தமிழிலிருந்து மொழிபெயர்த்துத் தமிழர்க்கு முன்னரே அறிந்தவர் போல் காட்டிக் கொண்டனர்

  தமிழரசர்களிடம் அமைச்சர்களெனவும், மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர். தமிழரிடத்திருந்த பல அரிய செய்திகளையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியு முன்னரே அவற்றைத் தாமறிந்தனர் போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர். – வி.கோ. சூரிய நாராயண சாத்திரி என்னும் பரிதிமால் கலைஞர்: தமிழ் மொழியின் வரலாறு: பக்கம் – 27

எப்படி விடுதலை நாளாகும்? – ஆ.சு.மணியன்

எப்படி விடுதலை நாளாகும்? வாழ்க்கையில் குறையில்லாத மனிதனில்லை. சில குறைகளை முயன்றால் போக்கிவிடலாம். குறை என்னவென்று சொன்னால்/முறையிட்டால்தானே தீர்வு கிடைக்கிறதா எனப் பார்க்கலாம். உலக அளவில் தமிழன்மட்டும்தான் தாய்மொழியில் குறையைச் சொல்ல/முறையிட முடியாது என்றால் எப்படி விடுதலை நாளாகும்? இரண்டாம் உலகப்போரில் மொழிவழிவிடுதலை வழங்கப்பட்டன. ஆனால் உலகின் முதன்மொழியான செம்மொழித்தமிழ் பேசும் கோடிக்கணக்கான மக்கள் தமிழர்நாட்டில் இருக்கின்றனர். உலகின்   அன‌ைத்து நாட்டிலும் தமிழர் இருக்கிறனர். ஆனால் தமிழுக்கும் தமிழனுக்கும் விடுதலை இல்லை. உலகப்பொதுமறை வழங்கிய இலக்கிய இலக்கணமுடைய தமிழில் குறையை முறையிடும் உரிமை வழங்கப்படவில்லை…

பிராமணர்களின் தமிழ் வெறுப்பு தமிழ் நூல்கள் அழிவுக்கும் காரணமாயிருந்தது.

  பிராமணர்களின் தமிழ் வெறுப்பு தமிழ்மொழி குன்றுதற்கும் தமிழ் நூல்கள் பலவற்றின் அழிவுக்கும் காரணமாயிருந்தது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் பிராமணராலும், 14ஆம் நூற்றாண்டில் மகமதியரா லும் அநேக நூல்கள் அழிக்கப்பட்டன பிராமணர் தாம் அழிக்க முடியாத நூல்களைச் சிதைவுபடுத்தினர்.   தமிழ் நூல்களை எடுத்து சமக்கிருதத்தில் மொழி பெயர்த்துப் பல கேடு செய்திருக்கின்றனர். ந.சி. கந்தையா (பிள்ளை): தமிழர் சரித்திரம்: பக்கம் 221-222

ஆரியப் பார்ப்பனர் சூழ்ச்சிகளை உரைப்பின் மிக விரியும் – மறைமலை அடிகள்

    இவ்வாரியப் பார்ப்பனர் தமிழையும் தமிழ் நூல்களையும், தமிழரையும், தமிழ்ப் பெரியாரையும், தமிழ்த் தெய்வத்தையும் தாழ்வுபடுத்தி விடும் சூழ்ச்சிகளை எல்லாம் ஈண்டுரைக்கப் புகின் இது மிக விரியும். பொதுவாகத் தமிழ்த் தொடர்புடைய எதனையும் இகழ்ந்தொதுக்குதலே இவர்தம் கடப்பாடு. தாம் அங்ஙனம் ஒதுக்குதற்கு ஏலாமல் ஏற்பதற்குரியது மிகச் சிறந்தது ஏதேனும் ஒன்றைத் தமிழிற் கண்டால் உடனே அஃது ஆரியராகிய தம்மவரிடமிருந்து வந்ததென நாட்டுதற்குத் தக்க ஏற்பாடுகளை எல்லாம் எப்படியோ செய்து வைப்பர். – மறைமலை அடிகள்: வேளாளர் நாகரிகம்:பக்கம் – 21

