வரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு!

  ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேறற்ம்! கண்டறிவாய்! எழுந்திரு நீ! இளந்தமிழா, கண்விழிப்பாய்! இறந்தொழிந்த பண்டை நலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும்நீ படைப்பாய்! இந்நாள் தொண்டுசெய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே! உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற வெற்றியெலாம் உன்றன் வெற்றி! அயராதே! எழுந்திருநீ! இளந்தமிழா, அறஞ்செய்வாய்! நாமடைந்த துயரத்தைப் பழிதன்னை வாழ்வினிலோர் தாழ்மையினைத் துடைப்பாய் இந்நாள் செயல்செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் சீறி வந்தே. வாழியநீ! தமிழ்த்தாய்க்கு வரும்பெருமை உன் பெருமை! வயிற்றுக்கு ஊற்றக் கூழின்றி வாடுகின்றார்; எழுந்திருநீ! இளந்தமிழா குறைதவிர்க்க…

நாம் தமிழர் என்று பாடு

  நாம் பிறந்தது நாம் வளர்ந்தது தமிழ்நாடு – தமிழா நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு! போம்படி சொல் அயலாட்சியைப் பொழுதோடு-விரைவில் போகாவிட்டால் அறிவார் அவர் படும்பாடு. நாமறிவோம் உலகத்தில்நம் பண்பாடு-தமிழா நாம்தமிழர் நம்திறத்துக் கெவர்ஈடு? தீமை இனிப் பொறுக்காது நம்தமிழ் நாடு-நாம் தீர்த்துக் கெண்டோம் அவர் கணக்கை இன்றோடு! மூவேந்தர் முறை செய்தது நம் தமிழ் நாடு-தாய் முலைப்பாலொடு வீரம் உண்டது செந்தமிழ் நாடு கோவிலுக்குள் வேண்டாம் பிறர் தலையீடு-பகை குறுகுறுத்தால் பொறுக்காதெம் படைவீடு! நாவலரும் காவலரும் ஆண்டதுஇந்நாடு-நிமிர்ந்து நாம்தமிழர்…

பாரதிதாசனின் சங்கநாதம்

  எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே! சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென்று ஊது சங்கே! பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள் வெற்றித் தோள்கள்!…

மொழிப்போர் ஈகி” கீரனூர் முத்து

நஞ்சுண்டு மடிந்த முதல் “மொழிப்போர் ஈகி” கீரனூர் முத்து நினைவு நாள் 4.2.1965   ஆதிக்க இந்தி மொழிக்கு எதிராக சனவரி 25 இல் மாணவர்கள் பற்ற வைத்த சின்னத் தீப்பொறி காட்டுத் தீயாகப் பரவி தமிழகமெங்கும் பற்றிப் படர்ந்தது. கோடம்பாக்கம் சிவலிங்கமும், விருகம்பாக்கம் அரங்க நாதனும் தங்கள் தேக்குமர உடலுக்குத் தீ வைத்து மாண்ட செய்தி கீரனூர் முத்துவை அலைக்கழித்தது. இவனுக்கு இளம் வயதிலேயே தமிழ்ப்பற்று என்பது உயிரோடும், உணர்வோடும் கலந்திருந்தது. 1957ஆம் ஆண்டு ஏழாம் வகுப்பு படிக்கும் போதே தன் பள்ளித்…

பழி வராமல் படி – பாவலர் வையவன்

ஆய்ந்து படி அன்னைத்தமிழ் ஆய்ந்து படி அதனையும் ஆழ்ந்து படி பார்மொழியாம் தமிழ் படி பழகுதமிழ் நீ படி யார்மொழியின் நூலெனினும் பசுந்தமிழில் பாயும்படி புதைபடும் தமிழ்மடி பொலிவினைக் காணும்படி புதுப்புது நூல்கள் படி புரட்சிவர நீயும் படி புகுந்திள நெஞ்சினிலே புதுஒளி பாயும்படி புனைந்துள நூலெதையும் புரியும்படி தேடிப் படி பகுத்திடும் நால்வருணம் பாரினில் ஏன்இப்படி? பகுத்தறி வாளர்களின் பலவிதநூல் வாங்கிப் படி கலைகளில் தமிழ் படி கல்வியிலும் தமிழ் படி அலைபடும் ஆலயத்தில் ஆட்சியினில் தமிழைப் படி திருமணம் தமிழ் படி…

