வெருளி நோய்கள் 931-935: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 926-930 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 931-935 931. கொண்டாட்ட வெருளி – Heortophobia கொண்டாட்டம் குறித்த வரம்பு கடந்த பேரச்சம் கொண்டாட்ட வெருளி Heorto என்னும் சொல்லின் மூலக் கிரேக்கச்சொல்லின் பொருள் விடுமுறை. விடுமுறை நாள் கொண்டாட்ட ங்களை இங்கேகுறிக்கிறது. 00 932. கொதிசாறு வெருளி – Soupaphobia கொதிசாறு(Soup) குறித்த அளவற்ற பேரச்சம் கொதிசாறு வெருளி. காய்கனிகளிலிருந்து அல்லது தக்காளி, முருங்கைக்காய் போன்ற குறிப்பிட்ட காய்கனியிலிருந்து அல்லது எலும்பிலிருந்து அல்லது பிற உண்பொருளிலிருந்து உருவாக்கப்படும் அனைத்துவகை கொதி சாறு அல்லது…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 01: இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 01  இக்காலத்தில் இலக்கிய விழா நடத்துவது – அதையும் இலக்கண விழாவாகவும் நடத்துவது – அதையும் தொடர் கருத்தரங்கமாக நடத்துவது என்பது அரிதினும் அரிதான செயல். இதுவரை 50 கருத்தரங்கம் நடத்திப் பொன்விழா கண்டுள்ள திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம் தன் 51 ஆம் கருத்தரங்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பை எனக்கு அளித்து மகிழ்ச்சி தந்துள்ளமைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.   இத்தகைய சிறப்பான தமிழ்ப்பணி ஆற்றிவரும் நல்லாசிரியர் புலவர் எண்கண் சா.மணி அவர்களே! பிற பொறுப்பாளர்களே! தலைமை…

வெருளி நோய்கள் 926-930: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 921-925:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 926-930 கொழுப்பு பற்றிய தேவையற்ற பேரச்சம் கொழுப்பு வெருளி.கொழுப்பு கூடுவதால் உடல் எடை கூடும், மாரடைப்பு ஏற்படும், பிற நோய்கள் தாக்கும், தொந்தி வளரும் என்றெல்லாம் அளவு கடந்த கவலையால் வரும் பேரச்சம் இது.lipos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கொழுப்பு.கொழுப்பு என்னும் பொருள் கொண்ட adeps என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து Adipo என்னும் ஒட்டுச்சொல் உருவானது.00 கொள்ளையடிக்கப்படல் அல்லது வழிப்பறி குறித்த அளவுகடந்த பேரச்சம் கொள்ளையர் வெருளி/ திருட்டு வெருளி.நாளும் கொள்ளைபற்றிய செய்திகள்…

கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை : திருத்துறைக் கிழார்

(கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா! – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார்ஆ.தமிழர் கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை ஆரியர் வருகையால் தமிழ் மொழி சிதைந்தது; தமிழர் பண்பாடு மறைந்தது; தமிழர் கணக்கியல் முறை தகர்ந்தது; தமிழர் காலம் கணக்கிடும் முறையும் ஒழிந்தது. இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் கரணியம் தமிழரின் அயல்மொழி, அயல்நாகரிகத்தின்பால் உள்ள ஆசையும், தமிழரின் ஏமாளித்தனமும் எனலாம். இன்றும் அந்நிலையே நீடிக்கிறது.ஏதோ அத்திபூத்தாற்போல, ஆரணி பாண்டுரங்கன் (பெயர் தமிழன்று) போன்ற சில உணர்வாளர் மறைந்தும், மறந்தும் போன தமிழர் நாகரிகம், பண்பாடு, வாழ்வியல் முறைகள்…

