தமிழ்மொழி – தமிழ் நூல்கள் தனிச்சிறப்பும் திருக்குறள் அறப்பெரும் சிறப்பும்
– தூய தமிழ்க் காவலர் அண்ணல்தங்கோ – திருப்புகழ் இசைப்பா 1. உலக முதல்மொழி! நமது தமிழ்மொழி! உரிமை தரு மொழி! உயர்வு பெறு மொழி! மலரும் அறிவெழில்! பொழியும் நறுமொழி – மலைபோல 2. மணிகள் ஒளிதிகழ் அரிய அறமொழி! மகிழப் பலகலை உணர்வுதரு மொழி! மருவும் உயிரெலாம் பயிலவரும் மொழி! – வளம்நாடும் 3. பலநல் லறிவுளோர் பரவும் பெருமொழி! பயனுணரும் கலை அறிஞர் புகழ்மொழி! பரிவோ டருள்புரி பழமை(த்) தமிழ்மொழி! – பயில்வோர்கள் 4. பழைய குறை –…
பிளவுபட்ட கூரை – புலவர் இரா.இளங்குமரன்
‘அ…….ன்’ ‘‘மேலே காட்டிய குறியின் பொருள் யாது? தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவரங்களும் தமிழ் மொழியில் நடக்க வேண்டும் என்பது பொருள். தொடக்க விளம்பரம் தமிழில் வெளியிடப்பட வேண்டும். பாடசாலைகள் தொடங்கினால் அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவது மன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும். ‘சிலேட்’, ‘பென்சில்’ என்று சொல்லக் கூடாது.’’ ‘’கும்பகோணம் தமிழாசிரியர் ஒருவர்; அவர் இலக்கணமாகவே பேசுவார்; பிறர்க்கு எளிதில்…
திருக்குறள் வட சொற் கலவாத தூய தமிழ் நூலாகும்
செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் ஒரு மொழியாளர் இன்னொரு மொழியாளருடன் கூட்டுறவு கொள்ளுங்கால் இருசாரார் மொழிகளின் சொற்களும் அயலவர் மொழிகளில் கலப்புறுதல் இயற்கை. அக்கலப்பின் மிகுதியும் குறைவும் அந்தந்த மொழியின் வளத்திற்கு ஏற்ப அமையும், சொல்வளம் குறைந்த மொழி, சொல்வளம் நிறைந்த மொழியிடம் கடன் பெறும். இமயம் முதல் குமரி வரை வழங்கி வந்த தமிழோடு முதன்முதல் கூட்டுறவு கொண்டது ஆரியமே. ஆரியத்தின் கலப்பாலேயே தமிழ்மொழி பல்வேறு மொழிகளாகப் பிரிவுபட்டது. பரத கண்டத்தின் வடபகுதி (விந்தியத்திற்கு வடக்கு)யில் ஆரிய மொழிக் கலப்பு…
பூங்கோதை 4 : வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,
(வைகாசி 18, 2045 / 01 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) காளையப்பனுக்குத் தன் தாயினிடத்திலோ, தங்கைமாரித்திலோ மிகுதியான பற்று இருந்ததென்று கூறமுடியாது; ஆனால் பூங்கோதையினிடத்து அவனுக்கு அருவருப்பு மிகுதி என்பது மட்டும் உறுதி. தொடர்ந்து அவளுக்குத் துன்பங் கொடுத்துக் கொண்டே இருப்பான். அவனுடைய குரலைக் கேட்ட அளவிலேயே பூங்கோதையின் நாடி நரம்புகளெல்லாம் ஒடுங்கிவிடும். அவனுடைய கொடுமைகளை யாரிடத்திலே சென்று முறையிடுவது? அவன் பூங்கோதையை அடித்தாலும் மிதித்தாலும், உதைத்தாலும் அவனுடைய தாயாருக்குக் கண் தெரியாது; அவன் அவளை எவ்வளவு இழிவாகத் திட்டினாலும் அவளுக்குக்…
மொழித்திற முட்டறுத்தல் – 4 பெரும்புலவர் ந.மு.கோவிந்தராய(நாட்டா)ர்
(வைகாசி 18, 2045 / 01 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) ஒரு மொழி நீண்டகாலம் மாறாத நிலையிலிருப்பதற்கு அதன் எழுத்தமைப்புப் பெரிதும் உதவுகின்றது. தமிழில் 12 உயிர்களும், 19 மெய்களும், 3 சார்பெழுத்துக்களும் உள்ளன. மெய்களில் மேல்லெழுத்தாறும் வல்லெழுத்தாறின் பிறப்பிடங்களிலேயே பிறந்து தலைவளியுடன் மூக்கு வளியாப் புறப்பெற்று வல்லெழுத்துக்களுக்கு நேரிய இனவெழுத்துக்களாய் அமைந்திருத்தலால் ஒரு வகையில் மெய் 12 எனவும் கூறலாம். இவ்வாறு கொள்ளின் 12 உயிர்களுக்கு 12 மெய்கள் அமைந்திருத்தல் மிகவும் பொருத்தமாகும். உடல்மேல் உயிர் வந்தொன்றுவது…
கலப்பினால் வரும் கேடு! – நெல்லை ந.சொக்கலிங்கம்
மறுமலர்ச்சி இயக்கம்: மனிதன் பண்பாடு பெற்ற நாள் தொட்டுப் பயன்பட்டு வரும் கருவி மொழி, நாட்டிற்கேற்பவும், சூழ்நிலைக்கேற்பவும் மொழிகள் வேறுபட்டு நிற்கின்றன. மனிதன் எப்படித் தனித்து வாழவியலாதோ அது போன்றே மொழியும் தனித்து வாழவியலாது என்பது ஓரளவிற்குப் பொருந்தும். இருப்பினுங் கூட கூடுமான வரை தனித்து – அதாவது தூய்மையுடன் இயங்க முடியும். ஆனால் சிலர் கூறுகின்றார்கள். வடமொழி செத்தொழிந்தது அதன் தூய்மைப் பண்பினால்தான் என்பர். மொழி நூலறிஞர்களின் கருத்துப்படி ஒரு மொழி தன் தூய்மையைப் பாதுகாத்ததனால் அழிந்து விடாது என்பதாகும். வடமொழி…
வாழ்த்திற்குரிய கலைஞரே! இனி என்ன செய்யப் போகிறீர்கள்?