தமிழின் சிறப்பை மறக்கச் செய்தனர் – மொ.அ.துரை அரங்கசாமி

… எனினும், அவர்தம் செல்வாக்கின் பயனாய் ஆரிய மொழியிலிருந்தே தமிழ் மொழி பிறந்ததென்றும், தமிழ்மொழியிலுள்ள பல சொற்கள் ஆரிய மொழியின் சொற்களிலுள்ள முதனிலைகளைக் கொண்டே பிறந்தனவென்றும், தமிழர் ஆரியரிடமிருந்தே நாகரிகம் கடவுட் கொள்கைகள் பிற எல்லாம் கடன் வாங்கிக் கொண்டனர் என்றும் பிறவாறும் கூறித் தமிழைத் தனித்தியங்க வல்ல மொழி என்பதைத் தமிழ்மொழி வல்லாரும் மறந்து விடும்படிச் செய்து விட்டனர். அறிஞர் மொ.அ.துரை அரங்கசாமி: பண்டைத் தமிழ்நெறி : பக்கம்-3

வியத்தகு மில்லறம் – பரிதிமாற்கலைஞர்

வியத்தகு மில்லறம் விழுப்பஞ் சான்ற வியத்தகு மில்லறம் ஒழுக்க வியலறி வறுத்துஞ் சாலையாய் நன்மை தழைத்து ஞயக்கொடை நிழற்றி மென்மை யரும்பி மேன்மை மலர்ந்துபே ரன்பு காய்த்துநல் லருள்கனிந் தலகிலா இன்பநறை பிலிற்று மினியகற் பகமாப் இலகிடு முண்மை மலையிலக் கன்றே ஏத்துறுந் தகைய இல்லற மெனுமிம் மாத்துடந் தேரினை வாழ்க்கையாம் போர்க்களஞ் செலுத்தபு துன்பந் தீயரை யெறிந்து தொலைத்திட லறியார் துறவு துறவென நாக்கடிப் பாக வாய்ப்பறை யறைந்து மயக்கினு மாழ்கலீல் மாந்தர்கள்! உயக்கமின் றில்லற முற்றுமெய் யுணர்மினோ, – – பரிதிமாற்கலைஞர்…

தொல்காப்பியம் தவறாது கற்றறிய வேண்டிய தனிப் பெரும் நூல் – பு.அ.சுப்பிரமணியனார்

தொல்காப்பியம் தவறாது கற்றறிய வேண்டிய தனிப் பெரும் நூல். – அண்ணலார் பு.அ.சுப்பிரமணியனார்   தமிழ்ப் பழங்குடி மக்களாகிய நமக்கு நம் மொழியின் இலக்கியப் பரப்பை உள்ளிய அளவிலேயே பெருமகிழ்ச்சி கொள்வதற்கு எல்லாவித உரிமையும் உண்டு. அத்தகு பேரிலக்கியங்களின் அடிக்கல்லே தொல்காப்பியமெனும் பழந்தமிழ் இலக்கணமாம்.   தொல்தமிழ்இலக்கணப்பெட்டகமாம் தொல்காப்பியத்தை எண்ணிப் பெருமையும் சிறப்பும் பெறுகின்ற பெரும் பேற்றினைத் தமிழ் மக்கள் பெற்றிருக்கிறார்கள். இவ்வுலகில் எண்ணற்ற நாடுகள் அவற்றின் மொழிகளைச் செம்மைப்படுத்த முனைந்த காலத்திற்கும் பன்னூறாண்டுகட்கு முன்னரே பைந்தமிழ் மக்கள் எத்தகு கால உச்சியை எய்தியிருந்தார்கள்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 016. பொறை உடைமை

(அதிகாரம் 015. பிறன் இல் விழையாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 016. பொறை உடைமை   பிறரது பிழைகளை — குற்றங்களைப் பொறுக்கும் பண்பைப் பெற்றிருத்தல்.   அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத், தம்மை      இகழ்வார்ப் பொறுத்தல் தலை.          தோண்டுவாரையும் தாங்கிக் காக்கும்        நிலம்போல் இகழ்வாரையும் பொறுக்க.       பொறுத்தல், இறப்பினை என்றும்; அதனை      மறத்தல், அதனினும் நன்று.           வரம்பு கடந்த குற்றங்களையும்        பொறுத்தலினும், மறத்தலே நன்று.  …

