அறிவுச் செல்வம் – கி.ஆ.பெ.விசுவநாதம்

  செல்வம் பலவகை, அதில் அறிவு ஒரு வகை எனக் கூறலாம். இதனால் அறிவும் ஒரு செல்வம் என்றாகிறது. இதைவிட ‘‘அறிவே செல்வம்’’ என்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்.   எச்செல்வமும் இல்லாத ஒருவரிடம் அறிவுச் செல்வம் ஒன்றிருந்து விட்டால் அவன் எல்லாச் செல்வங்களையும் பெற்றவனாவான். எல்லாச் செல்வங்களையும் பெற்ற ஒருவன் அறிவுச் செல்வத்தைப் பெறாதவனாக இருந்தால் அவன் எல்லா செல்வங்களையும் இழந்தவனாகிவிடுவான்.   எந்தச் செல்வத்தையும் உண்டு பண்ணும் ஆற்றல் அறிவுச் செல்வத்திற்கு உண்டு. பிற செல்வங்களுக்கு இந்த ஆற்றல் இல்லை. இதனாலேயே வள்ளுவர்…

‘தமிழவேள்’ உமா மகேசுவரனார் நினைவு நாள் 9.5.1941

ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அமைத்த நின்புகழ் ஓங்குக! முதல், இடை, கடைத் தமிழ்ச்சங்கங்கள் அழிவிற்குப் பின்னர் தமிழ்மொழி தாழ்வு நிலை கண்டது. அன்று தொடங்கி தாழ்வு நிலையடைந்த தமிழ்மொழி பண்டைய காலம் போல் மீண்டும் ஏற்றம் பெற வேண்டுமென்று இரண்டு பேர் விரும்பினார்கள். ஒருவர் பாண்டித்துரை(த்தேவர்), மற்றொருவர் உமா மகேசுவரனார். பாண்டித்துரை(த்தேவர்) 1901ஆம் ஆண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை தொடங்கினார். அவர் தொடங்கிய பத்தாண்டுகளுக்குப் பிறகு உமா மகேசுவரனார் 14.5.1911 அன்று தஞ்சையில் கரந்தை தமிழ்ச்சங்கத்தை தொடங்கினார். அது முதல், தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் விளங்கினார். அவர்…

பூங்கோதை – வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,

தொடர்கதை சிவக்கொழுந்து, மருத்துவமனைத் தாழ்வாரத்தில் வருத்தத்தோடு நின்று கொண்டிருந்தார். ஒவ்வொரு வினாடியும் அவருக்கு ஓர் ஊழியாகத் தோன்றிற்று. மகப்பேற்றறையிலிருந்து குழந்தை  வீறிட்டழும் குரல் கேட்டது. அப்பொழுது சிவக்கொழுந்தினது முகத்தில் வருத்தத்திற்கிடையே ஒரு மகிழ்ச்சிக் குறி தோன்றியது. அவர் மருத்துவப் பணிப்பெண்ணின் வருகையை எதிர்நோக்கிய வண்ணமிருந்தார். சில மணித்துளிகள் கடந்தன. மருத்துவப் பணிப்பெண் வெளிவந்து, சிவக்கொழுந்தைப் பார்த்துத் தான் சொல்ல வந்ததைச் சொல்வதற்குத் தயங்கினாள். பிறகு சிவக்கொழுந்தை நோக்கி, அப்பணிப்பெண், ‘‘பெண் குழந்தை பிறந்திருக்கிறது. உங்களுடைய அம்மாவின் சாயலாக இருக்கிறது’’ என்றாள். குழந்தையைப் பெற்ற தாயின்…

வைத்தான் செத்தான்! – திருக்குறளார் வீ.முனுசாமி

அறிவுக்கும் பொருளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது – அல்லது இருக்க வேண்டும் என்று எண்ணுதல் இயற்கை விதிக்கு மாறுபட்டதாகும்; அவ்வாறே கல்விக்கும் பொருளுக்கும், பணத்திற்கும், பொருந்திய தொடர்பு இருக்க வேண்டும் என்று இயல்பாக எண்ணுதல் கூடாததாகும். உலக இயற்கையில் அறிவும் கல்வியும் நிறையப் பெற்றவர்கள்தான் செல்வமும், நிறைந்தவர்களாக இருத்தல் வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். அவ்வாறு நினைத்துப் பார்த்தல் தவறு என்றும் சொல்லிவிடலாம்! ஏனெனில் மனித வாழ்க்கையில் அறிவு, கல்வி என்பவை அமைகின்ற – வருகின்ற வழிவேறு; இரண்டும் ஒன்றாகச் சேர்ந்துதான் வருதல் வேண்டும் என்கிறவிதி…

