இனிதே இலக்கியம் 2 போற்றி! போற்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்

பண்ணினை இயற்கை  வைத்த பண்பனே போற்றி போற்றி பெண்மையில் தாய்மை வைத்த பெரியனே போற்றி போற்றி வண்மையை உயிரில் வைத்த வள்ளலே போற்றி போற்றி உண்மையில் இருக்கை வைத்த உறவனே போற்றி போற்றி இறைவனைப் பொதுவான பண்புகள் அடிப்படையில் போற்றும் தமிழ்ப்பாடல்கள் எச்சமயத்தவரும் எக்கடவுளை வணங்குவோரும் ஏற்கும் சிறப்பினைப் பெற்றுள்ளன. அந்த வகையில் தமிழ்த்தென்றல் திரு.வி.க. எனப்படும் திரு.வி.கல்ணயாண சுந்தரனாரால்  எழுதப்பெற்ற ‘பொதுமை வேட்டல்’ என்னும் நூலில்  இருந்து எடுக்கப்பட்ட பாடல் இது.   இயற்கையோடு இயைந்ததாக இசையை அமைத்த பண்பாளரே போற்றி! பெண்மையின்…

இனிதே இலக்கியம் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

1. எங்கும் கலந்துள்ள இறைவன் கண்ணில் கலந்தான்; கருத்தில் கலந்தான்-என் எண்ணில் கலந்தே இருகின்றான்;-பண்ணில் கலந்தான்;என் பாட்டில் கலந்தான் -உயிரில் கலந்தான் கருணை கலந்து. எல்லாச் சமயத்தவரும் ஏற்கும் வண்ணம் பொதுநோக்கான இறைநெறிப்பாடல்கள் தமிழில்தான மிகுதியாக உள்ளன. இப்பாடலும்  அனைவரும் பாடுவதற்குரிய பொதுநிலைச் சிறப்பு உடையது. இறைவன்,  அருட்பார்வை உடைய கண்ணில் கலந்திருக்கின்றான்; நற்செயல்களுக்கு அடிப்படையான நல்ல கருத்துகளில் கலந்திருக்கின்றான்;  பிறர் நலம் பேணக்கூடிய உயர்ந்த எண்ணத்தில் கலந்திருக்கின்றான்; இசையாகிய பண்ணிலும் பாட்டிலும் கலந்திருக்கின்றான்;  அருள்உணர்வுடன் நம் உயிரிலும் கலந்துள்ளான். எல்லா இடங்களிலும் கலந்து…

புகை இல்லாத புகைவண்டி – சின்னா சர்புதீன்

புகை இல்லாத புகைவண்டி ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சூ ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சூ இரும்புக்கம்பி இரண்டிலமர்ந்து   எதிர்த்திசையை நோக்கியே விரைந்துசெல்லும் வண்டியைப்பார்   வீறுகொண்டு பறக்குதே நீண்டுநெடுங் தூரம்ஓடி   நிற்குமிடம் தன்னிலே மீண்டும்மக்கள் தம்மைஏற்றி   மிகவிரைவாய்ச் செல்லுமே புகையிரதம் எனஇதற்குப்   பெயரிட்டார்கள் முன்னராம் புகைவராத இன்றும் அது   புகையிரதம் தானடா ஆடுமாடு மனிதர் பொருள்   அத்தனையும் சுமக்குமாம் வீடுபோன்ற அறைகள்பல   வரிசையாக இருக்குமாம் காடுமேடு வயல்நிலங்கள்   கடல்கடந்தும் போகுமாம் நாடிரண்டை மூன்றைத்தொடுத்து…

வள்ளுவர் மாலை – இலக்குவனார் திருவள்ளுவன்

வள்ளுவர் மாலை – நாட்டியப் பாடல் தித், தித், தை; தாம் தித், தித், தை; தித்தக்கு தத்தக்கு தத்த தாம்; குத்தகிட்டகிண்ண தொங்க தக்குதாம் தொங்க தங்குகு தங்குகு தங்குகு தித்தாம் குத்தகிட்டகிண்ண தொங்க தக்குதாம் தொங்க தாதங்கி தங்கி கிடதக தித்தித் தை தத் தத் தாம தத்தாம் திருகிட கிடதக திக்கும்தாரி அருமறை தந்தவர், உலகப்புலவர் குறள்நெறி நல்கிய வள்ளுவர் வெல்க! தீந்தமிழ் வள்ளுவம் வெல்க! வெல்க! தீந்தமிழ் வள்ளுவம் வெல்க! வெல்க! தீந்தமிழ் வள்ளுவம் வெல்க! வெல்க! ஞாலப்…

என்றும் நமக்கு நன்னாளே! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஒவ்வொரு நாளும் பிறக்கின்றோம் எல்லா நாளும் சிறந்திடுவோம்! வாழ்க்கை என்பது வாழ்ந்திடவே வாழும் முறைப்படி வாழ்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது போராட்ட மானால் போரில் கலந்து வென்றிடுவோம்! வாழ்க்கை என்பது விளையாட் டெனில் ஆடி வாகை சூடிடுவோம்! வாழ்க்கை என்பது பயண மாயின் இனிதே இலக்கை அடைந்திடுவோம்! வாழ்க்கை என்பது கேளிக்கை என்றால் பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது கணக்கு எனவே கணித்துப் பார்த்துத் தேர்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது வரலா றாகச் செம்மைச் செயலால் செதுக்கிடுவோம்! வாழ நாமும் பிறந்து விட்டோம் வாழ்ந்தேதான் காட்டிடுவோம்!…

மழை வேண்டும்!