காட்டைப் பார்த்து வெகு நாளாயிற்று … குமுறும் ஆடுகள் 1 – வைகை அனீசு

வனப்பகுதியில் ஆடுகள் மேய்க்கத் தடை   பொதுவாக மக்களை மூவகையாகப் பிரிப்பர். முதலியர், இடையர், கடையர் என்ற பிரிவினர். கால்நடைகளை மேய்த்தவர்களை இடையர் – வேட்டுவ வாழ்வுக்கும் உழவு வாழ்வுக்கும் இடைப்பட்டவர் என்பர். ஆயர், மேய்ப்பர் என்ற சொற்கள் கிறித்தவச் சமயத்துடன் தொடர்புடைய சொற்களாக மாறிவிட்டன. ஆயம் என்பது மந்தை என்ற பொருள் கொண்டது. ஆடுகளை மேய்ப்பவர் ஆயர் எனவும் அழைக்கப்படுவர். இதேபோன்று தொழு, தொறு, தொழுவம், தொழுவர், தொழுதி எனவும் உள்ளன. பட்டினப்பாலையில் 281ஆம் அடியில் வரும் ‘புன்பொதுவர்’ என்னும் தொடருக்குப் ‘புல்லிய…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 011. செய்ந்நன்றி அறிதல்

(அதிகாரம் 10. இனியவை கூறல் தொடர்ச்சி) 01 அறத்துப் பால் 02. இல்லற இயல்    அதிகாரம் 011. செய்ந்நன்றி அறிதல்              பிறரது நல்உதவிகளை மறவாமல்,         நன்றியராய் இருத்தலை அறிதல்.   செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும்,      வானகமும், ஆற்றல் அரிது.          தான்செய்யாப் போதும், பிறர்செய்        உதவிக்குப், பூமி,வான் ஈ[டு]ஆகா.   காலத்தி னால்செய்த நன்றி, சிறி(து)எனினும்,      ஞாலத்தின் மாணப் பெரிது.          காலத்தே செய்த நல்உதவி,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 015. பிறன் இல் விழையாமை

(அதிகாரம் 014. ஒழுக்கம் உடைமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால்                 02.இல்லற இயல்               அதிகாரம் 015. பிறன் இல் விழையாமை     மற்றவன் மனைவியை, மனத்தால்கூட,  முற்றும் விரும்பாத ஆளுமை.   பிறன்பொருள்ஆள் பெட்(டு)ஒழுகும் பேதைமை, ஞாலத்(து),      அறம்பொருள் கண்டார்கண் இல்.        பிறனது மனைவியை விரும்பும்        அறியாமை, அறத்தாரிடம் இல்லை.   அறன்கடை நின்றாருள் எல்லாம், பிறன்கடை    நின்றாரின் பேதையார் இல்.          பிறனது இல்லாளை விரும்புவோன்,        அறத்தை மறந்த அறிவிலாதோன்…

நெகிழ வைத்த அயல்நாட்டார் பண்புகள் – பொறி. இலக்குவனார் திருவேலன்

  நான் அயல்நாடுகளில் தரக்கட்டுப்பாட்டுப் பொறியாளராகப் பணியாற்றும்போது சுவையான நிகழ்ச்சிகள் பல நடந்ததுண்டு. அவற்றில் இரண்டை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.   முதல் நிகழ்வு ஒரு கிழக்குஆசிய நாட்டில். நான் ஒரு பெரிய நிறுவனத்தில் எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்திருக்கிறேன். அந்த நிறுவனம் எமது வாடிக்கையாளருக்கு ஒரு மிகப் பெரிய, தொடர்-வார்ப்பு உருக்கு ஆலையை (Continuous Casting Plant) உற்பத்தி செய்து அளிக்கும் பணியைச் செய்து முடிக்கும் தருவாயில் உள்ளது. அன்றைய மதிப்பில் சில நூறுகோடி உரூபாய். தொடர்புடைய எந்திரப் பொருட்கள் அனைத்தும் கப்பலில்…