வெருளி நோய்கள் 771-775: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 766-770: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 771-775 காளான்பற்றிய அளவுகடந்த பேரச்சம் காளான் வெருளி.காளாம்பி என்றும் காளானைக் குறிப்பர். எனவே, முதலில் காளாம்பி வெருளி என்றும் குறித்திருந்தேன். எனினும் இரு வகை வேண்டா என்பதால் இப்பொழுது காளான் வெருளி என்று மட்டும் குறித்துள்ளேன்.myco என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் காளான்.00 காற்பந்தாட்டம் குறித்த வரம்பற்ற பேரச்சம் காற்பந்தாட்ட வெருளி. அமெரிக்கா, கனடா, ஆத்தரேலிய நாடுகளில் காற்பந்தை(foot ball) உதைபந்து(soccer ball) என்பதால் உதைபந்தாட்ட வெருளி என்றும் சொல்லப் பெறும்.காற்பந்தாட்டத்தினால் உடலுக்கோ உயிருக்கோ சேதமோ…
கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: திருத்துறைக் கிழார்
(கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 1/3: தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3 இலங்கை அரசுடன் இந்தியா உடன்படிக்கை இந்திராகாந்தி இந்தியாவை ஆண்டகாலத்தில் தமிழ்நாட்டிற்குரிய கச்சத்தீவு இலங்கையரசிடம் விடப்பட்டது. தமழக அரசு வடவரக்கு அடிமையாயிருப்பதால் தட்டிக்கேட்கத் துணிவில்லை. கேட்டால் பதவி பறிபோகும்! ஈழ விடுதலைப்புலிகள் போராட முற்பட்டனர். ஈழத்தமிழர் இளைஞர் பலர் படையில் சேர்ந்தனர். சிங்களர் அரசுடன் போர் தொடங்கினர். சிங்களர் திணறினர். இலங்கையரசால் தாக்குப் பிடிக்கவியலவில்லை. அமெரிக்கப் படைகள் தங்க இலங்கையில் இடமளிக்க முடிவு செய்தது…
வெருளி நோய்கள் 766-770: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 761-765: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 766-770 காவல் நாய் குறித்த அளவுகடந்த பேரச்சம் காவல் நாய் வெருளி.காவல் நாய்கள் பல பெருத்த உருவிலும் பருத்த தோற்றத்திலும் பார்ப்பதற்கு அச்சம் ஊட்டும் வகையிலும் இருக்கும். இதனாலும் எங்கே காவல் நாய்மேலே பாய்ந்து சதையைப் பிடுங்கி விடுமோ என்ற பேரச்சத்திலும் காவல் நாய் வெருளிக்கு ஆளாகின்றனர். நாய் மீதான அச்சம் உள்ளவர்களுக்கும் விலங்கு வெருளி உள்ளவர்களுக்கும் காவல் நாய் வெருளி வருகிறது. 00 காவல்துறையினர் குறித்த வரம்பற்ற பேரச்சம் காவல்துறையினர் வெருளி.காவல்துறையினர் சிலரின் அட்டூழியங்களையும்…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 18 : நாளைக்கு, இன்றைக்கு, நேற்றைக்கு : இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 17 : உடைமையாளர், உரிமையாளர் வேறுபாடு – தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 18 இம் மடலில் நாளைக்கு தொடக்க விழா நடைபெறும் என்று உள்ளது. இது போன்ற ஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க வேண்டும். நான்காம் வேற்றுமை உருபான ‘கு’ அடுத்து வல்லினம் மிகும் எனப் பார்த்தோம் அல்லவா? அதனால், நாளைக்கு, இன்றைக்கு, நேற்றைக்கு, தொடக்கத்திற்கு, முடிவிற்கு, முன்பு குறிப்பிட்டவாறு இடைவேளைக்கு அடுத்தெல்லாம் வல்லினம் மிகும். எனவே, பின்வருமாறு தொடர்கள் அமையும். நாளைக்குத் தொடக்கம்…
வெருளி நோய்கள் 761-765: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 756-760: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 761-765 கால் வருடி(foot massager) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கால் வருடி வெருளி.கால் வருடியில் பாதங்கள் சிக்கிக் கொள்ளுமோ, மின் அதிர்ச்சிக்கு ஆளாகிப்பேரிடர் நேருமோ என்றெறல்லாம தேவையற்ற கவலைக்கு ஆளாகி வருடி வெருளிக்கு ஆளாகின்றனர்.00 கால்விரல்கள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கால்விரல் வெகால்விரல்களில் வலி ஏற்படும், சேற்றுப் புண் ஏற்படும், விரல் முட்டிகளில் வீக்கம் ஏற்படும் என்பன போன்ற தேவையற்ற பேரச்சம் கொண்டு கால் விரல் வெருளிக்கு ஆளாகின்றனர்.“digitus” என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கால்…
சட்டச் சொற்கள் விளக்கம் 1026-1030 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 1021-1025 – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1026-1030 1026. Avenue வாய்ப்பு அணுகு வழி நிழற்சாலை Avenue என்பது நிழற் சாலையைக் குறித்தாலும் சட்டத்தில் வாய்ப்பு அல்லது அணுகு வழி என்ற பொருளில் வரும். ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்குத தீர்வு காண்பதற்காக அனைத்துச் சட்ட வழிகளையும அல்லது வாய்ப்புகளையும் ஆராய்தல். 1027. average சராசரி நிரவல், நிரலளவு, ஏறத்தாழ, கிட்டத்தட்ட சராசரி என்பது தமிழ்ச்சொல்லே. சரி விகிதமாக, சரிக்குச் சரியாக அமைவதால் சரிச்சரி > சராசரி ஆயிற்று….
