தமிழ் வளர்கிறது! 19-21 : நாரா.நாச்சியப்பன்
(தமிழ் வளர்கிறது! 16-18 : தொடர்ச்சி) தமிழ் வளர்கிறது! 19-21 : ஆங்கிலத்தில் கணக்கெழுதும் வேலை பார்ப்போன் அவரசத்தில் ஒருபிழையை எழுதி விட்டால் பாங்கினிலே பணிசெய்யத் தகுதி யில்லை படிப்பில்லை என்றவனை விலக்கி வைப்பார் ! ஓங்கிவளர் தமிழ்மொழியில் கலைப டைப்போர் உண்டுபண்ணும் பெரும்பிழைகள் ஒன்றி ரண்டா? ஈங்கிதனைக் கூறிடவோர் ஆளும் இல்லை எழுத்தாளர் பிழைத்தமிழும் கொழுத்துப் போச்சாம் ! (19) அரைப்படிப்புக் காரரெல்லாம தமிழ்வ ளர்க்கும் ஆர்வமுள்ள எழுத்தாள ராகி விட்டார் ! திரைப்படத்தின் எழுத்தாள ரெல்லா மிந்தத் திருநாட்டில் அறிஞர்களாய்…
காலத்தின் குறள் பெரியார் : 6 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்
(காலத்தின் குறள் பெரியார் : 5 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார் அதிகாரம் 6. கொள்கை 1.அவனவன் நாட்டை அவனவன் ஆள்தல் இவண்நிலை நாட்டல் இலக்கு. 2.பொதுவுரிமை இல்லாப் பொதுவுடைமை வேண்டோம் இதுபெரியார் தந்த அறிவு. 3.கல்வியுடன் வேலை அனைவருக்கும் கிட்டிடத்தான் செல்வோம் பெரியார் வழி. 4.தொழுதுகை ஏந்திடோம் மாற்றான் இடத்தில் உழுதுபிறர்க்(கு) ஈந்திட்ட நாம். 5.சாதிமதம் மூடச் செயல்கள் அறியாமை மோதி யழித்தல் முடிபு. 6.காதல் கலந்திடல் ஆண்பெண் தனியுரிமை மோதல் தவிர்த்திடு வோம். 7.பெண்ஆண்…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38 – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 37 –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38 பெருங்கவிக்கோவின் துணிச்சல் வியக்கப்பட வேண்டியதேயாகும். தனக்குப் பிடிக்காத முறையில், சரியில்லாத கருத்தை, யார் எங்கே சொன்னாலும், அந்த இடத்திலேயே எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தயங்கமாட்டார் அவர். கவி அரங்கத்தில் தலைமை வகிப்போருடன் அவர் கருத்து மோதல் நடத்தியிருக்கிறார். பெருங்கவிக்கோ ஐயப்ப பக்தர். சபரி மலைக்குப் போவதற்கு நோன்புகள் ஏற்று நெறிமுறைகளைக் கடைப் பிடிப்பவர். அவருடைய கோலத்தை ஒரு கவி அரங்கத்தின் போது தலைமைவகித்த பகுத்தறிவுவாதி பழித்துப் பேசி விட்டார்,…
திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 4
(திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 3 தொடர்ச்சி) திருவள்ளுவர் – 4 ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றின் (126) ஒருமையு ளாமைபோ லுள்ளைந் தடக்கி (திருமந்திரம்-முதற்றந்திரம்-21) நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறு நாடு கெடும் (553) நாடொறு மன்னவ னாட்டிற் றவநெறி நாடொறு நாடி யவனெறி நாடானேல் நாடொறு நாடு கெடுமுட னண்ணுமால் நாடொறுஞ் செல்வ நரபதி குன்றுமே (திரு மந்திரம்-இராசதோடம்-2) சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் ( 359) சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின்…
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 12 – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 11– தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 12 5.அரசு நாடு நல்லமைதிபெற்று மக்கள் இன்புற்று வாழ வேண்டுமானால் அந்நாட்டில் அரசமுறை சிறந்து விளங்க வேண்டும். நாட்டின் சிறப்பியல்பைக் கூற வந்த திருவள்ளுவர், “ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயன்இன்றே வேந்து அமைவு இல்லாத நாடு” (குறள்.740) என்று திருவாய் மலர்ந்தருளினார். “நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் அதனால், யானுயிர் என்பதறிகை வேன்மிகு…
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 4.
