நாலடி இன்பம்!- 12 பற்கள் மூலம் சில சொற்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
நாலடி இன்பம்!- 12 பற்கள் மூலம் சில சொற்கள்! பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை இருசிகையும் உண்டீரோ என்று – வரிசையால் உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள் எண்ணார் அறிவுடை யார். (நாலடியார், பாடல் 18) பொருள்: வயது எவ்வளவு கடந்துள்ளது? பற்களின் வலிமை எவ்வாறுள்ளது? வலிமையான உணவையும் உண்ண முடியுமா? என்று கருதப்படும் மறைந்துவரும் இளமையை அறிவுடையவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். சொல் விளக்கம்: பருவம்=அகவை; எனைத்து=எத்தனை; உள=ஆகியுள்ளன; பல்லின்=பற்களினுடைய; பால்=வலிமைத்தன்மை; ஏனை=எவ்வளவு; இருசிகையும்= இரண்டு பிடியளவேனும் அல்லது வன்மை மென்மை ஆகிய இருவகை…
நாலடி இன்பம் – 11: வாழ்க்கைப் பயணத்தின் கட்டுச்சோறு! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
நாலடி இன்பம் – 11: வாழ்க்கைப் பயணத்தின் கட்டுச்சோறு! ஆட்பார்த் துழலு மருளில்கூற் றுண்மையால் தோட்கோப்புக் காலத்திற் கொண்டுய்ம்மின் – பீள் பிதுக்கிப் பிள்ளையைத் தாயலறக் கோடலான் மற்றதன் கள்ளங் கடைப்பிடித்த னன்று. (நாலடியார், பாடல் 20) பொருள்: தான் கொண்டு போகவேண்டிய உயிரைத் தேடித் தேடி அலைந்து கொண்டுபோகும் அருளற்றவன் யமன். கருவில் இருந்தாலும் அல்லது பிறந்த குழந்தையாய் இருந்தாலும் தாய் அழ அக்குழந்தையின் உயிரை எடுத்துச் செல்லும் இரக்கம் அற்றவன் அவன். அவன் வஞ்சகத்தைப் புரிந்துகொண்டு, வழிப்பயணத்தில் உதவும் கட்டுச்சோறு போன்ற…
நாலடி இன்பம்!- 10. காற்றில் காய்களும் விழும்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
நாலடி இன்பம்!- 10. காற்றில் காய்களும் விழும்! மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது கைத்துண்டாம் போழ்தே கரவா – தறஞ்செய்ம்மின் முற்றி யிருந்த கனியொழியத் தீவளியா னற்கா யுதிர்தலு முண்டு. (நாலடியார், பாடல் 19) பொருள்: கொடுங்காற்றால் கனி மட்டும் அல்ல, கனியாத காய்களும் வீழ்வதுண்டு. எனவே, இளமையாகத்தான் உள்ளோம், பின்னர் நல்வினை புரியலாம் என எண்ணாது உள்ளதை மறைக்காது அறம் செய்க! சொல் விளக்கம்: முற்றி=முதிர்ந்து; இருந்த= இருந்த; கனி=பழங்கள்; ஒழிய= மட்டுமல்லாமல்; தீவளியால்= வலிய காற்றால்; நல்= நல்ல; காய்=காய்கள்; உதிர்தலும்=விழுதலும்;…
நாலடி இன்பம்- 1 வானவில் அறிவியல்!, -இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
நாலடி இன்பம்– 1 வானவில் அறிவியல்! சங்கஇலக்கிய நூல்களிலும் அதற்குப் பிற்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு எனப் பெறும் நீதி நூல்களிலும் நூலாசிரியர்களால் கடவுள் வாழ்த்து பாடப் பெறவில்லை. அவற்றுக்குப் பின்னர்த் தோன்றிய புலவர்கள்தாம் கடவுள்வாழ்த்துப் பாடல்களைப் பாடிச் சேர்த்துள்ளனர். ‘அபியுத்தர்’ அல்லது பதுமனார் இக்கடவுள் வாழ்த்துச் செய்யுளை இயற்றிச் சேர்த்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. வான் இடு வில்லின் வரவு அறியா வாய்மையால், கால் நிலம் தோயாக் கடவுளை யாம் நிலம் சென்னி உற வணங்கிச் சேர்தும்- ‘எம்உள்ளத்து முன்னியவை முடிக!’ என்று. பொருள்: வான்முகிலால் தோன்றும்…
நாலடியார் காட்டும் நல்வழித் தொடர்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
நாலடியார் காட்டும் நல்வழித் தொடர்! – முன்னுரை ‘நாலு பேர் நாலு விதமாகப் பேசுவான் அதுதான் வாழ்க்கை’ என்று எல்லாரும் ஒரே மாதிரியாகத்தான் பேசுகிறார்கள். தமிழர்களின் வாழ்வில் நான்கு என்பதற்கு அப்படிப்பட்ட முதன்மையாக இடம் உண்டு. வாழ்க்கையை நகர்த்தும்போதும் நான்கு பேர் உதவி தேவை. வாழ்வை முடித்த பின்னும் நான்கு பேர் உதவி தேவை. வாழ்வை நகர்த்த உதவும் நான்காய், நமக்கு வாய்த்திருக்கிறது நாலடியார். சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நான்கு அடி வெண்பாக்களால் ஆன 400 பாடல்களின் தொகுப்பு நாலடியார் எனப் பெறுகிறது. நாலடி…
