அண்ணா ஒரு வரலாற்று அற்புதம் – பேராசிரியர் வெ. அரங்கராசன்

அண்ணா–ஓர் வரலாற்று அற்புதம்   “உருவுகண்[டு] எள்ளாமை வேண்டும் உருள்பெரும்தேர்க்[கு] அச்[சு]ஆணி அன்னார் உடைத்து”என்னும் பெரும்பொருள் மருவுதிருக் குறள்இது -அண்ணா ஒருவருக்கே பொருந்துகின்ற பெரும்குறள்   காஞ்சி போன தமிழ்நாட்டில் கழனி போல வளம்கொழிக்கக் காஞ்சி தந்தசீர் கார்முகில் கூரறிஞர்; பேரறிஞர் அண்ணா   தேஞ்சி போன தமிழ்நாட்டைச் சீரமைத்துச் சிறப்பேற்றக் காஞ்சி தந்தசீர் திருத்தவாதி களம்கண்ட அரசியல்வாதி   பொடியினைப் போடும் மூக்கு பொடிவைத்துப் பேசும்அவர் நாக்கு – அதில் இழையோடும் நகைச்சுவைப் போக்கு அதிலும் அவர்க்கே அதிக வாக்கு அவரிடம் எவ்வளவு…

எம் தலைவர் தமிழ்ப் பெரியார் என்றும் வாழ்க! – கதி.சுந்தரம்

பெரியார் ஒருகுலத்துக் கொருநீதி உரைத்து நிற்கும் உயர்வில்லார் தலைசாயப் புரட்சி செய்த ஒரு தலைவர்; தென்னாட்டின் உயர்வைக் கூறும் உயர்கதிரோன்; சாதியென்னும் கொடிய காட்டுள் வருகின்ற இன்னலதை எதிர்த்துப் போக்கி வாளேந்தி முதற்பயணம் செய்த வீரர்; இருளகற்றும் பணிபுரிந்து நிற்கும் செம்மல், எம் தலைவர் தமிழ்ப் பெரியார் என்றும் வாழ்க! – கவிஞர் கதி.சுந்தரம்

புதிய புறநானூறு அறிஞர் அண்ணா – பாவலர் கருமலைத்தமிழாழன்

அண்ணாவே வாழ்க! வாழ்க ! போர்முரசே தமிழர்தம் மானம் காத்த போர்வாளே ! சூழ்ச்சிகளைச் செய்து வந்த பார்ப்பனிய பகைமுடித்த படையின் ஏறே ! பகுத்தறிவு பெரியாரின் கொள்கை தாங்கி ஊர்முழுதும் குவிந்திருந்த மூடக் குப்பை உதவாத சாத்திரத்தை அறிவுத் தீயால் சேர்த்தெரித்த எழுகதிரே ! சரித்தி ரத்தைச் செதுக்கிவைத்த புதுவரியின் புறநா னூறே ! பேச்சாலும் எழுத்தாலும் திராவி டத்துப் பெருமையினை உணரவைத்து வளர்த்து விட்டாய் கூச்சலிட்டே வந்தஇந்திப் பெண்ணின் நாவைக் கூர்தமிழ்வா ளால்வெட்டி விரட்டி விட்டாய் ஓச்சிநின்ற வடமொழியின் கலப்பை நீக்கி…

முன்னணியில் மூவர் – கவிஞர் சகன்

முன்னணியில் மூவர் பாரதி இனிமையும் வளமும் கொண்ட எழில் மொழி தமிழே! அன்புக் கனிவுடன் உலகமெல்லாம் கலந்துற வேற்கத் தக்க தனிமொழி! சுவைமிக் கோங்கித் தனினிறை வெய்தி நிற்கும் பனிமொழி! வாழ்த்த வந்த பாரதிப் புகழும் வாழி! பெரியார் பொன்னான தமிழர், நாட்டுப் புகழினைக் காற்றில் விட்டுத் தன்மானம் சாய விட்டுத் தமிழ்மொழிப் பற்றும் விட்டுப் புன்மானப் புழுக்க ளென்னப் புதைந் தொழிந் திருந்த போழ்து தன்மான இயக்கந் தன்னைத் தழைத்திடத் தந்தான் தந்தை! அண்ணா ‘‘அன்னவன் பாதை காட்ட அவன் வழி முரசு…

கொள்கைச் சிற்பி அண்ணா – கதி.சுந்தரம்

தமிழ்ப் பகையை மாய்க்கும் வேங்கை அறநெறியைப் பரப்புகின்ற தலைவர் அண்ணா; அருந்தமிழர் பெருமையதை முழக்கும் வீரர்; திறமை மிகு பேச்சுக்கோர் வடிவம் ஆவர்; சிந்தனை சேர் எழுத்துக்கோ ஒருவர் ஆவார்; குறள் நெறியைப் பரப்புகின்ற கொள்கைச் சிற்பி; கூறுபுகழ்த் தமிழ்ப் பகையை மாய்க்கும் வேங்கை; உரனுடைய மனிதரெலாம் போற்றி நிற்கும்; உயர் தலைவர் தமிழ் அண்ணா வாழ்க! வாழ்க!! – கவிஞர் கதி.சுந்தரம்

