திருவள்ளுவரின் அறிவியல் சிந்தனை – களப்பால் குமரன்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு – 355 காதல் சிறப்புரைத்தல் அதிகாரத்தின் (113) முதல் குறட்பா, அறிவியல் ஆய்வாளர்களின் ஆய்வு முடிவை ஒத்துள்ளது என்பது வியப்புக்குரிய அறிவியல் உண்மையாகும். 1. பாலொடு தேன்கலந்து அற்றே பணிமொழி வால்எயிறு ஊறிய நீர். இம்மென் மொழியாளின் வெண்பல்லில் ஊறிய நீர் ; பாலுந் தேனுங்கலந்த கலவை போலும் . – பாவாணர் The dew on her white teeth, whose voice is soft and low, Is as…
தமிழ்த்தாய் வாழ ஒளி யளித்தாய்!
– தமிழ்ப் புரவலர் தூய தமிழ்க்காவலர் அண்ணல்தங்கோ அ) நெஞ்சத் துணிவுடையாய்! – தமிழர் நேர்மைத் திறமுடையாய்! – தமிழர் கொஞ்சும் தமிழ்வளம் பெற – தீயிலே குளித்த தமிழ் மறவா! ஆ) ‘‘அஞ்சி அடிமைகளாய் – வாழ்பவர் அன்புமக்க ளாகார்!’’ என்றே நெஞ்சுரம் காட்டி நின்றாய்! – சின்னப்பா! நெருப்பிலே நின்றுவென்றாய்! (நெஞ்சத்) இ) வஞ்சகெஞ்ச வடவர்! – திருந்த வாழ்வை நெருப்பில் இட்டாய்! செஞ்சொல் தமிழ மகனே! – சின்னப்பா! திருக்குறட் கோமகனே! (நெஞ்சத்) உ) பஞ்செனத் தீயில் இட்டாய் !…
முதலமைச்சர் மாநாடும் இந்தி மொழியும் – கூட்டரசன்
மாநில முதலமைச்சர்கள் மாநாடு முடிந்துவிட்டது. இந்தியையும் ஆங்கிலத்தையும் இந்தியக் கூட்டரசின் அலுவலர் தேர்வு மொழிகளாக ஆக்குவதெனவும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டோரும் ஏனையோரும் ஒத்த நிலையில் மதிப்பெண்கள் பெறுவதற்கு வழியொன்று வகுக்கப்படும் எனவும் அம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக முதலமைச்சர் கூறுகின்றார். இதற்குத்தாமே பொறுப்பாளி என்றும் நம் முதலமைச்சர் அறிவிக்கின்றார். இந்தியைத்தாய் மொழியாகக் கொண்டோர் இந்தியில் எழுதுவதில் எளிமையும் ஆற்றலும் கொள்வர். ஆங்கிலத்தில் எவ்வளவுதான் புலமை பெற்றிருப்பினும் ஆங்கிலம் அயல் மொழிதானே, அயல்மொழியைப் பயன்படுத்துவதில் அவ்வளவு எளிமையும் ஆற்றலும் கொள்ள இயலாது. இருவகை விடைத்தாட்களையும் திருத்துவோர்…
கருத்தரங்கம் 6 :இந்தியால் தமிழுக்குக் கேடு…! – க. அ.செல்வன்
வருமுன்னர்க் காவா தான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். 1. அழிவுக்கு உண்டான வேலைகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டு விட்டன, நண்பரே, அரசியல் சட்டம் 17ஆவது பிரிவில், அதன் பயனை 65 சனவரி 26ஆம் நாள்முதல் இந்தி அரியணைஏறுவதின் வழியாக நாம் பட்டறியத்தான் போகிறோம். ‘‘தமிழகம் ஏற்றுக்கொண்டால்தானே’’ என்றொரு வினாவை நீர் கேட்கத்துடிப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நிலைமைகள் நம்மைப் பயமுறுத்துகின்றன எனபதை இதோ பாரும். ‘‘தமிழ்நாட்டிலும் வங்காளத்திலும் இந்தியைக் கட்டாய பாடமாக்குவதே என் முதல் வேலை. அதனை எவ்வகையிலும் செயல்படுத்தியே தீருவேன்’’…
கருத்து அரங்கம் 7 இந்தியால் தமிழுக்குக் கேடு! – மே.சி.சிதம்பரனார்
வினா1 : இந்தியால் தமிழ் எந்த வகையில் அழிகிறது? அழிந்தது? அழியும்? மேல் நாட்டில் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ‘‘பின்னமாலியட்’’ என்பாரிடம் எதிர்கால விளைவுகளின் ஐயப்பாடுகள் பற்றி மக்கள் பல கேள்விகளைக் கேட்டுக் கொள்வதுண்டாம். அவற்றுள், ஒரு நாட்டிற்கு வரும் மீளாத பேராபத்து எது? “எவ்வித ஆபத்திற்கும் மீட்சியுண்டு. அந்நாட்டுத் தாய்மொழி மெல்ல மெல்ல மங்கி மறைவதுதான் மீளாத பேராபத்து.” ஒரு நாட்டை என்றும் அடிமையாகவே வைத்திருக்க வேண்டுமானால் செய்வதென்ன? “முதற்கண் அந்நாட்டின் மொழி வளத்தைக் கெடுக்க வேண்டும்” இங்ஙனம் கூறிய விடைகள்…
கருத்தரங்கு 5 : இந்தியால் தமிழுக்குக் கேடு…!