செந்தமிழ்க் காதலன் சின்னச்சாமி – திருச்செங்கோடு என்.கே.பி.வேல்

1. செந்தமிழுக் குயிரீந்த சின்னச்சாமி! தென்னகத்து வரலாற்றின் சின்னமாம் நீ! வெந் தணலில் நொந்துயிரை இந்திக் காக விட்டவனே! மொழிக்காதல் கற்றவன் நீ! தந்தைதாய் மனைமக்கள் சொந்தம் நீத்தாய்! தண்டமிழின் உயிர்ப்பண்பாம் மானம் காத்தாய்! அந்தோநான் என்னென்பேன் அரிய தியாகம் யாருனைப்போல் தாய்மொழிக்காகச் செய்தா ரிங்கே? 2. தொடுத்தபுகழ்க காஞ்சிமா நகரில் தோன்றித் தொல்லாண்மைத் திராவிடரின் சோர்வைப் போக்கி அடுக்குமொழி மேடைகளில் அழகாய்ப் பேசி அனைவருமே தமிழ் சுவைக்க எளிய தாக்கிக் கொடுத்தபெரும் தமி அறிஞர் அண்ணா இந்தி குறித்தெடுத்த போராட்டக் களத்தில் உன்னைக்…

தமிழ்த்தாய் வாழ ஒளி யளித்தாய்!

–  தமிழ்ப் புரவலர்  தூய தமிழ்க்காவலர் அண்ணல்தங்கோ அ) நெஞ்சத் துணிவுடையாய்! – தமிழர் நேர்மைத் திறமுடையாய்! – தமிழர் கொஞ்சும் தமிழ்வளம் பெற – தீயிலே  குளித்த தமிழ் மறவா! ஆ) ‘‘அஞ்சி அடிமைகளாய் – வாழ்பவர் அன்புமக்க ளாகார்!’’ என்றே நெஞ்சுரம் காட்டி நின்றாய்! – சின்னப்பா! நெருப்பிலே நின்றுவென்றாய்! (நெஞ்சத்) இ) வஞ்சகெஞ்ச வடவர்! – திருந்த வாழ்வை நெருப்பில் இட்டாய்! செஞ்சொல் தமிழ மகனே! – சின்னப்பா! திருக்குறட் கோமகனே!  (நெஞ்சத்) உ) பஞ்செனத் தீயில் இட்டாய் !…

மனக்கதவும் திறவாதோ!

-மதுரை க. பாண்டியன் படர்ந்திட்ட கொடியதனின் பரிதவிப்பைப் போக்குவதற்கே, பாரியெனும் மன்னவனும் தன்தேரைத் தந்திட்டான்! இடர்பட்ட புலவர்தன் வறுமைதனை யொழிப்பதற்கே, இனிமையுறக் குமணனுமே தன்தலையைக் கொடுத்திட்டான்! விடமறுத்த வல்லூற்றின் வன்பிடியை விடுப்பதற்கே. வழங்கிட்டான் தன் தசையை சிபியென்பான் புறவிற்காக! நடனமிடும் மயிலதனின் நலிவுதனை நீக்குதற்கே நல்கிட்டான் சால்வையென நவின்றதுவே வரலாறும்! இந்நாளில் அதுபோல இன் தமிழ்க்காய்த் தன்னுடலை இன்பமோடு எரிதணலில் இட்டுவிட்ட ஏந்தலுமே, இந்நாட்டில் இருக்கின்றான்! இன்னுருவாய் வாழ்கின்றான்! இகமுழுது போற்றுசின்னச் சாமியெனும் பேராளன்! மந்தமதி கொண்டோரின் அந்தகா ராமெடுக்க மண்ணகத்தில் மகிமையுற மாண்டவழி…

