தமிழன் பெட்பு – நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்

தமிழன் பெட்பு தமிழன் என்றோர் இனமுண்டு;        தனியே அவற்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடை வழியாகும்;        அன்பே அவனுடை மொழியாகும்.       1 அறிவின் கடலைக் கடைந்தவனாம்;        அமிழ்தத் திருக்குறள் அடைந்தவனாம்; (1)பொறியின் ஆசையைக் குறைத்திடவே        பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்.       2 கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான்        கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான்; புவியில் இன்பம் பகர்ந்தவெல்லாம்        புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான்.       3 “பத்தினி சாபம் பலித்துவிடும்“        பாரில் இம்மொழி ஒலித்திடவே சித்திரச் சிலப்பதி காரமதைச்        செய்தவன் துறவுடை…

இன்று  மகாராட்டிரம்,  நாளை  தமிழகமா? – பழ.தமிழாளன்

இன்று  மகாராட்டிரம்  நாளை  தமிழகமா? குடியாட்சி  மாண்பதனைக்  குப்புறவே            கவிழ்க்கின்ற  காட்சி  தன்னைக்     கொள்கையற்றே  ஒன்றியத்தை ஆளு        கின்ற ஆட்சியினர்  இற்றை நாளில் முடிமன்னர்  போலவுமே  மகாராட்டி         ரமாநிலத்தின்  ஆட்சி  தன்னை முற்றாக முடிப்பதற்கு  முனைப்போடு          செயல்புரியும்  காட்சி  காண்க அடிமையென  மக்களையே  ஆக்குகின்ற           ஆரியத்தின்  சூழ்ச்சி  தன்னை     அடல்மறவத்  தமிழினமே  அகமதிலே            பதியாதே  இருப்பார்  என்றால் விடிந்திருக்கும்  நிலைமாறி  விடியாத          இருள்சூழ்ந்த  நிலையே  ஒக்கும்      வெல்தமிழ  இனமெல்லாம்  விழிப்…

நம்பிக்கையுடன் எழு! :  கி.பி. அரவிந்தன்

நம்பிக்கையுடன் எழு! மலைகளில் உரமாய்த்தேநீரில் இரத்தமாய்முகமற்றுப் போனோரேகவனித்தீர்களா? பனிப் படலங்களைஊடுருவும்எக்காள ஒலிகள்.சிங்கத்தின் வாள்இனிஉடைபடக்கூடும். அதோ.வயல்வெளி எங்கும்தலை நிமிரும் நெற்பயிர்கள்.வசந்தன் கூத்தின்நாயகர்கள் ஆட்டம்.இவனோ நண்பன். பனைகள் மறைக்கும்செம்மண் பரப்பு.பனங்காட்டுச் சலசலப்பு.ஓலைகள் உராய்வினில்அக்கினிக் குஞ்சுகள். அவற்றுக்கும் அப்பால்அலைகளின் சீற்றம்,முரல்களின் துள்ளல்.அம்பாப் பாடல்களில்சோகம் தொலைக்கும்ஏலேலோப் பாடகர்கள். நண்பர்கள் . . .தோழர்கள். . . “ஆறுகள் முன்னோக்கியேபாய்கின்றன”அப்புறமென்ன!அடர்ந்த மலைகளின்இருட்டினில் இருந்துதேநீர் கரங்களில்விலங்குகள் கழற்று.பனி மலைகளின்உச்சிகள் பிளந்துகலவியைத் தொடங்கு,சக்தியை உமிழ்,உழுத்த மாளிகையின்இடுக்குகள் எங்கணும்ஆலம்விதைகள். நம்பிக்கையுடன்எழு. . . . -கி.பி. அரவிந்தன்

கரையான் புற்றுக்குள் கருநாகம் – 2 : புலவர் பழ.தமிழாளன்

கரையான் புற்றுக்குள் கருநாகம் – 2 தில்லைமரம்  நிறைந்ததினால்  தில்லை      யென்ற பெயரோங்கும் இடமும் ஆகிச்   செந்தமிழர்  போற்றுகின்ற சிவனாகும்           நடராசர்  கோவி  லுக்குத் தொல்தமிழ  இனம்வந்த முதற்பராந்த        கமன்னென்பார்  பொன்னும்  வேய்ந்தார் /    புதுக்கோட்டை  மாமன்னர்  சேதுபதி           மரகதக்கல்  ஈந்து   மகிழ்ந்தார் // கொல்லைப்புற  வழியாக  உட்புகுந்த          தீச்சிதரும்  உரிமை  கோரல் /     கருநாகம்  கரையான்புற்  றுரிமை          தனைக்   கோருகின்ற  நிலையே ஒக்கும்  // வல்லடியாய்  வழக்காடு  தீச்சிதரை         …