தமிழைப் போற்ற வாருங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழைப் போற்ற வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! பாடம் படிப்போம் வாருங்கள்! பாரில் உயர்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! கலைகள் பயில்வோம் வாருங்கள்! களிப்பாய் வாழ்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! ஒன்றாய் ஆட வாருங்கள்! நன்றாய்ச் சிறக்க வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! நாளும் அறிவோம் வாருங்கள்! நலமாய்த் திகழ்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி…
மெய்யெழுத் தறிவாய் ! – மு.பொன்னவைக்கோ
மெய்யெழுத் தறிவாய் ! க்ங்ச் ஞ் என்று கொஞ்சு ட்ண்த் ந் என்று முந்து ப்ம்ய் ர் என்று வென்று ல்வ்ழ் ள் என்று துள்ளு ற்ன் ற்ன் என்று சொல்லு மொத்தம் பதி னெட்டு மெய்க ளென்று கொள்ளு முனைவர் மு.பொன்னவைக்கோ
அகரமெய் அறிவாய்! – மு.பொன்னவைக்கோ
அகரமெய் அறிவாய்! க ங ச ஞ சொல்லட்டுமா? கல்விக் கற்கச் செல்லட்டுமா? ட ண த ந சொல்லட்டுமா? தமிழைக் கற்றுக் கொள்ளட்டுமா? ப ம ய ர சொல்லட்டுமா? பண்பைப் பெற்று வெல்லட்டுமா? ல வ ழ ள சொல்லட்டுமா? வாழ்வில் வெற்றிக் கொள்ளட்டுமா? ற ன ற ன சொல்லட்டுமா? மானாய்த் துள்ளிச் செல்லட்டுமா? முனைவர் மு.பொன்னவைக்கோ
பாசமில்லா உலகிது! – இலக்குவனார் திருவள்ளுவன்
பாசமில்லா உலகிது! (சீர்திருத்தப்பள்ளிகளில் உள்ளவர்கள் அனைவரையும் குற்றவாளிகள் என ஒட்டு மொத்தமாகக் கூற இயலாது. வீட்டைவிட்டு வெளியேறி அல்லது வழிதவறி வந்தவர்களும் இங்கே உள்ளனர். ஏழ்மையின் காரணமாகவும் குறும்புப் பிள்ளைகளை வளர்க்கத் தெரியாமலும் பெற்றோரால் சேர்க்கப்படுபவர்களும் உள்ளனர். சேர்த்து வைத்த ஊதியத்தைத் திருப்பித்தராமல் ஏமாற்றும் முதலாளிகளை எதிர்ப்பதால் குற்றவாளிகளாகக் காட்டப்பட்டு அடைக்கப்படுபவர்களும் உள்ளனர். தாய் அல்லது தந்தையை அல்லது இருவரையுமே இழந்து சிதைவுற்ற குடும்பத்தைச் சேர்ந்த சிறாரும் இங்கே சேர்க்கப்படுகின்றனர். பெண்கள் சீர்திருத்தப்பள்ளி மாணாக்கியர் பாடுவதற்காக 1980 இல் ‘வாசமில்லா மலரிது’ மெட்டில் எழுதிய…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 ஒரு கவி அரங்கத்தில் தலைமை வகிக்க நேர்ந்த ஒருவரை, “தக்கவன் நீ”! என்று கவிஞர் பாராட்டுகிறார். அதற்குரிய காரணத்தை அவர் கூறுகிறார், “உன் தலைமையில் என் கவிதையை நான் தரும் வாய்ப்பை நீ பெற்றிருக்கிறாயே, அதனால் தான்“ என்று பெருமிதத்துடன். “புல்லர் தமை வாழ்த்தாத என் பா கொண்டு போற்றுகிறேன், வணங்குகிறேன் பெருங்கவிக்கோ“ என்றும் பாடுகிறார். இவ்வாறு சொல்லக் கூடிய துணிவு எத்தனை பேருக்கு இருக்கிறது? இந்த…
காலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்
(காலத்தின் குறள் பெரியார் : 6 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார் அதிகாரம் 7. தொண்டறம். 1.அற்றார்க்கே ஒன்றாற்றி உற்றாரைப் பேணுதல் கற்றார்க்(கு) உரிய அறம். 2.தொண்டறம் என்னும்நல் தூயதோர்க் கொள்கையைக் கொண்டறம் பேணிவாழ் வோம். 3.எதிர்பார்ப்பே இன்றி இயன்றதைச்செய் அஃதே எதிர்பார்க்கும் தொண்டாம் அறம். 4.கொல்லாமை வேண்டும் உடன்பிறப்பாம் மாந்தரை வள்ளுவன்கோல் கண்ட அறம். 5.விழச்செய்தார் மாயையில் பேதையரைத் தட்டி எழச்செய்வோம் தொண்டறத் தால். 6.மறத்தால் விழவில்லை மாயையில் வீழ்ந்தோம் அறத்தொண்டால் வெற்றிகாண் போம். 7.தடியூன்றித்…
எனக்குரியவள் நீ ! – கனடா செயபாரதன்
எனக்குரியவள் நீ ! பெண்ணே ! நீ என்னை நேசிக்கிறாயா ? நானுனக்குத் தேவை யாயின் என்மேல் நம்பிக்கை வைத்திடு ! என்னவளாய் நீ இருந்திட எனக்குத் தேவை நீ ! “நலம் தானா,” என்று நீ என்னைக் கேட்டால் நலமென்று விடை சொல்வேன் ! நலமாக நானில்லை என்று நன்கு அறிவேன். நான் உன்னை இழந்திருப்பேன் ! நேரம் எடுத்து நமது தனிமையில் நீ உரைத்தால், நேசம் உண்டாகும் நமக்குள் ! என் பாடல் உலகை உதறி விட்டு உன்னிடம்…