– பி.சு.தங்கப்பாண்டி குலசேகரப்பட்டி 1. ‘இந்தி படித்தால்தான் நடுநிலையரசில் பதவிகள் பெறமுடியும்’ என்ற உணர்வு மாணவ உள்ளங்களில் தூண்டப்படுகிறது. நம்மவர் படிப்பது பதவிக்குத்தான்; அறிவோடும் தன்மானத்தோடும் வாழவல்ல. இதனால் தமிழார்வம் கொண்டோரும், தமிழால் பயனில்லையோ? என்று எண்ண வேண்டியுள்ளது. இதற்குத் தமிழ் அழிந்ததோ, இல்லையோ, தமிழை வளர்க்க வேண்டியோரின் உள்ளங்கள் அழிந்ததாயின. அழிகிறது; இதே நிலைமை நீடித்தால் அழியும். 2. இந்தியா ஒரு தனியாட்சி நாடாக இருந்தால் மாநிலங்களின் தொடர்பிற்குரிய மொழி இந்திதான். அதை ஒப்புக் கொள்வது தவறல்ல. ஏனெனில் தனியாட்சிதானே! ஆனால் இந்தியா…
நெருப்பாய் நிமிர்ந்தான் முத்துக்குமரன்
– புதுவைத் தமிழ்நெஞ்சன் சூடற்ற தமிழனுக்குச் சூடேற்ற முத்துக்குமரா….! தீப்பந்தம் ஆனாய் – நாடற்ற ஆரிய நாடோடிக் கூட்டமிங்கே நம்மினத்தை அழிக்கிறதே வீணாய்! இந்தீய அரசுன்னைப் படுகொலையும் இம்மண்ணில் செய்தது தான் உண்மை – குமரா..! செந்தீயாய் தமிழினமும் தலைநிமிர தீக்குளியல் செய்ததெல்லாம் வன்மை! யாரென்று நேற்றுவரை நானறியேன் தமிழ்க்குமரா இம்மண்ணில் உன்னை – உன்னை யாரென்று அறியாதார் இன்றில்லை என்பதுதான் நாமறிந்த உண்மை! ஈழத்தில் எரிகிறதே இந்தீயா மூட்டிவிட்ட இனவெறியாம் நெருப்பு – தமிழ் ஈழத்தை அழிக்கின்ற பகையினத்தை அழித்தொழிக்க தமிழ்மறவா விரும்பு!…
கருத்தரங்கு 2: இந்தியால் தமிழுக்குக் கேடு…!- ச.சிவசங்கர்
ஐயா! குறள்நெறிக் கருத்தரங்கத்தில் ஓர் அன்பர் விடுத்த வினாக்களுக்கு விடையாக எனது கருத்துகள். அவ்வன்பர் தொடக்கத்தில் ‘பிறப்பால் தமிழன், மொழியால் தமிழன்; என் கதை, கட்டுரைகளில் தமிழ் தவிரப் பிற மொழிச் சொற்கள் இடம் பெறா!’ எனக்கூறிவிட்டுப் பல பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதை முதற்கண் அன்பர் தெரிந்து கொள்வது, அவர் எடுத்துக் கொண்ட செயலுக்கு மிக வேண்டற்பாலதாகும். – ச.சிவசங்கர். 1. ஒரு காலத்தில் ஆண்டமொழியாக இருந்த தமிழ், வெள்ளையன் காலத்தில் இரண்டாந்தர மொழியாக ஆகியது. வெள்ளையன் சென்ற பின் காங்கிரசு…
தைப்பூச நன்னாளில் வடலூரில் ஒளி வழிபாடு…!