கரையானின்   புற்றிற்குள்     கருநாகப்  படையெடுப்பா ! ? – புலவர் பழ.தமிழாளன்

கரையானின்   புற்றிற்குள்     கருநாகப்  படையெடுப்பா ! ? இறையுறையும்  கோவில்கட்ட   இயன்ற       வரை  பொருளீந்தோர்  தமிழ   ரன்றோ ?     எழிலார்க்கும் கோபுரமும் இறையமரும்           கருவறையும்  புறமும் உள்ளும் முறையாகப்  பணிபுரிந்தோர் முத்தமிழ்த்       தாய் ஈன்றெடுத்த  சேய்க ளன்றோ ?   முடிவுற்ற கோயிலினுள் முத்தாய்ப்பாய்          எப்பணியும்  செய்யா  நின்ற கறையுள்ளத் தீச்சிதர்கள்  உட்புகுந்தே       தில்லையிலே  போடும்  கொட்டம்    காணக்கண் கூசுகின்ற காட்சியதைக்          காணுங்கால்   கரையான்   தன்வாய் // உறைவதற்கே  உழைத்தெடுத்த  புற்றி         …

அடிப்பாய் நீச்சல் உன்கையாலே! – பாவலர் மு இராமச்சந்திரன்

அடிப்பாய் நீச்சல் உன்கையாலே! வந்தது போகும் வருவதும் போகும் வாழ்நாள் முழுவதும் வருவதும் போகும் துன்பங்கள் போகும் துயரங்கள் போகும் துய்க்க மறந்தன பலவும் போகும் ஏழ்மையும் போகும் இன்பங்கள் போகும் இருந்து களித்த சுகங்களும் போகும் போகும் போகும் புகுந்தன போகும் புதிதாய் வந்தன பழையதாய்ப் போகும் இளமை போகும் இருந்து உழைத்த உறுதியும் போகும் இல்லாதிருந்த மாற்றங்கள் வாழும்! படைத்தன போகும் பகைகளும் போகும் பழியென சுமந்த காலமும் போகும் அப்படி அப்படி ஆட்சியில் உலகம் அதனுள் இருந்து பழகிடு உவந்தும்…

தமிழினத்து  நலவாழ்வை  எண்ணல்  வேண்டும்! –  புலவர் பழ.தமிழாளன்

தமிழினத்து நலவாழ்வை எண்ணல் வேண்டும்! இதழ்களுக்கு வேண்டும் ! 1.நாடாம்நம் மொழியினமே போற்றல் வேண்டும் !நற்றமிழர் பண்பாடு காத்தல் வேண்டும் !வாடாமல் உணவுண்டே மக்கள் வாழவழிவகைகள் ஆசான்போல் கூறல் வேண்டும் !நாடாளும் மன்னனிடம் குறையே கண்டால்நக்கீரன் போலுறுதி கூறல் வேண்டும் !ஏடாள்வோன் என்றென்றும் நெருப்பைக் கக்கும்எரிமலையாய்த் தீமைதனை எரித்தல் வேண்டும் ! 2.மனமொன்றித் தமிழினத்து மக்கள் எல்லாம்மாற்றமின்றித் தமிழறத்தைப் போற்றல் வேண்டும் !இனம்நாடு மொழிவாழ்ந்து சிறப்புற் றோங்கஎந்நாளும் ஏற்றபணி செய்தல் வேண்டும் !தனதுநல வாழ்வதனைப் புறத்தே தள்ளித்தமிழினத்து நலவாழ்வை எண்ணல் வேண்டும் !இனப்பகையாம் ஆரியத்தை…

