பிறப்பால் வேறுபடுத்துபவன் செத்தவனாவான்! (குறள் கருத்து) – தமிழ நம்பி

ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். – குறள் 214.   இக்குறள் அறத்துப்பாலில் ‘ஒப்புரவறிதல்’ அதிகாரத்தில் நான்காவதாகும். இதன் பொருள் : மாந்தராய்ப் பிறந்தவர் அனைவரும் ஒப்பானவர், சமமானவர், ஒத்தவர் என்பதை அறிகின்றவனே உயிர்வாழ்கின்றவன் ஆவான். மற்றையான் செத்தாருள் ஒருவனாக – நடைப்பிணமாக – வைத்து எண்ணப்படும் என்பதாகும்.   ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘ – என்று 972-ஆம் குறளிலும் வள்ளுவர் வலியுறுத்துகிறார். எல்லா உயிர்களும் சமமானவை என்று அறியாதவன் நடைப்பிணமாகக் கருதப்படுவதால், அஃறிணையைக் குறிப்பிடுவதைப் போல ‘செத்தாருள் வைக்கப்படும்!’…

இனிதே இலக்கியம் – 9 தமிழன்னையைப் போற்றுவோம்!: க.சோமசுந்தரப்புலவர்

9 தமிழன்னையைப் போற்றுவோம்!     செந்தமிழ்ச் செல்வியைத் தாமரையாட்டியைத் தென்பொதியச் சந்தனச் சோலையில் ஏழிசை கூவுந் தனிக்குயிலைச் சிந்தையிற் பூத்துச் செந்நாவிற் பழுத்துச் செவியினிலே வந்து கனியும் பனுவற் பிராட்டியை வாழ்த்துதுமே!   தங்கத்தாத்தா என அழைக்கப்பெறும் யாழ்ப்பாணத்து நவாலியூர் க.சோமசுந்தரப்புலவர் அவர்களின் பாடல்.   “தமிழன்னையே! என்றும் அறிவுச் செல்வமும் இளமையும் மிக்க செந்தமிழ்ச்செல்வி நீ! அனைத்துக் கலைகளும் உடையவள் ஆதலால் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் நீயே! தென் பொதிகையில் நறுமணம் மிக்க சந்தனக்காட்டில் ஏழிசை கூவும் குயிலும் நீயே! புலவர்…

நல்லிணக்கத்தைத் திணிக்க முடியுமா? – புகழேந்தி தங்கராசு

இனப்படுகொலையாளிகளின் கேடயம் நல்லிணக்கம் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுதம் பன்னாட்டு விசாரணை   வடமாகாண அவை முதல்வர் விக்னேசுவரன், வள்ளுவத்தை நேசிப்பவர். அவரது அறிக்கைகளில் பொருத்தமான திருக்குறள் இடம்பெறுவதைத் தொடர்ந்து கவனிக்கிறேன். ஈரடி தான் என்றாலும், சுற்றிவளைக்காமல் நேரடியாகக் செய்திக்கு வருவது குறளின் தனிச்சிறப்பு. அதை நேசிக்கிற விக்னேசுவரனுக்கும் இந்தத் திறன் கைவரப் பெற்றிருக்கிறது.  சொற்சிக்கனத்தை, வள்ளுவத்தின் வாயிலாகவே கற்றிருக்க வேண்டும் விக்னேசுவரன். சுருக்கமான சொற்களால் நறுக்குத் தெறித்தாற்போல் பளிச்செனப் பேசிவிடுகிற அவரது சொல்லாற்றல், ‘சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மையறிந்து’ என்கிற…

பகற்கொள்ளையடிக்கும் பொறியியல் கல்லூரிகளைத் தடுத்து நிறுத்துக!

  பெரும்பாலான பொறியியற் கல்லூரிகள், பெற்றோர்களிடம் கொள்ளையடித்துத் தங்கள் வருவாயை உருவாக்கிச் செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதாகவே உள்ளன. பொறியியற் கல்லூரிகள் என்பன அதை நடத்துவோர் வசதிகளுக்காகவே யன்றி, மாணாக்கர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உதவவோ கல்வி நலனுக்காகவோ அல்ல.   பொதுவாக எந்த நிறுவனமும் சொந்த நிதிநிலையில் கல்லூரியை நடத்துவதில்லை. பெற்றோரிடம் நன்கொடை என்ற பெயரில் கொள்ளையடிக்கும் பணத்தில்தான் அனைத்து நிறுவனமும் கல்லூரிகளை நடத்துகின்றன. ஆனால், மாணவர்களுக்குரியவசதிகளைச் செய்து தருவதில்லை.  ஆசிரியர்களுக்கும் விதிமுறைப்படியான முழு ஊதியத்தையும் தருவதில்லை. முறைப்படியான கல்வி வசதிகளை மாணவர்களுக்கு அளிக்க இயலாமலும் ஆசிரியர்களுக்கும்…

