புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.71-75
(இராவண காவியம்: 1.2.66-70 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் 71.குன்றுறை கோட்டி யானை குறுகியே பழனந் தன்னைத் தின் றுசெங் கரும்பைக் கையிற் செழுங்கிளைக் காகக்கொண்டு சென்றிடும் வழியில் வேங்கை செருக்கவக் கரும்பாற்றாக்கி வென் றதை யெயினர் கொள்ள வீசிவே தண்டஞ்சாரும். 72.புல்லிய சுடுவெம் பாலைப் புறாவயல் மருதம் புக்கு நெல்லயின் றேகும் போது நீர்க்கொடி பலவைக் கவ்விச் செல்லவே யிளம்பார்ப் பென்று செருச்செய்தச் சுளைப்பலாவை முல்லையாய்ச் சிறுவர்க் காக்கி முனைப்பொடு பறந்துசெல்லும். அஞ்சிறைப் பொன்காற்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.66-70
(இராவண காவியம்: 1.2.61-65 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் வேறு பசிபட வொருவன் வாடப் பார்த்தினி திருக்குங் கீழ்மை முசிபட வொழுகுந் தூய முறையினை யறிவார் போல வசிபட முதுநீர் புக்கு மலையெனத் துவரை நன்னீர் கசிபட வொளிமுத் தோடு கரையினிற் குவிப்பா ரம்மா. பாணியுஞ் சீருந் தூக்கும் பண்ணொடு பொருந்தச்செங்கை ஆணியுந் திவவுங் கூட் டி யமைத்தயாழ் நரம்பைச் சேர மாணிழைப் பரத்திபாட மகன்றில்கேட் டுவக்கும்பாக்கம் காணிய கலமுள் ளோர்க்குக் கலங்கரை விளக்கங்காட்டும்….
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.61-65
(இராவண காவியம்: 1.2.56-60 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் மருதம் தொடர்ச்சி மரைமலர்க் குளத்தி லாடும் மயிர்த்தலைச் சிறுவர் நீண்ட பொருகரிக் குருத்த ளந்து பொம்மெனக் களிப்பரோர்பால், குரைகழற் சிறுவர் போரிற் குலுங்கியே தெங்கின்காயைப் புரைதயப் பறித்துக் காஞ்சிப் புனை நிழலருந்து வாரே. 62.மழுக்குதா ராக்குஞ் சுக்கு வாத்திளங் குஞ்சு நீத்தம் பழக்கவக் காட்சி யைத்தாய் பார்த்துள் மகிழுமோர்பால்; வழக்குறு மக்க ளுண்டு வழிச்செல விளநீர்க் காயைக் கொழுக்கவுண் டலத்துப் போன குரக்கினம் பறித்துப்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.56-60
(இராவண காவியம்: 1.2.51-55 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் மருதம். வேறு 56.கல்லிடைப் பிறந்த யாறுங் கரைபொரு குளனுந் தோயும், முல்லையம் புறவிற் றோன்று முருகுகான் யாறு பாயும், நெல்லினைக் கரும்பு காக்கும், நீரினைக் கால்வாய் தேக்கும், மல்லலஞ் செருவிற் காஞ்சி வஞ்சியு மருதம் பூக்கும். 57.சேற்றினை யுழுவார் சேற்றிற் செந்நெலை விதைப்பார் செந்நெல் நாற்றினை நடுவார் நாற்றின் நடுக்களை களைவார் நன்னெல் தூற்றினை யறுப்பார் தூற்றின் சுமையினைச் சுமப்பார் சுற்றும் ஏற்றினை யுகைப்பா ரேற்றி னிகல்வலி…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.51-55
(இராவண காவியம்: 1.2.46-50 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் பாலை 51.கடிக்கமழ் மராமலர்க் கண்ணி யஞ்சிறார் படிக்குற வெருத்துக்கோ டன்ன பாலைக்காய் வெடிக்கவிட் டாடிட விரும்பிக் கோலினால் அடிக்குமோ சையிற்பருந் தஞ்சி யோடுமே. 52.பொருந்திய நண்பகற் போதிற் காளையின் திருந்திழைக் கன்னியுஞ் செல்லக் கண்டுமே இருந்துமே யெம்மனை யின்று நாளை நீர் விருந்துண்டு சென்மென வேண்டிக் கொள்வரே. தோட்டுணை யாகவே சுரிமென் கூந்தலைக் கூட்டியே செல்பவன் குற்ற மற்றவன் ஆட்டிநீ ‘பிரிக்கலை’ யென் றவ் வன்னையை…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.46-50
