார். ஆய்வு செய்யக் காரணம் இத்தகு சிறப்புடைய…

நந்தமிழர் நாடெல்லாம் தமிழே பேசும்! – பாவலர் கருமலைத் தமிழாழன்

விடியலென நீயெ ழுந்தால் ! அஞ்சியஞ்சி வாழ்கின்ற அவலம் நீங்கும் அதிகார ஆர்ப்பாட்ட அல்லல் நீங்கும் விஞ்சிநிற்கும் கையூட்டின் நஞ்சு நீங்கும் விளைந்திருக்கும் ஊழல்முட் புதர்கள் நீங்கும் கெஞ்சிநின்று கால்வீழும் கொடுமை நீங்கும் கேடுகளே நிறைந்திருக்கும் ஆட்சி நீங்கும் கொஞ்சுமெழில் இன்பமுடன் நலங்கள் வாழ்வில் கொலுவேறும் விடியலென நீயெ ழுந்தால் ! செந்தமிழே கோலோச்சும் ! துறைகள் தோறும் செழிக்கின்ற ஆட்சியாகும் ! செவ்வாய் செல்லும் சிந்தனையின் அறிவியலும் தமிழே யாகும் சிரிக்கின்ற மழலைவாய் அம்மா வாகும் சந்தமிகு தமிழ்வழியில் கல்வி யாகும் சதிராடும்…

தண்ணீர்க் கனவு – மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா

தண்ணீர்க் கனவு மணலைப்பறி கொடுத்துவிட்டு ஏதிலியாய் நிற்கிறது ஆறு! அப்போதெல்லாம் ஆடிப்பெருக்கென்றால் ஆற்றினில் வெள்ளம் வரும் ! இப்போது … கண்ணீர் வருகிறது ! காலப்போக்கில் தண்ணீரும் .. ஒரு கனவாகிவிடுமோ? -மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா

தாய்மை – காரைக்குடி பாத்திமா அமீது

தாய்மை  இறைவனைக் காண நினைத்தேன் உன்திருமுகம் காணும் முன்பாக உணரத் துடித்தேன் சொர்க்கமதை உன்னிரு  பாதங்களில் பணியும் முன்பாக. எழுத சொற்கள் இல்லையம்மா வளர்த்த விதம் சொல்வதற்கு பாடிடச் சொற்கள் கிடைக்கவில்லை பாடுபட்டு படிக்க வைத்ததற்கு! விறகடுப்பின் புகையில்நீ வெந்துஎம் பசிபோக்கினாய்! வியர்வை நீரூற்றி எங்களை வளர்த்து ஆளாக்கினாய்! பட்டங்கள் பெறவைத்துப் பார்த்துப் பூரித்துப்போனாய்! வெற்றிகள் பலகொடுத்து வேதனைகளை விரட்டினாய்! கவிதைகளால் தாலாட்டி கண்ணுறங்கச் செய்தாய்! வருணனைகள் பலதந்து என்னுள் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறாய்! பாரங்களை இறக்கிட உன் பாதங்கள் வேண்டும் இனிதே தூங்கியெழ உன் மடிவேண்டும் ஒரு…

மரம் சாய்ந்து போனதம்மா – அரங்க கனகராசன்

மரம் சாய்ந்து போனதம்மா – அரங்க கனகராசன்  [காதல் மணம்… கண்ணாளனைப் பொய்வழக்கில் சிக்கவைத்து சிறை அனுப்புகின்றனர் மணமகளின் தந்தை… சிறைவாசம் முடிந்து, திரும்பியபோது மனைவி ஓராண்டு கைகுழந்தையோடு இருக்கிறாள்… மனத்தால் இணைந்த இருவரும், மீண்டும் ஊருக்குத் தெரியாமல் ஓடுகின்றனர்… மோப்பம் பிடித்த, மணமகளின் தந்தையோ, தானூர்தி வரும் பாதையில், வெட்டிய மரம்தனை சாய்க்கிறார்… தானூர்தி நொறுங்குகிறது… கூடவே காதலர் இருவரும் மரணம் தழுவிட, இருவரது சடலமும் இரத்தம் தோய்ந்து தெருவில் கிடக்கிறது… இது எதுவுமே அறியாத பச்சிளங்குழந்தை, தாயின் மார்பை கவ்வுகிறது, பசிக்காக……

தனித் தமிழீழம் வேண்டும்!