திருக்குறளைப் போலச் சிறந்ததொரு நூலில்லை- கருமுத்து. தி.சுந்தரனார்

நம் கடமை ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’’ நம் நாடாகும். தெய்வமணம் கமழும் திருக்குறள் நெறியைப் பாரெங்கும் சென்று பரப்ப வேண்டியது பைந்தமிழர் கடமையாகும். மகளிர் மாண்பு திருவள்ளுவரின் முப்பாலைப் பற்றி இங்கே இருபாலார் பேசுவது மகிழ்ச்சிக்குரியதாகும். அதிலும், மகளிர் அறத்துப்பாலைப்பற்றி உரை நிகழ்த்துவது மிகவும் பொருத்தம் உடையதாகும். மக்களைப் பெற்று அன்புடன் பேணி வளர்த்து இல்லறத்தை நல்லறமாக நடத்துவதற்கு ஏற்ற பண்புகள் பெற்று விளங்குபவர் மகளிரேயாவர் அன்றோ! துணிவு வேண்டும் பிறமதத்தவர் தம் மதங்களின் உயர்வுகளை எடுத்துக் கூறுகின்ற…

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி

நம் மொழிக்கு நம் முன்னோர் சூட்டிய பெயர் ‘தமிழ்’ என்பதுதான். ஆனால், சிலர் பிற்பட்ட வழக்கான ‘திராவிடம்’ என்பதிலிருந்து ‘தமிழ்’ வந்ததாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நூலான –  உலகின் முதல் நூலான – தமிழர்க்குத் தமிழில் கிடைத்துள்ள முதல் நூலான – தொல்காப்பியத்திலேயே ‘தமிழ்’  இடம் பெற்றுள்ளது. இதன் தொன்மையை மறைக்கும் வகையிலேயே ‘தமிழ்’ என்னும் சொல்லைப் பிற்கால வழக்காகக் குறிப்பிடுகின்றனர். சிலர் ‘தமிழ்’ என்னும் சொல் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளதா என அறியாமையில் கேட்கின்றனர். அதன் மூலம்…

எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய் – பாரதியார்

  தமிழா, பயப்படாதே, ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாத்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய். சாதி வேற்றுமைகளை வளர்க்காதே. ‘சாதியிரண்டொழிய வேறில்லை’ என்ற பழந்தமிழ் வாக்கியத்தை வேதமாகக் கொள். பெண்ணை அடிமை என்று கருதாதே. முற்காலத்துத் தமிழர் மனைவியை “வாழ்க்கைத் துணை” என்றார். ஆத்மாவும் சக்தியும் ஒன்று. ஆணும் பெண்ணும் சமம். தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதிக நடை-எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலைதூக்கி ஆட…

குற்றியலுகரமும் பாவேந்தரும் – கவிஞர் முருகு சுந்தரம்

‘முல்லை’ என்ற திங்களிதழில் பாவேந்தர் பாரதிதாசனாரின் மீசையைப் பற்றிப் பத்து எண்சீர் விருத்தங்கள் எழுதியிருந்தேன். அப்பாடலைப் பார்க்கும் வாய்ப்புப் பாவேந்தருக்கு ஏற்பட்டது. அப்பாடலைப் படித்ததும் அவர் என்னைக் கேட்ட முதல் கேள்வி, ‘எனது மீசையைப் பற்றிப் பாடல் எழுத வேண்டுமென்ற எண்ணம் உனக்கு ஏன் ஏற்பட்டது?’ என்பது தான். ‘மேலை நாட்டில் வோர்ட்சு வொர்த் என்ற கவிஞன் வாழ்ந்த காலத்தில், அவன் மூக்கைப் பற்றிக் கவிதை எழுதி அந்நாட்டு மக்கள் பாராட்டினர்; கீட்சு என்ற ஓர் ஆங்கிலக் கவிஞன் வாழ்ந்தான்; அவன் தலைமுடி பொன்நிறமானதா?…