வெருளி நோய்கள் 921-925: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 916-920: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 921-925 கொடுங்கோலன் ஆட்சியால் துன்புறுவோருக்கும் அதனைக் கேள்வியுறுவோருக்கும் ஏற்படும் வெருளி காெடுங்கோலன் வெருளி.காலந்தோறும் உலகெங்கும் கொடுங்கோலாட்சியால் மக்கள் துன்புறுவதால் கொடுங்கோலாட்சிக்கு எதிராகவே உள்ளனர்.“கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக” என வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் கூறியுள்ளார்.“இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்” (பாரதியார்) என்னும் கொடுங்கோலாட்சியால் மக்கள் அது குறித்துப் பேரச்சம் கொள்கின்றனர். கொடுங்கோலர் வரலாறுகள், படங்கள், படக்காட்சிகள், கதைகள் என எதுவாக இருந்தாலும் கொடுங்கோலர் குறித்துப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00 கொப்பூழ் குறித்த அளவுகடந்த பேரச்சம்…

வெருளி நோய்கள் 916 – 920 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 911-915: தொடர்ச்சி) கைப்பந்து குறித்த வரம்பற்ற பேரச்சம் கைப்பந்து வெருளி.Volley என்றால் தட்டுதல் அல்லது அடித்தல் அல்லது தாக்குதல் எனப்பொருள்கள். Volleyball என்னும் பொழுது பந்து கீழே விழும் முன்னர் அதனைக் கையால் அடித்தல் என்று பொருளாகிறது.00 தாங்கள் கைவிடப்படுவோமோ என்ற பேரச்சம் கைவிடல் வெருளி.புறக்கணிக்கப்படுபவர்களுக்குக் கைவிடப்படுகிறோம் என்ற அச்ச உணர்வு பெருகும். பிள்ளைகளால் கை விடப்படுவோம், வளர்ப்பவர்களால் கை விடப்படுவோம், வாழ்க்கைத் துணைவரால் கை விடப்படுவோம் என்றெல்லாம் அளவு கடந்து கவலைப்படுவோர் உள்ளனர். இதனால் எதிர்காலம் குறித்த அளவுகடந்த பேரச்சம்…

வெருளி நோய்கள் 911-915: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 906-910 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 911-915 கை விளக்கு(torch light) குறித்த வரம்பற்ற பேரச்சம் கை விளக்கு வெருளி.தீவட்டி விளக்கு, தீப்பந்தம், கைப்பந்த மின்விளக்கு முதலானவற்றை குறிக்கிறது. இந்த இடத்தில் கைப்பந்த மின்விளக்கு என்பது சுருக்கமாகக் கைவிளக்கு எனக் குறிக்கப் பெற்றுள்ளது.Pyrso என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் தீ. ஒளிப்பிழம்பு, சுடரொளி என்னும் பொருள்களையும் குறிக்கிறது. இங்கே ஒளிச்சுடர் தரும் கை விளக்கையும் குறிக்கிறது.00 கை மீதான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் கை வெருளி.தம் கைகளைக் கண்டாலோ அடுத்தவர் கைகளைக் கண்டாலோ…

 சங்கப் புலவர்கள் பொன்னுரை – 28 : நண்பர்க்குத் துன்பம் வரும் பொழுது கை விடாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 27 தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 28 நண்பர்க்குத் துன்பம் வரும் பொழுது கை விடாதே!  ”நன்றல் காலையும் நட்பிற் கோடார்” கல்லாடனார், அகநானூறு 113. 1. தலைவி கூற்று திணை: பாலை துறை: தலைமகன் பிரிவின்கண், தலைமகள் தோழிக்குச் சொல்லியது பொருள் விளக்கம்: நன்று அல் காலையும் நட்பின் கோடார். நன்றல்காலை – நன்றல்லாத பொழுது = கேடுவந்த பொழுது = துயருற்ற பொழுது; நட்பின் கோடார் = நட்பிலிருந்து கோணாதவர்கள் = நட்பை விட்டு…