சந்தனத் தமிழன்

  – கவிஞர் முருகு சுந்தரம் அமிழ்தமாம் தமிழைக் காக்க ஆருயிர் நெருப்பில் தந்த தமிழவேள் சின்னசாமி தமிழர்க்குப் பெரிய சாமி! உமியினைப் போன்று மக்கள் உலகினில் பலபேர் வாழ இமயத்தைச் சிறிய தாக்கி இவன் புகழ் எழுப்பி விட்டான்! மக்களும் மறவன்; ஆட்டு மந்தையில் பிறந்த வேங்கை. தக்கைகள் நடுவே மின்னும் தனித்தவோர் தங்கக் கூர்வாள்; சக்கைபோல் தமிழ ருக்குள் சந்தனத் தமிழன்; அஞ்சிப் பக்கத்தில் பதுங்கி டாமல் பாய்கின்ற சிங்கக் குட்டி. கொழுந்துவிட் டெரியும் தீயில் குந்திய அப்பா அன்று செழுந்தமிழ்த்…

செந்தழலில் மூழ்கிய செம்மல் : அவன் பெரியசாமி

  – கே இராமையா 1. பொங்கியெழுந் தென்கடலி னடுவே தோன்றிப் பொதிகைமலைச் சாரலெல்லாம் புனலோ யோடிப் பொங்கரிடைத் தென்றலெனப் பூவோ டாடிப் புகழ்மறவர் தென்பாண்டிக் கூடல் சேர்ந்து சங்கமமர்ந் தகமகிழப் புறமு மார்ப்பச் சதிராடி வந்தவளே! தமிழே! தாயே! மங்கரவுன் புகழ்வாழ வாழ்வா யுன்றன் மக்களுளோம் மண்டமர்க்கு மயங்கா மள்ளர் 2. சீராருந் தாயேநின் சேயே னோர்நாள் செத்தபிணம் படையெடுத்து வருதல் கண்டேன் போராட லேன்? பிணங்கள் தானே விழும் பூசலெதற் கென்றிருந்தே னானா லன்னாய்! நேராத செயல்நேரக் கண்டேல் வேலி நெற்பயிரை…

என்றைக்குமே இன்பம் நிலைகொள்ள வேண்டும்

செங்கதிர் எழுந்ததடி எங்கும் ஒளி ஆனதடி பொங்கல்திரு நாளடியே என்னருந் தோழி — அதோ பொன்னரிவாள் ஏந்திவிட்டார் என்னருந்தோழி தெங்கில்இளம் பாளையைப் போல் செந்நெல்அறுத் தார் உழவர் அங்குக்களம் கொண்டடித்தார் என்னருந் தோழி — அவர் சங்கத் தமிழ் பாடிப்பாடி என்னருந்தோழி. கட்டடித்தே நெல்லளந்தே கட்டை வண்டி ஏற்றுகின்றார் தொட்டளித்தார் தைப்புதுநெல் என்னருந் தோழி — அவர் தோளை வையம் வாழ்த்திற்றடி என்னருந்தோழி. கொட்டு முழக் கோடு நெல்லைக் குற்றுகின்ற மாத ரெல்லாம் பட்டுடை இழுத்துக் கட்டி என்னருந் தோழி — பாடும் பாட்டெல்லாம்…

கை வீசம்மா கை வீசு! – இளவல்

கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! புத்தகம் வாங்கலாம் கை வீசு! நன்றாய்ப் படிக்கலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! பொம்மை வாங்கலாம் கை வீசு! ஆடி மகிழலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! பழங்கள் வாங்கலாம் கை வீசு! பகிர்ந்து உண்ணலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! ஆடை வாங்கலாம் கை வீசு!…