(இராவண காவியம்: 1.2.41-45 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் முல்லை & பாலை கொன்றையம் புறவிடைக் கொடியின் மின் னரி வான் குன் றுறை யிளையகார் குறுகி மாலையிற் சென்றவர் வரவெதி நள்ளிச் செவ்வியர் முன் றிலி லிறைகொள் முல்லை யோங்குமால், பாலை எல்லிய முது வெயி லெறிப்படி நல்வள முல்லையுங் குறிஞ்சியும் முறைமை தப்பியே நல்லியல் பிழந்தற நலிவு செய்திடும் பல்லவங் கருகுவெம் பாலை காணுவாம். வற்றிய விருப்பையும் வதங்கு மோமையும் துற்றிய…
இராவண காவியம்: பாயிரம்: தமிழகம், தமிழ்மக்கள்
(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 6-10 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் தமிழகம் 11.பண்டு நம்மவர் பாத்துப் பலவளங் கண்டு சுற்றங் கலந்து கரவிலா துண்டு வாழ வுதவி யுலகவாந் தண்ட மிழகந் தன்னை வழுத்துவாம். 12.நினைத்த நெஞ்சு நெகிழகந் தாயகம் அனைத்து முண்டு யாழியோ டாரியம் இனைத்த ளவுட னின்றியாங் கண்டுள தனித்தி ராவிடத் தாயினைப் போற்றுவாம். தமிழ்மக்கள் ஒழுக்க மென்ப துயிரினு மேலதன் இழுக்கம் போலிழி வில்லை யெனுஞ்சொலைப் பழக்க மாக்கிப் பயின்று பயின்றுயர் வழக்க மாந்தமிழ் மக்களைப் போற்றுவாம்….
இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 6-10
(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 1-5 தொடர்ச்சி) இராவண காவியம் பாயிரம் தமிழ்த்தாய் (தொடர்ச்சி) 6.எழுத்துச் சொற்பொருள் யாப்பணி யைந்தினும் பழுத்த வாய்மொழிப் பாவலர் பண்புற இழைத்த பாத்தொகை எண்ணில வாய்வளந் தழைத்த முத்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 7.ஞாயி றன்னசொல் நாவலர் வாய்ப்பிறந் தீயை வல்லோ ரிசையின் வளர்ந்துமுத் தூய சங்கத் திருந்த தொழுதகு தாயை நேர்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 8.இனித்த பாலினுந் தேனினு மின்சுவைக் கலித்தொ கையினுங் கட்டிக் கரும்பினும் நினைத்த வாயுஞ்சொல் நெஞ்சு மினித்திடும் தனித்த மிழ்ப்பெருந் தாயினைப் போற்றுவாம். 9.கனைத்து…
இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 1-5
(இராவணகாவியம் – கதைச்சுருக்கம் தொடர்ச்சி) இராவண காவியம் பாயிரம் தமிழ்த்தாய் 1.உலக மூமையா யுள்ளவக் காலையே பலக லைப்பயன் பாங்குறத் தாங்கியே இலகி யின்றுநா னென்னு மொழிக்கெலாம் தலைமை யாந்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 2.பின்னர் வந்து பிறந்து செருக்கொடு முன்னர் வந்த மொழிபல வீயவும், இன்னு மன்ன விளமைய தாயுள தன்னி கர்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 3.கன்ன டந்தெலுங் கந்துளு வம்புயல் மன்னி மேவு மணிமலை யாளமாம் பொன்னின் மேனி திரிந்து பொலிவறு தன்னை நேர் தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 4.மூவர் மன்னர் முறையொடு…
தமிழ்ப்புத்தகம் வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
View Post
ஒன்பதும் ஒன்றும் பத்து! தமிழே நம் சொத்து ! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஒன்பதும் ஒன்றும் பத்து தமிழே நம் சொத்து ! ஒன்றும் ஒன்றும் இரண்டு உழைப்பால் வெற்றி உண்டு இரண்டும் ஒன்றும் மூன்று முக்காலியின் கால்கள் மூன்று மூன்றும் ஒன்றும் நான்கு நாற்காலியின் கால்கள் நான்கு நான்கும் ஒன்றும் ஐந்து பெருங்காப்பியங்கள் மொத்தம் ஐந்து ஐந்தும் ஒன்றும் ஆறு மக்களின் அறிவு ஆறு ஆறும் ஒன்றும் ஏழு கடை வள்ளல் எண்ணிக்கை ஏழு ஏழும் ஒன்றும் எட்டு உடலில் சாணின் அளவு எட்டு எட்டும் ஒன்றும் ஒன்பது தொல்காப்பிய இயல்கள் மூ ஒன்பது ஒன்பதும் ஒன்றும்…
கணக்கைப் படிப்போம் எளிதாக! – இலக்குவனார் திருவள்ளுவன்
–