தமிழ் – உயர்தனிச்செம்மொழி ! : மௌலவி ஏ உமர் சஃபர் மன்பயீ

உலகினரை வியக்க வைக்கும் செம்மொழியே !   எத்தனையோ வழிகளெல்லாம் உலவிவந்தும் – என்னை இசுலாத்தின் வழியினிலே வைத்தவனே ! எத்தனையோ மொழிகளெல்லாம் உலகிருந்தும் – என்னை எழிலான தமிழ்மொழியில் வளர்த்தவனே ! எத்தனையோ அன்னையர்கள் பிறந்திருந்தும் – எனக்கு இனிதான தமிழ்தாயைத் தந்தவனே ! அத்தனையும் உன்கருணை ! உன் புகழே !! – நான் அதற்காக காலமெல்லாம் புகழுகின்றேன் ! அலஃகம்து லில்லாஃக் …. சொல்வதற்கு இயல்பான செந்தமிழே ! – ஏழு சுரங்களுக்குள் இசையான பைந்தமிழே ! நல்ல நெறி…

சீறிப் பாய்வேன் தமிழாலே! – இராம.குருநாதன்

கவிதைக்கு அழிவில்லை காற்றும் மழையும் அழித்தாலும்- என் கவிதைக் கனலுக் கழிவில்லை ஊற்றாய்ப் பெருகும் எண்ணத்தை- இனி உறைக்குள் போட மனமில்லை மண்ணும் மலையும் சரிந்தாலும்- என் மானிடப் பார்வைக் கழிவில்லை விண்ணும் கடலும் திரண்டாலும்- என்னுள் விரியும் கவிதைக் கழிவில்லை வெட்டிப் பொழுது போக்குவதை- நான் வீணில் என்றும் கழித்ததில்லை கொட்டிக் கிடக்கும் எனதுணர்ச்சி- களத்தில் கூர்மை வாளாய்க் களமிறங்கும் சொல்லும் பொருளும் உள்ளவரை- என்னுள் தொடரும் சமூகச் சிந்தனைகள் வெல்லும் என்கவி எனச்சொல்லி வித்தகம் பேச அறியேன்நான் அல்லும் பகலும் கண்டவற்றை-என்…

காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே! – வித்யாசாகர்

 காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே! தமிழினமே! தமிழினமே! என் தமிழினமே! விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோ கற்ற தமிழினமே1 காலத்தைக் காற்று போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே! தமிழினமே! தமிழினமே! என் தமிழினமே! எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே! யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை விடுகிறாய் யாரை நம்பிக் கொண்டு இன்னும் உனை யிழக்கிறாய்! கடல் தின்றதில் கலங்காத நீ காற்று, புயலென வீசியதில்…

அருவினை ஏதுமில்லை – சொ.பத்மநாபன்

அருவினை ஏதுமில்லை அசைவிலா ஊக்கம் பெற்றால் திருவினை யாய்முடியும் திருக்குறள் நூல் கற்றால்! – அருவினை விதிசதி எல்லாம்சாயும் மதிவழி நாம்உழைத்தால் கதிஎன வள்ளுவத்தைக் கருத்தினில் நாம்பதித்தால்! – அருவினை பிரிவினை உணர்வகற்று உறவினை வளர்ப்பதற்கே நிறப்பகை தனையகற்று அறப்பகை செழிப்பதற்கே! உதிக்கின்ற செங்கதிர்போல் உலகிற்கே ஒளியூட்டும் நதிநீரைப்போல் நடந்து நமக்கெல்லாம் பயன்கூட்டும்! – அருவினை உருவத்தில் அறிவுமில்லை உயரத்தில் உயர்வுமில்லை பருவத்தில் பூப்பதெல்லாம் பயன்தரும் என்பதில்லை! சிரிப்பதும் அழுவதுவும் செயற்கையா? இயற்கையன்றோ! பிறக்கிறோம் பெண்வயிற்றில் பிறகிங்கு வேற்றுமை ஏன்? – அருவினை -திருக்குறள்…

தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் – 3: இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி)         பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் மற்றொரு குறிப்பிடத்தக்க பாடல் படைப்பு அவரின் ‘துரத்தப்பட்டேன் என்னும்’ உள்ளக் குமுறலாகும். நம் நாடு சிறந்த மக்களாட்சி நாடாக விவரிக்கப்பட்டு வந்தாலும் உள்ளபடியே பல உரிமைகள் ஏட்டளவோடு நின்று நடைமுறையில் மறுக்கப்படுவனவாகவே உள்ளன. இதற்கொரு சான்றே, பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், தம் கல்லூரிப் பணியைச் சிறப்பாகச் செய்திருந்தாலும், சாதிக் கண்ணோட்டத்தால் வேலைவாய்ப்பை இழந்தது ஆகும். விருதுநகர்ச் செந்திற்குமார இந்து நாடார் கல்லூரியில் பேராசிரியர் அவர்கள்,…

தொப்புள்கொடி உறவுதனை விடுதல் நன்றா? – குருநாதன்

அழிந்துவரும் மொழியா? ‘அழிந்துவரும் மொழிகளிலே தமிழும் ஒன்றாம்’ ஐ.நா. வின் இக்கூற்றைச் செவிம டுப்பீர்; கழிந்துவரும் வாழ்க்கையிலே தமிழைக் காக்க கட்டாயம் போர்த்தொடுப்பீர்; உலகில் மற்ற மொழியறிவு பெறுவதற்குத் தடையா சொன்னோம் மூத்தமொழி தாய்மொழியைப் போற்றச் செய்வோம்; விழிப்புணர்ச்சி இல்லையெனில் கெடுப்ப தற்கு விரைவாக வந்திடுமே வீணர்க் கூட்டம்! ஐந்திணையின் அழகுதனை எடுத்து ரைத்த அழியாத இலக்கியத்தை இழக்கப் போமோ? செந்தமிழைப் பேரறிஞர் பலரும் காத்த செழிப்பான வரலாறு அழிதல் நன்றா? பைந்தமிழில் பேசுதற்கு நாணு கின்றோம்; படித்தறிந்து போற்றுதற்குத் தமிழைப் போல எந்தமொழி…