தமிழ்நலன் காக்கும் பொறுப்பு ஊடகத்துறையினரிடமே உள்ளது! – இலக்குவனார்திருவள்ளுவன்

தமிழ்நலன் காக்கும் பொறுப்பு ஊடகத்துறையினரிடமே உள்ளது!     எங்கெங்கு காணினும் தமிழ்க் கொலை என்பதே இன்றைய ஊடகங்களின் நிலைப்பாடாக உள்ளது. தமிழ் அழியாமல் காக்கப்படவும் தமிழர்நலன் பேணப்படவும் உலெகங்கும் தமிழர்கள் உரிமையுடன் வாழ்ந்திடவும் ஊடகத்துறையினர் முயன்றால்மட்டுமே இயலும்.   நல்லதமிழில் பேசுநரும் எழுதுநரும் இருப்பினும் நற்றமிழ்ப் படைப்புகளை வெளியிடும் இலக்கிய இதழ்கள் வரினும் நற்றமிழ் பரவுவதற்குப் பெரும்பாலான ஊடகங்கள் துணை நிற்பதில்லை. துணை நிற்காததுடன் தமிழ்க் கொலைகளை அரங்கேற்றுவைதயே முழுநேரச் செயல்திட்டமாகக் கொண்டுள்ளன. எனவேதான் தமிழறிஞர்களின் அரும்பணிகளும் தமிழன்பர்களின் தடையிலா முயற்சிகளும் விழலுக்கு…

பாரதி கூறும் தணிந்த சாதியிருக்க, தலித்து எதற்கு? – இலக்குவனார் திருவள்ளுவன்

பாரதி கூறும் தணிந்த சாதியிருக்க, ‘தலித்து’ எதற்கு?     தமிழ் மக்களில் பெரும்பான்மையருக்கு அயல் மொழிச் சொற்களைப் பயன்படுத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஏதோ ஒரு வகை தாழ்வு மனப்பான்மையில் அரைகுறையான பிற மொழிப் பயன்பாட்டை உயர்வாகக் கருதுகின்றனர். அரசியலில் பிற மொழிச் சொற்களைப் புகுத்துவதில் பொதுவுடைமைக் கட்சியினர் எப்பொழுதும் ஆர்வம் காட்டுபவர்கள். அதுபோல் யார் அறிமுகப்படுத்தி இருந்தாலும் தமிழ், தமிழ் என்றே சொல்லிக்கொண்டு ‘தலித்து’ என்னும் மராத்தியச் சொல்லைப் பயன்படுத்துவோரே மிகுதி. பஞ்சமர், தாழ்த்தப்பட்டவர், ஆதி திராவிடர், ஆதித்தமிழர், தொல் தமிழர், பட்டியல்…

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 1/3

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு     தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள் தமிழ் வளர்ச்சியையே சிந்தித்துத் தமிழ்க்காப்பையே செயல்படுத்தித் தமிழ்க்காக வாழ்ந்த தலைமகனாவார் என அறிஞர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர். தமிழ்த்தாய் என்றே அவரைப் பலரும் விளக்கி உள்ள பொழுது, மேனாள் துணைவேந்தர் முனைவர் கதிர் மகாதேவன், “தமிழ்த்தாய் படத்தைக் காட்டச் சொன்னால் பேராசிரியர் இலக்குவனார் படத்தைக் காட்டுவேன்” என்றார். இவ்வாறு அறிஞர்கள் போற்றுவதற்குக் காரணம், இயல்பாகப் பேசும் பொழுதும் பாடம் நடத்தும் பொழுதும், சொற்பொழிவு ஆற்றும்பொழுதும், இலக்கிய விளக்கங்கள், கட்டுரைகள்,…