கலைஞர், வரலாற்றில் அருவினை பல ஆற்றிய அருந்திறலாளர்! அவரது பகைவர்களும் அவரது உழைப்பை மதிக்கத் தவறுவதில்லை! நூற்றுக்கு மேற்பட்ட நூல்களைப் படைத்தவர்; மடல்களாகவும் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் எழுதித் தள்ளியவை மிகுதி. மொத்தத்தில் இருபதாயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதிக் குவித்த படைப்பாளர்; ஏறத்தாழ 75 திரைப்படங்களுக்குக் கதை உரையாடல் எழுதி உள்ளார்; நேற்றுவரை திரை உலகில் நுழைந்தவர்கள் அவர் எழுதிய திரையாடலைப் பேசி நடித்துக் காட்டித்தான் வாய்ப்பு பெற்றனர் என்பது அழிக்க முடியாத வரலாறு; பன்னிரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை…
மனத்தில் தோன்றிய எண்ணங்கள் (கவிதைகள்) மின்னூல் வெளியீடு
முகம்மது அலியின் மனத்தில் தோன்றிய எண்ணங்கள் (கவிதைகள்) மின்னூல் வெளியீடு(FreeTamilEbooks.com) சென்னை திரு முகம்மது அலி தன் வலைத்தளத்தில்(http://anbudanseasons.blogspot.in ) எழுதிய கட்டுரைகளையும கவிதைகளையும் மின்நூல் வடிவில் கொண்டு வந்துள்ளார். கட்டணமின்றிப் பதிவிறக்கம் செய்து கொள்வதற்குப் பின்வரும் வலைவரியில் காண்க: http://freetamilebooks.com/ebooks/manadhil-tondriya-ennangal/
மொழித்திற முட்டறுத்தல் 3 – பெரும்புலவர் ந.மு.கோவிந்தராய(நாட்டா)ர்
(சித்திரை 7, 2045 / 20 ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி) இறந்த மொழிகள் மேற்கூறிய இருவகை மொழிப் பாகுபட்டினையம் உளத்திற்கொண்டு ஒரு சேர ஆய்வோமாயின் ஒருண்மை புலனாகின்றது. முதற் பாகுபாட்டில் உள்ள 1. இந்திய ஐரோப்பிய மொழிகள், 2. செமிட்டிக்கம் என்ற இனத்தைச் சேர்ந்த மொழிகள் இவையிரண்டும் இரண்டாம் பாகுபாட்டில் உள்ள உட் பிணைப்பு மொழிகளாயுள்ளன. இவற்றிலேயே சிறந்த மொழிகள் நூற்றுக்கு ஐம்பது விழுக்காடு காணப்படுகின்றன. வேர்ச்சொற்கள் இன்னதென அறியமுடியாதவாறு சொற்கள் மாறுபாடடைதல் இம்மொழிகளிற் பல உலகவழக்கறுவதற்கு ஒரு காரணமாயிருக்கலாம். ஒரு காலத்தில்…
பூங்கோதை – 3 : வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,
(வைகாசி 11, 2045 / 25 மே 2014 இதழின் தொடர்ச்சி) ‘இப்படித் தவறாமல் அசை போட்டுக் கொண்டிருக்கிறாயே, அது தானே அம்மாள் உன்னை கடிந்து கொள்கிறார்கள் என்று காளியம்மை சலித்துக் கொண்டிருந்தாள். ஒருவாறாக உணவை முடித்துக் கொண்டு பூங்கோதை தாழ்வாரத்தை அடுத்துள்ள தன் அறையை நோக்கிப் புறப்பட்டாள். கூடத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஊசலில் செங்கமலம் காலைத் தொங்க விட்டு அமர்ந்திருந்தாள். காளையப்பன் எதிரே கிடந்த இருக்கையில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டிருந்தான். வண்ணக்கிளி தன் அம்மாவின் காலைக் கட்டிக் கொண்டிருந்தாள். இந்த இனிய…
திகட்டாத் தமிழிதழ் – (உ)ருத்ரா இ.பரமசிவன்
அகர முதல வெறும் அகட விகடம் அல்ல. அகலத் தமிழின் அகழ்வாராய்ச்சித் திகழ் ஒளி வீசும் திகட்டாத் தமிழிதழ். பனை ஏடுகளின் மன ஏடுகள் மடல் அவிழ்க்கும் மங்கா விளக்கின் மாணிக்கச்செவ்விதழ். வாழ்த்துக்களும் பாராட்டுகளும் அன்புடன் (உ)ருத்ரா இ.பரமசிவன்
வாழி வாழி நீவிர் – (உ)ருத்ரா இ.பரமசிவன்
அன்புள்ள திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே! துரும்பு அசையும் தூசு அசையும் அதையும் விட துல்லியமாய் அசையும் தமிழின் எழுத்தும் சொல்லும் உங்கள் இதயத்தில் தான் முதலில் அசைகிறது. உங்கள் அருந்தமிழ்ப்பணி தொடர வாழி வாழி நீவிர் நீடுழி நீடூழி வாழ்வீர். அன்புடன் (உ)ருத்ரா இ.பரமசிவன்