– செயசிரீ சங்கர் “அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி” தைப்பூசம் என்பது தை மாதத்தில் பூச நட்சத்திரமும் முழுநிலவுநாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். தைப்பூசத்தில் சிறப்புகள் பல இருந்தாலும், தைப்பூச ஒளி வழிபாட்டு விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக வருடா வருடம் கொண்டாடப்படுகிறது. முருகனை நினைத்துருகிக் கண்ணாடியில் அவன் காட்சியைக் கண்ட வள்ளலார் இராமலிங்க அடிகளார், தம் சித்திவளாகத்தை நிறுவி, அதில் அன்னதானம் செய்த திருநாள் தைப்பூசம். ஆகையால், அன்றைய …
செந்தீயில் மூழ்கிய தீந்தமிழ் மறவன்
இன்தமிழ் நாட்டில் இந்தியை எதிர்த்துச் செந்தமிழ் காகச் செந்தீ மூழ்கிய சின்னச்சாமியைப் போற்றுதும் நாளும்! தமிழ்மொழி காக்கத் தம்முயிர் ஈயும் உரவோர் உண்மையை உணர்ந்து ஒழிமின் மறந்தும் தமிழை மாய்க்கும் புன்செயல். எரியில் மூழ்கி எம்தமிழ் காக்க வேண்டும் சூழ்நிலை விரிதல் நன்றோ? இந்தியின் முதன்மை எம்தமிழ் அழிக்கும் அழிசெயல் என்பதை அறியார் யாரே? நல்லுயிர் கொடுத்து நற்றமிழ் காக்க வல்லோர் எழுமுன் வண்டமிழ் மாய்க்கும் வல்வினை ஒழிமின்! வண்டமிழ் போற்றுமின்! தீந்தமிழ் மறவன் சாமியை நினைத்து ஆம்நற் றொண்டு ஆற்றுமின் தமிழ்க்கே –…
மனக்கதவும் திறவாதோ!
-மதுரை க. பாண்டியன் படர்ந்திட்ட கொடியதனின் பரிதவிப்பைப் போக்குவதற்கே, பாரியெனும் மன்னவனும் தன்தேரைத் தந்திட்டான்! இடர்பட்ட புலவர்தன் வறுமைதனை யொழிப்பதற்கே, இனிமையுறக் குமணனுமே தன்தலையைக் கொடுத்திட்டான்! விடமறுத்த வல்லூற்றின் வன்பிடியை விடுப்பதற்கே. வழங்கிட்டான் தன் தசையை சிபியென்பான் புறவிற்காக! நடனமிடும் மயிலதனின் நலிவுதனை நீக்குதற்கே நல்கிட்டான் சால்வையென நவின்றதுவே வரலாறும்! இந்நாளில் அதுபோல இன் தமிழ்க்காய்த் தன்னுடலை இன்பமோடு எரிதணலில் இட்டுவிட்ட ஏந்தலுமே, இந்நாட்டில் இருக்கின்றான்! இன்னுருவாய் வாழ்கின்றான்! இகமுழுது போற்றுசின்னச் சாமியெனும் பேராளன்! மந்தமதி கொண்டோரின் அந்தகா ராமெடுக்க மண்ணகத்தில் மகிமையுற மாண்டவழி…
சந்தனத் தமிழன்
– கவிஞர் முருகு சுந்தரம் அமிழ்தமாம் தமிழைக் காக்க ஆருயிர் நெருப்பில் தந்த தமிழவேள் சின்னசாமி தமிழர்க்குப் பெரிய சாமி! உமியினைப் போன்று மக்கள் உலகினில் பலபேர் வாழ இமயத்தைச் சிறிய தாக்கி இவன் புகழ் எழுப்பி விட்டான்! மக்களும் மறவன்; ஆட்டு மந்தையில் பிறந்த வேங்கை. தக்கைகள் நடுவே மின்னும் தனித்தவோர் தங்கக் கூர்வாள்; சக்கைபோல் தமிழ ருக்குள் சந்தனத் தமிழன்; அஞ்சிப் பக்கத்தில் பதுங்கி டாமல் பாய்கின்ற சிங்கக் குட்டி. கொழுந்துவிட் டெரியும் தீயில் குந்திய அப்பா அன்று செழுந்தமிழ்த்…