எரிக்கப்பட்டது யாழ்நூலகம் மட்டுமா? – அருட்செல்வன் திரு

எரிக்கப்பட்டது யாழ்நூலகம் மட்டுமா?   தமிழ்த்தாத்தா உவேசா தமிழ்நூல்களைத் தேடி நெல்லைமாவட்டம் கரிவலம்வந்தநல்லூருக்கு வருகிறார். அந்தவூர், வரகுணராமபாண்டியன் என்ற மன்னரின் தலைநகர். அரிய பல தமிழ்நூல்கள், அவர்காலத்துக்குப் பின் அங்குள்ள கோவிலில் வைக்கப்பட்டிருந்தன. தமிழ்நூல்களைத்தேடி உவேசா வருகிறாரென கேள்விப்பட்டவுடன் அக்கோவிலில் பூசைசெய்த பிராமணர்கள் அவ்வளவு தமிழ்நூல்களையும் எரித்துச்சாம்பலாக்கிவிட்டனர். இச்செய்தியை உ.வே.சா. அவர்களே தனது “எனது சரித்திரம்”என்ற நூலில் குறிப்பிடுகிறார்.   மன்னர் வரகுணராமபாண்டியரின் தம்பி அதிவீரராமபாண்டியர் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். தமிழில் பெரும்புலமை பெற்றவர். வெற்றிவேற்கை, குட்டித்திருவாசகம் எனச் சொல்லப்படும் திருக்கருவைப்…

சாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி இராமச்சந்திரனார்

தொலைநோக்கு ஆன்றோர் இராமச்சந்திரனார்   ஒவ்வொருவரும் தத்தம் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர்களைப் பெருமையாக இணைத்துக் கொள்ளும் அவலமான வழக்கம் இந்தியாவில் உள்ளது. இத்தகைய போக்கு தமிழ்நாட்டை விடப் பிற மாநிலங்களில் பெரும்பான்மை இருப்பதையும் நாம் காணலாம். சான்றாக இராய், இராவ், எக்டே, ஐயர், கோசு, கௌடா, கௌர், சட்டர்சி, சர்மா, சிங், சோனி, சௌத்திரி, திரிவேதி, தேசாய், நம்பியார், நாயர், நாயுடு, பட், பட்டேல், மிசுரா, முகர்சி, மேனன், வர்மா, என ஆயிரக்கணக்கிலான சாதி ஒட்டுகளைக் கூறலாம். பிற மாநிலங்களின் தலைவர்கள் சாதிப்…

இலக்குவனாரின் ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’யின் சிறப்புகள்

  தொல்காப்பிய ஆராய்ச்சி என்ற இந்நூலில் பரவிக்கிடக்கும் இலக்குவனாரின் கருத்துகளில் சில: ஆரியம்தான் தமிழை நோக்கித் தன் எழுத்தமைப்பை ஆக்கிக் கொண்டிருக்கவேண்டுமேயன்றி, தமிழ், ஆரியத்தை நோக்கி அமைத்துக் கொண்டது அன்று. (இலக்குவனார் 1971:44). இந்திய மொழிகளின் வரிவடிவ எழுத்துகளின் தாய் தமிழ் நெடுங்கணக்கின் வரிவடிவமே எனில் மிகையாகாது. (இலக்குவனார் 1971:45). மேலைநாட்டு ஆராய்ச்சியாளர்கள் எழுத்துகளின் பிறப்புபற்றிக் கூறும் கருத்துகள் தொல்காப்பியர் கூறும் கருத்துக்களோடு ஒற்றுமையுடையனவாக இருக்கின்றன. (இலக்குவனார் 1971:65). தொல்காப்பியப் பொருட்படலம் இலக்கியம் விளக்கும் இலக்கணமாகும்(science of Literature) என்பதை அறிந்து போற்றிப் பயில்வோமாக….

திருக்குறள் அறுசொல் உரை – 082. தீ நட்பு : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 081. பழைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 11. நட்பு இயல்  அதிகாரம் 082. தீ நட்பு  தீப்போன்று, கொடிய பேர்அழிவுதரு தீமையான நட்போடு சேராமை.   பருகுவார் போலினும், பண்(பு)இலார் கேண்மை      பெருகலின், குன்றல் இனிது.            பண்புஇலார் போலித் தீநட்பு        நிறைதலினும், குறைதல் இனிது.     உறின்நட்(டு), அறின்ஒரூஉம், ஒப்(பு)இலார் கேண்மை,    பெறினும், இழப்பினும் என்?          பெறும்போது, ஓங்கும்; அறும்போது,          நீங்கும் தீநட்பு எதற்கு?   உறுவது…