இல்லையென்ற கவலைகளை ஓட்ட வேண்டும்!- பாவலர் மு. இராமச்சந்திரன்

இல்லையென்ற கவலைகளை ஓட்ட வேண்டும்! அரசென்றால்.. அது அப்படித் தான் இருக்க வேண்டும்! அடுப்படி விறகும் கூட எல்லார்க்கும் பங்கு வேண்டும்! உழைப்போர் பார்த்து உதவும் கரம் நீட்ட வேண்டும்! உதவாதார் கைகள் கட்டி திருத்தும் வழி கூறல் வேண்டும்! அகம்புறமும் ஒன்றாகப் பணியாற்றி நடக்க வேண்டும்! அடிபட்டோர் வாழ உதவிக்கரம் நீட்டிடல் வேண்டும்! தனக்கெனவே அலைவோரை தொலைவிலே நிறுத்த வேண்டும்! தக்கவரைப் பார்த்துத் தேடி முன்கொணர்ந்து நிறுத்த வேண்டும்! மண்மணமும் மாண்புகளும் தாளாது நடத்த வேண்டும்! மக்களெண்ணம் மகிழ்வதற்கே கேடுகளைக் கொய்ய வேண்டும்!…

சிறாருக்கான குறள் விருந்து மின்னிதழ்

சிறாருக்கான குறள் விருந்து மின்னிதழ் சிறுவர் சிறுமியர் குறள்நெறி வழி நடைபோட வந்துள்ள திங்கள் மின்னிதழ் குறள் விருந்து. உலகத்திருக்குறள் இணையக் கல்விக்கழகத்தால் இலவச இணைய இதழாக வெளியிடப்பெறுகிறது. இதன் ஆசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார். பொறுப்பாசிரியர் முற்போக்குப்பாவலர் திருவாட்டி தாமரை சீனிவாசராவு. முனைவர் முரசு நெடுமாறன் சிறப்பாசிரியராக உள்ளார். பொறி தி.ஈழக்கதிர் இணை ஆசிரியராக உள்ளார். கம்போடியா அங்கோர் தமிழ்ச்சங்கப் பொருளாளராகவும் உள்ள இதன் பொறுப்பாசிரியர் திருவாட்டி தாமரை சீனிவாசராவு எழுதிய தலைமைப்பண்பிற்கு உயிர்நேயம் தேவை என வலியுறுத்தும் வகுப்பறை-சிறுவர் கதை விருந்து…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.6-10

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-81 / 1.3.1-5 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 3. மக்கட் படலம் 6. மேழி யானில மேவுயிர் சூழ வுண்டு தொகுபசி வீழ வுண்டி விளைக்குவோர் ஆழி மொய்ம்பின்வே ளாளரே.   7. களவு முற்றிய கற்பினர் அளவ றிந்தற மாற்றிட உளம றிந்தவர்க் கோதுவோர் பளகி லாத்தமிழ்ப் பார்ப்பனர்.    8.மற்று முள்ள வகுப்பெலாம் உற்ற வாழ்வுக் குறுதுணை யிற்றொழிலினி யன்றதாற் பெற்ற தொழிற் பேரரோ.   9. முதலில் வெம்பசி மூளவே…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-81 / 1.3.1-5

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-80 தொடர்ச்சி) 81. ஐம்பெருங் கண்டமாவின் றமைதரு முலகில் வாழும் வம்பலர் பயில்வண் டன்ன மக்களெல் லோர்க்கு முன்னர்த் தம்பெயர் விளங்கப் போந்த தாயகம் இதுவே யென்றால் இம்பரில் இதனுக் கொன்றீ டிதுவலால் பிறிதொன் றுண்டோ ? 3. மக்கட் படலம் வேறு அத்த மிழகத் தாய்தரும் முத்த மிழ்த்துறை முற்றிய மெய்த்த மிழ்ப்புல வேந்தரைப் புத்து ணர்வுறப் போற்றுவாம். 2. முன் னு மில்லற முற்றியே தன்ன லங்கள் தவிர்த்துமே இன்ன லஞ்செய் திசைபெறும் அன்ன ரே தமி…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-80

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.71-75 தொடர்ச்சி) 76. முல்லையைக் குறிஞ்சி சார முல்லைமற் றதனைச் சார எல்லியுண் டாக்கு பாலை யிருமையுஞ் சேரச் சார மல்லலஞ் செறுவை நெய்தல் மருவிட மருதந் தன்னைப் புல்லிடக் கழியை யைந்தும் புணரியாப் புறுமாங் காங்கே. 77. அருந்தமி ழகத்தெப் பாலு மமைந்தநா னிலத்தாங் காங்கே பொருந்திய நடுவண் வானம் புகுதரு மாடக் கோயில் இருந்தனர் தலைவ ரானா ரினத்தொழில் மக்க ளெல்லாம் திருந்திய சிற்றா ராங்கண் திகழ்ந்தனர் புறஞ்சூழ்ந் தம்மா. 78. பேரர சதன்கீழ் மூன்று…