வெருளி நோய்கள் 906-910: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 901-905: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 906-910 புனைவுருவான கேர்மிட்டு தவளை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கேர்மிட்டு வெருளி.கேர்மிட்டின் பகுத்தறிவு, விரைவு, துணிச்சல் செயற்பாடு பலரையும் கவர்ந்தாலும் அதே விரைவும் துணிச்சலுமான செயற்பாடுகளே பலருக்கு வெருளி விளைவிப்பதாக உள்ள்து.தவளை வெருளி(Ranidaphobia), போன்மை வெருளி (Automatonophobia) உள்ளவர்களுக்குக் கேர்மிட்டு வெருளி வரும வாய்ப்பு உள்ளது.00 கேலிச்சித்திரப் பாத்திரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கேலிப் பாத்திர வெருளி.கேலிப்படங்களில் இடம் பெறும் தனித்துவத் தோற்றம் காரணமாகச் சிறுவர்களுக்கு அச்சம் வருகிறது. வஞ்சன்(வில்லன்) பாத்திரத்தால் பாதிக்கப்படுவதைப் பார்க்கும் சிறுவர்கள் கெட்டகனவுகளுக்கும்…

வெருளி நோய்கள் 901-905: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 896-900: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 901-905 901. கெடுமதிப்பு வெருளி  – Oppugnophobia(2) சுட்டுரை, முகநூல் முதலான குமுகத் தளங்களில் பின் தொடருநர் இழிவாக எண்ணும் வகையில் சிலர் மதிப்புக்கேடாகக் குறிப்பிடுவார்கள் எனப் பேரச்சம் கொள்ளுதல் கெடுமதிப்பு வெருளி. 00 902. கெண்டக்கி கோழி வெருளி -KFCphobia கெண்டக்கி கோழி உணா குறித்த வரம்பற்ற பேரச்சம் கெண்டக்கி கோழி  வெருளி கெண்டக்கி வறுகோழி (KFC, Kentucky Fried Chicken) என்பது விரைவு உணவுச்சாலைகளின் கூட்டமைப்பு. இதன் தலைமையிடம் கெண்டக்கியில் உள்ள (உ)லூயிவிலில்…

நடைமுறை ஆண்டுப் பிறப்பு வாழ்த்துகள் 2026

நடைமுறை ஆண்டுப் பிறப்பு வாழ்த்துகள் 2026 “நானிலம் சிறக்கவே நன்னெறி காணவே நலம் திகழவே வளம் நிறையவே அல்லன அழியவே நல்லன பெருகவே நல்லோர் உயரவே இல்லார்க்கும் வல்லார்க்கும் நல்லார்க்கும் பொல்லார்க்கும் எல்லார்க்கும் வாழ்த்துகள் நடைமுறை யாண்டில் என்றென்றும் வாழிய!” நடைமுறை ஆண்டு எனக் குறிப்பதன் காரத்தை அறிய 2019 இல் அகரமுதல இதழில் எழுதிய கட்டுரையை அளிக்கின்றேன். நடைமுறை ஆண்டும் தமிழ் ஆண்டுப் பகுப்பின் சிறப்பும்  சனவரி முதல் நாளன்று நாம் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறோம்.  ஆனால் நாம் எண்ணுவதுபோல் இஃது ஆங்கில ஆண்டுமல்ல, கிறித்துவ…

வெருளி நோய்கள் 896-900: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 891-895: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 896-900 குனிவு, வளைவு, கூன் முதலானவை பற்றிய இயல்பு கடந்த பேரச்சம் கூன் வெருளி.குனிவு வெருளி என முன்பு குறித்திருந்தேன். இப்பொழுது கூன் வெருளி என மாற்றியுள்ளேன்.இராமாயணத்தில் இராமனைக் காட்டிற்கு அனுப்பக் காரணமாக இருந்த மந்தரை என்னும் பெண்மணி கூனியாக இருந்தமையால், கூனி என்றாலே சூழ்ச்சிக்காரர் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது.துன்ன_அரும் கொடு மன கூனி தோன்றினாள் (இராமாயணம்,அயோத்தியா காண்டம்,2.46/4)சூழ்ந்த தீ வினை நிகர் கூனி சொல்லுவாள்(இராமாயணம்,அயோத்தியா காண்டம், 2.55/2)என மந்தரையாகிய கூனியைக் கொடுமன கூனி…