வெருளி நோய்கள் 751-755: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 746-750: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 751-755 காலணி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காலணி வெருளி.காலணி காலைக் கடித்துவிடும், கால்கள் புண்ணாகி நடக்க முடியாது என்பனபோன்ற கவலைகளும் அவற்றால் காரணமற்ற பேரச்சமும் கொள்கின்றனர்.Papoutsi என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் காலணி எனப் பொருள்.00 காலணிப் பெட்டி(shoebox) குறித்த வரம்பற்ற பேரச்சம் காலணிப் பெட்டி வெருளி.காலணி வெருளி(Papoutsiphobia). அடைப்பிட வெருளி (Claustrophobia) உள்ளவர்களுக்குக் காலணிப் பெட்டி வெருளி வர வாய்ப்புள்ளது.00 காலநிலைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் காலநிலை வெருளி.மிகுதியான மழை,மிகுதியான வெயில், மிகுதியான குளிர், காலநிலையில் ஏற்படும்…
குறட் கடலிற் சில துளிகள் 36 : நல்லார் தொடர்பைக் கைவிடாதே! -இலக்குவனார்திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 35 : துணையில்லாதவர்க்கு நிலைபேறு இல்லை-தொடர்ச்சி) நல்லார் தொடர்பைக் கைவிடாதே! பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௫௰ – 450) நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பல பத்து மடங்கு தீமை ஆகும். பதவுரை பல்லார் – பலர்; பகை – எதிர்ப்பு;பகைத்தல்; கொளலின் – கொள்வதைவிட ; பத்து – ஓர்எண்; அடுத்த – மேன்மேல்வருதல்; தீமைத்தே – தீமையே; நல்லார் – நற்பண்புடைய பெரியோர்; தொடர்…
சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 6: இலக்குவனார் திருவள்ளுவன்
(சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?-5 தொடர்ச்சி) சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!? உரையின் எழுத்து வடிவம் 6 செம்மொழி நிதிநிலை அறிக்கைபற்றி வேறு சில தகவல்களும் சொல்ல வேண்டி இருக்கிறது. எந்த அளவிற்கு நிதிநிலை அறிக்கையில் இப்பொழுது மனிதவள மேம்பாட்டு துறை நிதி ஒதுக்கீட்டில் உள்ளவற்றைத்தான் பேச வேண்டும் என்று சொல்வார்கள். கல்வித் துறையில் வெவ்வேறு துறையில் நிதி ஒதுக்கீடு இருக்கிறது. சமற்கிருதத்தை வெவ்வேறு விதங்களில் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள சில அமைப்புகளின் முழக்கமே தமிழில் இல்லை. இந்தச் சாரண இயக்கம் கூடப்…
நாலடி நல்கும் நன்னெறி 19: – பிறருக்குக் கொடுப்பதைக் கடமையாகக் கொள்க: இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 18: – செய்யும் செயல்களுக்கேற்பவே நன்மை தீமை விளையும்: தொடர்ச்சி) பிறருக்குக் கொடுப்பதைக் கடமையாகக் கொள்க! உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; – கொடைக்கடனும் சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார் ஆஅயக் கண்ணும் அரிது. (நாலடியார், 184) மழை பெய்யாத கோடைக் காலத்திலும், நீர் சுரக்கும் கேணி தன்னிடம் உள்ள தண்ணீரைப் பிறர் இறைத்து உண்ணக் கொடுத்து ஓர் ஊரைக் காப்பாற்றும். அது போலப், பெரியோர் வறுமையில் வாடித் தளர்ந்த காலத்திலும் பிறர்க்குக் கொடுப்பர்….
வெருளி நோய்கள் 746-750: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 742-745 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 746-750 கார நறுமண உணவு(spices and spicy food) குறித்த வரம்பற்ற பேரச்சம் கார மண வெருளி.Aroma என்னும் செருமானியச் சொல்லின் பொருள்கள் நறுமணம், நறுஞ்சுவை.00 காரச்சோமாரி(hot dog) குறித்த வரம்பற்ற பேரச்சம் காரச்சோமாரி வெருளி.Chotdonk என்றால் காரச்சோமாரி எனப் பொருள்.00 புனைவுரு கார்ஃபீல்டு(Garfield) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கார்ஃபீல்டு வெருளி.சிம் தேவிசு(Jim Davis) என்பவரால் உருவாக்கப்பட்ட கார்ஃபீல்டு என்னும் படத்தின் முதன்மைப் பாத்திரமாக வரும் கற்பனைப் பூனையே கார்ஃபீல்டு.00 புனைவுரு கார்லோசு இரமான் (Carlos…
வெருளி நோய்கள் 742-745: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 741: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 742-745 கருத்தடை உறை குறித்த அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் காப்புறை வெருளி.காண்டம்(condom) என்னும் சொல் மதிப்பு என்னும் பொருளுடைய காண்டசு(condus) என்பதிலிருந்து வந்தது என்பர் சிலர். சார்லசு இரண்டாம் அரசர் மன்றத்தில் பணியாற்றிய, இதனைக்கண்டு பிடித்த திரு.காண்டம் என்பவரின் பெயரையே சூட்டியுள்ளதாகச் சிலர் கூறுவர்.உறை என்பதே காப்பிற்குத்தானே. எனவே, கருத்தடைக்கான காப்பு உறை என்பதையே சுருக்கமாக உறை எனக் குறிப்பிட்டு உறை வெருளி எனக் குறிப்பிட்டிருந்தேன். உறை வெருளி என்பது மடலுறை வெருளி(Fakelophobia) என்னும் பொருளையும்…