தமிழீழம் எனது ஈழக் கனவு தனித் தமிழீழம் வேண்டும் – அதில் தமிழினம் மட்டுமே வாழ வேண்டும். புரட்சி வெடிக்கும் முகத்தில் – துளிப் புன்னகை மலர வேண்டும். வெறியாட்டம் கண்ட கண்கள் – இனி வாண வேடிக்கைகள் காண வேண்டும். சயனைடு எடுத்தக் கைகள் – இனிச் சாகுபடி செய்ய வேண்டுமே தவிரச் சாகும்படிச் செய்யக்கூடாது. சாவுகளைக் கண்ட மனிதர்கள் – மனச் சாந்தத்தோடு வாழ வேண்டும். ஆயுதம் ஏந்தி நடந்த கால்கள் – கடவுள் ஆலயம் நோக்கி நடக்க வேண்டும். வெடிகுண்டு…

இன்னல்தரும் இந்தியினை எண்ணுவதோ? – பாவேந்தர் பாரதிதாசன்

என் தமிழா? கட்டாயம் இந்திதனைக் கற்க அரசினர்கள் சட்டமியற்றுவதில் சம்மதமோ என்தமிழா! கன்னல் தமிழ்க்கல்வி கட்டாய மாக்காமல் இன்னல்தரும் இந்தியினை எண்ணுவதோ என்தமிழா! தாய்க்குச் சலுகையின்றித் தாழ்கின்றாள் இந்திஎனும் பேய்க்கு நறுநெய்பால் பெய்கஎன்றார் என்தமிழா? உறவிட்ட பார்ப்பனர்கள் இந்திஎன ஊளையிட்டும் பிறவிக் குணங்காட்டும் பெற்றியுணர் என்தமிழா! ‘தமிழ் அழியுமானால் தமிழர் அழிவர்’ — இதை நமைவிழுங்க வந்தவர்கள் நன்கறிவர் என்தமிழா! தம்மவர்கள் நன்மைக்கே தக்கதென்றால் இந்திதனை நம்மவர்கள் அன்னவர்கால் நக்குகின்றார் என்தமிழா! உடல்காக்கச் சோறில்லை என்னுங்கால் நம்பகைவர் கடல்காட்டி வீழ்என்று கத்துகின்றார் என்தமிழா! தென்றற்…

பிரிக்கும் ‘நான்’, பிணைக்கும் ‘நாம்’ – இரா.ந.செயராமன் ஆனந்தி

நான்   நான் என்ற சொல் நாவினில் விதைக்காதீர் ! நாம் என்ற சொல் நாவினில் விதையுங்கள் ! நான் என்ற பாரம் தலைக்கு ஏற்றினால் வீழ்வது நாம் இல்லை ‘நீ’ என்பதை உலகம் இன்னும் உணரவில்லை ! நான் என்ற சொல் உதட்டைப் பிரிக்கும் பகைக்காரன் ! நாம் என்ற சொல் உதட்டை இணைக்கும் ஒற்றுமைக்காரன் ! நான் என்றால் மனிதர்களின் ஆங்காரம்! நாம் என்றால் மனிதன் அறிவின் அலங்காரம் நான் என்றால் உள்ளத்தின் அடையாளம் ! நாம்  என்றால் ஒற்றுமையின் சின்னம்…

சாதிகுலம் எங்கட் கில்லை! – காகபுசுண்டர்

  சாதி பேதஞ் சொல்லுவான்  சுருண்டு போவான்! காணப்பா சாதிகுலம் எங்கட் கில்லை; கருத்துடனே என்குலஞ்சுக் குலந்தான் மைந்தா! தோணப்பா தோணாமற் சாதி பேதஞ் சொல்லுவான் சுருக்கமாய், சுருண்டு போவான்; வீணப்பா பிரமத்தில் ஆதி காலம் வீரமுடன் பிறந்ததடா உயிர்க ளெல்லாம்; நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே; நன்றாக வுதித்தவிடம் நாடி னேனே. -காகபுசுண்டர்

இனிதே இலக்கியம் 5 ‐ இறையே ஏற்பாயாக! : மாணிக்கவாசகர்

5  இறையே ஏற்பாயாக! மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என் கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே!   மாணிக்கவாசகரால் எழுதப் பெற்ற உவட்டாமல் இனிக்கும் திருவாசகத்தில் வரும் பாடல் இது. பன்னிரு திருமுறைகளுள் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது மாணிக்கவாசகரின் திருவாசகம்.   “அருள் உடையவனே! நறுமணம்( விரைஆர்) நிறைந்த உன் திருவடிகள்பால்(கழற்கு), முழுமையாக…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி – பேரா.சி.இலக்குவனார்

எழிலரசி அல்லது காதலின் வெற்றி   உலகினிற் சிறந்த வுயர்கலா புரியில்                 வணிக னொருவன் வான் பெருஞ் செல்வனாய்ச் சீருடன் வாழ்ந்து செல்லுங் காலை புதல்வர் மூவரும் புதல்வி யொருத்தியும் 5.     எச்சமாய் நிற்க இச்சையி னீட்டிய                 அருநிதி துறந்து ஆவி நீத்தனன் பெற்றோ ரீட்டிப் பேணிய பொருளை மைந்தரைப் போலவே மகளிர் தமக்கும் உரிமை யாக்கும் ஒருவிதி நினைந்து       தந்தை மாய்ந்தபின்தனயர் மூவரும் பொருள்மீ துற்ற பெருவேட் கையினால் தம்முடன் பிறந்த தங்கை நன்மணம் பெறுவா ளென்னிற் பெரும்பொருள்…