(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 3. தொடர்ச்சி) நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- 4. ஆதிமந்தியார் இவர் பெண்பாலர் என்பதும், இவர் நல்லிசைப்புலமை வாய்ந்தவர் என்பதும், ‘மக்க ணுதலிய வகனைந் திணையுஞ் சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஆ’ என்னும் அகத்திணையியற் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர், ‘மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் ண்டுங் காணேன் மாண்டக் கோனை யானுமோ ராடுகள மகளே யென்கைக் கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலு மாடுகள மகனே’. (குறுந்தொகை-31) என்னும் பாடலை எடுத்தோதி, ‘இது காதலற் கெடுத்த…
வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 9
(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 8 தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் – 9 தகையணங்குறுத்தல் தலைமகன் தலைவியைக் காணுங்கால் அவள் அழகால் உந்தப்பட்டு அதனால் உளம் வேறுபடுதல். அமைதியாக இருந்த ஆடவனின் உள்ளம் பெண்ணின் தோற்றத்தால் வருந்தத் தொடங்குதல். “தகை அணங்குறுத்தல்’ என்றால் “அழகு வருத்தத்தை அடைவித்தல்’ என்பதாகும். தலைவியைக் கண்ட தலைவன் கூறுகின்றான்: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு (1081) அணங்குகொல்=வருத்தும் அழகுத் தெய்வமோ?; ஆய்மயில் கொல்லோ= ஆராய்ந்தெடுக்கப்பட்ட…
காலத்தின் குறள் பெரியார் : 5 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்
(காலத்தின் குறள் பெரியார் : 4 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார் அதிகாரம் 5. பகுத்தறிவு. 1.அறிவுடன் ஆராய்ச்சி யாண்டும் துணையாய் நெறிகாத்து நிற்கும் நிலைத்து. 2.ஆராய்ச்சி ஆளும் உலகத்தை ஆய்வினைப் பேராட்சி செய்வ தறிவு. 3.மானம் அறிவாம் இரண்டையும் பேணுவோம் நாம்நம் பகுத்துணர் வால். 4.கொடுப்பாரும் கொள்ளாரும் இல்லா உலகைப் படைக்கும் பகுத்தறிவென் பார். 5.முன்னோர் உரைத்திட்டார் மூத்தோர் வழிமொழிந்தார் என்றேபின் செல்லா திரு. 6.எப்பொருள் எத்தன்மை யார்சொன்னார் கேள்வி எழுப்புநீ வள்ளுவன் சொல். 7.மூடத்…
காலத்தின் குறள் பெரியார் : 4 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்
(காலத்தின் குறள் பெரியார் : 3 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார் அதிகாரம் 4. பெரியார் வாழ்த்து. 1.அறியார் வறியார் எளியார்க்(கு) உரியார் பெரியாரைப் போற்றும் உலகு. 2.அய்யா மொழியும் குறள்போல் உலகுக்குப் பொய்யா மொழியாம் புகல். 3.பிறப்பொக்கும் என்றார் சிறப்பினை நம்மை உரைக்கவைத் தார்பெரி யார். 4.குளிர்ப்பேச்சா அன்றுநம் அய்யாவின் பேச்சே ஒளிவீச்(சு) எனநீ உணர். 5.உண்மையைச் சொல்லத் தயங்கா அவர்குணமே வன்மையுள் எல்லாம் தலை. 6.சாதி மதங்களை மோதி மிதித்தவர் நீதி அளக்குமோர்…
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 3.
(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 2. தொடர்ச்சி) நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – 3 மற்றும் அவ் வடநூலுள் ஒருசாரார், சூத்திரசாதியாரும் பெண்பாலாரும் வேதத்தின் சொல்வழக்கும் பொருளுணர்ச்சியும் மெய்யுணர்தலும் வீடும் எய்தப்பெறார் என்று கூறி, அவரை அறியாமையுள்ளே நிறுத்துப. இஃதெல்லார்க்கும் உடன்பாடன்று. பெரும்பாலார் வேதத்தை முறையே நியமிக்கப்பட்ட ஒலியுடன் ஓதற்கண் சூத்திரசாதியாரையும் பெண்பாலாரையும் விலக்குபவல்லது, அதன் சொல்வழக்கினும் பொருளுணர்ச்சியினும் மெய்யுணர்ந்து வீடுபெறுதலினும் விலக்கார். இதுவே இத் தமிழ்நாட்டுச் சிறந்த சைவ வைணவ நல்லாசிரியர் தொன்னெறி மரபாம். சைன பௌத்தரும் மெய்யுணர்ந்து வீடு…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 37 – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 37 8. தன்னம்பிக்கையும் தன்மான வீரமும் பெருங்கவிக்கோ தன்னம்பிக்கை மிகுந்தவர்; தனது திறமைகளை நன்கு உணர்ந்தவர்; தன்மானம் மிக்கவர்; அதில் முகிழ்த்த வீரமும் துடிப்பும் கொண்டவர். அவருடைய இப்பண்புகள் அவரது கவிதைகளில் ஒளிப்பொறி சிதறிப் பல இடங்களிலும் பரவிக் கிடப்பதைக் காணலாம். காலமெல்லாம் விழித்திருந்தே கடமையாற்றும் கவிஞன் நான் அவனும் இவனும் எவனும் ஒன்றாய் ஆகும் கொள்கை யுடையவன் யான் விருப்பு வெறுப்பை வென்று வாழும் வேதாந்தி போல்…
திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 1/2 : வெ.அரங்கராசன்
திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 1/2 1.0.நுழைவாயில் மதிப்பு, மரியாதை, மேன்மை, மேம்பாடு, மிகுபுகழ், உயர்வு, உயரம், பெருமை, பெருமிதம், சீர்மை, சிறப்பு, செம்மை, செழிப்பு போன்ற மாண்புகளைப் பெற்று மாந்தன் மாந்தனாக வாழ்தல் வேண்டும். அதற்கு மாந்தன் சாலச்சிறந்த சமுதாய விழுமியங் களை [SOCIAL VALUES] பழுதில்லாமல் வழுவில்லாமல் இடைவிடாமல் இறுதிவரை கடைப்பிடியாகக் கொள்ளல் வேண்டும்,. இத்தகைய சாலச்சிறந்த சமுதாய விழுமியங்களைப் சங்க இலக்கியங்களிலும் பொங்குபுகழ் வாழ்வியல் பயன்பாட்டு நூலாக விளங்கும் திருக்குறளிலும் காணலாம். 2.0.விழுமியங்கள் — விளக்கம் …