ஊசி போல மின்னி மின்னி                 ஊர் செழிக்கப் பெய்யும் மழை காசு போல மின்னி மின்னி                 காடு செழிக்கப் பெய்யும் மழை பணம் போல மின்னி மின்னி                 பட்டண மெல்லாம் பெய்யும் மழை தேச மெல்லாம் செழித்திடவே                 செல்ல மழை பெய்ய வேண்டும் செல்ல மழை பெய்திடவே                 குளங்க ளெல்லாம் பெருக வேண்டும் பெருகி நின்ற குளங் களிலே                 பெருமை யோடு ஆட வேண்டும் – நாட்டுப்புறப் பாடல்  

பாடி மகிழ்வோம் பைந்தமிழில் – இலக்குவனார் திருவள்ளுவன்

பாடி மகிழ்வோம் பைந்தமிழில்    உலகில் தோன்றிய முதல் மொழி தமிழே. எனவே, பிற அனைத்து மொழிகளுக்கெல்லாம் தாயாகத் திகழ்கிறது. ஆதலின்,,இசை, கூத்து ஆகிய மூன்றிலும் தாய்மைச் சிறப்புடன் இலங்குகிறது. இசைச் செல்வம் மிகுந்தது தமிழ் என்பதை மறந்து பிற மொழிகளில் பாடுவதையே பெருமையாகக் கொள்வது நமது பழக்கமாக உள்ளது. புலவர்களின் இசைப் பாடல்களைச் சிறு அகவையிலேயே நாம் சிறுவர் சிறுமியருக்குப் பயிற்றுவிக்க வேண்டும். நமக்குத் தெரிந்த அல்லது எளிமையான பாடல் மெட்டுகளில் பாடிப் பழகுவது தமிழ்ப் பாடல்களில் ஈடுபாட்டை ஏற்படுத்தும். எனவே, சில…

நாளும் வளர்வாய் நல்ல படி! – கு.ந.தங்கராசு

அம்மா, அப்பா என்ற படி, அங்கும் இங்கும் நடந்த படி, அழகுத் தமிழில் பாட்டுப் படி, அம்மா சொல்லித் தந்த படி! ஆசை முத்தம் கொடுத்த படி, அப்பா மகிழ்வு கொள்ளும் படி, அன்னைத் தமிழில் பாட்டுப் படி, அப்பா கற்றுக் கொடுத்த படி! அண்ணன் அக்கா சிரிக்கும் படி, அத்தை மாமா மகிழும் படி, மழலைத் தமிழில் பாட்டுப் படி, மனம்போல் குறும்பு செய்த படி! நடைவண்டி பிடித்து நடந்த படி, ஙஞண நமன என்ற படி, நாளும் வளர்வாய் நல்ல படி!…

தமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான் – பாவேந்தர் பாரதிதாசன்

தமிழுயர்ந்தால்தான் தமிழன் உயர்வான்! தமிழப் பகையாளனும் தானே பெயர்வான்!     (தமிழ்) தமிழுக்குத் தொண்டு    தரும்புலவோர்கள் தமிழ்க்கனி மரத்தினைத்    தாங்கிடும் வேர்கள்! கமழ்புது கருத்துக்குப்    பலபல துறைகள் கற்றவர் வரவர    கவின்பெறும் முறைகள்!               (தமிழ்) எங்கும் எதிலுமே    தமிழமுதூட்டு இங்கிலீசை இந்தியை    இடமிலா தோட்டு திங்கள், செவ்வாய், புதன்    கோள்கட்குச் செல்வாய் தேடரும் அறிவியல்    எண்ணங்கள் வெல்வாய்!               (தமிழ்)

வேங்கையே எழுக! – பாவேந்தர் பாரதிதாசன்

  இந்தித் திணிப்புச் சரியல்ல! அமைதி வேண்டும் நாட்டினிலே அன்பு வேண்டும் என்பார் ஆழ மடுவில் நீரைக் கலக்க வேண்டாம் என்று சொல்வார். தமிழகத்தில் இந்தி திணிக்கச் சட்டம் செய்தார் அவரே சாரும் குட்டையில் எருமை மாட்டை தள்ளுகின்றார் அவரே! சுமக்க வேண்டும் இந்தியினைப் பொதுமொழியாய் என்பார்; தொலைய வேண்டும் எதிர்ப்புக் கூச்சல் தொலைய வேண்டும் என்பார்; தமிழ்மொழியை அழிக்க வேண்டும் என்றவரும் அவரே தமிழகத்திலே புகுந்த சாக்குருவிகள் அவரே!

தமிழ் வரலாறு – பாவேந்தர் பாரதிதாசன்

கேளீர் தமிழ்வர லாறு — கேட்கக் கேட்க அதுநமக்கு முக்கனிச் சாறு (கே) நாள்எனும் நீள்உல கிற்கே — நல்ல நாகரி கத்துணை நம்தமி ழாகும் வாளுக்குக் கூர்மையைப் போல — அது வாழ்வுக்குப் பாதை வகுத்ததுமாகும் (கே) இயல்பினில் தோன்றிய தாகும் — தமிழ் இந்நாவ லத்தின்மு தன்மொழியாகும் அயலவர் கால்வைக்கு முன்பே — தமிழ் ஐந்தின்இ லக்கணம் கண்டதுமாகும் (கே) அகத்தியன் சொன்னது மில்லை — தமிழ் அகத்திய மேமுதல் நூலெனல் பொய்யாம் மிகுதமிழ் நூற்கொள்கை மாற்றிப் — பிறர் மேல்வைத்த…