ஆலைத் தொழிலாளி – பாவேந்தர் பாரதிதாசன்

ஆலையின் சங்கேநீ ஊதாயோ? மணி ஐந்தான பின்னும் பஞ்சாலையின்… காலைமுதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே, வேலை செய்தாரேஎன் வீட்டை மிதிக்கவே ஆலையின் சங்கே…. மேலைத் திசைதனில் வெய்யிலும் சாய்ந்ததே வீதி பார்த்திருந்தஎன் கண்ணும் ஓய்ந்ததே மேலும் அவர்சொல் ஒவ்வொன்றும் இன்பம் வாய்ந்ததே விண்ணைப் பிளக்கும்உன் தொண்டையேன் காய்ந்ததே ஆலையின் சங்கே… குளிக்க ஒருநாழிகை யாகிலும் கழியும் குந்திப்பேச இரு நாழிகை ஒழியும் விளைத்த உணவிற்கொஞ்ச நேரமும் அழியும் வெள்ளி முளைக்குமட்டும் காதல் தேன் பொழியும் ஆலையின் சங்கே…

உழத்தி – பாவேந்தர் பாரதிதாசன்

களை யெடுக்கின்றாள்-அதோ கட்டழகுடையாள் சிற்றிடையாள் அதோ களையெடுக்கின்றாள்! வளையல்தனில் மங்கைமாருடன் இளங் கரும்பிடைச் செங்கரும்பு போல் களை யெடுக்கின்றாள்! கவிழ்ந்த தாமரை முகம் திரும்புமா? -அந்தக் கவிதை ஓவியம் எனை விரும்புமா? அவிழ்ந்து வீழ்ந்த கருங்கூந்தலாம் அருவிநீரில் எப்போது முழுகலாம்?- களை செந்நெல் காப்பது பொதுப்பணி செய்யல்!-ஆம். என்ற நினைவினால் என்னருந் தையல், மின்னுடல் வளைய வளையல்கள் பாட விரைவில் செங்காந்தள் விரல்வாட- களை

ழகரம் தமிழின் சிகரம்

ழகரம் ழகரம் ழகரம் ழகரம் தமிழின் சிகரம் என்று உணர வேண்டிய நேரம் (ழகரம்) தமிழைத் ‘தமிழ்’ என்றே சொல்வீர் ழகரம் மாற்றித் ‘‘தமில்’’ ‘‘தமிளென்று’’ பேசும் வழக்கம் தவிர்ப்பீர் (ழகரம்) ‘‘கல்’’ எஎறு சொன்னால் கற்றல் ‘‘கள்’’ என்று அதனைச் சொல்வது தவறு கள் என்றால் போதை நீரே (ழகரம்) கல்வியைத் தருமிடம் ‘‘பள்ளி’’ ‘‘பல்லி’’ என்றால் அச்சொல் குறிக்கும் சுவரில் ஓடும் பல்லி (ழகரம்) ‘‘அழகு’’ எனும் சொல் அழகு ‘‘அலகு’’ என்று சொல்வது தவறு பறவையின் மூக்கே அலகு (ழகரம்)…

வள்ளுவர் குலவினம் – பேராசிரியர் ஞா.தேவநேயப்பாவாணர்

    உள்படுதலாவது அணுக்கமாதல். உலக வழக்கு நோக்கின், வள்ளுவரென்பார் வழிவழிகணிய (சோதிட)த் தொழில் செய்து வரும் தூய தமிழ்க் குலத்தாராவர். கணியத்திற்கு இன்றியமையாதது சிறந்த கணித அறிவு. கணித அறிவிற்கு இன்றியமையாது வேண்டுவது நுண்மாண் நுழைபுலம் என்னும் கூர்மதி. வள் =கூர்மை வள்ளுவன் = கூர்மதியன்.   பண்டைத் தமிழகத்திற் பொது மக்களும் புரவலரும் நாளும் வேளையும் பார்த்தே எவ்வினையையும் செய்து வந்தமையின் பட்டத்து யானை மீதேறி அரசன் கட்டளைகளைப் பறையறைந்து நகர மக்கட்கு அறிவித்த அரசியல் விளம்பர அதிகாரியும் வள்ளுவக் குடியைச்…